10 ஜனவரி, 2012

இஸ்லாமியப் பார்வையில் லோக்பால் மசோதா



மூலம்: ulama.in . தமிழில்: sadhak maslahi
ஜன் லோக்பால் மசோதா (Jan Lokpal Bill) அல்லது குடி மக்கள் காப்பு முன்வரைவு இந்தியாவில் ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதாஆகும்.
ஊழலுக்கு எதிரான குரல் மக்களிடமிருந்து எழவேண்டும் அதுவும் அதிகாரமிக்க அமைப்பாக ஒரு மக்கள் குழு அமைத்து அந்த குழுவின் மூலமாகவே ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்மொழியப்பட்ட சட்ட வரைவு நிலையில் உள்ள மசோதாதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.



 இந்தியாவில் அனைத்து மட்டங்களிலும் மலிந்திருக்கும் ஊழலை அறவே ஒழிக்கும் வகையில் அடிமட்ட ஊழியர் முதல் பிரதமர் வரை ஊழல் புரியும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தும் தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதுதான் ஜன்லோக்பால்.( இது பற்றி மேலும் அறிய   இங்கே அழுத்தவும்)


இந்தியாவின் ஊழல் வரலாறு சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே அதாவது 1948ம் ஆண்டே தொடங்கிவிட்டது. ராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக இங்கிலாந்தில் இந்தியத்தூதராக இருந்த V.K. கிருஷ்ணமேனன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.ஆனால் அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்படவேயில்லை. அன்று முதல் இன்று வரை 1981 போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், 1990 ஹர்ஷத்மேத்தா பங்குச்சந்தை ஊழல், 1996 கார்கில் சவப்பெட்டி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்காமன்வெல்த் போட்டிகள் ஊழல்ஆதர்ஷ் வீடு ஒதுக்கல் ஊழல் என ஊழல் தொடர்கதையாகி விட்டது
இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலுக்காக தண்டனை பெற்றஅமைச்சர்கள்உயர் அதிகாரிகள்நீதிபதிகள் ஒரு சிலர் மட்டுமே
ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள லோக்பால் மசோதா மூலமாக ஊழல் புகாருக்கு ஆளாகும் நபர்களுக்கு எதிரான வழக்குகளை ஆண்டு கணக்கில் இழுத்தடிக்க முடியாது.வழக்கு குறித்த புலனாய்வு ஓராண்டு காலத்திற்குள்ளாகவும்வழக்கு விசாரணை ஓராண்டு காலத்திற்குள்ளாகவும் முடிக்கப்பட்டுஇரண்டு ஆண்டு காலத்திற்குள் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுவிடுவார்கள்.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கோட்பாடு..
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقِيمُوا حُدُودَ اللَّهِ فِي الْقَرِيبِ وَالْبَعِيدِ وَلَا تَأْخُذْكُمْ فِي اللَّهِ لَوْمَةُ لَائِمٍ (ابن ماجة




''நெருங்கியன் நெருக்கமில்லாதவன் அனைவருக்கும் சமனீதியாக அல்லாஹ்வின் சட்டவரம்புகளை செயல்படுத்துங்கள். இதனால் தூற்றுபவர் தூற்றட்டும் அதைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்.''


  • பனூமக்ஸூம் கிளையிலுள்ள ஒரு பெண் திருடிவிட்டாள். விசாரித்த நபி (சல்) கையை வெட்ட உத்தரவிட்டார்கள். உறவினர்கள் உசாமா(ரலி)யை சிபாரிசுக்கு அனுப்பினார்கள். அவர் சிபாரிசு செய்தபோது நபி ஆவேசத்துடன் கூறினார்கள்:  அல்லாஹ்வின் சட்டவரம்புகளில் குறுக்கிட்டு வக்காலத்து வாங்குகிரீர்களா? அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயம் அழிந்துபோனதெல்லாம் இதனால்தான்: வலியவன் திருடினால் விட்டுவிடுவார்கள்.வறியவன்  திருடினால் கையை வெட்டிவிடுவார்கள்.ஆனால் நான் என் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரது கையை வெட்டுவதற்கும் தயங்கமாட்டேன்.
ஆட்சியாளராயிருந்தாலும் அதே சட்டம்தான்:
  • உமர்(ரலி)ஆட்சிக்காலத்தில் அம்ருப்னு ஆஸ் (ரலி) எகிப்தின் ஆளுநர். ஒருநாள் எகிப்து பிரஜை ஒருவர் மதீனா வந்து ஜனாதிபதியிடம் முறையிட்டார்: அமீருல் மூமினீன்! எங்கள் கவர்னரின் மகனுக்கும் எனக்கும் குதிரைப் பந்தயம். அதில் நான் முந்திவிட்டேன்.  நான் உயர் அதிகாரியின் மகன் என்னை முந்துகிறாயா?என்றுஆத்திரத்தில் என்னை சாட்டையால் விளாசிவிட்டார். ஜனாதிபதி உமர் -ரலி- கவர்னரையும் மகனையும் வரச் சொல்லி எகிப்துவாசியின் கையில் சாட்டையைக் கொடுத்து உன்னை அடித்ததுபோல் நீ திருப்பி அடி.என்றார்கள். அவர் அடித்தார்.
 இதுதான் லோக்பால் மசோதா. யார் செய்தாலும் தவறுதான் உடனடி தண்டனை வேண்டும். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

  • ஊழல் செய்பவர்களை மற்றவர்கள் கண்டும் காணாதது போல் விட்டு விட்டால் அனைவரையும் பாதிக்கும்
இதற்கு நபி ஒரு உதாரணம் சொன்னார்கள்:
ஒரு கப்பலில் மேல்தளத்தில் ஒரு குழுவும் கீழ்தளத்தில் ஒரு குழுவுமாக பயனித்தனர். கீழ்தளத்திலுள்ளவர்கள் தண்ணீருக்காக மேலேதான் வரவேண்டும். ஒருனாள் அவர்கள் இப்படி யோசித்தனர் நாம் ஏன் அடிக்கடி மேல்தளம் சென்று தொந்தரவு கொடுக்கவேண்டும். நமக்கு கீழேதான் ஏராளமான தண்ணீர் ஓடுகிறதே..ஒரு ஓட்டையைப் போட்டு நமக்குத் தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்வோம். இந்நிலையில் மேல்தளத்தில் உள்ளவர்கள் நமக்கென்ன என்று பேசாமல் இருந்துவிட்டால் கப்பல் மூழ்கி அனைவரும் பலியாகவேண்டிவரும். அதுபோல தீமையைத் தடுக்காவிட்டால் அனைவருக்கும் ஆபத்து.




நாட்டில் வளம் இல்லமல் போவதற்கு காரணம் பாவங்களே.
ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النّاسِ (41الروم) أي بان النَّقْصَ في الزروعِ والثمار بسبب المعاصي. وقال أبو العالية: من عصى الله في الأرض فقد أفسد في الأرض, لأن صلاح الأرض والسماء بالطاعة
குற்றம் குறைந்தால் வானம் பூமியின் பரக்கத்துகள் பெருகும். அதனால்தான் ஈசா நபி மீண்டும்வந்தவுடன் தீமைகளை ஒழிப்பார்கள்.
إذا نزل عيسى بن مريم عليه السلام في آخر الزمان يَحْكم بهذه الشريعة المطهرة في ذلك الوقت من قتل الخنزير وكسرِ الصَّليب ووضعِ الجزية, (وهو تركها), فلا يقبل إلا الإسلام أو السيف, فإذا أهلك الله في زمانه الدجال وأتباعه ويأجوج ومأجوج, قيل للأرض: أُخْرُجي بركتَكِ, فيأكل من الرُّمانة الفِئَامُ من الناس ويستظلون بقحفها...

 அதன் பின் பரக்கத்துகள் பெருகும். பூமிக்கு சொல்லப்படும்: நீ உன் பரக்கத்துகளை வெளிப்படுத்து. அந்த நேரம் எல்லாமே வளமாகிவிடும் ஒரு மாதுளையை ஒரு ஜமாத்தே சாப்பிடும் அளவுக்கு பெரிதாக இருக்கும் அதன் தோலை குடையாக பிடித்து ஒரு கூட்டமே அதன் நிழலில் அமரலாம். ஒரு பிராணியின் பாலை ஒரு கூட்டமே ஆவல் தீர குடிக்கலாம். இந்த பரக்கத்திற்கு என்ன காரணம்? லஞ்சம் ஊழல் இல்லாத குற்றங்கள் இல்லாத நீதியான ஆட்சி அப்போது நடைபெறும்.
அரசு அதிகாரிகள் இலஞ்சம் பெறக் கூடாது:
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اسْتَعْمَلْنَاهُ عَلَى عَمَلٍ فَرَزَقْنَاهُ رِزْقًا فَمَا أَخَذَ بَعْدَ ذَلِكَ فَهُوَ غُلُولٌ(ابوداود)


''ஊழியம் செய்வோர் ஊதியம் பெறலாம்; அதைவிட அதிகமாக எடுத்தால் அது ஊதியம் அல்ல; ஊழல்.''   (அபூதாவூது)


இப்னுல் லத்பிய்யா என்பவரை நபி வசூல் அதிகாரியாக நியமித்திருந்தார்கள். அவர் ஒப்படைக்கும்போது இது பொதுநிதி. இது எனக்கு மக்கள் கொடுத்த அன்பளிப்பு. என்று தனியாக பிரித்து எடுத்துக்கொள்வார். நபி மிம்பரில் ஏறி பயான் செய்தார்கள்: சிலபேர் இது பொதுநிதி. இது எனக்கு மக்கள் கொடுத்த அன்பளிப்பு. என்று தனியாக பிரிக்கின்றனரே. இது சரியா? நான் கேட்கிறேன்: அவர் இந்த வேலையில் இல்லாமல் அம்மாவீட்டிலோ அத்தாவீட்டிலோ உட்கார்ந்திருந்தால் இந்த அன்பளிப்பு எப்படி வரும்?


ஒரு மீனவன் இருந்தான். தினந்தோறும் மீன்பிடித்து குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தான். ஒரு நாள் பெரிய மீன் மாட்டியது. இதை நல்ல விலைக்கு விற்று குடும்பத்திற்கு தாராளமாக செலவழிக்கலாம் என்று வந்துகொண்டிருந்தான். வழியில் ஒருவன் இடைமறித்தான் அதை விலைக்கு கேட்டான்: இவனிடம் கொடுத்தால் பாதிவிலைதான் தருவான் என்று எண்ணி அவன் மறுத்தான். உடனே அவன் அந்த மீனவனை அடித்து துன்புறுத்தி வலுக்கட்டாயமாக மீனைப் பறித்துகொண்டு சென்றான். மீனவன் பத்துஆ செய்தான்:
அதன் விளைவு: அவன் மீனைப் பொறித்து சாப்பிட எடுத்தபோது அது வாயைப் பிளந்து அவனது கைவிரலைக் கவ்வியது. வசமாக கடித்தது. வேதனை தாங்கமுடியாமல் மருத்துவரிடம் ஓடினான்.அவர் சொன்னார்: விரலை வெட்டிவிடுவோம். இல்லையெனில் வேதனையும் விஷமும் உள்ளங்கைக்கும் பரவிவிடும்.விரல் துண்டிக்கப்பட்டது. அப்படியும் வேதனை உள்ளங்கைக்கு பரவியது. மீண்டும் மருத்துவரிடம் வந்தான். சரி உள்ளங்கையோடு போகட்டும்.அதை மட்டும் அறுத்து எடுத்துவிடுவோம். உள்ளங்கை எடுக்கப்பட்டது.அப்படியும் வேதனை கொடுங்கைக்குப் பரவியது. மீண்டும் மருத்துவரிடம் வந்தான். இதை அறுத்து நீக்காவிட்டால் தோள்பட்டைக்கும் பரவி விடும்'' என்றார்.கை முழுக்க நீக்கப்பட்டுவிட்டது. அப்படியும் வேதனை உடல் முழுதும் பரவியது. இனி மருத்திவரை நம்பி பயனில்லை; அல்லாஹ்விடம் மனமுருகி முறையிட்டான். பிறகு ஒரு மரத்தடியில் களைப்புடன் தூங்கினான். கனவில் யாரோ ஒருவரின் குரல் ஒலித்தது: தம்பி.. இப்படியே எதுவரை துண்டிக்கப்பட்டுக்கொண்டே இருப்பாய். போ! உன்னால் பாதிக்கப்பட்ட அந்த மீனவனிடம் சென்று அவனை திருப்திப்படுத்து. கனவு கலைந்ததும் ஓடினான். விசாரித்து மீனவனைக் கண்டுகொண்டான். மன்னிப்புக் கேட்டான். தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்தான். அந்த வினாடியே வேதனை எல்லாம் மறைந்தது. அன்றிரவு நிம்மதியாக உறங்கினான். காலையில் கண்விழித்துப் பார்த்தபோது என்ன ஆச்சரியம்! துண்டிக்கப் பட்ட இடத்தில் கை மீண்டும் பொருந்தி இருந்தது... ஆரோக்கியமாக! அல்லாஹ் மூசா நபிக்கு வஹீ இறக்கினான்; மூசா! ஒருவேளை அவன் அந்த மீனவனைத் திருப்திப் படுத்தியிருக்காவிட்டால் அவன் சாகும் வரை வேதனைப் படுத்தியிருப்பேன்.




லோக்பால் மசோதா முறையாக கடைபிடிக்கப்பட்டால் மக்களுக்கு ஏற்படும் வேறு நன்மைகள். (சிறுபான்மையினருக்கும்):-

அரசாங்க அலுவலகங்களில் ஒரு பணிக்காக ஒருவர் சென்றால்- உதாரணமாக சாதிச் சான்றிதழ் அல்லது ஓட்டுனர் உரிமம் பெறுவது- அதனை குறிப்பிட்ட காலவரையறைக்குள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் செய்து தர வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த அலுவலருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு,புகார் தாரருக்கு இழப்பீடும் வழங்கப்படும்.எனவே பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் தங்களது (வாக்காளர் அடையாள அட்டை,ரேஷன் கார்டு) விண்ணப்ப மனு மீதான நடவடிக்கை உரிய காலத்திற்குள் எடுக்கப்படாமல் தாமதமானாலோ அல்லது காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்ய மறுத்தாலோ லோக்பாலை அணுகலாம்.லோக்பால் அமைப்பு ஒரு மாத காலத்திற்குள் அதனை செய்து தரும்.மேலும் ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் எடை குறைத்து வழங்கப்பட்டாலோ அல்லது பஞ்சாயத்து அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சி நிதியை பயன்படுத்தி போடப்படும் சாலைகள் மோசமாக இருந்தாலோ அது குறித்து லோக்பாலிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...