04 டிசம்பர், 2011

தமிழகத்தின் முதல் முஸ்லிம் மன்னர்



சய்யிது இப்றாகீம் 

(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் நான் தொகுத்த கட்டுரை)
சய்யிது இப்றாகீம் தமிழகத்தின் முதல் முசுலிம் மன்னர் என்று கருதப்படுகிறார்.[1] இவர்
 ஹிஜ்ரி 530 ரமலான் பிறை 3ல் மொரோக்கோவின் ஆளுநரான சய்யிது அகமது- ஃபாத்திமா
 தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.[2]

இளமை

இளமையில் மதீனாவில் கல்வி பயின்ற இவர் இளமையிலேயே எகிப்து லிபியா அல்ஜீரியா
 போன்ற பல நாடுகளுக்கும் சென்று சமயப் பிரச்சாரம் செய்தார். பின்னர் மூவாயிரம்
 பேர்களுடன் சென்று சிலுவைப் போரில் போர் புரிந்தார். போர் முடிவில் பாலஸ்தீனின்
 ஆளுநராக நியமிக்கப்பட்டார். 24 வது வயதில் சய்யிதா அலீ ஃபாத்திமா என்ற பெண்ணை
 மணம் புரிந்தார்.

[தொகு]சேவை

மதீனாவில் இவர் ஒருநாள் படுத்துறங்கும்போது முகம்மது நபி இவரது கனவில் தோன்றி
 இந்தியாவுக்குச் சென்று இசுலாமை பிரச்சாரம் செய்யுமாறு ஏவியதாகவும் அதன்படியே
 அவர் இந்தியாவிற்கு வருகை புரிந்ததாகவும் இசுலாமியர் நம்புகின்றனர். முதலில் ஆயிரம்
 வீரர்களுடன் சிந்து வந்தார். அங்கு ஆண்டுவந்த அரசர்களுக்கு இசுலாத்தில் இணையுமாறு
 அழைப்புக் விடுக்க அதை ஏற்றனர் சிலர்; எதிர்த்தனர் சிலர். எதிர்த்தவர்களுடன் போர் செய்து
 வென்றார். பின்னர் மதீனா திரும்பினார்.

[தொகு]தென்னிந்திய வருகை

சில ஆண்டுகளுக்குப் பின் தம் குடும்பத்தினர் 121 பேர் உட்பட 9000 வீரர்களுடன் மக்கா வந்து
 உம்ரா செய்துவிட்டு பின்னர் ஜித்தா துறைமுகம் வந்து ஹிஜ்ரி 571 ரபீவுல் ஆகிர் மாதம்
 இந்தியாவுக்கு கப்பல் ஏறினார்.இதற்கிடையே அருகிலுள்ள நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில்
 முசுலிம் போர் வீரர்கள் வந்து இவரது அணியில் சேர்ந்துகொண்டனர்.மொத்தம் 23000
 பேர்களுடன் நாற்பது நாட்கள் கடல் பயணம் செய்து கண்ணனூர் வந்து சேர்ந்தார்.
இவரின் வரவை அறிந்த கண்ணனூர் அரசர் மிகுந்த வரவேற்பு அளித்தார்.அவரது ஒத்தாசையால்
 அப்பகுதியில் சமயப் பிரச்சாரத்தை நிறைவாக செய்ய இயன்றது. அதன் பிறகு
 அங்கிருந்து கிளம்பி கொச்சி கொல்லம் வழியாக சேரநாட்டைக் கடந்து பாண்டிய நாட்டுத்
 துறைமுகப் பட்டிணமான காயல்பட்டினம் வந்து சமயப் பிரச்சாரம் செய்தார்.[3]

[தொகு]யுத்தம்

இந்நிலையில் பாண்டிய நாட்டை மூன்று சகோதரர்கள் பங்குவைத்து ஆண்டு வந்தார்கள்.
மதுரையை மூத்தவன் சடையவர்மன் வீரபாண்டியனும் (1175-1180) 
சேது நாட்டை பவித்திர மாணிக்கப் பட்டிணத்தை தலைநகராகக் கொண்டு
 விக்கிர பாண்டியனும்(1180-1190)திருநெல்வேலி மாவட்டத்தை
 குலசேகரப் பாண்டியனும்(1162-1175)ஆண்டு வந்தனர். [4] அவர்களிடையே ஒற்றுமையில்லை.
 சடையவர்மன் குலசேகர பாண்டியன் சய்யிது இப்றாகீம் அவர்களின் உதவியை நாடினார்.
அவர் முதலில் தன் தளபதிகளை வீரபாண்டியனிடம்அனுப்பி சமாதானம் செய்துவைக்க
 முனைந்தார்.பலனில்லாமல் போகவே மதுரை மண்ணிலே இவருக்கும் வீரபாண்டியனுக்கும்
 போர் நடந்தது.முடிவில் இவர் வெற்றி பெற்றார். மற்றுமொரு
 பாண்டிய மன்னர் விக்கிரமனும்
 இவரது சமயப் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போருக்கு
 வரவே இப்போரின் விளைவாக
 சேது நாட்டின் அரசாட்சியும் சய்யிது இப்ராகீம்
 அவர்கள் கையில் வந்தது. தமிழ் நாட்டின்
 ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் (கி.பி. 1195-1207) இவர்களே.
வீர மரணம்
 கி.பி. 1207-ல் வீரபாண்டியனுடன் நடந்த மற்றுமொரு போரில்
 காலமானார் இராமனாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம்
 செய்யப்பட்டார்கள். மதினா நகரின் ஒரு பகுதியான யர்புத் என்ற
 இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள்
 அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் யர்புத் என்றே பெயர்
 சூட்டப்பட்டது. இச்சொல்
 நாளடைவில் ஏர்வாடி என்று மருவி விட்டது.[5]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download