05 ஜனவரி, 2012

புனித ஹாஜிகள் பாராட்டு விழா

ஒப்பிலான்
oppilan
ஹாஜிகளுடன் ஜமாத் தலைவர் 
ப்பற்ற ஒப்பிலானில் 27.12.2011 செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில் கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையும் ஒப்பிலான் முஸ்லிம் ஜமாஅத்தும் இணைந்து புனித ஹாஜிகள் பாராட்டு விழா நடத்தியது.



ஒப்பிலான் ஜமாத் தலைவர் ஜனாப் அப்துர் ரஹ்மான் அவர்கள், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஜனாப் காதர் ஷம்சு ஆகியோர் தலைமை தாங்க
ஹாஜிகளுடன் ஜமாத் உதவித்தலைவர் 

ஒப்பிலான்  ஜமாஅத்தார்கள், வட்டார உலமா சபையினர்  & வட்டார அனைத்து  
ஜமாஅத்தார்கள் முன்னிலை வகிக்க, தரைக்குடி இமாம் மௌலவி  ஜாஹிர் ஹுசைன் மஸ்லஹி கிராஅத் ஓதி துவங்கிவைத்தார்.
கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் துணைச் செயலாலரும்,
 ஒப்பிலான் தலைமை இமாமுமான
மௌலவி அல்ஹாஃபிழ் சதக்கத்துல்லாஹ் 
மஸ்லஹி ஃபாழில் தேவ்பந்த் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

ஹாஜிகளுடன் ஜமாத் செயலாளர்

ஹாஜிகளுடன் ஜமாத் பொருளாளர்



ஹாஜிகளை வாழ்த்தி உரையாற்றிய சங்கைக்குரிய அறிஞர் பெருமக்கள்:


ஷஹீது அரூஸி
மௌலவி கே.எஸ். எஸ். செய்யது இஸ்மாயீல் சிராஜி ஏர்வாடி தர்ஹா (தலைவர், கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை)
மௌலவி அல்ஹாஃபிழ் எஸ். ஷஹீது இப்ராஹீம் அரூஸி.  இமாம், சாயல்குடி (செயலாளர்,கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா 
மௌலவி அல்ஹாஃபிழ் ரூஹுல் அமீன் காஷிஃபி ஃபாழில் மழாஹிரி இமாம், கீழச்செல்வனூர் (பொருளாளர்,கடலாடி வட்டார உலமா சபை)
மௌலவி செய்யது இப்ராஹீம் ஜமாலி (ஆய்வாளர், மாவட்ட ஐக்கிய நலக் கூட்டமைப்பு, இராமநாதபுரம்)
மௌலவி உஸ்மான் மிஸ்பாஹி  இமாம், கடலாடி
மௌலவி ஜாஃபர் அலி ஃபைஜி இமாம், மரியூர்
மௌலவி ஹாஜா முஹ்யித்தீன் சிராஜி இமாம்,ஹனஃபி பள்ளி,நரிப்பையூர்
மௌலவி செய்யது சுலைமான் யூசுஃபி இமாம், ஷாஃபிஈ பள்ளி நரிப்பையூர்
oppilan
 சதக் மஸ்லஹி
மௌலவி அமானுல்லாஹ் மன்பஈ மதரசா ஆசிரியர்,ஷாஃபி பள்ளி,நரிப்பையூர் 
மௌலவி கியாசுத்தீன் இன்ஆமி  இமாம், இதம்பாடல்
மௌலவி அமானுல்லாஹ் மன்பயி  இமாம்,குருவாடி
மௌலவி மஹ்மூது மன்பஈ ஒப்பிலான்
மௌலவி சேக் சாஜித் அன்வாரி இமாம், மேலச்சிக்கல்
முஹம்மது இத்ரீஸ் ஆலிம் இமாம், வாலிநோக்கம்
தோட்டத்து லெப்பை ஆலிம் இமாம்,இராஜாக்கள்பாளையம்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து ஹஜ் செய்துவரும் அனுபவம் வாய்ந்த அல்ஹாஜ் ஜபருல்லாஹ் (செயலாளர், ஜே.எம்.எஸ். அரபிக்கல்லூரி,மதுரை) அவர்கள் அற்புதமான சிறப்புரை நிகழ்த்தினார்கள்.


ரூஹுல் அமீன் காஷிஃபி
இறுதியாக புனித ஹாஜிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.



கவுரவிக்கப்பட்ட ஹாஜிகள்:


ஒப்பிலான்:
UNWO ஜமாலி
அல்ஹாஜ் வைப்பாத்தான்
அல்ஹாஜ் ரஷீத் கான்- அல்ஹாஜ்ஜா பஷரியா,
அல்ஹாஜ் இப்ராஹீம்ஷா-அல்ஹாஜ்ஜா ரஹீமா பீவி
அல்ஹாஜ்ஜா சுப்ஹானி, அல்ஹாஜ்ஜா பரீதா, அல்ஹாஜ்ஜா ரஃபீக்கா


மாரியூர்:
அல்ஹாஜ் முஹம்மது சலீம்


வாலிநோக்கம்:
அல்ஹாஜ் ந.க. செய்யது இப்ராஹீம்-அல்ஹாஜ்ஜா பூஹானிதா பேகம்


நரிப்பையூர்:
அல்ஹாஜ் ஷம்சு இப்ராஹீம்-அல்ஹாஜ்ஜா ரசூல் பீவி
அல்ஹாஜ் முஹம்மது ஆசாத்- அல்ஹாஜ்ஜா ரஹ்மத் பீவி


கீழச்செல்வனூர்
அல்ஹாஜ் நைனா முஹம்மது- அல்ஹாஜ்ஜா ஜமாலியா பேகம்
அல்ஹாஜ் ஷம்சுத்தீன்- அல்ஹாஜ்ஜா காதர் பீவி


மேலச்சிக்கல்:
அல்ஹாஜ் காதர் சுல்தான்- அல்ஹாஜ்ஜா சித்தீக்கா பீவி


சிக்கல்:
அல்ஹாஜ் சுக்கூர்


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒப்பிலான் ஜமாஅத்தின் உதவித் தலைவர் ஜனாப் ஷாகுல் ஹமீது,  செயலாளர் ஜனாப் ஃபக்ருத்தீன்,  பொருளாளர்
ஜனாப் முஹம்மது ஃபாரூக் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். ஒப்பிலான் துணை இமாம் அல்ஹாஃபிழ் புரோஸ் கான் பம்பரமாகச் சுழன்று வந்தவர்களை விழுந்து விழுந்து உபசரித்தார்.


விழாவுக்கு வந்திருந்த அனைத்து ஹாஜிகளும் ஜமாஅத்தினரும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டைப் பாராட்டி வட்டார உலமா சபையினருக்கும் ஒப்பிலான் ஜமாஅத்தினருக்கும் நன்றி செலுத்தி விடை பெற்றுக்கொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...