25 அக்டோபர், 2021

அல்லாஹ்வின் நினைவை விட்டும் கணப்பொழுதும் நீங்குவதா?

 

وفي الرسالة القشيرية عن بعضهم أنه دخل غيضة فوجد رجلاً يذكر الله تعالى وعنده سبع عظيم فقال ما هذا قال سألت الله أن يسلط علي كلباً من كلابه إذا غفلت عن ذكره

ஒரு இறை நேசர் ஒரு தோட்டத்தில் நுழைந்தார். அங்கே ஒரு வணக்கசாலி அல்லாஹ்வை விடாமல் திக்ரு செய்துகொண்டே இருந்தார்.

ஆனால் அவருக்கு அருகில் ஒரு பிரமாண்டமான வன விலங்கு ஒன்று இருக்கிறது.

 

 இது என்ன என்று இவர் கேட்டார். அவர் சொன்னார் : "நான் அல்லாஹ்வை அனுதினமும் தியானித்து வருகிறேன். சிறிது நேரம் அவனுடைய நினைவை விட்டு நான் மறந்துவிட்டால் கூட அல்லாஹ்வுடைய விலங்குகளில் ஒரு விலங்கை என்மீது சாட்டுமாறு அவனிடத்தில் கேட்டிருக்கிறேன் அதுதான் இது.

 

حكاية: قال بعض الصالحين رأيت صياداً بالهند كلما صاد سمكة دفعها إلى ابنة له فترسلها في الماء وهو لا يعلم فلما فرغ جاء فلم يجد شيئاً فسألها عن ذلك قالت سمعتك تقول عن النبي صلى الله عليه وسلم لا تقع سمكة في شبكة إلا إذا غفل عن ذكر الله فكرهت أن تأكل شيئاً غفل عن ذكر الله وقيل أنها كانت السمكة تسبح في يدها فقالت البنت ما دفعت إلي سمكة إلا وسمعتها تقول سبحان الله فقطع الشبكة وتاب عن الصيد

 

 

ஒரு இறை நேசரின் வாக்குமூலம் இது:

 

இந்தியாவில் ஒரு  நான் மீனவரைப்பார்த்தேன். அவர் மீன் பிடித்து தன் மகளுக்கு அருகில் போடுகிறார். ஆனால் அவள் அதை கூடையில் சேகரிப்பதற்குப் பதிலாக கடலிலே மறுபடியும் தூக்கி தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தாள்.

 இதை அவர் கவனிக்கவில்லை மீன் பிடித்து முடிந்ததும் திரும்பிப்பார்த்துமீன் எல்லாம் எங்கே என்று கேட்டார் 

அதற்கு அவள் சொன்னாள் : எந்த ஒரு மீன் வலையில் அகப்பட்டாலும் அந்த வினாடியில் அல்லாஹ்வுடைய திக்ரை விட்டு அது மறந்து இருக்கும்பொழுது தான் வலையில் அல்லது தூண்டிலில் அகப்படுகிறது  என்று ஏந்தல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நீங்கள் தானே எனக்கு ஹதீஸ் அறிவித்தீர்கள்? அல்லாஹ்வுடைய திக்ரை விட்டும்- நினைவை விட்டும்- மறந்திருந்த நிலையில் பிடிபட்ட ஒரு மீனை நான் சாப்பிடுவதா அதனால்தான் மறுபடியும் அதை கடலிலேயே விட்டேன் என்று கூறினாள்.

இது அல்லாஹ் மீது இருக்கிற பிரியத்தின் உச்சகட்டம்.

 மற்றபடி மீன் சாப்பிடுவது மார்க்கத்தில் ஒன்றும் தடையில்லை.

 

 ஆனால் சிலர் அல்லாஹ் மீது இருக்கிற அளவிலா அன்பின் காரணமாக பக்தியின் உச்சத்தில் இப்படி செய்வார்கள் அது நமக்கு பொதுவான சட்டம் இல்லை.

 

உதாரணமாக ஒரு தோழர் மதினாவிற்கு வந்தார்.

 மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கண்டார்.

 அதற்குப் பிறகு இப்படி பிரார்த்தித்தார். " அல்லாஹ்வே அண்ணல் நபி அவர்களை கண்ட இந்த கண்ணால் இனி வேறெதையும் காணக்கூடாது எனவே என் கண்களை குருடாக்கி விடு !"  

 

அந்த வினாடியே அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை வரலாற்றில் பார்க்கிறோம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...