04 ஜனவரி, 2012

டி.வி. முசீபத்தே!-1



நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் ஏகன் அல்லாஹ்வை ஏற்றிப் போற்றி என்னுரையைத் துவங்குகிறேன்۔
 ஏற்றமிகு சலவாத்தும் சலாமும் ஏந்தல் நபி(சல்) அவர்களின் மீதும் எழுச்சிமிக்க தோழர்கள் வாஞ்சைமிக்க வலிமார்கள் மீது உண்டாவதாக.

டி.வி. நிஃமத்தா? முசீபத்தா? என்று கேட்டால் பல மணி நேரம் பட்டிமன்றம் நடத்தித்தான் முடிவுக்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. முழுமையான ஒவ்வொரு முஃமினும் அடித்து சொல்வார்கள்: டி.வி. ஒரு முசீபத்துதான் என்று. சமுதாய நலனில் அக்கறை கொண்ட அத்தனை பேரும் அழுத்திச் சொல்வார்கள்: டி.வி. ஒரு ஆபத்து என்று.
இதை நான் சொல்லவில்லை.. புகழ்பெற்ற பல பத்திரிக்கைகள் ஒப்புக்கொள்கிற உண்மை நடுவர் அவர்களே!

வார்னிங்! டி வி கேன்பி ஹசடஸ் டூ சில்ட்ரன்ஸ் '' எச்சரிக்கை! டி.வி. குழந்தைகளுக்கு ஒரு பெரிய ஆபத்து!'' என்ற தலைப்பில் அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்றில் சமீபத்தில் ஒரு செய்தி வந்தது. அதில் ஒரு அதிர்ச்சியான ஆய்வை வெளியிட்டிருந்தார்கள்:

  •  டி.வி பெற்றோர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
  • தொடர்ந்து டி.வி. பார்ப்பதினாலும் கண்ட கண்ட காட்சிகளைக் காண்பதினாலும் பிள்ளைகளின் மனவளர்ச்சி பல்வேறு வகைகளில் பாதிக்கப் படுகிறது.
  •  அவர்களின் பொன்னான நேரமெல்லாம் டி.வியின் முன்னேயே கழிந்துவிடுகிறது.
 அதுமட்டுமா? டி வி வந்த பிறகு சுறுசுறுப்பான பிள்ளைகள்கூட சோம்பேறியாகிவிட்டனர்.
குழந்தைகள். எப்படி இருக்கவேண்டும்? பாரதியார் அழகாகப் பாடினார்:
    ஓடி விளையாடு பாப்பா-நீ
    ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
    கூடி விளையாடு பாப்பா-ஒரு
    குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடச் சொன்னார் பாரதியார். அனால் இன்று ஓடி விளையாடுவதை விட்டு விட்டு குழந்தைகள் பல மணி நேரம் டி வி முன்னே அமர்ந்து விடுகின்றனர். அதிலும் நல்ல படம் என்றால் மலம் ஜலத்தைக் கூட அடக்கிக்கொண்டு அமர்ந்து விடுகின்றனர்.

நடுவர் அவர்களே! இந்த சுட்டி டி வி வந்து பட்டி தொட்டி எல்லாம் குட்டிப் பசங்களை குட்டிச் சுவராக்கிவிட்டது.

  • மாயாஜாலம் என்ற பெயரில் நம்பமுடியாத பல கற்பனைக் காட்சிகளை அடிக்கடி காண்பித்து ஒன்றும் அறியாத சின்னஞ்சிறு குழந்தைகளை பொய்யான உலகில் தள்ளுகிறார்களே.. இதெல்லாம் தேவைதானா?
  • சக்திமான் என்ற தொடர் வெளிவந்தபோது அதன் பின்னணியில் ஏற்பட்ட விபத்துகள் கொஞ்சமா நஞ்சமா? பத்திரிக்கையில் பார்த்திருப்பீர்கள்; படித்திருப்பீர்கள் எவ்வளவு தூரத்திலிருந்து விழுந்தாலும் பரவாயில்லை..சக்திமான் பறந்து வந்து நம்மைக் காப்பாற்றிவிடுவார் என்று நம்பி எத்தனை குழந்தைகள் மாடியிலிருந்து கீழே விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டன? பரிதாபமாய்ப் பலியான பச்சிளங் குழந்தைகளின் உயிர்களுக்கு என்ன பதில்கூறப் போகிறீர்கள்?

ஆகவே டி வி என்பது பல விபரீதங்களை ஏற்படுத்தும் முசீபத்தே! முசீபத்தே!!
-------------------------

சுட்டி டிவியில் சில நேரம் சில கண்றாவியும் உண்டு அது என்ன?   இங்கே பார்க்கவும்
இது தொடர்பான இதர பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...