15 செப்டம்பர், 2020

என்றும் நாயகம் புகழ் தேயாதே ! Tamil Islamic Song Lyrical Video



பாடல்: அல்ஹாஜ் முஹிப்புல் உலமா A.முஹம்மது மஃரூஃப்

ராகம்: சின்னத் தாயவள் தந்த ராசாவே

ன்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
சொல் வளம் தாராயோ,
என் எண்ணத்தில் வாராயோ,
எந்தன் ரப்பே, கவிஞன் நீயோ!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!

வார்த்தைகள் யாவும் நீ தர
வார்த்திட மையில் நான் வர
தேன் குரல் கொண்டவர் பாடிட
தேனிசை தென்றல் வீசிட
விண்ணைத் தாண்டியும் இசை கேட்டிட
என்னைக் காதலால் நபி பார்த்திட
ஆசை தீராதோ
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
சொல் வளம் தாராயோ,
என் எண்ணத்தில் வாராயோ,
எந்தன் ரப்பே, கவிஞன் நீயோ!

பாரினில் எங்கும் கேட்கணும்
பாடலில் மனமும் ஏங்கணும்
ஆண்டவன் நீயும் தா வரம்
ஆயுள் முழுதும் என் கரம்
நபி நாதரைப் பாட வேண்டுமே
எந்தன் தாய் மொழி தமிழ் போதுமே
சொற்கள் தாராதோ!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
சொல் வளம் தாராயோ,
என் எண்ணத்தில் வாராயோ,
எந்தன் ரப்பே, கவிஞன் நீயோ!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!

1 கருத்து:

  1. அருமையான வரிகள் இனிமையான குரல்..! அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக..!!!

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாம் வலியுறுத்திய இயற்கை வளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இஸ்லாம் இயற்கையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மிகவும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும். திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் (ஹதீஸ்களிலும்)...