11 அக்டோபர், 2020

முப்பது மில்லியன் கூட வேணாம்.. முகத்திரை கழற்ற மாட்டேன்!

 (Face Caver) முகத்திரைக்காக அல்குர்ஆன் போட்டியின் 30 மில்லியன் ரூபா பணப் பரிசையும் விட்டுக் கொடுத்த இந்தோனேசியப் பெண்மணி

-------=------------------------------------

இந்தோனேஷியாவில் ஷரீஆ பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தேசிய  அல்குர்ஆன் மனனப் போட்டியில் பங்குபற்றுகிறார்.

இறுதிச் சுற்றிற்கு (Final Round) தெரிவாகிறார்.

வெற்றியீட்டுபவருக்கு 30 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

இறுதிச் சுற்றிற்கு...... தனது  முகத்தை மறைத்த நிலையில் மாணவி மேடைக்கு வந்தவுடன் மத்தியஸ்தர்கள்,

உங்கள் முகத்திரையை நீக்குங்கள்!

மன்னித்துக் கொள்ளுங்கள் உஸ்தாத்! எனக்கு இதை (ஹிஜாபை) திறக்க முடியாது.

தயவு செய்து உங்கள் ஹிஜாபை நீக்குங்கள்.

இது போட்டியின் நிபந்தனைகளில் ஒன்று.

ஒலிவாங்கியை (Mic) ஹிஜாபுக்குள்ளே  வைத்து ஓத முடியாதா?

முடியாது! முடியாது! இதுதான் சட்டம்

உஸ்தாத்! கவலையாக இருக்கிறது.

நான் போட்டியிலிருந்து வெளியேறுகிறேன். 

உஸ்தாத்!

எனக்கு ஹிஜாபை கலட்ட முடியாது.....

என்று கூறிவிட்டு மேடையிலிருந்து வெளியேறுகிறார்.

இந்த ஈமானியப் பெண்மணி தனது ரப்பின் இறைக் கட்டளைதான் எனக்கு 30 மில்லியன் ரூபாவை விட மிக மேலானது என நினைக்கிறாள்.

கவலையுடன் போட்டியிலிருந்து வெளியேறுகிறாள்.

இந்தப் பெண்மணியின் ஆச்சரியமான செய்தி முழு இந்தோனேஷியாவிலும் வைரலாகத் தொடங்கியது.

போட்டி நடைபெற்று 5 நாட்களில் இந்தப் பெண்மணியின் அதீத  ஈமானிய உணர்வைப் பார்த்து 100 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டாள்.

முழு உலகத்திலும் இந்தப் பெண்மணியின் ஈமானிச் செயலை ஊடகங்கள் பகிர்ந்தன.

அல்லாஹ்விற்காக 30 மில்லியன் ரூபாவை விட்டுக் கொடுத்தாள். அதனைவிட 3 மடங்கு (💯 மில்லியன் ரூபாவை) அல்லாஹ் அந்தப் பெண்மணிக்கு கொடுத்தான்.

அதுமட்டுமல்லாமல் முழு உலகத்திற்கும் அந்தப் பெண்மணியின் இதய சுத்தியை (இஹ்லாஸை) அல்லாஹ் வெளிப்படுத்தினான்.

 "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக ஒரு விடயத்தை விட்டுவிடுகிறாறோ அதை விட சிறந்ததை அல்லாஹ் அவருக்கு கொடுப்பான்" 

அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநிறுத்தியவர்களை அல்லாஹ் ஒருநாளும் வீனாக்க மாட்டான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...