08 டிசம்பர், 2011

ஆஷூரா நாளின் துஆக்கள்

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِؕ
اَللّٰهُمَّ يَاقَابِلَ تَوْبَةِ اٰدَمَ يَوْمَ عَاشُوْرَاء ،
ஆஷூரா நாளன்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தவ்பாவை ஏற்று அங்கீகரித்த  நாயனே!

وَياَرَافِعَ اِدْرِيْسَ  اِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வானத்தளவில் உயர்த்திய நாயனே!

وَيَامُسَكِّنَ سَفِيْنَةَ نُوْحٍ عَلَى الْجُوْدِيِّ  يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று நபி நூஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய கப்பலை பாதுகாவலுடன் ஜூதி மலைக்கு மேல் நிம்மதியுடன் தரிபடுத்தி வைத்த நாயனே!
وَيَامُنَجِّيَ اِبْرَاهِيْمَ مِنْ نَارِ نَمْرُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று நம்ரூதுடைய நெருப்பை விட்டும் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈடேற்றமாக்கி வைத்த நாயனே!
وَيَاجَامِعَ شَمْلِ يَعْقُوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்கள் கூட்டம், குடும்பத்தினருடன் ஓன்று சேர்த்த நாயனே!
وَيَاكَاشِفَ الضُّرِّ اَيُّوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிணி நோய்களை முற்றாக நீக்கிய நாயனே!
وَيَا فَارِجَ كُرْبَةِ ذِى النُّوْنِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நூன் என்ற மீனுடைய வயிற்றிலிருந்து வெளிப்படுத்தி சங்கடங்களையெல்லாம் நீக்கி சந்தோஷ வாழ்வை கொடுத்த நாயனே!
وَيَاغَافِرَ ذَنْبِ دَأُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களது பாவங்களை பொறுத்தருளிய நாயனே!
وَيَاسَامِعَ دَعْوَةِ مُوْسٰى وَهَارُوْنَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆவையும் நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆவையும் அங்கீகரித்து அருள் புரிந்த நாயனே!
وَيَازَائِدَ الْخِضْرِ فِي عِلْمِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று நபி கிலுரு  அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அகமிய மெஞ்ஞான அறிவுகளை அதிகமாக அளித்து அருள் புரிந்த நாயனே!
وَيَارَافِعَ عِيْسَى بْنِ مَرْيَمَ اِلٰى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது குமாரர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வானத்தளவில் உயர்த்திய நாயனே!
وَيَانَاصِرَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகச் சிறப்புடன் உதவிகள் அளித்த நாயனே!
وَيَاخَالِقَ الْجَنَّةِ وَالنَّارِ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று சுவர்க்கத்தையும், நரகத்தையும் படைத்த நாயனே!
وَيَامُنَزِّلَ التَّوْرٰلةِ وَالزَّبُوْرِ وَالْاِنْجِيْلِ وَالْفُرْقَانِ الْعَظِيْمِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று தவ்ராத், ஜபூர், இன்ஜீல், மகத்துவமிக்க புர்கான் வேதங்களை இறக்கியருளிய நாயனே!
وَيَاخَالِقَ جِبْرِيْلَ وَمِيْكَائِيْلَ وَاِسْرَافِيْلَ وَعِزْرَائِيْلَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று ஜிப்ரயீல், மீகாயீல், இஸ்ராயீல், இஸ்ராபீல் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர்களை படைத்த நாயனே!
وَيَاخَالِقَ الْعَرْشِ وَالْكُرْسِيِّ وَالَّوْحِ وَالْقَلَمِ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று  அர்ஷையும், குர்ஸியையும், லவ்ஹையும், கலமையும் படைத்த நாயனே!
وَيَاخَالِقَ الشَمْسِ وَالْقَمَرِ وَالنُّجُوْمِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று  சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்த நாயனே
وَيَاخَالِقَ السَّمٰوٰتِ السَّبْعِ وَالْاَرْضِيْنَ السَّبْعِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று ஏழு வானம், ஏழு பூமிகளை படைத்த நாயனே!
اِقْضِ لَنَا الْحَاجَاتِ يَاقَاضِيَ الْحَاجَاتِ وَادْفَعْ عَنَّا السَّيِّأٰتِ وَالْبَلِيَّاتِ وَسَلِّمْنَا مِنْ اٰفَاتِ الدُّنْيَا وَفِتْنَيِهَا وَبَلَائِهَا وَوَبَائِهَا وَمُصِيْبَاتِهَا وَاَسْقَامِهَا وَشِدَّتِهَا وَفَقْرِهَا وَمِنْ اٰفَاتِ الْاٰخِرَةِ وَعَذَابِهَا وَاَهْوَالِهَا بِحُرْمَةِ سَيِّدِ التَّقَلَيْنِ وَرَسُوْلِ الْكَوْنَيْنِ مُحَمَّدِنِ الْمُصْطَفٰى خَاتَمِ النَّبِيِّيْنَ يَاحَيُّ يَاقَيُّوْمُ يَاذَالْجَلَالِ وَالْاِكْرَامِ يَامَالِكَ يَوْمَ الدِّيْنِ اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ وَبِحُرْمَةِ السَّيِّدَيْنِ الشَّهِيْدَيْنِ اَبِى مُحَمَّدِنِ الْحَسَنِ وَاَبِى عَبْدِاللهِ الْحُسَيْنِ اَللّٰهُمَّ زٍدْهُمَا تَعْظِيْمًا وَتَكْرِيْمًا . وَصَلَّى اللهُ وَسَلَّمَ وَبَارَكَ عَلَى خَيْرِ خَلْقِهِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ وَالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ .
நாட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரக்கூடிய வல்லமை மிக்க நாயனே! கிருபையுள்ள அல்லாஹ்வே! எங்களுடைய நாட்ட தேட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவாயாக! தீமைகள், பொல்லாங்குகள் அனைத்தையும் அகற்றி நிவர்த்தி செய்கின்ற நாயனே! எங்கள் தீமைகளையும், பொல்லாங்குகளையும் நிவர்த்தி செய்தருள் புரிவாயாக! மேலும் இவ்வுலகத்தின் ஆபத்து, தீங்குகளை விட்டும், பயங்கரச் சோதனைகளை விட்டும், பலாய் முஸீபத்துகளை விட்டும், பீடை, பிணி, வியாதிகளை விடடும் எங்களை காப்பாற்றியருள்வாயாக! மேலும் மறு உலக வாழ்வின் பயங்கரங்களை, அபாயங்களை, தண்டனைகளை, அமளிகளை விட்டும் எங்களை பாதுகாத்து கொள்வாயாக! என்றென்றும் நிலைத்திருப்பவனே! மகத்துவம் மிக்கவனே! சங்கைமிக்க தயாபரனே! தீர்ப்பு நாளின் அதிபதியே! உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம். எங்கள் இந்த துஆக்கள் அனைத்தையும் இரு லோகத்திற்கும் சர்தாரும், ஈருலக இரட்சகரும், அனைத்துலகுக்கும் இருட்கொடையாக வந்துதித்த ரஸூல்மார்களுக்கெல்லாம் தலைவரும், நபிமார்களுக்கெல்லாம் அதிபதியும், நபிமார்களில் முத்திராங்கமாகத் தோன்றிய எம்பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டினாலும், அவர்களுடைய அருந்திருப்பேரர்கள், ஷஹீதுக்கெல்லாம் தலைவராகிய இமாம் ஹுஸைன், இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களின் பொருட்டினாலும் நீ கிருபையுடன் கபூல் செய்து ஏற்றுக் கொள்வாயாக! அங்கீகரிப்பாயாக! இறைவா! எங்கள் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரு கண்மணிகளான அவ்விரு பேரர்;களையும் மேலும் சிறப்பாக்கி , கண்ணியப்படுத்தி வைப்பாயாக! ஆமீன்.

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அப்படியா மவ்லானா..
      அல்ஹம்து லில்லாஹ்
      உங்கள் கருத்துக்கு ஜஸாக்கல்லாஹ்.

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...