18 ஜனவரி, 2020

முதலில் ஒட்டகத்தைக் கட்டிப் போடு | மின்னல் பண்பலை வானொலி உரை



உரை : சதக் Maslahi
அன்பான மின்னல் Fm நேயர்களே...
 நாம் இப்பொழுது இனிய லட்சியங்களோடும் முயற்சிகளோடும் சிறந்த வாழ்க்கைக்கு தயாராகுவோம்
வாழ்க்கையில் வெற்றி பெற நமது நாட்கள் இனிமையாக அமைய நாயன் அல்லாஹ்விடம் நம்பிக்கை வைப்பதோடு நல்ல முயற்சிகளும் வேண்டும் எல்லாமே அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று சோர்ந்து கிடக்காமல் சுறுசுறுப்போடு வீறுகொண்டு எழவேண்டும்
சுருங்கக்கூறின் அல்லாஹ்வின் மீது தவக்கல் என்கிற நம்பிக்கை வைப்பதோடு அவன் காட்டிய வழிகளில் முயற்சி செய்கிற போது தான் வாழ்வதற்கான வழிகள் பிறக்கும் என்பதை அல்லாஹ்வே சொல்கிறான்
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا 
யார் முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு நம்முடைய பாதைகளுக்கு வழி காட்டுகிறோம்
எகிப்திய பாலைவனத்தின் நடுவே ஞானி வேறு ஒருவர் வசித்து வந்தார் பாலைவனச்சோலை என்பார்களே அப்படிப்பட்ட பகுதி அந்த இடத்தில் நீரும் மரங்களும் நிறைந்திருக்கும் ஆனால் சுற்றிலும் பல நூறு மைல் தூரங்களுக்கு வெறும் பாலைவனம் மட்டுமே தென்படும் ஞானியை பார்ப்பதற்கு எங்கிருந்தோவெல்லாம் ஒட்டகங்களில் பலரும் பல நாட்கள் பயணம் செய்து அங்கே வருவார்கள் 
அப்படி வருகிறவர்களை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்து அனுப்புவது அவருடைய வழக்கம் ஒருநாள் நீண்ட தூரத்திலிருந்து ஒரு கிராமவாசி ஞானியை பார்க்க வந்திருந்தான் ஞானி அப்போது சிறிய கூடாரம் ஒன்றில் தங்கியிருந்தார் அதன் உள்ளே நுழைந்து அவருக்கு சலாம் சொல்லி நின்றான் தங்களை காண்பதற்கு வெகுதூரத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்றான் சரி சந்தோசம் எப்படி வந்தாய் என்று கேட்டார் ஒட்டகத்தில் தான் அப்படியா ஒட்டகம் எங்கே 
வெளியில் நிறுத்தி வைத்திருக்கிறேன்  சரி அதனை கட்டிப்போட்டு விட்டு வந்தாயா இல்லை என்றான் ஏன் என்று கேட்டார் இல்லை எனக்கு இறைவன் மீது முழு நம்பிக்கை உண்டு அவன் பார்த்துக் கொள்வான் 
அவர் சொன்னார் அட முட்டாளே போய் உடனே ஒட்டகத்தைக் கட்டிப் போடு அதன் பிறகு அல்லாஹ் மீது நம்பிக்கை வை என்றார்
நம்மால் முடிந்த செயல்களை நாமே செய்ய வேண்டும் சோம்பேறித் தனத்திற்கு கவசமாக இறை நம்பிக்கையை காட்டக்கூடாது.
அல்லாஹ்வின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் வேண்டும் அதே நேரத்தில் முயற்சியும் வேண்டும் என்பதை விளக்குகிற வரலாறு இது.

ஒட்டகத்தை முறையாக கட்டிப்போட்டு இந்த காலத்தில் சொல்வதாக இருந்தால் வாகனத்தை முறையாக பார்க்கிங் செய்து அதன் பிறகு அல்லாஹ் மீது பொறுப்பு சாட்டி விட்டு வரவேண்டும் 
அப்போது அல்லாஹ் அதை பாதுகாப்பான் அதற்குப் பிறகும் திருட்டு நடந்தால் அதைவிட சிறந்த பகரத்தை  அல்லாஹ் நமக்கு தருவான் .
ஒரு கிராமவாசி நெடுந்தொலைவில் இருந்து ஒட்டகத்தில் பயணித்து வந்தார் இடையிலேயே தொழுகைக்கான நேரம் வந்தது ஒரு பள்ளிவாசலின் வாசலிலே ஒரு ஓரத்தில் அதை கட்டிப்போட்டுவிட்டு அல்லாஹ்விடத்தில் இயற்கை எய்தினார் யா அல்லாஹ் இதை உன்னுடைய பாதுகாப்பில் அமானிதமாக விட்டு விட்டுச் செல்கிறேன் என்றார் தொழுது விட்டு திரும்பி வந்து பார்க்கிறார் ஒட்டகத்தை காணவில்லை உடனே அல்லாஹ்விடத்தில் கேட்டார் யா அல்லாஹ் உன்னுடைய அமானிதத்தை நான் செலுத்திவிட்டேன் தொழுகை என்னுடைய அமானிதம் எங்கே இவர் கேட்ட மாத்திரத்தில் கொஞ்சம் தூரத்தில் இருந்து ஒருத்தர் வேகமாக வந்தார் அவருடைய கையிலே இவருடைய ஒட்டகம் இருந்தது இன்னொரு கை வெட்டப்பட்டு ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது இதோ உங்களது ஒட்டகம் என்று கொடுத்தார் என்ன நடந்தது என்று இவர் கேட்டார் அவர் சொன்னார் உங்களது ஒட்டகத்தை நான் தான் திருடிக் கொண்டு போனேன் ஆனால் திடீரென்று ஒரு அதிசய மனிதர் தோன்றி வழிமறித்தார் அவரது கையிலே வாள் இருந்தது அதைக்கொண்டு எனது ஒரு கையை வெட்டினார் ..
மரியாதையாக இந்த ஒட்டகத்தை கொண்டு போய் எடுத்த இடத்திலேயே ஒப்படைத்து விடு இல்லை என்றால் மறு கையும் வெட்டப்படும்  என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார் வந்தவர் யாராக இருக்கும் வானவர் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா..
எனவே நாம் முயற்சியும் செய்துவிட்டு அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்தால் எல்லாம் நலமாக இருக்கும் அதைத்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்
நீங்கள் பறவைகள் அல்ல மீது நம்பிக்கை வைப்பது போல நீங்களும் நம்பிக்கை வைத்தால் அவைகளுக்கு அல்லாஹ் உணவளிப்பது போல உங்களுக்கும் உணவளிப்பான் 
எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று அவைகள் கூட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதில்லை காலையில் பசித்த வயிறுடன் பறந்து செல்கின்றன மாலையில் வயிறு நிரம்பி வந்து சேருகின்றன அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உழைப்பும் செய்கின்றன.
சரி நேயர்களே இப்பொழுது அல்லாஹ் மீது முழுமையாக நம்மை ஒப்படைத்து கண்ணுறங்குவவோம்.
அதிகாலையில் சுறுசுறுப்போடும் விறுவிறுப்பும் எழுந்து அல்லாஹ்வின் அருள் என்கிற உழைப்பை நோக்கி விரைவோம் வல்லவன் அல்லாஹ் வளமான வாழ்க்கை நமக்கு வழங்குவான்
اللهم اني اسلمت نفسي اليك و فوضلت امري اليك ووجهت وجهي اليك والجات ظهري اليك رغبة ورهبة اليك لا ملجا ولا منجا منك الا اليك امنت بكتابك الذي انزلت وبنبيك الذي ارسلت

யா அல்லாஹ் உன்னிடமே என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன் உன்னிடமே என் காரியங்களை பொறுப்பு சாட்டுகிறேன்.
எனது முன் முகத்தையும் பின்புறத்தையும் என் உடல் முழுவதையும் உன் பக்கமே ஒதுக்குகிறேன்.
உன் அருள் மீது அளவுகடந்த ஆசையும் உன் தண்டனையின் மீது பயமும் எனக்கு நிச்சயம் உண்டு
உன் தண்டனையை விட்டு தப்பித்து ஓடுவதற்கு எந்த வழியும் இல்லை. உன் பக்கம் தான் நான் வந்தாக வேண்டும்
நீ அருளிய வேதத்தையும் நீ அனுப்பிய தூதரையும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
اللهم باسمك اموت واحيا
உனது திருப் பெயரை உச்சரித்தே உறங்குகிறேன் உனது திருப்பெயர் கொண்டே மறுபடியும் எழுவேன்

1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...