03 ஏப்ரல், 2013

உள்ளம் உடையாமல் இருக்கட்டும்




காருண்ய நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கையை கற்றுக் கொடுத்தார்கள். இன்முகத்துடன் மக்களிடம் நடந்துகொள்ள பணித்தார்கள் உன் சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பதும் இனிய தர்மம் என்றார்கள்
உனக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம்; நீ சிரமங்களில் சிக்குண்டு இருக்கலாம்; துன்பங்களால் நீ தவண்டு போய் இருக்கலாம் அதையும் மீறி புன்சிரிப்பை வரவழித்து சந்தோஷ முகத்துடன் சகோதரனை சந்திப்பது சாலச் சிறந்த தர்மம் என்றார்கள்
நல்ல வார்த்தைகளப் பேசுகிற நாகரீகமான நடைமுறையைக் கற்றுக் கொடுத்தார்கள்

முகத்துக்கு முன்னாள் சிரிப்பு; முதுகுக்குப் பின்னால் முறைப்பு :
ஒருவருக்கொருவர் விசாலமான உள்ளத்துடன் பழக வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் அந்த நபிகளாரின் நடைமுறைய இன்று சமூகம் தொலைத்து விட்டது உள்ளங்கள் சுருங்கிப் போயிருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை விட்டுப் போயிருக்கிறது. உள்ளங்கள் உடைந்து கிடக்கிறது.
ஒரு போலித்தனமான பார்வையும் பாசமும் பரவிக்கிடக்கிறது.
முகத்துக்கு முன்னால் சிரிக்கிறார்கள்; முதுகுக்குப் பின்னால் முறைக்கிறார்கள்.
நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் நவின்றார்கள்:
قال صلى الله عليه وسلم: تَجِدُ من شِرارِ الناس يَوْمَ القيامةِ عند الله ذَا الوَجْهين الذي يَأتي هَؤلاءِ بوجهٍ وهَؤلاءِ بوجه [البخاري:6/2626 , ومسلم: 4/2011]

மறுமை நாளில் மக்களில் மிக மட்டமானவன் இரண்டு முகத்தான். இவர்களிடம் ஒரு முகமாகவும் அவர்களிடம் ஒரு  முகமாகவும் இரண்டு விதமாக பேசி நடிக்கக் கூடியவன் . ( புஹாரி , முஸ்லிம் )

இன்று ஒரு பெரிய கைசேதம் என்ன தெரியுமா?
அல்லாஹ் நயவஞ்சகர்களுக்கு சொன்ன அடையாளங்கள் எல்லாம் இன்று நம்மை அல்லவா தொற்றிக்கொண்டிருக்கிறது?
முனாபிக்கீன்களுக்கு அல்குர்ஆன் அடையாளப்படுத்திய தன்மைகள் இன்று முஸ்லிம்களையும் அல்லவா பாதித்திருக்கிறது? என்ன ஒரு கைசேதம்


 تَحْسَبُهُمْ جَمِيعًا وَقُلُوبُهُمْ شَتَّى ( 59:14)
நபியே அவர்களை நீங்கள் கவனித்தால் அவர்கள் ஒன்றாயிருப்பதைப் போல தோற்றமளிப்பார்கள் ஆனால் உள்ளங்களால் உடைந்து கிடக்கிறார்கள்
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால்  நயவஞ்சகர்கள் குறித்து நன்மறை நவின்ற இந்த அடையாளம் இன்று நம்மிடம் இல்லை என்று மறுக்க முடியுமா

  • ஒரு பள்ளிவாசல் நிர்வாகத்தில் பத்து பேர். ஒன்றாக இருக்கிறார்கள்; பேசுகிறார்கள் சிரிக்கிறார்கள்; உள்ளத்தால் சிதறிக் கிடக்கிறார்கள்
  • ஒரு குடுமபத்தில் ஐந்து பேர் பேசுகிறார்கள் சிரிக்கிரார்கள் உள்ளத்தால் உடைந்து கிடக்கிறார்கள்
  • கணவன் மனைவி ஒரே படுக்கையில் படுக்கிறார்கள்; பேசுகிறார்கள் உள்ளத்தால் சிதறிக் கிடக்கிறார்கள்
  • அண்ணன் தம்பி அடிக்கடி பார்க்கிறார்கள் கூடுகிறார்கள் சிந்தனையால் சிதறிக் கிடக்கிறார்கள்
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيراً مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضاً أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتاً فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ {الحجرات:12}

عن أبي هريرة رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : لا تحاسدوا ، ولا تناجشوا ، ولا تباغضوا ، ولا تدابروا ، ولا يبع بعضكم على بيع بعض ، وكونوا عباد الله إخوانا ، المسلم أخو المسلم ، لا يظلمه ، ولا يخذله ، ولا يكذبه ، ولا يحقره ، التقوى هاهنا - ويشير إلى صدره ثلاث مرات - بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم ، كل المسلم على المسلم حرام : دمه وماله وعرضه (رواه مسلم )
மற்ற சகோதர முஸ்லிமை அற்பமாகக் கருதுவதே தான் கெட்டவன் என்பதற்கு அடையாளம்       (நூல்: முஸ்லிம்)

ஒரு பெரிய செல்வந்தர் விருந்து வைத்தார். பெரும் செல்வந்தர்கள் கூடியிருந்த அந்த சபையில் நபியவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். ஒரே ஒருவர் ஓரமாக நின்றிருந்தார்.
அவர் ஒரு ஊனம். அவர் அங்கேயே நின்று கொண்டு உணவு கேட்டார். நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவரை அழைத்து தன மடியில் அமரவைத்துக் கொண்டார்கள். இதைக்கண்ட ஒரு செவந்தர் உடனே தன துண்டை உதறிக்கொண்டு எழுந்தார். முஹம்மது இந்த சபையை அவமதித்துவிட்டார் எனவே நான் சாப்பிடமாட்டேன். பெரும் செல்வந்தர்கள் எல்லாம் கூடியிருக்கிற சபையில் ஒரு ஊனமான ஏழைக்கு இவ்வளவு  முக்கியத்துவம் கொடுத்துவிட்டாரே என்று ஆத்திரப்பட்டார். இதைக் கண்ணுற்ற அந்த ஏழை கண் கலங்கினார். உள்ளம் நொந்தார். நபியவர்கள் உடனே சொன்னார்கள் ''அவருக்கும் இப்படி ஒரு நிலை வராமல் அவர் இறக்கமாட்டார்.''

யாரையும் நோகவைத்து அவரின் மனக் கொதிப்புக்கு ஆளாகவேண்டாம்
ஏனெனில்
பாதிக்கப்பட்டவனின் துஆவிற்கும் அல்லாஹ்வின் அர்ஷுக்கும் இடையே எந்த தடையும் இல்லை   (புஹாரி, முஸ்லிம் )

عن ابن عباس - رضي الله عنهما - أن النبي -صلى الله عليه وسلم - بعثمعاذاً إلى اليمن وقال له ( اتق دعوة المظلوم ، فإنها ليس بينها وبين الله حجاب رواه البخاري ومسلم .

மனிதாபிமானமும் வாக்குறுதியை நிறைவேற்றும் அழகிய பண்பும் மன்னிக்கிற மனப்பான்மையும் சஹாபாக்களிடம் எந்த அளவு மிகைத்திருந்தது என்பதை படம்பிடித்துக் காட்டும் அருமையான சம்பவம் 

سافر بدوى فى تجارة الى بلد الشام وعندما اناخ بعيره تحت شجرة قريبة من بستان
نسى ان يعقل بعيره واذا بالبعير يدخل البستان ويأكل منه ، فجاء صاحب البستان وضرب
البيعر فى فمه ، فجعل البعير يركض على غير هذى ودماؤه تسيل منه ، فأستيقظ البدوى على ذلك
ولم يتمالك نفسه وهو يرى كل ما يملك من متاع يذهب هباءا فاستل خنجره وقتل صاحب البستان
وفى هذه اللحظة كان اخوه قادما فرأى أخاه قتيلا ، فقال : لا حول ول قوة الا بالله ثم قال للبدوى بينى وبينك امير المؤمنين عمر بن الخطاب ، فذهبا الى عمر وقصا عليه ما حدث ، فقال رضى الله عنه الى اخ القتيل : اذهب الى السوق واشترى لصاحب البعير ما كان على ظهر بعيره من متاع وزاد ، واما انت فقد حق عليك القصاص النفس بالنفس ، فقال البدوى رضيت بحكمك يا امير المؤمنين ولكن امهلنى لعام حتى اصل اولادى واودعهم ، قال عمر : عليك بمن يكفلك ، وكان عبد الله بن مسعود رضى الله عنه موجودا فقال : انا اكفله يا امير المؤمنين ، وذهب البدوى وبعد مضى العام قال عمر : حق عليك القصاص يا بن مسعود ، فقال بن مسعود : ستجدنى ان شاء الله من الصابرين . عند هذا اذا بالبدوى يركض ، ويقول اوقفوا القصاص فقال عمر يا هذا والله اننا لا نعرفك ولا نعرف من اى البلاد انت فما دعاك على الحضور ؟ فقال حتى لا يقولوا يا امير المؤمنين بأن اهل الوفاء قد ماتوا ، فقال عمر : وانت يا بن مسعود اتعرفه ؟ فقال : لا والله يا امير المؤمنين لا اعرفه ولكن حتى لا يقولوا بأن اهل المروءة قد ماتوا ، فقال اخ القتيل : يا امير المؤمنين انى اشهدكم بأنى قد عفوت عن حقى حتى لا يقولوا بأن اهل العفو قد ماتوا

இதில் கூறப்படும் நிகழ்ச்சியின் சாரம் இதுதான் :
ஒரு கிராமவாசி வியாபாரத்திற்காக சிரியா வந்தார். வந்த இடத்தில் ஒரு தோட்டத்தில் அவரது ஒட்டகம் நுழைந்து இரை சாப்பிட தோட்டக்காரன் அதை அடிக்க அதன்காரணமாக அது இறந்து விட அந்த கிராமவாசி பதிலுக்கு தோட்டக்காரனைத் தாக்கியதில் அவர் இறந்துவிட அந்த நேரம் பார்த்து அங்கு வந்த தோட்டக்காரனின் சகோதரன் கிராமவாசியைப் பிடித்துக்கொண்டு ஜனாதிபதி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முறையீடு செய்ய  பழிக்குப்பழி என்ற அடிப்படையில் அந்த கிராமவாசிக்கு மரண தண்டனை தீர்ப்பளித்தார்கள் அவர் அதை முழுதாய் ஏற்றுக் கொண்டார் ஆனால் கொஞ்சம் அவகாசம் கேட்டார். என் பிள்ளைகள்  சிறுவர்கள். அவர்களை அனாதைகளாக்கிவிட்டு பிரியப்போகிறேன் அதுபற்றிக் கூட எனக்கு கவலை இல்லை ஆனால் அவர்களுக்குரிய சில விபரங்களை சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன் . முன்பின் தெரியாத உனக்கு அவகாசம் தரவேண்டுமெனில் அதற்கு யார் ஜாமீன் ? என்று ஜனாதிபதி கேட்க அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு பொறுப்பேற்றுக் கொண்டார்கள் அவர் போய்விட்டுத் திரும்பி வந்தபோது நடந்த உரையாடல் :
முன்பின் தெரியாத நீர் திரும்பி வராவிட்டாலும் எங்களால் கண்டுபிடிக்க முடியாது அவ்வாறிருக்கும்போது நீர் திரும்பி வந்ததற்கு என்ன காரணம் ? என ஜனாதிபதி வினவியபோது ,
மாநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மறைந்து சில ஆண்டுகள் கூட ஆகவில்லை; அதற்குள் வாக்குறுதியை நிறைவேற்றுகிற அழகிய குணம் அடியோடு அழிந்துவிட்டது என்று மக்கள் பேசிவிடக்கூடாதே என்றுதான் நான் ஆஜரானேன். இது கிராமவாசியின் கவலை.

முன்னப் பின்னே தெரியாத ஒரு கிராமவாசிக்காக நீர் ஏன் ஜாமீன் ஏற்றுக் கொண்டீர்? என்று இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு விடம் வினவப்பட்டபோது அவர்களின் பதில்:
மாநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மறைந்து சில ஆண்டுகள் கூட ஆகவில்லை; அதற்குள் மனிதாபிமானம் மறைந்துவிட்டதே என்று மக்கள் பேசிவிடக்கூடாதே .

கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் கிராமவாசியை மன்னித்ததற்கு காரணம் கூறுகிறபோது
மாநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மறைந்து சில ஆண்டுகள் கூட ஆகவில்லை; அதற்குள் மன்னிக்கும் மனப்பான்மை மறைந்துவிட்டதே என்று மக்கள் பேசிவிடக்கூடாதே என்றார்.
----------------------------
மற்றவர்களை மட்டமாக கருதாமல் மனிதாபிமானத்தோடும் மனித நேயத்துடனும் நடந்து கொள்வதைத்தான் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் விரும்பினார்கள் :

وعن ابن مسعود رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم : لا يبلغني أحد من أصحابي عن أحد شيئا ، فإني أحب أن أخرج إليكم وأنا سليم الصدر " . رواه أبو داود .

''என் தோழர்களில் யாரைக் குறித்தும் தேவையில்லாத குறைகளை என்னிடம் கொண்டு வரவேண்டாம் நான் இல்லத்திலிருந்து வெளி வருகிறபோது உள்ளத்தில் ஒரு குறையும் இல்லாத கள்ளங்கபடமற்ற கல்போடு வருவதைத்தான் விரும்புகிறேன் ''  (அபூதாவூது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download