29 நவம்பர், 2011

ஆஷூரா : அற்புதங்களின் ஆரம்பம்


முத்தான முஹர்ரமும்  பத்தாவது நாளும்
வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
'إن عدّة الشُهور عند الله اثنا عشر شَهراً في كتاب الله يوم خلق السماوات و الأرض 
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - (அல்குர்ஆன் 9:36)
எனவே ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்பது மனிதன் கண்டுபிடித்ததல்ல. இந்த உலகத்தை படைக்கும்போதே ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்பதை அல்லாஹ் வரையறுத்து விட்டான் என மேற்கூறிய திருமறை வசனம் திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறது
நபி (ஸல்) கூறினார்கள்:
வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா,  துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும்.  அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும் (ஆதாரம்: புகாரி)
  இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் இஸ்லாமிய புதுவருடத்தின் முதல்மாதத்தில் (முஹர்ரம் 1433) நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த மாதத்தில்தான் ஆஷூரா என்றழைக்கப்படும் சிறப்பான நாள் ஒன்று உள்ளது. ஆம் அது முஹர்ரம் 10 வது நாளாகும்.

அற்புதங்களின் ஆரம்பம் ஆஷூரா
ஷூரா அன்றுதான்
  •  வானம் பூமி சூரியன் சந்திரன் கோளங்கள் சுவனம் நரகம் ஆகியவை படைக்கப்பட்டன. 
  • உலகில் முதல் மழை பெய்தது.
  •   ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டதும்  அவர்களின் நீண்டகால தவ்பா ஏற்கப்பட்டதும்
فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (37)البقرة وكان ذلك في يوم عاشوراء في يوم جمعة (قرطبي) 
நூஹ் நபி கப்பல் ஒதுங்கிய இடம்
  •   இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுவனப் பெருவாழ்வு கிட்டியதும்,
  •  ஆறு மாத காலம் பிரளயத்தில் சிக்குண்டு தவித்த  நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரக்கலம் ஜூதி மலை ஓரம் ஒதுங்கியதும்,
: قال رسول الله صلى الله عليه وسلم: في أول يوم من رجب ركب نوح السفينة فصام هو وجميع من معه، وجرت بهم السفينة ستةَ أشهر، فانتهى ذلك إلى المحرم، فأرّسَت السفينة على الجوديّ يوم عاشوراء، فصام نوح ، وأمر جميع من معه من الوحش والدوابّ فصامُوا شكرًا لله (تفسير الطبري
  • யூனுஸ் (அலை) மீன் வயிற்றிலிருந்து விடுதலையானதும்
  • நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் உடைய சமூகத்தினருக்கு இறங்க வேண்டிய வேதனை விலக்கிக் கொள்ளப்பட்டதும்
. وقال وهب : غامت السماء غيماً عظيماً ، أسود هائلاً يدخن دخاناً عظيماً فهبط حتى .....، وكشف عنهم العذاب بعد ما أظلهم. وكل ذلك يوم عاشوراء يوم الجمعة (تفسير السراج المنير
  •  இப்றாகீம் அலைஹிஸ்ஸலாம் பிறந்ததும், அல்லாஹ் அவர்களைத் தன் கலீலாக ஏற்றதும், நம்ரூதுடைய நெருப்புக் குண்டம் அவர்களுக்குச் சுவனப் பூங்காவாக மலர்ந்ததும்,
  • யூசுஃப் (அலை) சிறையிலிருந்து விடுதலையானதும் 
  • யஃகூப் (அலை) அவர்களுக்கு கண் பார்வை மீண்டதும்
  • அவர்கள் தன் பிள்ளைகளுக்காக பிரார்த்தனை செய்வதற்கு தேர்ந்தெடுத்த நேரம் ஆஷூராதான்.

    قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ-قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي..(يوسف98)قال طاوس أخر الاستغفار إلى وقت السحر من ليلة 
    الجمعة فوافق ذلك ليلة عاشوراء (قرطبي

  •  தாவூத் அலைஹிஸ்ஸலாம் பிழை பொறுக்கப்பட்டதும்,
  •  சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இழந்த ஆட்சியை மீண்டும் அடையப் பெற்றதும்,
  •  சோதனை வயப்பட்ட  அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிணிகள் அனைத்தும் நீங்கி நலம் பெற்றதும்,
  •  மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடம் சம்பாஷனை புரிந்த தினம்
  • قال الله تعالي وَوَاعَدْنَا مُوسَى ثَلاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ(الأعراف)142 يعني : ثلاثين من ذي القعدة وعشر من ذي الحجة . ويقال : ثلاثين من ذي الحجة وعشر من المحرم . والمناجاة في يوم عاشوراء . وكانت المواعدة ثلاثين يوماً وأمر بأن يصوم ثلاثين يوماً ا 
  • நபி மூஸா(அலை)அவர்களின் கைத்தடி ராட்சத பாம்பாக மாறியதும், அதனால் பலர் இஸ்லாத்தை ஏற்றதும்
    ولقد أريناه آياتنا كلها فكذب وأبى -قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى -فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى (58) قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى (59)( طه) عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ:"الْيَوْمُ الَّذِي أَظْهَرَ اللَّهُ فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ وَالسَّحَرَةُ هُوَ يَوْمُ عَاشُورَاءَ (تفسير ابن كثير
  •  மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களது சமூகத்தைச் சார்ந்த பனீ இஸ்ராயீல்களையும் கொடுங்கோலன் பிர் அவ்னது பிடியிலிருந்து விடுவிப்பதற்காக கடல் பிளந்து அவர்களை விடுவித்ததும், அவர்களை பின்தொடர்ந்து சென்ற பிர்அவ்னும் அவனது பெரும்படையும் அதே கடல் நீரில் மூழ்கியதும்,
  • ஹிள்ரு (அலை) அவர்களின் அறிவை இறைவன் அதிகப்படுத்தியதும்
  • ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்பட்டதும்
 بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (158)( النساء) وقال الضحاك : رفعه في يوم عاشوراء بين صلاتي المغرب والعشاء(بحر العلوم للسمرقندي

ஹுஸைன் (ரலி) மக்பரா
  • இமாம் ஹுசைன் (ரலி) மக்களாட்சிக்காக கர்பலா களத்தில் தன்னுயிரை அர்ப்பணித்ததும் இந்நாளில்தான்.!
                       ( --இஆனா, குன்யத்துத் தாலிபீன், உம்ததுல் காரீ)





    ஆஷூரா நாளில் என்ன செய்ய வேண்டும்?
    1. நோன்பு வைப்பது
     عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: “صيام يـوم عاشوراء: أحتسب على الله أن يكفر السنـة التي قبله” (رواه مسلم:1976
     நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்
     ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் நான் கருதுகிறேன் (முஸ்லிம்)
    أفضل الصيام بعد شهر رمضان شهر الله الذي تدعونه المحرم، وأفضل الصلاة بعد الفريضة قيام الليل” (صحيح مسلم)
    '' ரமளானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் ''. (புகாரி, முஸ்லிம்)
    ـ عن ابن عباس رضي الله عنهما قال: “قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء، فقال: ماهذا؟ قالوا: هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى، قال: فأنا أحق بموسى منكم. فصامه وأمر بصيامه (رواه البخاري 1865 
     அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்தபோது அங்குள்ள யூதர்கள் இந்த 10 வது நாளில் நோன்பு வைத்திருப்பதைக் கண்டார்கள். இவ்வாறு நோன்பிருப்பதின் விசேஷம் என்ன என்பதை அறிய நபி (ஸல்) அவர்கள் யூதர்களைப் பார்த்து வினவினர். அதற்கு அந்த யூதர்களோ 'இன்றைய நாளில்தான் இறைவன் நபி மூஸா (அலை) அவர்களை பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, பிர்அவ்னையும் அவனுடைய கூட்டத்ததாரையும் கடலில் முழ்கடிக்கச் செய்தான் என்றும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நபி மூஸா (அலை) அன்று நோன்பிருந்தார்கள். எனவே நாங்களும் நோன்பிருக்கிறோம் என்றும் விடை பகர்ந்தார்கள்'.
    அதற்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், நபி மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் (முஸ்லிம்களாகிய)நாங்கள் தான் உங்களைவிட தகுதியானவர்கள் என்று கூறி அந்த நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் அனைவரையும் நோன்பு நோற்குமாறும் கூறினார்கள்.
     ( புஹாரி,முஸ்லிம்.)

    2.பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
     فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مسلم
    •  அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)
    •  ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
    10  11 வும் நோற்கலாம்:
    •  ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒருநாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்னறார்கள். (அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி)
     ஆஷூரா அன்று நூஹ் நபி கப்பல் கரை ஒதுங்கி மக்கள் தரை இறங்கிய போது பத்திரமாக கரை சேர்த்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி நோன்பு வைத்தனர். நோன்பு திறக்க உணவுப் பற்றாக்குறை. மிச்சம் மீதியிருந்த உணவுதானியங்கள் எல்லோருக்கும் பற்றாது. அதையெல்லாம் ஒன்றுசேர்த்து நூஹ் (அலை) அதில் பிஸ்மில்லாஹ் ஓதி சமைத்தனர். என்ன ஆச்சரியம் ! அனைவரும் வயிறுநிரம்ப உண்ணும் அளவுக்கு அதில் பரக்கத் உண்டானது.
    அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான் :
    நூஹே ! சாந்தியுடன் கப்பலிலிருந்து இறங்குவீராக! உம்மீதும் உம்முடன் உள்ள மக்களின் மீதும் பெரும் பாக்கியங்கள் பரக்கத்துகள் உண்டாவதாக !    (11:48)
    இதுதான் பிரளயத்திற்கு பிறகு பூமியில் சமைக்கப்பட்ட முதல் உணவு. இதன் அடிப்படையில்தான் ஆஷூராநாளில் உறவுகளுக்கும் ஏழைகளுக்கும் பறிமாறி உண்டால் ஆண்டு முழுதும் பரக்கத் பெருகும் என்ற ஐதீகம்.   (இஆனா 2/267)
    ஆஷூராவின் இரவில் விழித்திருந்து வணங்கும் வழக்கமுடையவர் மரணிக்கும் முன் தன் மரணத்தை அறிவிக்கப்படுவார் என்று வலிகள் கோமான் கௌது நாயகம் ரலி அறிவிக்கிறார்கள்.

    ஆஷூரா நோன்பு சுன்னத்துதானே என்று நம் முன்னோர்களாகிய பெருமக்கள் அசட்டையாக இருக்கவில்லை. 
    ஒருமுறை ஆஷூரா அன்று நோயின் காரணமாக நோன்பு நோற்க இயலாத அனஸ் இப்னு மாலிக் ரலி தேம்பி தேம்பி அழுதார்களாம். காரணம் கேட்டதற்கு, '' ஆஷூரா நோன்பு வைத்தவரை நரக நெருப்பு தீண்டாது'' என அண்ணல் நபி ஸல் கூறியிருக்க இவ்வாண்டு அந்த வாய்ப்பினை இழந்துவிட்டேனே என்று கைசேதப்பட்டுத்தான் அழுகிறேன்'' என்றார்கள்.

    3. குடும்பத்தினர்களுக்காக தாராளமாக செலவு செலவு செய்வது

    عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « من وسَّعَ على عياله وأهلِه يوم عاشوراء وسع الله عليه سائر سنته رواه البيهقي

    நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்-எவர் ஆஷூரா தினத்தில் தன் குடும்பத்தினர்களுக்காக தாராளமாக செலவு செய்வாரோ அவருக்கு அந்த வருடம் முழுவதும் அல்லாஹ் செழிப்பை ஏற்படுத்துவான்    (பைஹகீ)

    • இதனை நாங்கள் ஐம்பது அறுபது ஆண்டுகள் சோதனை செய்துபார்த்து உண்மை எனக் கண்டோம்''  - - சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்).

    ந்த ஹதீஸை ஒருவர் மக்களிடம் எடுத்துரைக்க அதைக் கேட்ட ஒருவர் ஆஷூரா நாளில்ஆயிரம் தீனார் அறம் வழங்கி அதற்குப் பகரமாக இறைவன் பத்தாயிரம் தீனார் இரணம் தருவான் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 
    அடுத்த ஆண்டு ஆஷூரா அன்று அதே ஹதீஸை சொன்னபோது இவர் குறுக்கிட்டார்: நிறுத்தும் உம் ஹதீஸை ! இது உண்மையல்ல.''
    இவ்வாறு கூறிவிட்டு அவர் இல்லம் திரும்பிய போது வழியில் ஒருகுதிரை வீரர் கையில் பணமுடிப்புடன் வந்து இதோ நீ விரும்பிய பத்தாயிரம்! ஆனால் அந்த ஹதீஸை பொய் என்று மட்டும் சொல்லாதே ! 
    பணத்தை கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார்.
                                                                 (இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்)

    ரு ஏழைக் குடும்பம் . ஆஷூரா நோன்பு வைத்திருந்தனர். நோன்பு திறக்க ஒன்றுமில்லை. ஏதாவது கிடைக்குமா என்று தேடிப் புறப்பட்டார் அந்த ஏழை.

     ஒரு முஸ்லிம் செல்வந்தரிடம் சலாம் கூறி ‘’ஒரே ஒரு திர்ஹம் கடன் தாருங்கள் இந்த ஆஷூரா நாளில் உங்களுக்காக துஆ செய்கிறேன்.’’ என்றார். ஆனால் அவர் முகம் திருப்பிக்கொண்டார்.அந்த ஏழை கண்ணீரும் கவலையுமாக திரும்பிச் சென்றார். இதை அருகிலிருந்த அண்டை வீட்டுக்காரர் (யூதர்) பார்த்து அவரை அழைத்து விசாரித்தார் . அவர் சொன்னார் :

    ‘’ஆஷூரா நோன்பு வைத்துள்ளோம். நோன்பு திறக்க ஒன்றுமில்லை.’’
    ‘’ஆஷூரா நோன்பின் சிறப்பென்ன?’’
    அந்த ஏழை சிறப்பை விவரித்தார்.
    ‘’அப்படியா! இதோ நான் 10 திர்ஹம் தருகிறேன் அனபளிப்பாக!’’
    ஏழை சந்தோஷமாக இல்லம் திரும்பினார்.
    அன்றிரவு செல்வந்தர் கனவுகண்டார். மறுமை நாள் வந்துவிட்டது மஹ்ஷரில் எல்லோரும் தாகத்துடன் அலைந்துகொண்டிருந்தார்கள். இவரும் தாகத்துடன் அலைந்தார் அங்கே ஒரு மாளிகை. அதன் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டார். அப்பொழுது ஓர் அசரீரி: இந்த மாளிகை யாருடையது தெரியுமா ? நேற்று வரை இது உன்னுடையதுதான். அந்த ஏழைக்கு உதவ மறுத்தாய். அதனால் உன் பெயர் அழிக்கப்பட்டு உன் அண்டை வீட்டுக்கார யூதனின் பெயர் இதில் பொறிக்கப் பட்டது. போ திரும்பிப்போ!’’
    காலையில் கண்விழித்ததும் அந்த யூதனிடம் ஓடினார் ‘’ஓர் உதவி ! நான்100 திர்ஹம் தருகிறேன் அந்த 10 திர்ஹமின் நன்மைகளை எனக’கு தந்துவிடுங்கள்’’
    முடியாது. ஆயிரம் திர்ஹம் தந்தாலும் அதை தரமாட்டேன் அப்படியே நீங்கள் நேற்றுபார்த்த அந்த மாளிகையில் நுழைய முயன்றாலும் நுழைய முடியாது.’’
    ‘’நான் கண்ட கனவு உங்களுக்கு எப்படி தெரியும்?’’
    எந்த அல்லாஹ் உமக்கு காட்டினானோ அவன்தான் எனக்கும் காட்டினான்’’ இதோ நான் கலிமா கூறிவிட்டேன் அஷ்ஹது அல்லாயிலாக……
    ஆஷூராவின் சிறப்புகளை முழுமையாக அறியாத ஒருயூதனுக்கே இவ்வளவு பெரிய பரிசு. ஆஷூரா நாளைக் கண்ணியப் படுத்தியதறகாக பரிசுமட்டுமா ஈமானும் அல்லவா கிடைத்தது .
    அப்படியானால் அதை முழுமையாக அறிந்த நாம் கண்ணியப்படுத்தினால்…?
                                  (இஆனா 2/267-268)                   
                                    
    இம்மாதத்தை கண்ணியப்படுத்தும் விதமாக நம்மால் இயன்ற வணக்கங்களை அதிகப்படுத்தி, பாவ மன்னிப்பு பெற்றவர்களாக அல்லாஹ் நம்மனைவரையும் ஆக்கியருள்வானாக

    மேலும் சில தகவல்கள்
    • 1. ஆஷூரா அன்று இந்த காரியங்களை ஆற்றுவது ஆகச் சிறப்பானது   என்று பெருமக்கள் கூறியுள்ளனர்:




    صم صَلِّ صلْ زر عالما واكتحل
    رأس اليتيم امسح تصدق واغتسل
    وسع على العيال قلم ظفرا
    وسورة الاخلاص قل ألفا تصل
     (كنز النجاح والسرور)


    • நோன்பு
    • இரவு வணக்கம்
    • உறவினரை உபசரித்தல்
    • அறிஞர்களை மேதைகளை பெரியோர்களை சந்தித்தல்
    • கண்ணுக்கு சுர்மா இடுதல்
    • அநாதைகளின் தலையை அன்போடு தடவி ஆதரித்தல்
    • தாராளமாக தான தர்மம் செய்தல்
    • குளித்தல்
    • குடும்பத்திற்கு தாராளமாக செல்வழித்தல்
    • நகம் வெட்டுதல்
    • சூரா இக்லாஸ் 1000 முறை ஓதுதல்



     2. ஆஷூரா நாளின் துஆக்கள் 

    2 கருத்துகள்:

    1. alhamdhulillah bayanaaga irundhadhu,eemaanaum amalgalaum adhigarika seidhadhu ..

      oru chinna thirutham indha variyil (முஹர்ரம் 1433) நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். hijri 1434 please edit and update

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அல்ஹம்து லில்லாஹ் தங்களின் பாராட்டுக்கும் சுட்டிக்காட்டலுக்கும்
        மிக்க நன்றி.
        ஆனால் இந்த பதிவு கடந்த வருடம் நான் பதிவேற்றியது.
        ஆகவேதான் 1433 என்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு இந்த தலைப்பில் புதிதாக நான் ஒன்றும் எழுதவில்லை என்பதையும் மிக்க பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
        இன்ஷா அல்லாஹ் அடிக்கடி வாருங்கள். கருத்து தாருங்கள்.
        வஸ்ஸலாம்.

        நீக்கு

    படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
    பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
    அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

    முக்கியப் பதிவுகள்

    சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

    உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...