22 நவம்பர், 2011

ஹிஜ்ரி புத்தாண்டு




முஹர்ரம் மாதம் பிறந்ததும் இஸ்லாமிய புத்தாண்டின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு தியாகத்தின் நினைவே பளிச்சிடுகிறது.
1432ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற உயிர் தியாகங்கள் சுவடு பதித்த தடயங்கள், இரத்தம் சிந்திய நாட்கள், கொள்கைக்காக பிறந்த பொன்னாட்டை இழந்த நினைவுகள் அலை அலையாய் மனக்கண் முன் பளிச்சிடுகின்றன. இப்படியொரு வரலாற்றை உலகம் கண்டதில்லை. கேட்டதில்லை. வரலாறும் பதித்ததில்லை.

ஆம்! வரலாற்றில் மின்னிடும் அந்த வைர வரிகளைப் படிக்கும் போதே கண்கள் குளமாகின்றன. தியாகத்தின் சிகரமாக விளங்கும் அந்த பொன்னாட்களை மனதிற் கொண்டு ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வுக்காகவும் அவன் தூதருக்காகவும், தூதர் காட்டிய தீன் நெறியைக் காப்பதற்காகவும் வீர சபதம் செய்து துடிப்போடு செயல்பட வேண்டிய நாட்களைத்தான் நினைவு படுத்துகின்றன.
அந்த நாட்களை எண்ணிப்பார்ப்போர் எத்தனை பேர்?
இஸ்லாம் புத்துயிர் பெற வேண்டிய ஒளிமிக்க அந்த நாட்களை குழி தோண்டிப் புதைத்து விட்டு, தீயிலே போட்டு ,காலிலே மிதித்து, மார்பிலே அடித்து இரத்தத்தை ஆறாக ஓட்டி அநாகரிகமாக நடந்து கொள்ளும் காட்டுமிராண்டித்தனத்தை என்னென்பது?
இஸ்லாம் அறிவுக்கேற்ற மார்க்கம் என வானளாவப் புகழ்ந்துவிட்டு நமது மக்கள் செய்யும் அநாகரிகச் செயல்களை நமது சமுதாயம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா? இப்போது வரலாறைப்புரட்டி அதன் பின்னணிகளைப் பார்ப்போம்.
ஹிஜ்ரத் என்றால் என்ன ?
ஹிஜ்ரத் என்றால் என்ன ? அதன் நோக்கம் என்ன ? அதனால் விளைந்த நன்மைகள் என்ன ?  அது போதிக்கும் போதனை என்ன ? நாம் செய்யவேண்டியவை என்னென்?
யார் யார் ஹிஜ்ரத் செய்தார்கள் ? எந்தெந்த சூழ்நிலையில் ஹிஜ்ரத் செய்தார்கள் ? ஹிஜ்ரி ஆண்டு ஏன் துவங்கப்பட்டது ? அதற்கு முன் எவ்வாறு ஆண்டுகளைக் கணித்து வந்தார்கள்? நாம் புத்தண்டு கொண்டாடலாமா ? வாழ்த்துகள் கூறலாமா? வெறும் வாயினால் வாழ்த்துகள் கூறினால் ஹிஜ்ரிஆண்டின் மாண்பை உணந்துகௌ்ள முடியுமா?
இவை போன்ற பல் வேறு வினாக்கள் நம்மிடையே அலை அலையாய் எழுகின்றன விடை காண இதோ படியுங்கள்!    
இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரீஆண்டு என அடையாளப்படுத்தப்படுகிறது. ஹிஜ்ரீ காலண்டர் சந்திர மாதத்தை அடிப்படையாக கொண்டது. சந்திரக் காலண்டரே எல்லா இடத்திற்கும் அனைத்து வகைப்பட்ட மனிதருக்கும் எளிமையானது. ஆய்வுக்கருவிகளின் தேவையில்லாமலே நாட்களை அறிந்து கொள்ள உதவக்கூடியது. அதன் காரணமாகவே சீனர்கள் இந்தியாகள் அரேபியாகள் என பெரும்பாலான பழைய கலாச்சாரங்களச்சாந்த மக்கள் சந்திர ஓட்டத்தை அடிப்படையாக கொண்டே தங்களது நாட்களை கணக்கிட்டு வந்துள்ளனர்.

கி பி காலண்டருக்கு கிரிகோரியன் காலண்டர் என்று பெயர் .அது சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இன்று நாம் சிவகாசிக் காலண்டர் களின் புண்ணியத்தில் சூரிய நாட்களை மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்கி றோம். இல்லை எனில் சூரியன்
நிற்கும் திசையை வைத்து நாட்களை அறிந்து கொள்வது மிகவும் சிரமமானது. 

கிராமத்து கிழவனோ கிழவியோ வானத்தில் உலாவும் வட்ட நிலாவை அண்ணாந்து பாத்து விட்டு இன்றைக்கு வளர்பிறை பத்து என்று நொடியில் செல்லிவிட முடியும். சூட்டெறிக்கும் சூரியனை கைகுவித்து பத்து தடவைப் பார்ததாலும் கருவிகளின் துணையின்றி அறிவியல் மாணவன் கூட தேதியை சரியாக சொல்வது சிரமம். எனவே பழமையான எளிமையான நாட்காட்டி நடைமுறையான சந்திர மாதக்கணக்கே இஸ்லாமிய மாதக் கணக்காகவும் அங்கீகாக்கப்பட்டது.
ஹிஜ்ரி எப்போது ஆரம்பமானது ?
பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் (கி.பி.639 ல்) வருடத்திற்கு அடையாளமாக எந்தப் பெயரைச் சூட்டலாம் ஆண்டின் தொடக்கமாக எதைக் கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது. 
இப்படி ஒரு ஆலோசனை நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கிய பெருமை நபித்தோழர் அபுமூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்களையே சாரும். அன்னார் ஓரு முறை உமர் (ரலி) அவர்களுக்கு கடிதம் எழுதும் போது அரசின் கடிதங்களில் தேதியிடப்படாமை குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்வியின் விளைவாக உடனடியாக இஸ்லாமிய காலண்டர் ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உணாந்தார்கள்.
எனவே இஸ்லாமிய ஆண்டின் தொடக்கம் பற்றி நபித்தோழர்களுடன் ஆலோசிப்பதற்கான ஒரு கூட்டத்தை ஹிஜ்ரீ 17 ம் ஆண்டில் ஹஜ்ரத் உமர் (ரலி)அவர்கள் கூட்டினர்கள். அதில் நான்கு கருத்துக்கள் முன்வைக்கப்படன. நான்கும் நபிகள் நாயகத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததன.

1)
அண்ணலாரின் பிறப்பு
2)
அண்ணலாரின் இறப்பு
3)
அண்ணலார் நபியாக தேர்வு செய்யப்பட்டது
4)
அண்ணலார் மக்காவிலிருந்து மதீனர்விற்கு (ஹிஜ்ரத்) புலம் பெயர்ந்தது. 

உமர்(ரலி) அவர்கள் ஹிஜ்ரத்தை தேர்வு செய்தார்கள்.
மற்ற மூன்று விசயங்களும் கூட உலக வரலாற்றிலும் முஸ்லிம் சமூகத்திலும் முக்கியமானவை தான் என்றாலும் அவை அனைத்தையும் விட ஹிஜ்ரத் மிக முக்கியமானது .என்பதே உமர் (ரலி) அவர்களின் முடிவுக்கு காரணம். ஆண்டுக்கு அடையாளமாய் சூட்டப்படுவதற்கு மிகவும் பொருத்தமான அதே நேரத்தில் அழுத்தமான பொருளை தரக்கூடிய பெயரையே உமர் (ரலி) அவர்கள்தேர்வு செய்தார்கள். 

அந்த வகையில் கி.பி 622 ஜுலை 16 ம் தேதி ஹிஜ்ரீ முதலாம் ஆண்டின் முதல் நாளாக கருதப்படுகிறது. 
வேடிக்கை கேளிக்கை இல்லை
சீனர்கள் 12 விலங்குகளின் பெயர்களை ஆண்டுப் பெயர்களாக சூட்டியுள்ளார்கள். சில ஆண்டுகளுக்கு முந்தைய
சீன ஆண்டுக்கு நாய் ஆண்டுஎன்று பெயர்.
நாய் ஆண்டு பிறப்பதற்கு முதல் நாள் இரவு நாய்களுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விழா கொண்டாடுகிற
சீனர்களை தொலைகாட்சிகள் வினோதமாக கட்டின.

இது போல ஹிஜ்ரீ என்பது வேடிக்கை விநோதம் நிறைந்த விளையாட்டுப் பெயர் அல்ல. ஹிஜ்ரீ அலாதியான அர்த்த புஷ்டி மிகுந்த சொல்லாகும். 
ஹிஜ்ரத் என்றால் என்ன ?
. ஹிஜ்ரத் என்ற அரபி வார்த்தைக்கு குடிபெயர்தல்என்று பொருள். எல்லா குடிபெயர்தலும் ஹிஜ்ரத் தான் என்றாலும் மார்க்கத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு குடிபெயர்வதற்கே இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்று சொல்லப்படும்.
ஹிஜ்ரத் ஏன் ?
அல்லாஹ் மனிதகுலத்தை வழிநடத்திச் செல்ல மனிதர்களிலே சிலரை தேர்வு செய்து நபி என்று அறிவிக்கும் போது அவரை அவரது சமதாயத்தவர் எல்லோரும் ஏற்றுக் கொண்டனர் என்று வரலாறு இல்லை. நபியை ஏற்றுக் கொள்ளாத எதிரிகள் நபியின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பாகவும் நபியின் உயிருக்கும் அச்சுறுத்தலாகவும் அமைந்து விடுகிறார்கள்.'' எந்த ஒரு நபி பிறக்கும் போது அவரது எதிரியும் சேர்ந்தே பிறக்கிறான்'' என்று சொல்லப்படுவதண்டு. எதிரிகளின் அக்கிரமங்கள் எல்லை கடநந்து போக ஆரம்பிக்கிற போது அல்லாஹ் இரண்டு விதமான வழிமுறைகளை கையாண்டுள்ளான்.1 எதிரிகளை அழித்து விடுவது.2 நபியை ஹிஜ்ரத் செய்யவைத்து நாடுகடத்தி விடுவது.
ஹுது (அலை)  சாலிஹ் (அலை)  லூத் (அலை) ஆகிய நபிமார்கள் காலத்தில் எதிர்ப்பு வலுத்த போது எதிரிகளை அல்லாஹ் அழித்தொழித்தான். நபி இபுறாகீம்  நபி மூஸா (அலை) ஆகியோரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அளவு எதிர்ப்பு வலுத்த போது அவர்களை அல்லாஹ் அவர்களது சொந்த ஊரிலிருந்து ஹிஜ்ரத் செய்யவைத்தான்.
உலகில் முதன் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் என்கிற பெருமை ஹஜ்ரத் இபுறாகீம் (அலை) அவர்களையே சாரும். நான் என் இறைவனளவில் ஹிஜ்ரத் செய்யப் போகிறேன் என்று பிரகடணப்படுத்தி (அல்குர்ஆன் 29:26) விட்டு அவர் தனது சொந்த நாடான இராக்கிலிருந்து சிரியாவிற்கு குடிபெயர்ந்தார்கள்.
நபி மூஸா (அலை) அவர்கள் எகிப்திலிருந்து ஒரு முறை சிரியாவிற்கும் மற்றொரு முறை அகபா வளைகுடாப் பகுதிக்கும் குடிபெயர்நதார்கள்.
அந்த வரிசையில் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்)அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலை உறுவான போது அவரை அல்லாஹ் மக்கா நகரிலிருந்து மதீனா நகருக்கு குடிபெயரச் செய்தான்.  
ஹிஜ்ரத்தின் பலன்கள்
1)  02:218    அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்திருப்பவர்கள்
إِنَّ الَّذِينَ آمَنُواْ وَالَّذِينَ هَاجَرُواْ وَجَاهَدُواْ فِي سَبِيلِ اللّهِ أُوْلَـئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللّهِ وَاللّهُ غَفُورٌ رَّحِيم8}
2)  03:195    இவர்களின் பாவங்கள் அழிக்கப்படும், சொர்க்கம் பரிசாகக் கிடைக்கும்,
َالَّذِينَ هَاجَرُواْ وَأُخْرِجُواْ مِن دِيَارِهِمْ وَأُوذُواْ فِي سَبِيلِي وَقَاتَلُواْ وَقُتِلُواْ لأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ ثَوَاباً مِّن عِندِ اللّهِ وَاللّهُ عِندَهُ حُسْنُ الثَّوَابِ{195}
. 3) 09.020     இறைவனிடம் மகத்தான கூலியுண்டு

الَّذِينَ آمَنُواْ وَهَاجَرُواْ وَجَاهَدُواْ فِي سَبِيلِ اللّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِندَ اللّهِ وَأُوْلَئِكَ هُمُ الْفَائِزُونَ{20} يُبَشِّرُهُمْ رَبُّهُم بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَجَنَّاتٍ لَّهُمْ فِيهَا نَعِيمٌ مُّقِيمٌ{21}
5)  22:058     அல்லாஹ் அவர்களுக்கு அழகான முறையில் உணவளிப்பான்.
وَالَّذِينَ هَاجَرُوا فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ قُتِلُوا أَوْ مَاتُوا لَيَرْزُقَنَّهُمُ اللَّهُ رِزْقاً حَسَناً وَإِنَّ اللَّهَ لَهُوَ خَيْرُ الرَّازِقِينَ{58}
04:100     தியாகம் செய்து மரணிப்போருக்கு கூலி வழங்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்கிறான்.
وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللّهُ عَنْهُمْ وَرَضُواْ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَار)  59:008   
வீட்டையும் பொருளையும் இறை திருப்தி ஒன்றிற்காக நாடுதுறந்தோருக்கு இறைவன் மகத்தான உதவிகள் புரிவான்.

لِلْفُقَرَاء الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِن دِيارِهِمْ وَأَمْوَالِهِمْ يَبْتَغُونَ فَضْلاً مِّنَ اللَّهِ وَرِضْوَاناً وَيَنصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ أُوْلَئِكَ هُمُ الصَّادِقُونَ{8}
وَالَّذِينَ تَبَوَّؤُوا الدَّارَ وَالْإِيمَانَ مِن قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ{9}
என இவர்களின் மாண்புகள் பல இடங்களில் பறைசாற்றப்படுகின்றன.
இந்த இறைவனின் வாக்குறுதி நிறைவேறியதா?
பொதுவாக அகதிகள் உலகில் எவ்வாறு நடத்தப் படுகின்றனர்?
அல்லாஹ்வின் விருந்தாளிகளான முஹாஜிர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர்?

பொதுவாக அகதியாக இன்னொரு ஊரில் குடிபெயர்வது மிகவும் அவலமானது. சுயமரியாதை, கவுரவம், சுகமான வாழ்க்கை அகியவற்றை பறித்துவிடக் கூடியது. சகலவிதமான கலாச்சார தீமைகளுக்கும் இடமளிக்க்கூடியது.
உலக  அகதிகளின் வாழ்க்கை 
உலக வரலாறு நெடுகிலும் அகதிகளின் வாழ்கை முறையைப் பற்றிக் கிடைக்கிற தகவல்கள் இப்படித்தன் அவர்களது வரலாற்றை படம் பிடிக்கின்றன.

பல வருடங்களுக்கு முன்னால் இலங்கையிலிருந்து அகதிகள் தமிழகத்திற்கு வரதொடங்கிய காலகட்டத்தில் இராமேஸ்வரம் பகுதியில் நடை பெற்ற ஒரு நிகழ்வு பத்ததிரிக்கைகளில் வெளியாகி இருந்தது.

ராமேஸ்வரம் கடற்கரையோரமாக ஒரு நடுத்தவர வயதுடையவர் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வருவோர் போவோரிடம் நாசூக்காக யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒரு தமிழ் நாட்டுக் காரருக்கு கோபம் வந்து விட்டது. ஏனய்யா! கை காலெல்லாம் நல்லாத் தானே இருக்கு! ஏதாவது வேலை செய்து உழைச்சு சாப்பிடலாமில்லே.. என்று அவரை அதட்டினார். அந்த மனிதருக்கோ அழுகை வந்து விட்டது. சற்று நிதானித்து விட்டு அவர் சொன்னார். ஐயா! நான் சில நாட்களுக்கு முன்பு வரை இலங்கையில் இலட்சாதிபதி என் கடையிலும் வீட்டிலும் வேலை செய்ய பலர் இருந்தார்கள். நான் திடீரென்று எல்லாவற்றையும் இழந்து விட்டு. இங்கே வந்திருக்கிறேன். எங்கே செல்வது என்ன செய்வது எதுவும் தெரியவில்லை. பசி தாங்க இயலவில்லை அதனால் தான் இப்படி..என்று சொல்லி அழுதார். அதைப் பார்த்து அதட்டியவருக்கு தர்ம சங்கடமாகி விட்டது. தன்னிடமிருந்த சில்லரைகளை கொடுத்த அவர் இந்தச் செய்தியை பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பியிருந்தார்.

2008 ம் ஆன்டில் நடைபெற்ற ஒரு கணக்கெடுப்பின் படி உலகில் 1 கோடியே 52 லட்சம் மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர் . அவர்களில் 47 வீதம் பேர் பெண்களும் சிறுவர்களுமாவர். 2006ல் இந்த எண்ணிக்கை 84 லட்சமாக இருந்தது.

 இந்த அகதிகளின் வாழ்க்கை தரம் மிகவும் மோசமானது. பெரும்பாலும் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத வாறு அகதிகளின் வாழ்க்கை சிதைக்கப்பட்டிருக்கிறது.

போதுமான உணவு கிடக்காது. குழந்தைகளிக்கான பால் கூட கிடைக்காது. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிமுகாமில் உள்ளவர்களுக்கு கடந்த இருமாதமாக போதுமான உணவு வழங்கப்படவில்லை. குழந்தைகளுக்கு பால் கூட
வழங்கப்படவில்லை என்று சமீபத்திய செய்தி ஒன்று கூறுகிறது.

அகதிகளின் மானத்திற்கு மரியாதைக்கும் எந்த வித உத்திரவாதமும் இல்லை.  இலங்கை அகதி முகாம்களில் தமிழ் பெண்கள் இராணுவத்தால் மானபங்கப் படுத்தப் படுவதாக அதை நேரில் பார்த்து விட்டு வந்த இலண்டனில் வசிக்கிற இலங்கை பெண் மருத்துவர் இராணி சொன்ன செய்தி வெளியாகி இருக்கிறது. இராணுவ வீரர்களின் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காகவும் அவர்கள் தருகிற உணவுப் பொருட்களுக்காகவும் இதைப் பற்றி பாதிக்கப் பட்ட பெண்கள் வெளியே சொல்வதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் பதிரிகைகளில் பரபரப்பாக பேசப் பட்ட செய்தி இது. இந்தோனேசியாவின் ஜவாத் தீவின் மேர் துறைமுகக் கடற்பரப்பில் அகதிகளின் படகுக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 40 முதல் 50 பேர் வரை மட்டுமே பயணிக்கக் கூடிய 30 மீட்டர் நிளமான மரப்படகில் 260 பேர் வரை அடைபட்டு இருப்பதாகவும் கப்பலில் உள்ள ஒவ்வவொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வயிற்றோட்டம், மலேரியாபோன்றவற்றால் அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா இந்தொனேசியா உள்ளிட்ட நாடுகள் காலம் கடத்துவதாகவும் செய்திகள் இதயத்தை பிழிகிற வண்ணம் இருக்கின்றன.

ஆனால் முஹாஜிரீன்களான ஸஹாபிகளை அல்லாஹ் கைவிடவில்லை.
முஹாஜிரீன்களுக்கு கிடைத்த மரியாதை
 எவர், அல்லாஹ்விற்காக மார்க்கத்தை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் தனது தாய் நாட்டையும் வீடுவாசல்களையும் சொந்த பந்தங்களையும் சொத்து சுகங்களையும் துறந்து செல்கிறாரோ அவருக்கு விசாலமான இடங்களையும் செழிப்பின் வாசல்களையும் அல்லாஹ் திறந்து வைக்கிறான். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்.
திருக்குர் ஆன் கூறுகிறது :எவர் இறைவனின் பாதையில் ஹிஜ்ரத் குடிபெயர்ந்து செல்கிறாரோ அவர் ஏரளாமான வசிப்பிடங்களையும் வளங்களையும் பெற்றுக் கொள்வார். (4:100)
திருக்குர் ஆனின் இந்த வாக்குறுதி சத்தியமானது என்பதற்கு ஹிஜ்ரத் செய்த நபிமார்களுடையவும் அவர்களை சார்ந்தவர்களுடையவும் வரலாறுகள் சாட்சியாக இருக்கின்றன. நபி இபுறாகீம் (அலை) அவர்களுக்கும் நபி மூஸா அலை அவர்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் குடிபெயர்நத பூமிகளில் வரலாற்றின் வழக்கத்திற்கு மாற்றமாக அல்லாஹ் அமைதியான அணுசரனையான செழிப்பான வாழ்கையை வழங்கினான்.  நாயகம் (ஸல்)அவர்களோடு பல நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள் அவர்கள அத்தனை பேருக்கும் மதீனாவில் செழிப்பான வாழ்கை காத்திருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவரின் கட்டளைக்கேற்ப மதீனாவுக்கு குடிபெயர்ந்து சென்றவர்களுக்கும் அற்புதமான வாழ்வாதாரங்களும் மரியாதையும் மதீனாவில் கிடைத்தன.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்களோடு பல நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் மதீனாவில் செழிப்பான வாழ்கை காத்திருந்தது.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து குடிபெயர்ந்து மதீனாவிற்கு வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவரை சஃது பின் ரபீஃ என்ற மதீனா தோழரின் குடும்பத்தில் ஒருவராக இணைத்துவிட்டாகள். அந்த தோழர் தனது அகதி சகோதரரை தன் வீட்டிற்கு அழைத்துக் சென்று அவரது கையைப்பிடித்துக் கொண்டு
சகோதரரே! எனக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு தோட்டங்கள் இருக்கின்ற ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு மனைவியர் இருக்கிறாகள். அவர்களில் ஒரு வரை தேர்வு செய்யுங்ககள் அவரை நான் விவாக விலக்கு செய்து உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன்
என்று சொன்னர். நெகிழ்ந்து போன அப்துரரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் அன்புச் சகோதரரே! அல்லாஹ் உங்களுக்கு குடும்பத்திலும் செல்வத்திலும் அருட்செய்யட்டும். எனக்கு கடைவீதிக்கு வழி காட்டுங்கள் இவை எதுவும் எனக்கு தேவை இல்லை என்று சொன்னர்கள்.

கடைவீதிக்கு சென்று சிறிய அளவில் வெண்ணை வாங்கி வியாபாரம் செய்யத் தொடங்கிய அப்துர் ரஹமான் பின் அவ்ப் (ரலி) பின்னாட்களில் அரபுலகின் மிகப் பெரிய செலவ்ந்தராக உயர்ந்தார்கள்.

இத்தகைய ஒரு சிறப்பான சூழ்நிலை ஏற்படக் காரணம் புலம் பெயர்ந்தோருக்கான மறுவாழ்வை அமைத்துத் தருவதில் நபிகள் அவர்கள் ஏற்படுத்திய புரட்சிகரமான வழிமுறையேயாகும்.

மதீனா நகருக்கு நபிகள் அவர்கள் புலம் பெயர்ந்த போது மக்காவிலிருந்து வந்த அகதிகளுக்காக அவர்கள் தனி முகாம்களை உருவாக்க வில்லை. அப்படி ஒர் திட்டத்தை அவர்கள் யோசிக்கவே இடம் தரவில்லை.

மக்காவின் அகதிகளை மதீனா மக்களின் சகோதரர்களாக நபிகள் இணைத்து விட்டார்கள். மக்காவின் அகதிகளை தங்களது வீடுகளில் வத்து பராமரிக்குமாறு பெருமானார் அறிவுறுத்தினார்கள்.

நபிகள் அவகள் சொன்னார்கள் மதீனாவின் மக்களே! நீங்கள் விரும்பினால் உங்களது வீடுகளிலிலும் சொத்திலும் அகதிகளுக்கு இடமளியுங்கள். இல்லை எனில் நான் அவர்களுக்கு இனி கிடைக்கப் போகும் வெகுமதிகளை வழங்கிவிடுகிறேன் என்றார்கள்.

மதீனாவின் தோழர்கள் தங்களது வீடுகளிலும் சொத்துக்களிலும் மக்காவின் அகதிகளுக்கு இடமளித்த்னர்.

அபூபக்கர் (ரலி) அவர்களை காரிஜா தன வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
உமர் அவர்களை இத்பானும் (ரலி),உஸ்மான் அவர்களை அவ்ஸும் (ரலி)
சுபைர் அவர்களை சலமாவும் (ரலி),அப்துர் ரஹ்மான் பின் அவபை சஃதும் (ரலி)
அபூ உபைதா அவர்களை இன்னொரு ஸஃதும் (ரலி) தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.அன்றைய தினமே 45 அகதிகளுக்கு 45 உள்ளூர் வாசிகள் பொறுப்பேறுறுக் கொண்டனர்.

அகதிகளாக வந்தவர்களுக்கு தங்களது குடும்பத்தை பற்றிய கவலை வாட்டாதிருக்கவும் நபிகள் அவர்கள் கட்டமைத்த ஒரு சமூக அமைப்பில் மனிதர்கள் வசிப்பிடத்தின் அடிப்படையில் பிளவு படாதிருக்கவுமான ஒரு அற்புதமான ஏற்பாடாக அது அமைந்தது.

அகதிகளை ஆதரித்தல் என்பதற்கான ஒரு புதிய புரட்சிகரமான திட்டத்தை அது வழங்கியது. அகதிகளுக்கு ஆதரவு தெரிவிபதற்கான மனிதாபிமானப் பாடத்தை அது வரையறுத்தது. யாரும் தங்களது நாட்டில் குடியேறிய அகதிகளை இரண்டாந்தரக் குடிமக்களாக கருதக் கூடாது என்பதே ஆதரித்தல் என்பதன் சரியான பொருள் என்பதை அது உறுதிப்படுத்தியது. 

மாநபியின் ஹிஜ்ரத்தும் மதீனாவாசிகளின் அரவணைப்பும்

மதீனாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்து அந்நகர மக்கள், கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் நுழையலாயினர். இது இணைவைப்பவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அன்றிரவு நபியவர்களின் வீட்டைச் சூழ்ந்து, அவர்களைக் கொலை செய்து விடுவ தென்றும் தீர்மானிக்கப்பட்டு அதற்காக குறைஷியரின் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொரு வாலிபர் தெரிவு செய்யப்பட்டனர். நள்ளிரவில் நபியவர்களின் வீட்டை முற்றுகையிட்டு ஓரேயடியாகத் தாக்கி அவரைத் தீர்த்துக் கட்டுவது என்பது தான் அவர்களது திட்டம். நபியவர்களை அழித்து விடுவதனால், அவர்களது மார்க்க அழைப்பையும் அழித்து விட முடியும் என்று முடிவு செய்தனர்.
இறை நிராகரிப்பாளர்கள் இவ்வாறுதான் விரும்பினர். ஆனால் அல்லாஹ்வோ வேறு விதமாக நாடியிருந்தான். அவன், இரவுக் காவலில் நின்ற கூட்டத்தாருக்கு மத்தியில் தனது நபியை வெளியாக்கி, அன்றிரவே மக்காவிலிருந்து வெளியேறுமாறு நபிகளாருக்கு ஆணை பிறப்பித்தான்.
கட்டிலில் அலீ
நபி ஸல் அவர்கள், மக்கள் தம்மிடம் அமானிதமாகத் தந்து வைத்திருந்த பொருட்களையெல்லாம், உரியவர்களிடம் மீள ஒப்படைக்குமாறும் அலீயிடம் கையளித்தார்கள். மக்காவை விட்டுப் புறப்படும் நிலையில், நபியவர்கள் வீட்டிலில்லை என்பதை உணர்ந்து எதிரிகள் விழித்துக் கொள்ள கூடாது என்பதற்கா, தமது படுக்கையில் தூங்குமாறு அலீயை நபியவர்கள் பணித்தார்கள்.  அலீ அவர்கள், நபியவர்களின் ஏவலுக்கு வழிப்பட்டு அந்த ஆபத்தான காரியத்தைப் பொறுப்பேற்று நபிகளாருக்கப் பதிலாக அவர்களது படுக்கையில் தூங்கிக் கொண்டார்கள். 
ஹஸ்ரத் அலீயினுடைய இந்த தியாகம் பற்றி அல்லாஹ் புனித அல்குர்ஆனில் விதந்துரைத்து புகழும்படியானதாக அமைந்திருந்தது. 
قال الله تعالي {وَمِنَ النَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللَّه (البقرة207) }نزلت في علي بن أبي طالب رضي الله عنه بات على فراش رسول الله صلى الله عليه وسلّم ليلة خروجه إلى الغار ، ويروى أنه لما نام على فراشه قام جبريل عليه السلام عند رأسه ، وميكائيل عند رجليه ، وجبريل ينادي : بخ بخ مَنْ مِثْلُك يا ابن أبي طالب يباهي الله بك الملائكة ونزلت الآية.(تفسير الرازي
தௌர் குகையை நோக்கி...
மாலையில் இருள் சூழத்தொடங்கியதும், நபி அவர்களின் வீடு முற்றுகையிடப்பட்டது..
நபியவர்களின் வீட்டினை அவர்கள் சூழ்ந்திருக்கின்றனர். வீட்டினுள்ளே அலீ (ரலீ) அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆயினும், நபியவர்கள், தமது பயணத்தில் அபூபக்கர் (ரலீ) அவர்களையும் தம்மோடு அழைத்துக் கொண்டு, தௌர் குகையை நோக்கியவர்களாக விரைந்து கொண்டிருந்தார்கள்.
விடிந்ததும், வீட்டைச் சூழ்ந்து நின்றிருந்த அந்தக் கொடியவர்கள், தமது வாட்களை உருவிக் கொண்டு, நபிகளாரின் வீட்டினுள் நுழைந்து அவர்களது படுக்கையை தாக்கினர். அப்போது, நபிகளாரின் படுக்கையில் ஹஸ்ரத் அலீயை கண்டதும் ஏமாற்றத்தின் திடுக்கமும் சீறற்றமும் ஒருசேர அவர்களைத் தாக்கின.
தமது முயற்சியெல்லாம் வீணாகி விட்டதைக் கண்ட குறைஷியர், அது தமது பெருமைக்கு பேரிழுக்கை ஏற்படுத்தி விட்டதை உணர்ந்தார்கள். நபியவர்களைக் கண்டுபிடிக்க பெரும் பிரயத்தனம் மேற்கொண்டார்கள். எனினும், வெற்றி அவர்களை சென்றடையவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தௌர் குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள்
யத்ரிபை நோக்கி...
 பின்பு யத்ரிபை நோக்கிப் புறப்பட்டார்கள். இந்தக் குறுகிய காலமானது, நபியவர்களைப் பிடித்துவிட முடியும் என்பதில் குறைஷியருடைய உள்ளத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தது.
மக்காவைச் சேர்ந்த சுராகத் இப்னு மாலிக் நபி ஸல்லல்லாஹு  அவர்களின் காலடித்தளங்களை அடையாளங் கண்டு அவர்களைப் பிடிக்க வந்தார். எனினும் பூமி அவரது குதிரையின் கால்களைப் பிடிக்துக் கொள்ள அவர் கீழே விழுந்தார். மூன்று முறை இவ்வாறு நடந்தது. பின்னர் நபிகளாரிடம் பாவமன்னிப்புக் கோரி திரும்பிச் சென்றார்.
  • இறைத் தூதரை கொல்ல வந்த சுராகா என்பவர் இறைத்தூதரின் பாதுகாவலராக மாறிய சம்பவம்
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: اشْتَرَى أَبُو بَكْرٍ مِنْ عَازِبِ رَحْلا بِثَلاثَةَ عَشَرَ دِرْهَمًا، فَقَالَ أَبُو بَكْرٍ لِعَازِبٍ: مُرْهُ لِي فَقَالَ لَهُ عَازِبٌ: لا حَتَّى تُخْبِرَنِي كَيْفَ صَنَعْتَ أَنْتَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَرَجْتُمَا وَالْمُشْرِكُونَ يَطْلُبُونَكُمَا فَقَالَ: ارْتَحَلْنَا وَالْقَوْمُ يَطْلُبُونَا فَلَمْ يُدْرِكْنَا مِنْهُمْ غَيْرُ سُرَاقَةَ بْنِ جَشْعَمٍ عَلَى فَرَسٍ لَهُ، فَقُلْتُ لَهُ: هَذَا الطَّالِبُ قَدْ لَحِقَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ:"لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا" فَلَمَّا أَنْ دَنَا كَانَ بَيْنَنَا وَبَيْنَهُ قِيدُ رُمْحٍ أَوْ ثُلُثَهُ فَقُلْتُ: هَذَا الطَّالِبُ قَدْ لَحِقَنَا يَا رَسُولَ اللَّهِ وَبَكَيْتُ، فَقَالَ: مَا يُبْكِيكَ ؟ فَقُلْتُ:وَاللَّهِ مَا عَلَى نَفْسِي أَبْكِي وَلَكِنْ أَبْكِي عَلَيْكَ فَدَعَا عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: اللَّهُمَّ اكْفِنَاهُ، فَسَاخَتْ بِهِ فَرَسُهُ إِلَى بَطْنِهَا فَوَثَبَ عَنْهَا، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، قَدْ عَلِمْتُ أَنَّ هَذَا عَمَلُكَ فَادْعُ اللَّهَ أَنْ يُنَجِّينِيَ مِمَّا أَنَا فِيهِ فَوَاللَّهِ لأُعَمِّيَنَّ عَلَى مَنْ وَرَائِي مِنَ الطَّلَبِ وَهَذِهِ كِنَانَتِي فَخُذْ سَهْمًا فَإِنَّكَ سَتَمُرُّ عَلَى إِبِلِي وَغَنَمِي بِمَكَانِ كَذَا فَخُذْ مِنْهَا حَاجَتَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا حَاجَةَ لَنَا فِي إِبِلِكَ، فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقَ رَاجِعًا إِلَى أَصْحَابِهِ وَمَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا الْمَدِينَةَ".(تفسير ابن كثير)
யத்ரிப் வரவேற்றது
யத்ரிபில், மக்களெல்லோரும் தமது பெரும் தலைவரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
பெருநாள் தினத்தைப் போன்றிருந்த அன்றைய நாளில்இமை மூடாத கண்களும் எட்டியப் பார்க்கும் கழுத்துகளுமாக குபாவை நோக்கியவாறு மக்கள் எதிர்பார்ப்பிலிருந்தனர்.
ஒரு வெள்ளிக்கிழமை நாளில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது மதீனாவை வந்தடைந்தார்கள். அவர்களை, வரவேற்பாளர்கள் சூழ்து கொள்ள மக்கள் அன்புடன் வரவேற்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்ததன் மூலமாக அருளைப் பெற்றக் கொண்ட அந்த மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை
ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்-
-எதிரிகள் மிக அருகில் இருந்தாலும் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால் எதிரிகளின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டார்கள்
إِذْ يَقُولُ إِنَّ اللَّهَ مَعَنَا[التوبة:40] عَنْ أَنَس أَنَّ أَبَا بَكْر حَدَّثَهُ قَالَ:قُلْت لِلنَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي الْغَار لَوْ أَنَّ أَحَدهمْ نَظَرَ إِلَى قَدَمَيْهِ لَأَبْصَرَنَا لِصَاحِبِهِ لَا تَحْزَنْ تَحْت قَدَمَيْهِ فَقَالَ يَا أَبَا بَكْر مَا ظَنّك بِاثْنَيْنِ اللَّه ثَالِثهمَا(بخاري)فأعمى الله أبصار المشركين حتى لم يحن لأحد منهم التفاتة إلى ذلك الغار
‘’யாரசூலல்லாஹ். அவர்கள் சற்று கீழே குனிந்துபார்த்தாலும் நம்மை கண்டுகொள்வார்கள்’’
''அபூபக்கரே நாம் இருவரில்லை ; மூவர் !
அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்
.''
இந்த நம்பிக்கையால் இறைவன் அவர்களை எதிரிகளின் கண்களை விட்டும் பாதுகாத்தான்.
  • இதே நம்பிக்கை தான்  7 குகைவாசிகளையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றியது
إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا-فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا..(11)الكهف قال ان عباس رض إن ملكا من الموك يقال له دقيانوس ظهر على مدينة من مدائن الروم وكان بعد زمن عيسى عليه السلام فأمر بعبادة الأصنام فدعا أهلها إلى عبادة الأصنام وكان بها سبعة أحداث يعبدون الله سِرَّا فرُفِعَ خبرُهم إلى الملِك وخافوه فهربوا ليلا ومَرُّوا براع مع كلب فتبعهم فآوَوْا إلى الكهف فتَبِعَهُم الملك إلى فَمِ الغار فوجد أثر دخولهم ولم يجد أثر خروجهم فدخلوا فأعمى الله أبصارهم فلم يروا شيئا..(تفسير القرطبي)
திக்யானூஸ் என்ற அரசன் சிலைகளை வணங்குமாறு அந்த இளைஞர்களை வற்புறுத்தியபோது ஹிஜ்ரத் செய்தார்கள்.குகையில் ஒதுங்கினார்கள். மன்னன் வந்து குகையில் பார்த்தபோது கண்களால் பார்க்க முடியவில்லை.
  • கொல்ல வந்த எதிரிகளின் கண்களை விட்டும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மறைத்த மற்றொரு சம்பவம்
إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلاَلاً فَهِيَ إِلَى الأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ(8)(يس)قيل نزلت في أبي جهل بن هشام وصاحبيه المخزوميين وذلك أن أبا جهل حلف لئن رأى محمدا يُصلي ليرضخن رأسه بحجر فلما رآه ذهب فرفع حجرا ليرميه، فلما أومأ إليه رجعتْ يده إلى عنقه والتصق الحجر بيده قاله ابن عباس وعكرمة وغيرهما فهو على هذا تمثيل أي هو بمنزلة من غلت يده إلى عنقه فلما عاد إلى أصحابه أخْبَرَهم بما رأى فقال الرجل الثاني وهو الوليد بن المغيرة:أنا أرضخ رأسه.فأتاه وهو يصلي على حالته ليرميه بالحجر فأعمى الله بصره فجعل يسمع صوته ولا يراه فرجع إلى أصحابه فلم يرهم حتى نادوه فقال: والله ما رأيته ولقد سمعت صوته فقال الثالث:والله لأشدخن أنا رأسه ثم أخذ الحجر وانطلق فرجع القهقرى6 ينكص على عقبيه حتى خر على قفاه مغشيا عليه.فقيل له:ما شأنك؟قال شأني عظيم رأيت الرجل فلما دنوت منه وإذا فحل7 يخطر بذنبه ما رأيت فحلا قط أعظم منه حال بيني وبينه فواللات والعزى لو دنوت منه لأكلني.فأنزل الله تعالى:إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ.(قرطبي

நபி தொழுது கொண்டிருக்கும்போது கல்லைத் தூக்கிப்பேபாட்டு மூவர் கொல்ல முயன்றனர்.
  • அபூஜஹ்லுக்கு கல் கையுடனும் கை கழுத்துடனும் ஒட்டிக்கொண்டது.
  • வலீதுக்கு பார்வை தெரியவில்லை.
  • மூன்றாமவன் அலறிக்கொண்டு ஓடிவந்தான். அவரை நெருங்கியபோது காளை துரத்தியது போன்று இருந்தது என்றான்

மேற்கோள்கள் : Albaqavi.com,  vellimedai.blogspot.com, ulama.in,
 sadhak-maslahi.blogspot.com
படங்கள் தொகுப்பு & பிற சேர்க்கை :  sadhak-maslahi.

2 கருத்துகள்:

  1. அற்புதமான கட்டுறை. அல்லாஹ் மென்மேலும் உங்களுக்கு கல்வியில் பரகத் செய்வானாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமீன். ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
      உங்களைப் போன்ற
      உயர்ந்த பதிவர்களின்
      உன்னத துஆவிற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...