ஜும்ஆ உரை :63
وَيَدْعُونَنا رَغَباً
وَرَهَباً وَكانُوا لَنا خاشِعِينَ (الأنبياء/ 90)
'' அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.'' (21:90)
அல்லாஹ்வின் தண்டனை மீதான
அச்சமும் அவனது அருள் கிடைக்கும் என்ற ஆதரவும் இந்த இரண்டு தன்மைகளும் ஒரு உண்மையான மூமினுக்கு மிக
அவசியம். இவை இரண்டும் உயர்ந்த பதவியை நோக்கி நாம் பறந்து செல்ல உதவும் இரு இறக்கைகள். மறுமையின் பாதைகளைக் கடக்க
உதவும் இரு சவாரிகள்
الرجاء والخوف جناحان بهما يطير المقربون إلى كل
مقام محمود ، ومطيتان بهما يقطع من طرق الآخرة كل عقبة كؤود ، فلا يقود إلى قرب الرحمن إلا أزمة الرجاء ، ولا يصد
عن نار الجحيم إلا سياط التخويف . فلا بد إذا من بيان حقائقهما .
(موعظة المؤمنين
من إحياء علوم الدين)
நம் முன்னோர்கள் எவ்வளவு
உயர்ந்த தரத்தில்
இருந்தபோதிலும் மரண நேரத்திலும் மண்ணறையிலும் மறுமையிலும் நம் நிலை என்னவாகுமோ என்ற மனப்
பதட்டம் அவர்களிடம் இல்லாமலில்லை
அரபு இலக்கியத்தில் அற்புதமான ஒரு கதை உண்டு .
ஒரு குரு மாணவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் வின் விளக்கங்களை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் சீடர்கள் ஒரு கிளியைக் கொண்டு வந்தனர் அதை குருவுக்கு அன்பளித்தனர். குரு தினமும் அதை வகுப்பிற்கு கொண்டு வருவார் கலிமாவை சொல்லிக் கொடுப்பார். அதிலிருந்து கிளி இரவும் பகலும் கலிமாவை உச்சரித்துக் கொண்டே இருந்தது . ஒருநாள் சீடர்கள் வகுப்பிற்கு வந்தனர் குரு அழுதுகொண்டிருந்ததைக் கண்டு காரணம் கேட்டனர் கிளியை பூனை தின்றுவிட்டது என்றார். இதற்காகவா இப்படி அழுகிறீர்கள் வேறொரு கிளியை கொண்டு வந்தால் போயிற்று.. என்றார்கள் அவர் கூறினார் கிளி இறந்ததற்காக நான் அழவில்லை ; கிளியை பூனை பிடித்தபோது அது கீச் கீச் என்று கத்திதான் இறந்து போனது கலிமாவை மறந்துவிட்டது. இத்தனைக்கும் இரவு பகலாக அது கலிமாவை உச்சரித்துக் கொண்டே இருந்த கிளி அது. ஏனெனில் அது உதடுகளால் உச்சரித்ததே தவிர உள்ளத்தால் உணர்ந்து உச்சரிக்கவில்லை.
அரபு இலக்கியத்தில் அற்புதமான ஒரு கதை உண்டு .
ஒரு குரு மாணவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் வின் விளக்கங்களை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் சீடர்கள் ஒரு கிளியைக் கொண்டு வந்தனர் அதை குருவுக்கு அன்பளித்தனர். குரு தினமும் அதை வகுப்பிற்கு கொண்டு வருவார் கலிமாவை சொல்லிக் கொடுப்பார். அதிலிருந்து கிளி இரவும் பகலும் கலிமாவை உச்சரித்துக் கொண்டே இருந்தது . ஒருநாள் சீடர்கள் வகுப்பிற்கு வந்தனர் குரு அழுதுகொண்டிருந்ததைக் கண்டு காரணம் கேட்டனர் கிளியை பூனை தின்றுவிட்டது என்றார். இதற்காகவா இப்படி அழுகிறீர்கள் வேறொரு கிளியை கொண்டு வந்தால் போயிற்று.. என்றார்கள் அவர் கூறினார் கிளி இறந்ததற்காக நான் அழவில்லை ; கிளியை பூனை பிடித்தபோது அது கீச் கீச் என்று கத்திதான் இறந்து போனது கலிமாவை மறந்துவிட்டது. இத்தனைக்கும் இரவு பகலாக அது கலிமாவை உச்சரித்துக் கொண்டே இருந்த கிளி அது. ஏனெனில் அது உதடுகளால் உச்சரித்ததே தவிர உள்ளத்தால் உணர்ந்து உச்சரிக்கவில்லை.
لأنه كان يقولها بلسانه فقط ولم يعلمها قلبه ولم يشعر بها‼
ثم قال الشيخ : أخاف أن نكون مثل هذا الببغاء نعيش حياتنا نردد" لا إله إلا الله " بالسنتنا وعندما يحضرنا الموت ننساها ولا نتذكرها لأن قلوبنا لم تعرفها
فأخذ طلبة العلم يبكون خوفا من عدم الصدق في " لا إله إلا اللـّه "
ونحن هل تعلمنا " لا إله إلا الله " بقلوبنا
ثم قال الشيخ : أخاف أن نكون مثل هذا الببغاء نعيش حياتنا نردد" لا إله إلا الله " بالسنتنا وعندما يحضرنا الموت ننساها ولا نتذكرها لأن قلوبنا لم تعرفها
فأخذ طلبة العلم يبكون خوفا من عدم الصدق في " لا إله إلا اللـّه "
ونحن هل تعلمنا " لا إله إلا الله " بقلوبنا
அதுபோல நாமும் வார்த்தையால் அடிக்கடி கலிமாவை சொல்கிறோம் ஆனால் உள்ளத்தால் கூறாதவரை மரண நேரத்தில் கலிமா நாவில் வருமா என்று தெரியாது அதை நினைத்துதான் அழுதுகொண்டிருக்கிறேன் என்றார்
وقد قيل للإمام أحمد: متى يجد العبد طعم الراحة؟ فقال: عند أول قدم في الجنة.
நிம்மதியின் சுவையை ஒரு அடியான் எப்போது சுகிக்கமுடியும் ? என்று இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ் அவர்களிடம் வினவப்பட்டபோது சொர்க்கத்தில் தன முதல் பாதச் சுவடைப் பதிக்கிறபோதுதான் (அதுவரைக்கும் நிம்மதிக் காற்றை சுவாசிக்க முடியாது )
மனப்பதட்டம் மறுமை வரை...
ويقول الشاعر:
أحزان قلبي لا تزول، حتى أبشر بالقبول، وأرى كتابي باليمين وتسر عيني بالرسول، صلى الله عليه وسلم.
உமர் ரலியல்லாஹு அன்ஹு
அவர்களின் அச்சம் :
قال عمر بن الخطّاب- رضي اللّه عنه- «لو نادى مناد من السّماء:
أيّها النّاس إنّكم داخلون الجنّة كلّكم إلّا رجلا واحدا لخفت أن أكون أنا هو»)*( التخويف من النار لابن رجب (ص 17)
قال عمر بن الخطّاب- رضي
اللّه عنه- لمّا طعن: «لو أنّ لي طلاع الأرض ذهبا لافتديت به من عذاب اللّه قبل أن
أراه»)* شرح السنة للبغوي (14/ 373).
قال عبد اللّه بن عامر
بن ربيعة: رأيت عمر بن الخطّاب أخذ تبنة من الأرض، فقال:
«يا ليتني هذه التّبنة، ليتني
لم أكن شيئا ليت أمّي لم تلدني، ليتني كنت نسيا منسيّا»)* شرح السنة للبغوي (14/ 373)
قال ابن عمر- رضي اللّه
عنهما- كان رأس عمر على فخذي في مرضه الّذي مات فيه فقال لي: ضع رأسي. قال: فوضعته
على الأرض. فقال:
«ويلي وويل أمّي إن لم
يرحمني ربّي» شرح السنة للبغوي (14/ 373)
- வானில்ருந்து ஒரு வானவர் , ‘’எல்லோரும் சொர்க்கம் நுழைந்து விடலாம்; ஒரே ஒருவரைத் தவிர’’ என்று கூறுவாரானால் அந்த ஒருவன் நான்தானோ என்று அஞ்சுவேன்
- தங்கப் சுரங்கம் ஒன்று எனக்கு இருந்தாலும் அல்லாஹ்வின் வேதனையில்ருந்து விலக அதை அப்படியே அர்ப்பணிப்பேன்
ஒரு மண் கட்டியை எடுத்துப் பிடித்து நான் இந்த மன்கட்டியாக
இருந்திருக்கக் கூடாதா நான் ஒரு பொருளாகவே இல்லாமல் இருந்திருக்கக் கூடாதா? என்
தாய் என்னைப் பெறாமலே இருந்திருக்கக் கூடாதா? நான் மறக்கடிக்கப்பட்டவனாக ஆகியிருக்கக் கூடாதா?
இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்
என் தந்தை உமர் ரலியல்லாஹு அன்ஹு மரணத் தருவாயில் என்
மடியில் தலை வைத்திருந்தார்கள் மகனே என் தலையை தரையில் வை என்றார்கள் நான்
வைத்தேன். அல்லாஹ் எனக்கு இறக்கம் காட்டாவிட்டால் எனக்கும் (என்னைப் பெற்றெடுத்த)
தாய்க்கும் கேடல்லவா உண்டாகும் என்று கவலையுடேன் கூறினார்கள்
அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அச்சம் :
மதினாவிற்கு வந்தபோது காய்ச்சல் கண்டது . கடும் காய்ச்சலிலும் கவனமெல்லாம் மரணத்தின் மீதுதான்
(عن عائشة- رضي اللّه عنها- أنّها قالت: لمّا قدم رسول اللّه صلّى
اللّه عليه وسلّم المدينة وعك أبو بكر وبلال. قالت: فدخلت عليهما، فقلت: يا أبت،
كيف تجدك؟، ويا بلال كيف تجدك؟. قالت: فكان أبو بكر إذا أخذته الحمّى يقول:
كلّ امرئ مصبّح في أهله ...
والموت أدنى من شراك نعله) البخاري
عن الحسن- رحمه اللّه- قال: أبصر أبو بكر طائرا على شجرة.
فقال: طوبى لك يا طائر تأكل الثّمر، وتقع على الشّجر، لوددت أنّي ثمرة ينقرها
الطّير»
மரத்தின்மேலே பறந்து திரிகிற பறவையைக் கண்டு கூறினார்கள் ம்...உனக்கென்ன ..மரத்திற்கு வருகிறாய்; கனிகளை உண்ணுகிறாய் (நாளை மறுமையில் உனக்கு எந்த விசாரணையும் இல்லை ).. உனக்கு ஆனந்தமே ஆனந்தம்தான் . பறவை கொத்துகிற பழமாக நான் ஆகியிருக்கக்கூடாதா
கடும் காற்றடித்தால் கூட காத்தமுன் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் கவலை என்னவாக இருந்தது?:
عن عائشة- رضي اللّه عنها- زوج النّبيّ صلّى اللّه عليه وسلّم، أنّها قالت: ما رأيت رسول اللّه صلّى اللّه عليه وسلّم مستجمعا «3» ضاحكا حتّى أرى من لهواته «4». إنّما كان يتبسّم. قالت: وكان إذا رأى غيما أو ريحا، عرف ذلك في وجهه. فقالت: يا رسول اللّه، أرى النّاس إذا رأوا الغيم فرحوا، رجاء أن يكون فيه المطر، وأراك إذا رأيته، عرفت في وجهك الكراهية؟. قالت: فقال: «يا عائشة، ما يؤمّنني أن يكون فيه عذاب. قد عذّب قوم بالرّيح. وقد رأى قوم العذاب فقالوا: هذا عارض ممطرنا»)* البخاري- الفتح 8 (4828- 4829)، ومسلم (899
நாயகம் ஸல் அவர்கள் நகைச்சுவை உணர்வுடன் புன்சிரிப்பார்கள் ஆனால் கடும் காற்றடித்தாலோ மேகம் கூடினாலோ முகம் மாற்றமடையும் பதற்றத்துடன் காணப்படுவார்கள் நாயகமே மேகத்தைப் பார்த்தால் எல்லோரும் மழை வரப்போகிறதென்று ஆனந்தம் அடைகிறார்கள் ஆனால் தாங்களோ கவலைப் படுகிறீர்களே என்று வினவப்பட்டால் ''ஆயிஷா..இது வேதனைக்குரிய மேகமாகவும் காற்றாகவும் இருக்கலாம் என அஞ்சுகிறேன் '(திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆது சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை
நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்து கொண்டு), 'இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்" (திருக்குர்ஆன்
46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக் கூடிய) மேகமாகவும்
இது இருக்கலாம் எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்கள்.
كان عليّ بن الحسين إذا توضّأ اصفرّ وتغيّر، فيقال: مالك؟ فيقول:
«أتدرون بين يدي من أريد أن أقوم؟».
قال ذو النّون: «النّاس
على الطّريق ما لم يزل عنهم الخوف، فإذا زال عنهم الخوف ضلّوا عن الطّريق»
அலி இப்னு ஹுசைன் ரலி தொழுகைக்காக உளூ செய்யத் துவங்கும்போதே முகம் மஞ்சனித்துவிடும் என்ன ஆயிற்று உங்களுக்கு என்று கேட்கப்பட்டால் நான் யாருக்கு முன்னால் நிற்கப் போகிறேன் என்று உங்களுக்கு தெரியுமா
لما ظهر عَلَى إبليس مَا ظهر طفق جبريل وميكائيل عليهما السَّلام يبكيان زمانا طويلا فأوحى اللَّه تَعَالَى إليهما مالكما تبكيان كُل هَذَا البكاء فقالا يا رب لا نأمن مكرك فَقَالَ اللَّه تَعَالَى : هكذا كونا لا تأمنا مكري
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அல்லாஹவை வணங்கிய இப்லீசுக்கு அவனது ஆணவத்தால் நொடிப்பொழுதில் ஏற்பட்ட படுபயங்கரமான இழிநிலை கண்ட ஜிப்ரீலும் மீக்காயீலும் (அலை ) நீண்ட காலம் அழுதுகொண்டே இருந்தார்களாம் ஏன் இவ்வளவு காலம் அழுது கொண்டிருக்கிறீர்கள் என்று அல்லாஹ் வினவியதற்கு யா அல்லாஹ் உன் திட்டத்தை- தந்திரத்தைக் கண்டு அஞ்சுகிறோம்
مولى عثمان بن عفان رضي الله عنه يقول : رأيت عثمان ، واقفا على قبر يبكي حتى بل لحيته فقيل له : تذكر الجنة والنار ولا تبكي وتبكي من هذا ؟ قال : إني سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول : " القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه . ( المستدرك على الصحيحين)
கப்ருக்கருகில் நின்று உதுமான் ரலி தாடியெல்லாம் நனைகின்ற அளவு அழுவதைப் பார்த்த நான் கேட்டேன்: சொர்க்க நரகத்தைப் பற்றி கூறுகிறபோது கூட இவ்வாறு அழுவதில்லையே கபரைக் கண்டு ஏன் இப்படி கண்ணீர் விடவேண்டும்
அதற்கு அவர்கள் கூறினார்கள் எப்படி அழாமல் இருக்க முடியும் நாயகம் ஸல் கூற கேட்டிருக்கின்றேனே மன்னறைதான் மறுமையின் முதல் இருப்பிடம் அதில் வெற்றி கண்டால் அதற்குப் பிறகுள்ள அனைத்திலும் வெற்றி அதில் வெற்றி பெறவில்லை என்றால் அதற்கு பிறகுள்ள அனைத்திலும் அபாயம்தான் ( முஸ்தத்ரக் )
دخل كعب القرضي على عمر بن عبد العزيز بعد توليه الخلافة فجعل ينظر في وجهه فإذا
به وَجْهٌ شاحب! وبدنٌ ناحل!
كأن جبال الدنيا قد سقطت عليه؟!
فقال: ياعمر! ما دهاك؟ ما أصابك؟ والله لقد رأيتك أجمل
فتيان قريش..!تلبس اللَّيِّن وتفترش الوثير..!
لَيِّنُ العيش! نضِر البشرة! والله لو دخلت عليك -ياعمر-
في غير هذا المكان ماعرفتك!
فتنهد عمر باكيًا وقال:
أما إنك لو رأيتني بعد ثلاث ليال من دفني وقد سقطت العينان وانخسفت الوجنتان
وعاشت في الجوف الديدان وتغيّر الخدان لكنت لحالي من حالي أشد
عجبًا وأعظم إنكارًا
உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களைக் காண ஒரு இறைபக்தர் வந்தார். அவர்களின் முகத்தைப் பார்த்தார் பளிச்சென்ற முகம் பளபளக்கும் மேனி . அதைக் கண்டு வாயாறப் புகழ்ந்தார் குறைஷி வாலிபர்களிலேயே அதிக அழகுள்ளவராக உம்மைக் காண்கிறேன் என்றார்
இதுகேட்டு உமர் அழுதார்கள்; கூறினார்கள் : என்னை அடக்கம் செய்த மூன்று நாளுக்குப் பிறகு என்னை நீர் பார்த்தால் எப்படி இருப்பேன் தெரியுமா
கண்கள் விழுந்திருக்கும் ;
கன்னங்கள் பொலிவிழந்திருக்கும்;
துளைகளிலே புழுக்கள் குடியிருக்கும் ;
கன்னங்கள் மாற்ற்மடைந்திருக்கும்
அப்போது நீர் என்னை நீர் கண்டால் இன்னும் ஆச்சரியப்படுவாய் ; அருவருப்பாய் .
இப்படி கூறி உமர் அழ மக்களும் அழுதார்கள் . நீதத்திற்கும் இறைபக்திக்கும் பேர்போன அண்ணாரே அழுதார்கள் என்றால் நானும் நீங்களும் எப்படி ?
ஒருமுறை அன்னாரும் சுலைமான் இப்னு அப்துல் மலிக் அவர்களும் அமர்ந்திருந்தபோது திடீரென இடிமின்னலுடன் மழை பெய்தது அந்த சப்தத்தைக் கேட்ட சுலைமான் சட்டென்று திடுக்கிட்டார் ''என்ன இடிமழையின் சப்தம் கேட்டு அஞ்சுகிறீர்? அல்லாஹ்வின் அருள் நிறைந்த இந்த சப்தத்திற்கே அஞ்சுகிறீரே.. அவனது சினம் நிறைந்த அந்த மறுமை நாளில் எவ்வாறு இருக்குமோ நம் நிலை ? என்று அழுதார்கள்
(قال عبد اللّه بن مسعود- رضي اللّه عنه-: «إنّ المؤمن يرى ذنوبه
كأنّه جالس في أصل جبل يخشى أن ينقلب عليه، وإنّ الفاجر يرى ذنوبه كذباب مرّ على
أنفه، فقال به هكذا»
ஒரு மூமின் பாவத்தை எப்படி கருதுவான் தன்மீது ஒரு பெரும் மலை விழுவதுபோல
பாவி எப்படி கருதுவான் ? தன மூக்கில் ஒரு ஈ உரசிச் செல்வதுபோல .
قال ابن أبي مليكة- رحمه اللّه-: أدركت ثلاثين من أصحاب النّبيّ صلّى اللّه عليه وسلّم، كلّهم يخاف النّفاق على نفسه،
நயவஞ்சகத் தன்மை நம்மிடம் வந்துவிடுமோ என்று அஞ்சிய முப்பது நபித்தோழர்களை நான் அறிவேன் என்று இப்னு அபி முலைக்கா ரலி கூறுகிறார்கள் பரிசுத்த தோழர்களுக்கே இந்த பயம் என்றால் பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நமது நிலை ?
ஹசன் ரலி போன்ற பெரும் நாதாக்களே நரகில் போடுபடுவோமோ என்று அஞ்சியிருக்கிரார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் ?
எனவே அல்லாஹ்வின் மீதான அச்சம் வேண்டும் அது பாவங்களை விட்டும் தடுக்கும் . அதே சமயம் அவனது அருளின் மீது நிராசையாகி விடவும் கூடாது அவனது அருளும் மன்னிப்பும் கிடைக்கும் என்ற அலாதியான ஆசையும் இருக்கவேண்டும் அதுதான் رجاء
அல்லாஹ்வின் கருணை நூறு தாயின் அன்பை விட மேலானது
மன்னிப்பு உண்டு :
உங்களுக்கு
முன் (ஒரு காலத்தில்) ஒருவர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். (ஆனால் அவர் எந்த நல்ல அமலும் செய்யவில்லை ) அவருக்கு மரணம் நெருங்கிவிட்டபோது தன் மகன்களிடம், 'உங்களுக்கு
நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்" என்று கேட்டார். அவர்கள், 'சிறந்த தந்தையாக இருந்தீர்கள்" என்று பதில்
கூறினர். அதற்கு அவர், 'நான்
நற்செயல் எதையும் செய்யவேயில்லை. எனவே, நான்
இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி சூறாவளிக்
காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள்" என்று கூறினார். அவர்களும்
அவ்வாறே செய்தனர். அவரை (அவரின் உடல் அணுக்களை) அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை
மீண்டும் அளித்து) 'இப்படிச்
செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?' என்று
கேட்டான். அவர்,
'உன் (மீது எனக்குள்ள) அச்சம்
தான் (இப்படி உத்தரவிட என்னைத் தூண்டியது நான் எந்த நல்ல அமலும் செய்யவில்லை மறுமையில் நீ என்னை எழுப்பினால் கடுமையாக தண்டிப்பாயோ என்று அஞ்சித்தான் என்னை எரித்து சாம்பலாக்கி காற்றில் தூவி விடச் சொன்னேன் )" என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால்
அவன் அரவணைத்தான். மன்னித்தான்.( புகாரி )
وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ إِنَّا هُدْنَا إِلَيْكَ ۚ قَالَ عَذَابِي أُصِيبُ بِهِ مَنْ أَشَاءُ ۖ وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ ۚ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ هُم بِآيَاتِنَا يُؤْمِنُونَ
'' என்னுடைய அருட்கொடை அனைத்தையும் விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என்னுடைய அருளை) நான் முடிவு செய்வேன்" ( 7:156)
விபச்சாரியைக் கூட அவள் ஒரு நாய்க்கு இறக்கம் காட்டியதால் அல்லாஹ் அவளை மன்னிக்கவில்லையா (புஹாரி )
(15:49) نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ
(நபியே!) நீங்கள் என்னுடைய அடியார்களுக்கு அறிவியுங்கள்: "நிச்சயமாக நான் மிக்க மன்னிக்கும் கிருபை உடையவன்.
روى أحمد ومسلم وغيرهما من حديث أبي موسى { إن الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار . ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها } .
பகலில் பாவம் செய்தவர்களை மன்னிக்க இரவு முழுதும் தன் அருள் கரங்களை விரித்து வைத்திருக்கிறான் ; இரவில் பாவம் செய்தவர்களை மன்னிக்க பகல் முழுதும் தன் அருள் கரங்களை விரித்து வைத்திருக்கிறான்
அதுமட்டுமல்ல தவ்பா செய்யும் அடியானைக் கண்டு அல்லாஹ் எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்றால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்