வாழ்த்துவதற்கு நாவையும் வணங்குவதற்கு சிரசையும் தந்த வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்!
சங்கடங்களை சகித்து தங்கடங்களைத் தகர்த்து சத்திய சன்மார்க்கத்தை சம்பூரனமாக்கிய சர்தார் நபி சல்லலாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீதும் நபிவழி நடந்திட்ட நற்றவத் தோழர்கள் மீதும் வாஞ்சை மிக்க வலிமார்கள் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் உண்டாவதாக!
தகுதிமிக்க தலைவர் அவர்களே! உறுதிமிக்க நடுவர் அவர்களே!!
எனது அணியில் பேச வந்திருக்கும் எழுச்சிமிக்க ஏந்தல்களே! எதிரணியில் அமர்ந்திருக்கும் ஏமாளிகளே! கோமாளிகளே!!
டி.வி என்பது உண்மையிலேயே பெரிய நிஃமத்துதான் என்று பேச வந்திருக்கிறேன். எதிரணியில் பேசும்போது சொன்னார்கள்: டி.வியிலே எந்த நன்மையும் இல்லை; எல்லாமே தீமைதான் என்று. இப்படி மூடலாகப் பார்த்துவிட்டு முடிவுக்கு வந்தால் எப்படி?
நடுவர் அவர்களே! பழாப்பழம் பார்த்திருக்கிறீர்களா பழாப்பழம்? இதை மூடலாகப் பார்த்தால் என்ன தெரியும்/ வெறும் முள்ளுதான் தெரியும். அதை ஆழமாக வெட்டித் திறந்து பார்த்தால் அதில் அழகான பழாச் சுளைகள் தெரியும். அதுபோல டி.வி என்றாலே ஒட்டுமொத்தமாக முசீபத்துதான் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். அதில் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கு தெரியுமா?
நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள செய்திகள், அதிலும் 24 மணி நேர செய்திச் சேனல்கள் வந்த பிறகு கவலையே இல்லை நடுவர் அவர்களே!
அரசு நலத் திட்டங்களா..ஏழைகளுக்கு இலவச உதவி பற்றிய அறிவிப்புகளா.. விவசாயிகளுக்கு விஷேச சலுகைகளா ஆகிய அனைத்தும் அப்படியே பார்க்க உதவுகிறது. நடுவர் அவர்களே! இவங்க முன்னே பின்னே டிவி பார்த்திருந்தா நாட்டு நடப்பு தெரிஞ்சிருக்கும்; நாலு விஷயம் புரிஞ்சிருக்கும் அதையெல்லாம் எங்க பார்க்கிறாங்க?
அடுத்து டி.வி வந்து நம்மையெல்லாம் சோம்பேறியாகிவிட்டது என்று கூறினார். நடுவர் அவர்களே! கடுமையான கவலையில் மனம் சோர்ந்து இருக்கும் மனிதர்களுக்கு கூட பல டி.வி நிகழ்ச்சிகள் மன ஆறுதலைத் தருகின்றன.
உதாரணமாக, அசத்தப் போவது யாருன்னு ஒரு நிகழ்ச்சி. அதப் பார்த்துட்டு வாய்விட்டு சிரிக்காதவர்களே இல்லை. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அதுபோல வாழ்க்கையிலே அடிபட்டு மிதிபட்டு பல சிக்கல்களிலே மாட்டிக்கொண்டுஅவதிப்படுகின்றவர்கள்கூட ஆனந்தத்தின் உச்சிக்கே போய்விடுகின்ற ஒரு நிகழ்ச்சிதான் அசத்தப் போவது யாரு!
சகோதரர்களே! கவலைதான் ஒரு மனிதனுக்கு அதிகமான வியாதிகளை உண்டாக்குகிறது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். நபியவர்கள் கூட கவலையைவிட்டு அதிக பாதுகாப்பு தேடியுள்ளனர் யானைக்கு தும்பிக்கை எப்படி அவசியமோ மனிதனுக்கு நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையை தரும் எத்தனையோ நிகழ்ச்சிகள் டி.வியிலே உண்டு.
அதுமட்டுமா? அரசியல் முதல் ஆன்மீகம் வரை சித்த வைத்தியம் முதல் சீன வைத்தியம் வரை அனைத்தயும் பார்க்க உதவுவது டி.வி.
எனவே டி வி ஒரு நிஃமத்துதான் நிஃமத்துதான் என்று உறுதிபடக் கூறி அமர்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
இது தொடர்பான இதர பதிவுகள்:
- டிவி நிஃமத்தே-2
- டிவி நிஃமத்தே-3
- டிவி முசீபத்தே-1
- டிவி முசீபத்தே-2
- டிவி முசீபத்தே-3
arumaiyaana pattimandram.....
பதிலளிநீக்குதம்பி உன் கருத்துக்கு
நீக்குமிக்க நன்றி ..
Ongaloda phone number kidaikkuma
பதிலளிநீக்கு