24 ஏப்ரல், 2013

மரம்- வல்லவன் வழங்கிய வரம்


மரங்கள் எத்தனை நிறங்கள்
மலர்கள் எத்தனை கலர்கள்
 இப்படி இருந்த இந்த புனித பூமியை நவீன அரக்கர்கள் வந்து நாசப்படுத்தி விட்டனர் 
  • மரங்கள் முளைத்திருந்த இடமெலாம் இன்று கட்டிடங்கள் முளைக்கின்றன 
  • மரங்கள் வெட்டப்பட்டு விளை நிலங்களெல்லாம் வீட்டுமனைகளாகி வருகின்றன. வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 
  • புதிது புதிதாக பல நகர்கள் இரவோடு இரவாக முளைத்து வருகின்றன.
  • நீர்நிலையுள்ள இடங்களில் கூட இது பரவி வருவது பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. 
விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டால், உணவுக்கு... வீடுகளின் மொட்டைமாடிகளில் காய்கறி செடிகள், பூஞ்செடிகளை பயிரிட வேண்டிய நிலை ஏற்படும். நம்முடைய சந்ததியினருக்கு எத்தகைய உலகத்தை நாம் விட்டுச் செல்லப் போகிறோம்? எல்லா இயற்கைச் செல்வங்களையும் சுரண்டிய பின்னர், அவர்களுக்கென்று என்ன மீதம் விட்டு வைக்கப் போகிறோம்? 
பசுமையைப் பறிகொடுத்து விட்டுப் பாலைவனமாய் நிற்கும் பூமியைத்தான் மீதம் வைக்க முடியும். 
இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு அபாயம் என்ன தெரியுமா 
உலகம் வெப்பமயமாகுதல் . அதன் காரணமாக துருவப் பகுதியிலுள்ள பனிப் பாறைகள் படுவேகமாக உருகிக்கரைந்து கொண்டிருக்கிறது இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகள் இன்னும் சில ஆண்டுகளில் கடலில் மூழ்கும் பேராபத்து காத்திருக்கிறது இந்த அளவிற்கு பூமி வெப்பமடைந்ததற்கு என்ன காரணம்? மரங்கள் அதிகமாக வெட்டப்படுவதுதான் 

குடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும், வசிக்கும் இடத்தையும் மாசுபடுத்துவதில் மனிதனுக்கு நிகர் யாரும் இல்லை. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றில் இடையறாது உமிழப்பட்டுக் கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடு போன்ற விஷ வாயுக்கள் நம் காற்று மண்டலத்தை விட்டு விண்வெளிக்குச் சென்று காற்று மண்டலத்தில் கலக்கும். 

இது ஒரு போர்வை போல் பூமியைச் சுற்றி மூடிக் கொண்டு மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருக்கிறது. பூமியின் வெப்பம் வெளியேறாமல் தடுக்கும் இந்தப் போர்வையால் பூமியின் வெப்ப அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. மரங்கள் இந்த கார்பன் டை ஆக்ஸைடுகளை உட்கொண்டு நமக்குத் தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. நாம் மரங்களை பெருமளவு வெட்டி சாய்ப்பதால் இந்த கார்பன் டை ஆக்ஸைடு அளவு காற்றில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
 



மரம் தரும் பலன்கள் :
  • மலர்கள், காய், கனிகள் தருகிறது. 
  • நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது. 
  • காற்றை சுத்தப்படுத்துகிறது. 
  • நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. 
  • கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது. 
  • மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. 
  • நிலச்சரிவுகளை தடுக்கிறது. 
  • மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. 
  • காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன. 
  • புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. 
  • உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக - எரிபொருளாகப் பயன்படுகிறது. 

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது. 

1. ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
 

2. ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது. 

3. ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
 

4. ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.
 

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்" என்கிறது குறள். "பெருந்தன்மை உள்ளவனிடத்தில் உள்ள செல்வம்; அனைத்து பாகங்களையும் மருந்தாய் தரும் மரத்திற்கு ஒப்பாகும்" என்று மரத்திற்கு பெருமை சேர்க்கிறார் திருவள்ளுவர்! 


மனிதனும் மரமும் :
ஆதம் அலை படைக்கப்பட்ட மீதமிருந்த மண்ணிலிருந்து மரம்தான் படைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தே நமக்கும் மரத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுவிட்டது 


 أكرموا عمتكم النخلة فإنها خُلقت من فضلة طينة أبيكم آدم، وليس من الشجر شجرة أكرم على الله تعالى من شجرة ولدت تحتها مريم ابنت عمران، فاطعموا نساءكم الولد الرطب، فإن لم يكن فتمر (ذكره السيوطي في الجامع الصغير )

மனிதன் எளிதாகப் பிறக்க கர்ப்பிணிக்கு மிக அவசியமான ஒன்று பேரீத்தம்பழம் என்று சூசகமாக அல்லாஹ் மர்யமின் பிரசவத்தைக் குரிப்பிடுபோது கூறுகிறான் நபியும் அதை வலியுறுத்துகிறார்கள் 


நெருங்கக் கூடாத மரத்தை நெருங்கியதால் ஆதம் அலை அவர்களின் மானம் வெளிப்பட ஆரம்பித்தாலும் அதை மறைக்க ஒரு மரத்தின் இலைதான் உதவியது 


 وَقَالَ فِي «الْأَعْرَافِ» : فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ 



அவர்கள் சுவனத்திலிருந்து கொண்டு வந்த ஒரு மரத்தின் குச்சி பல நபிமார்களின் கைகளில் அற்புதங்களைக் காட்டி மக்களை நேர்வழியின் பால் அழைக்க பயன் பட்டது 
அந்த தடிதான் மூசாவின் அசாவாக 
சுலைமான் நபியின் மந்திரக் கோலாக 
இன்னும் சொல்லப் போனால் நாளை உலக அழிவுக்கு முன்னால் வெளிப்படும் தாப்பத்துள் அர்ல் எனும் மிருகத்தின் ஒரு கையில் சுலைமான் நபியின் மோதிரமும் மறு கையில் இந்த அசாவும் இருக்கும் அதைக் கொண்டு மனிதர்களில் நல்லவரையும் தீயவரையும் பிரித்தெடுக்கும் என்றெல்லாம் அறிவிப்புகளில்  வந்துள்ளது 

ஆடுமாடு போன்ற பிராணிகளுக்கு மனிதன் முத்திரையிட்டு சந்தைக்கு கொண்டு வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு பிராணி மனிதர்களுக்கு முத்திரையிட்டு வேறு படுத்திக்  காட்டுவதாக குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். கொஞ்சம் விபரமாக சொல்லுங்க! அதெப்படி ஒரு பிராணி மனிதர்களுக்கு முத்திரையிடுதா...என்று கேட்பது புரிகிறது.
وعن ابن الزبير رضي الله عنه أنه قال: تخرج معها عصا موسى، وخاتم سليمان، فلا يبقى مؤمن إلا نكتت في وجهه نكتة  بيضاء فتفشو فى وجهه حتى يبيض وجهه  ولا كافر إلا نكتت في وجهه نكتة سوداء بخاتم سليمان فتفشو تلك النكتة السوداء حتى يسود لها وجهه، حتى إن الناس ليتبايعون في الأسواق بكم ذا يا مؤمن؟ بكم ذا يا كافر؟ وحتى إن أهل البيت يجلسون على مائدتهم فيعرفون مؤمنهم من كافرهم، ثم تقول له الدابة: يا فلان أبشر أنت من أهل الجنة، ويا فلان أنت من أهل النار، فذلك قول الله تعالى (وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآياتِنَا لا يُوقِنُونَ  [النمل:82] )  (تفسير القرآن العظيم لإسماعيل بن عمر بن كثير القرشي الدمشقي، تفسير الماوردي)


நபி ஈஸா (அலை) அவர்களும்முஸ்லிம்களும் பைத்துல்லாஹ்வை (கஃபா) தவாபு செய்து கொண்டிருக்கும் பொழுதுஅவர்களுக்கு கீழே பூமி ஆடும்விளக்குகள் ஆடுவது போல ஆடும். ஸஃபா மலை ஸஈ செய்யும் இடத்தைச் சார்ந்த பாகத்தில் பூமி பிளந்து அதிலிருந்து “தாப்பத்துல் அர்லு” என்ற பிராணி வெளியேறும்.  இது வெளியேற மூன்று நாட்களாகும்.

அதன் கையில் நபி மூஸா (அலை) அவர்களது ‘அஸா’ என்ற கம்பும்நபி சுலைமான் (அலை) அவர்களுடைய “காத்தம்” - என்னும் முத்திரையும் இருக்கும். மூமின்களது நெற்றியில் அஸாவால் அடிக்கும். அவ்வடியின் அடையாளம் ஒரு புள்ளிபோல் வெளியாகும். அதன் பிரகாசம் அவரது முகத்தில் ததும்பும்.

அவரது நெற்றியின் மீது“இவன்” மூமீன் என்று எழுதும்.  இறை மறுப்பாளருடைய மூக்கில் அந்த ‘காத்தம்’ என்கிற முத்திரையைக் கொண்டு முத்திரை இடும்.  அப்பொழுது ஒரு மச்சம் உண்டாகிபடர்ந்து முகத்தைக் கருப்பாக்கி விடும்.  “இவன் காஃபிர்” என்று அவனுடைய இருகண்களுக்கு இடையில் எழுதப்படும்.
பின்னர்“இன்னானே! “நீ சுவர்க்கவாதி”இன்னானே! “நீ நரகவாசி” என்று கூறும். இதுபற்றி குர்ஆனில், “இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில் அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப்படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்கு சொல்லிக் காண்பிக்கும்”
குர்ஆன் (27 : 82)



அதுமட்டுமா? உலகம் ஆழிப்பேரலையை சந்தித்தபோது உண்மை விசுவாசிகளை கடல் அலையிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்க்கும் கப்பலாக மரம் பயன்பட்டது
وَاصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا ۚ إِنَّهُمْ مُغْرَقُونَ (هود:37)

மூசா அலைஹிஸ் சலாம்  குழந்தையாக இருந்த போது அநியாயக்கார பிர்அவ்ன் மூலம் ஆபத்து வந்தசமயம்  அந்த குழந்தையைக் காப்பாற்றி கரை சேர்க்கும் பேழையாக

  أَنِ اقْذِفِيهِ فِي التَّابُوتِ فَاقْذِفِيهِ فِي الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِّي وَعَدُوٌّ لَّهُ ۚ 

وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَلِتُصْنَعَ عَلَىٰ عَيْنِي 

பலநாட்கள் மீன் வயிற்ருக்குள் இருந்த யூனுஸ் நபியவர்கள் கரை ஒதுங்கியபோது பாதிப்புக்குள்ளாகி இருந்த அவர்களின் புனித உடலுக்கு நிழல் தந்து சுகம் தந்து உதவிய தாவரமாக..

  فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ  وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ     (37:145,146)

(அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார். ஆகவே, அவருக்கு (நிழலிடுவதற்காக) ஒரு சுரைச் செடியை முளைப்பித்தோம்.

இப்படி மரம் என்பது நபிமார்களின் வாழ்க்கையில் பல கட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது. 
இன்னும் சொல்லப்போனால் தீர்க்கதரிகளுக்கும் ஞானிகளுக்கும் ஞானம் கிடைத்தது பெரும்பாலும் மரத்திற்கு அடியில்தான்.
புத்தருக்கு போதிமரத்தடியில் கிடைத்ததைப் போல மகாவீரர் மரத்தடியில் அமர்ந்து மகத்துவம் அடைந்தைப் போல .

மாநபி சல்லல்லாஹு அலை ஹி வசல்லம் அவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து முக்கிய வாக்குறுதி வாங்கியதை வல்ல ரஹ்மான் குர்ஆனிலே ''மரத்தடியில்'' என்று மெனக்கெட்டு குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

  لَّقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنزَلَ 

السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا( 48:18.)

அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்.


மரம்  உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல.. அது செத்த பிறகும் விறகாக.. கட்டிலாக கதவுகளாக..ஜன்னலாக இப்படி ஏராளமான பயன்பாடு மரத்தால்.

மனிதன் செத்தால் வீட்டிலிருந்து காட்டுக்குப் போகிறான்(இடுகாடு அல்லது சுடுகாடு )
மரம் செத்தால் காட்டிலிருந்து வீட்டுக்கு வருகிறது
மனிதன் செத்தால் பிணம்
 மரம் செத்தால் பணம் 

இது சராசரியான மனிதனின் நிலை . ஆனால் ஒரு உண்மையான மூமின் தான் வாழும் காலமெல்லாம் மற்றவர்களுக்கு பயன் தரவேண்டும் தான் இறந்த பிறகும் பயன்தரவேண்டும் இவன் விட்டுச் சென்ற அறப்பணிகளால்.
وعن أبي هريرة قال: قال رسول الله - صلى الله عليه وسلم - : ((إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته: علماً علمه ونشره، وولداً صالحاً تركه، أو مصحفاً ورثه، أو مسجداً بناه، أو بيتاً لابن السبيل بناه، أو نهراً أجراه، أو صدقة أخرجها من ماله في صحته وحياته، تلحقه من بعد موته)) رواه ابن ماجه، والبيهقي

இருந்தபோதும் இறந்த பிறகும் மற்றவருக்கு உதவும் தன்மை மூமினுக்கு உரியது என்பதால்தான் ஒரு மரத்தை மூமினுக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள் 

عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ فَحَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي قَالَ عَبْدُ اللَّهِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ فَاسْتَحْيَيْتُ ثُمَّ قَالُوا حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ هِيَ النَّخْلَةُ

'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டபோது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' எனத் தோழர்கள் கேட்டதற்கு, 'பேரீச்சை மரம்' என்றார்கள்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புஹாரி)


மரம் அது இறந்த பிறகும் பயன் தருகிறது; நாம் இறந்த பிறகும் அது நமக்கு பயன் தருகிறது :
ஒரு முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கப்ருக்கருகே நடந்து செல்லும்போது தமது தோழர்களை நோக்கி இவ்விரு மண்ணறைவாசிகளில் ஒருவர் சிறுநீரை சுத்தம் செய்வதில் அசட்டையாக இருந்ததற்காகவும், மற்றொருவர் புறம் பேசித் திரிந்ததற்காகவும் வேதனை செய்யப்படுகின்றனரே அன்றி பெருங்குற்றங்கள் செய்த காரணத்தினால் அல்ல எனக் கூறிவிட்டு அருகிலிருந்த பேரீத்த மரத்தின் குச்சியொன்றை எடுத்து அதனை இரண்டாகப் பிளந்து ஒரு கப்ருகள் மீது நாட்டினார்கள். இதற்குரிய காரணம் வினவப்பட்ட போது அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இக்குச்சிகள் காயும்வரை (அவை செய்யும் தஸ்பீஹின் காரணத்தால்) அவர்களது வேதனை எளிதாக்கப்படும் என்று கூறினார்கள்.( புஹாரி )

உங்களுக்கு தொழ வைக்கப்படும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம் 
இப்படியும் ஒரு வாசகம் வைத்தால் நல்லது :
''உங்களுக்கு மரம் நடப்படுவதற்கு முன் நீங்கள் மரம் நடுங்கள் ''
மரம் நடுவோம் ; மனித நலம் காப்போம் !

இன்னும் சில தகவல்கள் :

அல்லாஹ்வின் எதிரியை அடையாளம் காட்டும் மரம்:
முஸ்லிம்கள் யூதர்களுடன் போரிடும் வரை மறுமை நாள் வராது. எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால், மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், அல்லது மரம் "முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்று விடு'' என்று கூறும். "கர்கத்' என்ற மரத்தைத் தவிர. ஏனெனில் இது யூதர்களின் மரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் (5200)

"கர்கத்' என்ற மரம் கடுமையான முற்களை உடையது


கலிமாவிற்கு அலாஹ் மரத்தைத்தான் உதாரணம் காட்டுகிறான் :
   أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ

14:24. (நபியே! "தவ்ஹீத் கலிமா" என்னும்) நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு (மிக்க மேலான) உதாரணத்தைக் கூறுகிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவ்வாக்கியம்) வானளாவிய கிளைகளையும் (பூமியில்) ஆழப்பாய்ந்த வேரையும் உடைய ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பாக இருக்கிறது.

تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا ۗ وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
14:25. அது (பருவ காலத்தில் மட்டுமன்றி இறைவனின் அருளைக் கொண்டு எக்காலத்திலும் கனிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு, அவர்களுக்கு (இதனை) அல்லாஹ் உதாரணம் ஆக்குகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download