முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.
அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை
எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு
எனது அத்தை இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன்
50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு
எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”
கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.
athu sari..!
பதிலளிநீக்குஅட நமக்கு யாரும் அப்படி எழுத மாற்றாங்களே
பதிலளிநீக்குமஸ்லஹி..
நீக்குநீங்கள்தான் இல்ம் என்ற சொத்துக்கு வாரிசாக
இருக்குபோது மற்றவர்கள் ஏன் உங்களுக்கு
சொத்து எழுதவேண்டும்