30 ஜூன், 2020

நாகூரில் நடந்த உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

இதை கண்ணால் கண்டவர் 
கவிஞர் அவர்களின்
நேரடி வாக்குமூலம்

நாகூரில்

 பல இடங்களில் அடங்கி ஆன்மீக ஒளி வீசி கொண்டிருக்கும் இறைநேசர்கள் ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் நிகழ்த்திய அற்புதம் ......                   1964 ஆம் ஆண்டு என நினைக்கிறேன் மருத்துவர்களோ மருத்துவ வசதிகளோ வாகனங்களோ இல்லாத காலம்.. ஊரெங்கும் காலரா நோய் பரவி ஒரு நாளைக்கு 10 '15 மரணங்கள் ஒரே வீட்டில் இரண்டு மூன்று பேர் மெளத்.. ஊரே  மரண பீதியின் ஓலத்தில் சிக்கி தவித்து சின்னா பின்னாமாகி கொண்டிருந்தது .. மய்யத்து அடக்குவதற்குக் கூட ஆட்கள் கிடைப்பதும் குழிகளுக்கும் பஞ்சம் உண்டான துயர் கோலம்.. ஊரெங்கும் மயான அமைதி.. வெளியில் ஆள் நடமாட்டம் கிடையாது .. எப்போது என்ன நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. காரணம் காலாராவின் கோரத்தாண்டவத்தின் கொடுமை .. பள்ளிகளில் எல்லாம் ஐவேளையும் நெஞ்சுருகி கெஞ்சி கெஞ்சி அழுது கேட்கும் அடியார்கள் கூட்டம் 
                 இறைநேசர்களின் வாசல்களிலும் நாகூர் தர்காவிலும் தஞ்சம் கொண்டு துயரத்தை நீக்கக்கோரி பிரார்த்தனைகள்.. அந்தந்த தெருககளில் அடங்கி இருக்கும் மஹான்களில் பாதாரத்தை தேடி ஓடிய மக்கள் அல்லாஹ்வின் அவ்லியாக்களே எங்களுக்கு பாதுகாப்பு தந்து ஊரில் ஏற்பட்டுள்ள காலாரா நோயை நீங்கள் விரட்ட வேண்டும் ஊர் மக்கள் வாழ்வில் அபயம் தந்தருள வேண்டும்.. எங்களுக்கெல்லாம் காவலாக இருக்கும் காரணமுள்ள மஹான்களே இந்நேரம் உங்கள் கருணையை பொழிந்து இந்த கொடுமையில் இருந்து எங்களுக்கு விடுதலை தந்தருள வேண்டும் என மன்றாடி மன்றாடி மனமுருகி கண்ணீர் மல்கி காலடி ஓரங்களில் நின்று தன்னையே மறந்து நின்ற நிலை.( அந்தக் காலத்தில் கொள்கைப் பேதங்கள் ஏதும் கிடையாது) நாளைய பொழுது நல்ல பொழுதாய் விடியுமா என்ற பயம் நாளுக்கு நாள் மரண எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது நாகூர் முடுக்குதாழை சந்து ((பங்களா தோட்டம்)) அன்வர் மாமா வீட்டில் அவர்தம் மகனார் எனது நண்பர் ஜெஹபர் சாதிக் அதே வீட்டில் ஹையூம் உடைய சகோதரி இருவரும் அடுத்தடுத்து இறைவனடி சேர்ந்தனர்.. 
                இப்படி அஞசி கெஞ்சி  அபயம் தேடும் வேளையிலே அச்சத்தோடு இரவின் இருட்டு கவ்வுகிறது இமைகள் மூடி உறக்கம் வர மறுக்கிறது அதிகாலை சுபுஹு நேரம் தட தட வென குதிரைகள் வேகமாக ஓடும் சத்தம்.. பலர் கதவைத் திறந்து வாசலில் போய் பார்க்கும்போது வெண்புரவியின் மேல் வெண்ணாடை அணிந்த ஒரு மனித வடிவம் கையில் சாட்டையுடன் ஜாவ் ஜாவ் என்ற சத்தத்துடன் சாட்டையால் அடித்து விரட்டிக் கொண்டே காற்றை விட வேகமாய் குதிரை செல்கிறது .. இந்த சம்பவம் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் நிகழ்கிறது இதை கண்ணார கண்டவர்கள் பலர் இன்னும் இருக்கின்றனர். அதில் நானும் ஓருவன். என்ன ஆச்சர்யம் அந்த காலையில் இருந்தே நாகூரை புரட்டிப் போட்ட கொடிய காலாரா நோய் மாயமாய் மறைந்து ஓடி விட்டது .. ஊரில் சகஜ நிலை திரும்பியது.. இத்தனைக்கும் காரணம் அல்லாஹ்வின் ஆணையை ஏற்று நாகூர் நாயகத்தின் கட்டளைப்படி நாகூரின் இறைநேசர்கள் அனைவரும் ஒன்று கூடி ஊர் மக்களை காக்கஒரே நேரத்தில் ஆங்காங்கே  நிகழ்த்திய அற்புதத்திலும் அற்புதம் ..இது நீண்ட நெடிய சம்பவம் உங்களுக்காக மிக சுருக்கமாக  பதிந்துள்ளேன் . இதே போன்ற நிகழ்வு 1954ல் நாகூர், நாகப்பட்டிணம் சுற்றுபுற ஊர்களில் பெரும் புயல் வீசிய தருணத்தில் நாகூரில் நடந்துள்ளது..  தீனை வளர்ப்பதற்கும் தீனவர்களை காப்பதற்கும் அல்லாஹ் தந்த அன்பின் அடையாளங்கள் அவ்லியாக்கள்.. அவர்களை நேசிப்போம் அவர்களின் ஞானக்காற்றை சுவாசிப்போம்..
#################
கவிஞர் நாகூர் காதர்ஒலி...
முதல் பதிவு 2014
2ம் பதிவு 2016..
மீள் பதிவு 2020
கவிஞர் நாகூர் காதர் ஒலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...