14 ஜூலை, 2020

வஸீலா தேடுவது மார்க்கத்தில் உள்ளதே

✍🏻 *பீர் முஹம்மது சதகி*
இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் யார்???

இந்த கட்டுரையை முழுவதுமாக படித்ததற்குப்பின்னால் எனக்கு பதில் அளியுங்கள்...

இந்த கட்டுரை தவ்ஹீத் ஜமாஅத் மதத்தவருக்கு அல்ல...

அறிஞர்களை மதிக்கக் கூடிய நாங்கள் இமாம்களை பின்பற்றுகிறோம் என்று சொல்லக் கூடிய கூட்டத்தை பார்த்து கேட்கிறேன்...

எனவே சலஃபிகளே!!!

ஜமாஅதே இஸ்லாமியே!!!

மௌதூதியிஸமே!!!

தேவ்பந்திகளே!!!

நதுவீக்களே!!!!

தப்லீகிகளே!!!

இந்த கட்டுரைக்கு பதில் அளியுங்கள்...

ரியாளுஸ்ஸாலிஹீன் என்ற உலகப்புகழ் பெற்ற புத்தகத்தை கொடுத்த, அஹ்லுஸ் சுன்னாவின் இமாம் என்று போற்றப்படும் யஹ்யப்னு ஷரஃபுந் நவவீ ரஹ்மத்துல்லாஹி அவர்களை‌ நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்???

அவரையும் சூஃபி, பரேலவி, கபுருவணங்கி, கபுரு முட்டி, பிதுஅத்தி என்று சொல்லப் போகிறீர்களா???

அல்லது இதற்கு மாற்று விளக்கம் கொடுக்கப் போகிறீர்களா ???

இதற்கு பதில் கொடுத்ததற்குப் பின்னால் இன்னும் இதே போன்று அஹ்லுஸ் சுன்னாவின் உலமாக்களின் கருத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரும்...

தலைசிறந்த முஹத்திஸீன்கள்...

(1) இமாம் ஷாஃபியீ
 (2) இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்
(3) இமாம் நவவீ
(4) இமாம் இஸ்ஸு இப்னு அப்துஸ் ஸலாம்
(5) இப்னு தகீகுல் ஈது
(6) இப்னு முஃப்லிஹ்
(7) தகியுத்தீன் சுபுக்கீ
(8) அப்துல்லாஹ் பின் அஹ்மத்
(9) இமாம் மிஸ்ஸி
(10) இமாம் அய்னீ
(11) இப்னு ஹஜர் அஸ்கலானி
(12) இப்னு ஹஜர் அல் ஹைதமீ அல் மக்கீ
(13) நூறுத்தீன் இப்னு ஹஜர் அல் ஹைஸமீ
(14)ஜலாலுதீன் சுயூத்தி
(15) முல்லா அலிய்யுல் காரீ
(16) ஹாபிழ் அப்துர் ரஹீம் அல் இராகீ
(17)இமாம் தஹபீ
(18) காழீ இயால்
(19) இப்னு ரஜப் அல் ஹன்பலீ
(20)இப்னு குதாமா அல் ஹன்பலீ
(21)இப்னு கஸீர் அத்திமிஷ்கீ அஷ் ஷாதுலி
(22) அல் ஹாபிழ் இப்றாகீம் அல் ஹர்பீ
(23) இம்தாதுல்லா முஹாஜிரே மக்கி
(24) ஷாஹ் வலியுல்லாஹ்
(25) அப்துல் ஹை திஹ்லவீ
(26) அப்துல் காதிர் திஹ்லவீ
(27) அப்துல் ஹக் திஹ்லவீ
(28)அப்துல் அஸீஸ் திஹ்லவீ
ரஹ்மத்துல்லாஹி அலைஹிமுல் வாஸிஆ

இந்த அனைத்து உலமாக்களும் சேஹுள் இஸ்லாம் என்று பெயர் பெற்றவர்கள்...

அனைவரும் முஜத்திதுகள் (நூற்றாண்டின் சீர்திருத்தவாதிகள்)

அனைவரும் இறைநேசர்கள் என்று அறியப்பட்டவர்கள்...

அனைவரும் அல் ஹாபிழ் எனும் ஹுஃப்பாழ் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்...

( 3 இல் இருந்து 25 லட்சத்திற்கும் மேல் உள்ள ஹதீஸ்களை ரிவாயத் எனும் அறிவிப்புகள் மற்றும் ருவாத் எனும் அறிவிப்பாளர்கள் முதற்கொண்டு மனனம் செய்து இருப்பவர்கள் ஹாபிழ்கள்)

இவர்களில் யாருமே வஸீலா என்பது ஷிர்க் என்று சொல்லவில்லை...

அல்லாஹ்வின் அருளால் இவர்கள் அனைவரும் வசீலாவுக்கு கூறிய ஆதாரங்கள் நம்மிடம் தாராளமாக உள்ளது...

இவர்கள் தான் எங்களின் ஸலஃப் ஸாலிஹீன்கள் எனும் அறிஞர் பெருமக்கள்...

இவர்களைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்...

இவர்களுக்கு

 எது ஈமான், எது இஸ்லாம், எது அகீதா, எது ஆன்மீகம் என்று தெரிந்ததோ அதுதான் எங்களுக்கு மார்க்கம்...

இவர்களுக்கு எது இணைவைப்பு என்று தெரிந்ததோ அதுதான் எங்களுக்கு இணைவைப்பு...

மாறாக கண்டவனெல்லாம் சொல்வது எங்களுக்கு மார்க்கம் இல்லை...

கீழே வரும் ஹதீஸையும் இமாம்களின் கருத்தையும் உன்னிப்பாக கவனியுங்கள்...

إذا ضل أحدكم شيئا، 

எந்தவிதமான உதவியாளரும் இல்லாத ஒரு சூழ்நிலையில்
உங்களில் ஒருவர் ஏதேனும் ஒன்றை தொலைத்து விட்டால்
 
أو أراد أحدكم غوثا،

 அல்லது உங்களில் ஒருவர் ஒரு உதவியாளரை நாடினால் அவர் கூறட்டும்:

وهو بأرض ليس بها أنيس فليقل:

எந்த  உதவியாளரும் இல்லாத ஒரு பூமியில் (தனியாக மாட்டிக்கொண்டவராக) அவர்  இருந்தால் அவர் கூறட்டும்:

 يا عباد الله أغيثوني، 

அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள்.

يا عباد الله أغيثوني،

அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள்.

 فإن لله عبادا لا نراهم.

ஏனெனில் நிச்சயமாக நாம் பார்க்காத விதத்தில் அல்லாஹ்விற்கு பல அடியார்கள் இருக்கிறார்கள்.

 رواها الطبراني في الكبير

இந்த ஹதீஸ் தப்ரானீ முஃஜமுல் கபீரில் வருகிறது...

இந்த ஹதீஸை அறிவித்ததற்கு பின்னால் எவனும் இந்த ஹதீஸை மறுத்து விடுவான் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை இமாம் தப்ரானி விளக்கமாக கூறுகிறார்கள் :

 وقال بعد ذلك: وقد جرب ذلك.

 நிச்சயமாக இது அனுபவத்தால் கண்ட உண்மையும் கூட !!!!!

ஒரு ஹதீஸுக்கு ஒரு  ஹதீஸ் கலையுடைய இமாம் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள் என்று சொன்னால் அந்த ஹதீஸை அவர்கள் ஏற்று அமல் செய்து அதற்கு விளக்கம் கூறுகிறார்கள் என்று அர்த்தம்...

نهم الإمام الحافظ النووي رحمه الله تعالى:

உலகப் புகழ்பெற்ற ரியாளுஸ்ஸாலிஹீன் என்ற புத்தகத்தை எழுதிய இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய அல் அதுகார் என்ற புத்தகத்தில் இந்த ஹதீஸை பதிவு செய்து விளக்கம் கூறுகிறார்கள்...

எனவே நீங்கள் ஹதீஸைப் பலவீனமாக்கினால் ஸலஃப் ஸாலிஹீன்கள் அந்த ஹதீஸுக்கு கொடுத்த விளக்கம் தட்டி போகாது...

பின்னால் வந்த இந்த புதிய வழிகேடர்களின் கொள்கைகளை முந்தைய இமாம்களின் விளக்கம் உடைத்து சுக்குநூறாக்கி விடும்...

 ذكر الإمام النووي في الأذكار في كتاب أذكار المسافر:

பிரயாணி ஓதக்கூடிய துஆக்கள் என்ற தலைப்பில்...

 باب ما يقول إذا انفلتت دابته:

ஒரு மனிதருடைய வாகனம் அவரை விட்டு ஓடிவிட்டால் என்ன கூறவேண்டும் ...

 (ص 331 من طبعة دار الفكر دمشق بتحقيق أحمد راتب حموش) ما نصه: روينا في كتاب ابن السني عن عبد الله بن مسعود رضي الله عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم قال:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை இமாம் இப்னு ஸின்னீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள்...

 (إذا انفلتت دابة أحدكم بأرض فلاة فليناد يا عباد الله احبسوا يا عباد الله احبسوا فإن لله عز وجل حاضرا سيحبسه).

ஒரு விசாலமான பூமியிலே உங்களில் ஒருவரின் வாகனம் ஓடி விட்டால் அவர் இவ்வாறு அழைக்கட்டும் ஓ அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள் ஓ அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள். அல்லாஹ்விற்கு உரிய சில அடியார்கள் ஆஜராக கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவருக்கு உதவி செய்வார்கள்...

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம்  தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையும் இணைத்து கூறி இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிறார்கள்...

எனவே இந்த ஹதீசுக்கு இதுதான் விளக்கம் என்றும் நமக்கு தெரிகிறது அவர்கள் கூறுகிறார்கள்...

 قلت: حكى لي بعض شيوخنا الكبار في العلم

நவவியாகிய நான் கூறுகிறேன்:

 கல்வி விஷயத்தில் என்னுடைய பெரிய சேக்குமார்கள் எனக்கு சில விஷயங்களை எடுத்துக் கூறியுள்ளார்கள்....

 أنه انفلتت له دابة أظنها بغلة وكان يعرف هذا الحديث،

ஒருமுறை ஒரு வாகனம் ஒன்று ஓடி விட்டது அது கோவேறு கழுதை என்று நினைக்கிறேன்.
எனவே (வாகனத்தை தொலைத்துவிட்ட) அந்த நபருக்கு இந்த ஹதீஸ் ஞாபகத்துக்கு வந்தது.

 فقاله،

எனவே அவ்வாறு அவர் கூறினார்

 فحبسها الله عليهم في الحال. 

அந்த இடத்திலேயே அவருக்கு அந்த உதவி கிடைத்து விட்டது....

وكنت أنا مرة مع جماعة

நானும்  ஒரு கூட்டத்தாருடன் ஒருமுறை இருந்தேன்.

 فانفلتت منها بهيمة

அப்பொழுது ஒரு கால்நடை ஓடிவிட்டது...

 وعجزوا عنها فقلته: 

அதை பிடிப்பதை விட்டும் அவர்கள் இயலாமையில் ஆகிவிட்டார்கள்.
 எனவே அப்பொழுது நானும் (ஹதீஸில் உள்ளதைப் போல) கூறினேன்...

فوقفت في الحال بغير سبب سوى هذا الكلام.

நான் (உதவி தேடி) சொன்ன இந்த வார்த்தையைத் தவிர்த்து வேறு எந்த ஒரு  காரணமும் இல்லாமல் அந்த இடத்தில் அந்த (கால்நடை) நின்று கொண்டிருந்தது

இமாம் நவவீ அவர்களுடைய
கிதாபுல் அதுகார்,
பக்கம் : 331

இமாம் தப்ரானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எப்படி அந்த ஹதீஸை பதிவு செய்ததற்கு பின்னால் அதற்கு விளக்கமாக இது அனுபவப்பூர்வமான உண்மை என்று தன் வாழ்வில் நடந்ததாக கூறுகிறார்களோ அதேபோல இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி இதே விஷயத்தை தன் வாழ்வில் நடந்த ஒரு அனுபவமாகவே கூறுகிறார்கள்...

எனவே இந்த இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ் படி அமல் செய்துள்ளார்கள்...

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டபோது அல்லாஹ்வின் நல்லடியார்களில் யாரேனும் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று அழைத்திருக்கிறார்கள்...

எனவே நமக்கு இங்கு ஒரு சந்தேகம் என்னவென்றால்...

நாங்கள் ஸலஃப் ஸாலிஹீன்கள் பின்பற்றுகிறோம் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிவிட்டு சொல்லிக் கொண்டிருக்கும் இவர்கள் இமாம் நவவி, இமாம் தப்ரானி, இமாம் இப்னு ஹஜர் ஆகியோர் சொன்னதை உண்மையிலே கேட்டிருக்கிறார்களா? மறைத்திருக்கிறார்களா?

அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடிய இவர்கள் இணைவைப்பாளர்களா???

அல்லது பரேலவிகளா???

அல்லது உங்கள் பாசையில் கபுறு வணங்கிகளா???

அல்லாஹ்வின் நல்லடியார்களே எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று சொன்ன இமாம் நவவி உங்களுக்கு ஸலஃப் ஸாலிஹீன்களில் ஒருவராக எப்படி மாறுகிறார்????

பாதையில் தவறி விடும் பொழுது தான் நல்லடியார்களிடம் உதவி தேடச் சொன்னர்களே தவிர மாறாக நல்லடியார்களின் கபுருகளுக்குச் சென்று இவ்வாறு செய்ய வேண்டும் என்று இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்லவில்லை என்று மட்டும் சமாளிக்க பார்க்க வேண்டாம்...

இமாம் நவவீ தங்கள் கிதாபுல் மஜ்மூஃயில்  கூறுகிறார்கள்...

 المجموع (8 / 274)

  ما يستحب أن يقوله من يزور النبي (صلى الله عليه وسلم)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஜியாரத் செய்யக்கூடிய நபருக்கு விரும்பத்தக்க காரியம் என்னவென்றால்...

 إذا وقف أمام القبر الشريف مخاطبا رسول الله (صلى الله عليه وسلم)،

கண்ணியத்திற்குரிய அந்த மண்ணறைக்கு முன்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருகில் பேசக் கூடியவராக நிற்கவேண்டும்....

 ما نصه: ثم يرجع إلى موقفه الأول قبالة وجه رسول الله صلى الله عليه وآله وسلم 

பிறகு தன்னுடைய முதலாவது நிலைக்கு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய முகத்திற்கு முன்னால் வந்து நிற்க வேண்டும்...

ويتوسل به في حق نفسه

அவர்களுடைய உன்னதத்தை வைத்து அவர்களிடம் வஸீலா தேட வேண்டும்...

 ويستشفع به إلى ربه سبحانه وتعالى

பிறகு அல்லாஹு ஸுபுஹானஹு தஆலாவிடம் அவர்களுடைய ஹக்கைவைத்து சபாஅத்து தேடவேண்டும்...

 ومن أحسن ما يقول

அவ்வாறு அவர் (வசீலா தேடுவதிலேயே) மிகவும் அழகிய சொல் என்னவென்றால்

 ما حكاه الماوردي والقاضي أبو الطيب وسائر أصحابنا - يعني سائر الشافعية - عن العتبي  مستحسنين له
இமாம் மாவுர்தீ, அல் காழீ, மேலும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த எங்களுடைய அனைத்து தோழர்களும் உத்பாவை தொட்டும் பதிவு செய்திருக்கும் ஹதீஸ் (அதில் வரும் வாசகத்தை போல் சொல்லுதல் மிக அழகானது)

அந்த ஹதீஸ் ஆனது...

 قال: (كنت جالسا عند قبر رسول الله صلى الله عليه وآله وسلم فجاء أعرابي

நான் நபி ஸல்லல்லாஹு இஸ்லாம் அவர்களுடைய ரவ்லாவுக்கு அருகில் அமர்ந்து இருந்தேன் அப்பொழுது ஒரு காட்டரபி வந்தார்...

(அவருடைய பெயர் பிலால் இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறுகிறார்கள்)

 فقال: السلام عليك يا رسول الله، 

அந்த சஹாபி கூறினார்:

அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்...

سمعت الله يقول:

அல்லாஹ் தஆலா சொல்லியிருக்கிறதை நான் கேட்டுள்ளேன் 

 ‌ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا‏ 
 ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து விட்டு உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக  தூதராகிய (நீங்களும்) மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.

(அல்குர்ஆன் : 4:64)

وقد جئتك مستغفرا من ذنبي مستشفعا بك إلى ربي.....)

(அல்லாஹ்வின் தூதரே)

 நான் உங்களிடத்தில் எனக்காக அல்லாஹ்விடம் நீங்கள் மன்னிப்பு தேட வேண்டும் என்று வந்துள்ளேன்.
மேலும் உங்களை வைத்து அல்லாஹ்விடம் நான் பரிந்துரை தேட வேண்டும் என்றும் வந்துள்ளேன்...

இமாம் நவவீயுடைய கிதாபுல் மஜ்மூஃ  8/274

எனவே பொட்டல் பாலைவனத்தில் இருக்கும் பொழுது வானவர்கள்,
 நல்லடியார்கள் ஆகியோரிடம் உதவி தேடுதலும் பெரும்பாலும் அவர்களுடைய மண்ணறையில் அவர்களிடம் வஸீலா தேடுதலும், நம்முடைய பாவமன்னிப்புக்காக நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவதும், அவர்களிடம் அல்லாஹுவிடம் பாவமன்னிப்பு தேட கூறுவதும் அவர்களை வைத்து அல்லாஹ்விடம் நாம் ஷபாஅத் தேடுவதும் இவைகள் அனைத்தும் முன்னோர்கள் சலஃபுஸ் ஸாலிஹீன்கள் செய்து வந்த நல்லமல்கள் தான்...

இவைகள் அனைத்தும் மார்க்கத்தில் கட்டாயம் என்று நாம் கூறவில்லை...

மாறாக ஜாய்ஸ் எனும் அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்தான்...

மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட விஷயங்களை இணைவைப்பு என்று சொல்வது எவ்வளவு பெரிய மோசடி வேலை???

இது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் கை வைப்பது...

அல்லாஹ் ஒன்றை ஹலாலாக ஆக்கியிருக்க அதை ஹராம் என்று சொல்வோர் யார்???

يٰۤاَيُّهَا النَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكَ‌ 
 
 அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்?  

(அல்குர்ஆன் : 66:1)

அல்லாஹ் ஒருவரை முஃமின் என்று சொல்ல அவரைப் பார்த்து முஷ்ரிகு என்று சொல்பவர் யார்???

இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு சலஃப்...

அவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றுவது யார்???

உண்மையான சலபி யார்???

இவ்வாறு உதவி தேடுவதும் மூலமாக பலன்களை தாங்கள் அடைந்ததாகவும் உலமாக்கள் கூறுகிறார்கள்...

இவைகள் அனைத்தும் வெளிரங்கத்தில் மருந்துகள் வேலை செய்வதைப் போல ஆத்மீக ரீதியாக ஏற்படக் கூடிய மருந்துகள்...

வெளிப்புறத்தில் பார்ப்பதற்கு மருத்துவர்கள், நபிமார்கள் உதவி செய்வதாக இருந்தாலும் இவை எல்லாம் ஒரு உவமை தான்...

உண்மையில் நமக்கு உதவி செய்தவன் அல்லாஹ் தான்...

இவர்களின் மூலமாக அந்த அளவுக்கு உதவி செய்தான் என்பது எந்தவிதத்திலும் இணைவைப்பு ஆகாது...

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாங்கள் செய்த அற்புதங்களை அனைத்தையும் நாம் பார்க்கவில்லையா???

இவைகளை எல்லாம் பார்த்து நாம் இணைவைப்பு என்று சொல்வோமா???

 وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْىِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِ‌ وَ اُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَۙ فِىْ بُيُوْتِكُمْ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏ 

பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).

(அல்குர்ஆன் : 3:49)

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமாக சுகம் அளிக்கப்பட்டவர்கள் எங்களுக்கு இந்த சுகத்தை ஈஸா நபி கொடுத்தார்கள் என்று சொன்னால் அது இணைவைப்பு ஆகுமா???

ஈஸா நபி என் கண்களை தடவினார்கள் என் கண் பார்வை திரும்ப வந்து விட்டது என்று சொன்னால்

இவர் இணைவைப்பாளரா???

ஈஸா நபி என் உடலை தடவினார்கள் என் குஷ்டரோகம் போய்விட்டது என்று அவர் கூறினால்...

அவர் இணைவைப்பு வைத்தவரா???

உண்மையில் செய்தவன் அல்லாஹ்தான் என்ற மனதில் ஈமான் கொண்டவராக அல்லாஹ்வின் அருளாக ஈஸா நபி இருக்கிறார்கள் என்று ஒருவர் ஈஸா நபியை தேடி வந்து உதவி பெற்றால் அது எப்படி இணைவைப்பாகும்???

ஈஸா நபியின் மூலமாக உயிர்பெற்று ஒருவர் எழும் பொழுது அவர் கூறுகிறார் என்னை ஈஸா நபி உயிர்ப்பித்து விட்டார் என்று...

இவர் என்ன இணைவைப்பாளரா???

உயிரைக் கொடுப்பவன் உயிரை எடுப்பவனும் அல்லாஹ் தான் இவர் இணைத்து வைத்து விட்டார் என்று கூறுவீர்களா????

ஒரு வானவர் தாயின் கருவறையில் உயிரை ஊதுகிறார் ஒரு வானவர் உடலில் இருந்து உயிரை எடுக்கிறார் எனவே ஒரு வானவர் உயிரை கொடுக்கிறார் ஒரு வானவர் உயிரை எடுக்கிறார் என்று சொல்பவர் இணை வைப்பவர் ஆகிவிடுவாரா????

இவைகள் அனைத்தும் மஜாஸ் எனும் உவமைப் பொருள்...

அல்லாஹ் தான் நியமித்த சில அடியார்கள் மனிதர்களுக்கு இந்த பணிகளை செய்வதற்கு சாட்டப்பட்டு உள்ளார்கள்...

ஒரு நாத்திகன் இவர்களைப் பார்த்து நீங்கள் தான் செய்தீர்கள் என்று சொன்னால் அவன் இறை நிராகரிப்பாளனாக இருப்பான்...

காரணம் இவர்களின் பின்புலத்தில் இருக்கும் அல்லாஹ்வின் வல்லமையை புரியாமல் இவர்களை கடவுளாக பார்க்கிறான்...

ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக ஈமான் கொண்டவர்கள் அல்லாஹ்வை நம்பி நபிமார்களின் இந்த உதவிகளை பெரும்பொழுது இவர்களுக்கு பின்புலமாக அல்லாஹ்வின் வல்லமை தான் இருக்கிறது என்று நம்பும் பொழுது அவருடைய நன்மை இரட்டிப்பாக கூடுகிறதா இல்லையா????

இரண்டு மடங்காக கூட கூடிய ஈமானைப் பார்த்து இணைவைப்பு என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்????

இந்த தர்கா டாப்பிக்கை எடுத்துவிட்டால் இந்த போலி தவ்ஹீத் வாதிகளுக்கு ஒரே குஷியாகி விடும்...

தர்கா, தகடு, தாயத்து என்று ஷிர்க் வியாபாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்...

தர்காவில் நடக்கும் அனைத்து காரியங்களையும் நீங்களோ நானோ அங்கீகரிக்க வேண்டாம்....

ஆனால் தர்காவின் அடிப்படை அசல்  நோக்கமே வஸீலா தான்...

வசீலா இல்லை என்று ஒருவன் மறுத்தால் அவன் வழிகேடன்...

வசீலா இறை நிராகரிப்பு அதை செய்பவன் காபிர் என்று சொன்னால் சொன்னவன் காஃபிர்...

மேலும் ஸலஃப் ஸாலிஹீன்களில் நம்முடைய கட்டுரை பதிவில் அனைத்து உலமாக்களையும் கொண்டு வருவதையும் தவிர்த்துவிட்டு பெரும்பாலும் ஹதீஸ் கலை அறிஞர்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்...

காரணம் நாங்கள் சுன்னாவாதிகள் என்று பொய் பிரச்சாரம் செய்யக்கூடிய நபர்களுக்கு கடிவாளமிடுவதற்காக குறிப்பிட்ட துறையான ஹதீஸ் கலை அறிஞர்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்..

இப்னு தைமியாவுக்கு பல மாணவர்கள் இருந்தார்கள் அதில் பிரபலமானவர்கள்...

ابن قيم الجوزية இப்னுல் கையும்
 - شمس الدين الذهبي இமாம் தஹபி
-محمد بن عبد الهادي المقدسي முஹம்மது அல் முகத்தஸீ
 - ابن كثير இப்னு கஸீர் 
- ابن رجب الحنبلي இப்னு ரஜப்
- محمد بن مفلح المقدسي இப்னு முஃப்லிஹ்
 - ابن فضل الله العمري இப்னு ஃபல்லுல்லாஹில் உமரீ

இதில் இப்னுல் கையுமைத் தவிர அனைத்து மாணவர்களும் இப்னு தைமியாவின் நட்பை விட்டும் ஒதுங்கி சரியான கொள்கையிலேயே நிலைத்தார்கள்...

இவர்கள் அனைவரும் ஹதீஸ் கலை வல்லுனர்களே...

மேலும் இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் இந்த அனைத்து மாணவர்களில் சிலர் இப்னு தைமிய்யா உடைய விஷயத்தில் மிகக் கடுமையான விமர்சனம் செய்துள்ளனர்...

இந்த அறிஞர்கள் வசீலா இஸ்திஹாஸா சம்பந்தமாக என்ன சொல்லி உள்ளார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்...

அல்லாஹுவே மிக அறிந்தவன்...

- இப்னு கபீர்

1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...