சதக்கத்துல் ஃபித்ரு:
பெருநாள் தொழுகைக்காக
மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய
தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை
உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.
எவ்வளவு? எவர்களுக்காக?
فرض رسول الله صلي الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير علي العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين .
‘ரமழானில்
இருந்து விடுபடுமுகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள்
கடமையாக்கினார்கள். ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம்பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை
சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண்
அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்’ (புகாரி, முஸ்லிம், முஅத்தா).
”ஒரு
‘ஸாஉ’ உணவு, அல்லது
ஒரு ‘ஸாஉ’ கோதுமை, அல்லது
ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம் அல்லது ஒரு ‘ஸாஉ’ தயிர்
அல்லது ஒரு ‘ஸாஉ’ வெண்னை என்பவற்றை ஸகாதுல் ஃபித்ராவாக நாம்
வழங்குபவராக இருந்தோம்’ என அபூ ஸயீதில் குத்ரி
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).
‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு
அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும். இது அறபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு
முறையாகும். சாதாரணமாக அரிசி என்றால், ஒரு
‘ஸாஉ’ என்பது 2.400 kg. ஐக் குறிக்கும் என்பர்.
இந்த
அளவு உணவையோ, உணவுத் தானியத்தையோ
வழங்கவேண்டும். பெருநாள் செலவு போக மீதமிருக்கும் அளவு பொருளாதாரம் உள்ள அனைவரும்
இதை வழங்கவேண்டும். ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அனைவருக்காகவும் இதை வழங்கவேண்டும்.
உதாரணமாக, ஒருவரிடம் மூன்று பிள்ளைகள், ஒரு மனைவி இருக்க, அவரது பொறுப்பில் அவரது பெற்றோர்களுமிருந்தால்
தனது மூன்று பிள்ளைகள், தான், தனது மனைவி, பெற்றோர்
இருவரும் என மொத்தமாக ஏழு பேர்களுக்காக ஏழு ‘ஸாஉ’ உணவு வழங்க வேண்டும். எனவே, இந்த ஸகாத் அனைவர் மீதும் விதியாகின்றது!
சிறுவர்கள், வாய்ப்பற்ற முதியவர்கள்
என்பவர்களுக்கும் விதியாகின் றது. அதை அவர்களது பொறுப்புதாரிகள் நிறை வேற்ற
வேண்டும்.
பித்ரா வின் நோக்கம் :
1.நோன்பில் நமக்கு ஏற்பட்ட குறைகளுக்கு பரிகாரம்
2. ஏழைகளும் ஏக்கமில்லாமல் பெருநாளை மகிழ்ச்ச்சியாகக் கொண்டாட வைத்தல்
فقد أخرج أبو داود وابن ماجه بسند حسن عن ابن عباس - رضي الله عنه-
قال : فرض رسول الله صلي الله عليه وسلم زكاة الفطر طهره للصائم من اللهو والرفث وطعمه للمساكين ، فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ، ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات
நோன்பாளி வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றில்
ஈடுபட்டிருந்தால், அதற்குப் பரிகாரமாக
அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும்’ ‘ஸகாதுல்
பித்ரை’ நபி(ஸல்) அவர்கள்
கடமையாக்கினார்கள்.
எப்போது?
‘யார் பெருநாள் தொழுகைக்கு
முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும்.
யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு
தர்மமாகக் கணிக்கப்படும்’ என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்’ (அபூ தாவூத், இப்னு மாஜா).
وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُعْطِيهَا الَّذِينَ يَقْبَلُونَهَا وَكَانُوا يُعْطُونَ قَبْلَ الْفِطْرِ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ .(بخاري)
இதனை பெருநாள் தொழுகைக்காக
மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் வழங்கிவிட வேண்டும். இது வழங்கப்பட வேண்டிய நேரத்தின்
இறுதிக் காலமாகும்.
பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு
முன்னர்,
இதனை வழங்குபவராக இப்னு உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.
(அபூதாவூத்).
மற்றுமொரு அறிவிப்பில், இது ஸஹாபாக்களின் நடைமுறையாக இருந்தது என்ற கருத்தைப் பெறமுடிகின்றது.
‘அதை பெற்றுக் கொள்பவர்களுக்கு நாம் வழங்குபவர்களாக இருந்தோம்.
நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதை வழங்கு பவர்களாக இருந்தார்கள்.’
(புகாரி)
யார் மீது கடமை?
ஷாபி மத்ஹபின் படி பெருநாள் அன்று இரவும் பகலும் தன் செலவுக்குப் போக பித்ரா கொடுக்கும் பொருளிருந்தால்
தனக்கும் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் பித்ரா கொடுக்க வேண்டும்
أن يكون عنده فضل عن قوته وقوت من في نفقته ليلة العيد ويوميه عند جمهور العلماء (المالكية والشافعية والحنابلة) ...
فقد قال النبي صلي الله عليه وسلم كما عند أبي داود بسند حسن : من سأل وعنده ما يغنيه فإنما يستكثر من النار ، فقالوا يا رسول الله وما يغنيه ؟ ، قال : أن يكون له شبع يوم وليلة .
وعند الترمذي : من أصبح منكم آمنا في سربه معافى في بدنه عنده قوت يومه .
ஹனபி மத்ஹபின் படி ஜகாத் கடமையாகுவதற்குரிய
நிஸாபை அடைந்திருக்க
வேண்டும்.
وخالف الحنفية وأصحاب الرأي فقالوا : لا تجب إلا علي من يملك نصاباً من النقد أو ما قيمته فاضلا عن مسكنه.
واستدلوا بقوله صلي الله عليه وسلم كما عند البخاري :
" لا صدقة إلا عن ظهر غني " .
قالوا: والفقير لا غني له فلا تجب عليه ولأن الصدقة تحل له فلا تجب عليه كمن لا يقدر عليها .
எல்லா மக்களும் படித்துணரவேண்டிய முக்கியமான தகவல்
பதிலளிநீக்குﻭﻟﺰﻛﺎﺕ فاعلين
jazakallah maslahi
நீக்குஅல்லாஹ் உங்களுக்கு .மிகுந்த நற்கூலியை வழங்குவானாக ஆமீன்
பதிலளிநீக்குஆமீன். மவ்லானா ,
நீக்குஅல்லாஹ் தங்களுக்கும் நற்கூலி தருவானாக