07 மார்ச், 2019

ரஜப் மாத சிந்தனைகள்


நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் ரஜபு மாதம் வந்து விட்டால் இப்படி பிரார்த்திப்பார்கள் யா அல்லாஹ் எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் அபிவிருத்தி நல்குவாயாக ரமளானை அடையச் செய்வாயாக

நிச்சயமாக சுவனத்தில் ஒரு நதி உண்டு அதற்கு ரஜபு என்று பெயர் அந்த நதி பாலைவிட வெண்மையானது தேனைவிட மதுரமானது யார் ரஜப் மாதத்தில் ஒரு நாளாவது நோன்பு வைக்கிறாரோ அவருக்கு அந்த நதியில் இருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்

யார் ரஜப் மாத இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு வைக்கிறாரோ சொர்க்கத்தின் பழங்களிலிருந்து அல்லாஹ் அவருக்கு சுவைக்கச் செய்வோம் சுவனத்தின் பச்சை பட்டாடைகளையும் அவருக்கு உடுத்துவான்.



முத்திரையிடப்பட்ட மதுரமான பானங்களை அருந்த செய்வான்

ஆனால் மூன்று பாவங்களை செய்தவர்களை தவிர 

அநியாயமாக ஒரு உயிரை கொன்றவன்,

ஏதேனும் ஒரு பகலில் அல்லது இரவில் யாருக்காவது உதவி தேவை பட்டு அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் கூக்குரல் எழுப்பி அதை காதால் கேட்டும் உதவி செய்யாதவர் 

ஒரு சகோதரன் தன் தேவையை முறையிடுகிறான் அதை நிறைவேற்ற வாய்ப்பிருந்தும் நிறைவேற்றாத வர்



இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் புனித ரஜப் மாதத்திலே உம்ரா செய்வதை மிகவும் விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் ரஜப் மாதத்தின் முதல் நாள் நோன்பு வைப்பது முப்பது வருடங்களின் பாவங்களுக்கு பரிகாரம் 

இரண்டாவது நாள் நோன்பு நோற்பது இரண்டு வருடத்திற்கான பரிகாரம்

மூன்றாவது நான் நோன்பு வைப்பது ஒரு வருடத்தின் பாவத்திற்கு பரிகாரம் அடுத்துள்ள நாட்களில் நோன்பு வைப்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதத்தின் பாவத்திற்கு பரிகாரம்


அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்

ஒரு புனித இரவு இருக்கிறது அதிலே அமல் செய்பவருக்கு நூறு வருடத்தின் நன்மைகள் எழுதப்படுகிறது அது ரஜப் மாதத்தில் மீதி மூன்று நாட்கள் இருக்குமே அந்த இரவு (27 வது இரவாக இருக்கலாம்.

அதிலே யார் 12 ரக்அத் நபில் தொழுது ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹா வுக்குப் பிறகு குர்ஆனில் ஏதேனும் ஒரு பகுதியை ஒரு சூராவை ஓதி ஒவ்வொரு இரண்டு ரகத்திற்கு இடையிலும் சலாம் கொடுத்து பிறகு இதை ஓதுகிறாரோ சுப்ஹானல்லாஹ் வல்ஹம்துலில்லாஹ் வலா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் என்ற கலிமாவை நூறு முறை ஓதி  அதன் பிறகு நூறு தடவை பாவ மன்னிப்பு இஸ்திஃபார், அதன் பிறகு நூறு தடவை நபி மீது ஸலவாத்து சொல்லி பிறகு தனக்காக ஈருலக பலன் எதையாவது துஆ செய்து கேட்டுவிட்டு அன்று காலையில் நோன்பு இருக்கிறாரோ அவருடைய பிரார்த்தனையை முழுவதையும் அல்லாஹ் ஏற்கிறான். பாவமான காரியத்தில் துஆச் செய்வதை தவிர



நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் ரஜப் மாதம் வருவதற்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்தார்கள்
மக்களே நிச்சயமாக உங்களை நோக்கி ஒரு மகத்தான மாதம் வருகிறது அல்லாஹ்வுடைய மாதம் என்று அழைக்கப்படுகிற ரஜபு மாதம் தான்
அதிலே நன்மைகள் பல மடங்காக கிடைக்கிறது 

பிரார்த்தனைகள் ஏற்கப்படுகிறது சிரமங்கள் கஷ்டங்கள் நீங்குகிறது 

எந்த ஒரு மூமின் அதிலே துஆ செய்தாலும் அந்த பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை 

யார் அதிலே ஒரு நன்மையை செய்கிறாரோ அது அவருக்கு பன்மடங்காக்கி தரப்படுகிறது 

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பன்மடங்காக்கி தருகிறான்

எனவே மக்களே அந்த மாதத்தின் இரவுகளில் நின்று வணங்குங்கள் பகல் காலங்களில் நோன்பு வையுங்கள்

அந்த மாதத்தின் ஏதாவது ஒரு நாள் 50 ரக்அத் தொழுது ஒவ்வொரு ரக்அத்திலும் குர்ஆனில் தனக்கு இயன்றதை ஓதி தொழுதால் பல மடங்கு பல மடங்கு நன்மைகளை அல்லாஹ் அவருக்கு வழங்குவான்

அந்த மாதத்தில் ஒருநாள் நோன்பு வைத்தாலும் ஒரு வருடத்தின் நோன்பின் பலனை அல்லாஹ் அவருக்கு எழுதுவான் 


அந்த மாதத்திலேயே நாவை பாதுகாத்தால் முன்கர் நகீர் விசாரணையின் போது அல்லாஹ் அவருக்கு உறுதியை தருவான்


அந்தந்த மாதத்தில் ஏதேனும் தர்மம் செய்தால் அது அவருக்கு நரகத்திலிருந்து விடுதலை ஆகி விடும்

அந்த மாதத்திலேயே உறவுகளை சேர்ந்து வாழ்ந்தால் இந்த உலகிலும் மறு உலகிலும் அல்லாஹ் அவரை தன்னோடு சேர்த்துக் கொள்வான் வாழ்நாள் முழுவதும்  எதிரிகளுக்கு எதிராக அவருக்கு உதவுவான்

இந்த மாதத்திலேயே ஏதேனும் நோயாளியை நலம் விசாரித்தால் தன்னுடைய சிறப்பான வானவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுவான் அவரை உடனே சந்திக்க வேண்டும் ஸலாம் கொடுக்க வேண்டும் என்று

இந்த மாதத்திலேயே ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டால் அவர் பல உயிர்களை உயிர்ப்பித்தவரைப் போன்ரு.

ஒரு முஃமினுக்கு உணவு அளித்தால் மறுமையில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆகியோர் அமர்ந்திருக்கிற உணவுத் தட்டு அருகில் இவரையும் அமர வைப்பான்.


ஒருவருக்கு தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தால் முத்திரையிடப்பட்ட சொர்க்கத்தின் மதுரமான பானத்திலிருந்து அல்லாஹ் இவருக்கு நீர் புகட்டுவான்


ஒரு முஃமினுக்கு ஆடை அணிவித்தால் சொர்க்கத்தின் ஆடைகளில் ஆயிரமாயிரம் ஆடைகளை அல்லாஹ் இவருக்கு அணிவித்து அழகு பார்ப்பான் 

ஒரு அனாதையை கன்னியப் படுத்தி உபகாரம் செய்தால் அவன் தலையின் மீது ஆதரவாகத் தடவிக் கொடுத்தால் அவனது கரம் தொட்ட முடிகளின் எண்ணிக்கை அளவுக்கு அல்லாஹ் அவருக்கு பாவத்தை மன்னிப்பான்

இந்த மாதத்தில் ஒரு முறை அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு தேடினாலும் அல்லாஹ் முழுமையாக மன்னிப்பான்

ஒருத்தர் தஸ்பீஹ் செய்தால் அல்லது திக்ரு செய்தால் அதிகமதிகம் தஸ்பீஹ்  அதிகமதிகம் திக்ரு செய்த நல்லோர்களின் பட்டியலில் அல்லாஹ் எழுதுவான்

இம்மாதத்தில் ஒரு குர்ஆன் நிறைவு செய்தால் அவருக்கும் அவருடைய பெற்றோருக்கும் முத்துக்களாலும் மரகதங்களாலும் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை அணிவித்து அழகு பார்ப்பான்.


மறுமையின் எல்லா திடுக்கங்களிலிருந்தும் அல்லாஹ் அவருக்கு அபயம் அளிப்பான்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ:
كَانَ رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دخل رَجَبٍ قَالَ
 اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ.


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ:
قِيلَ يَا رَسُولَ اللَّهِ لِمَ سُمِّيَ رَجَبٌ قَالَ: لأَنَّهُ يُتَرَجَّبُ فِيهِ خَيْرٌ كثيرٌ لِشَعْبَانَ وَرَمَضَانَ.

(عش رجبا تَرَ عجبا)

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
((إِنَّ فِي الْجَنَّةِ نَهْرًا يُقَالُ لَهُ رَجَبٌ, أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ, وَأَحْلَى مِنَ الْعَسَلِ, مَنْ صَامَ يَوْمًا مِنْ رَجَبٍ سَقَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ ذَلِكَ النَّهْرِ)) .جزء في فضل رجب لابن عساكر


قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ أَحْيَا لَيْلَةَ رَجَبٍ وَصَامَ يَوْمَهَا أَطْعَمَهُ اللَّهُ مِنْ ثِمَارِ الْجَنَّةِ وَكَسَاهُ مِنْ خُضْرِ الْجَنَّةِ وَسَقَاهُ مِنَ الرَّحِيقِ الْمَخْتُومِ إِلا مَنْ فَعَلَ ثَلاثًا: مَنْ قَتَلَ نَفْسًا أَوْ سَمِعَ مُسْتَغِيثًا يَسْتَغِيثُ بِاللَّهِ بليلٍ أو نهارٍ ياغوثاً بِاللَّهِ فَلَمْ يُغِثْهُ أَوْ شَكَى إِلَيْهِ أَخُوهُ حَاجَةً فَلَمْ يُفَرِّجْ عَنْهُ.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم:
((إن رجب شهرٌ عظيمٌ, تُضَاعَفُ فِيهِ الْحَسَنَاتُ, فَمَنْ صَامَ يَوْمًا مِنْ رَجَبٍ كَانَ كَصِيَامِ سَنَةٍ, وَمَنْ صَامَ سَبْعَةَ أَيَّامٍ أُغْلِقَ عَنْهُ سَبْعَةُ أَبْوَابِ جَهَنَّمَ, وَمَنْ صَامَ ثَمَانِيَةَ أَيَّامٍ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ, وَمَنْ صَامَ عَشَرَةَ أَيَّامٍ لَمْ يَسْأَلِ اللَّهَ عَزَّ وَجَلَّ شَيْئًا إلا أعطاه إياه, وَمَنْ صَامَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا نَادَى مُنَادٍ مِنَ السَّمَاءِ: أَنْ قَدْ غُفِرَ لَكَ مَا قَدْ سَلَفَ, فَاسْتَأْنِفِ الْعَمَلَ وَقَدْ بُدِّلْتَ بِالسَّيِّئَاتِ الْحَسَنَاتِ)) .  جزء في فضل رجب لابن عساكر




كَانَ ابْنُ عُمَر رَضِيَ اللهُ تعالى عَنْهما يُعْجِبُهُ أَنْ يَعْتَمِرَ فِي رَجَبٍ شَهْرٍ حَرَامٍ بَيْنَ ظَهْرَانَيِ السَّنَةِ.

قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَوْمُ أَوَّلِ يَوْمٍ في رجب كفارة ثلاث سِنِينَ وَالثَّانِي كَفَّارَةُ سَنَتَيْنِ وَالثَّالِثُ كَفَّارَةُ سنةٍ ثُمَّ كُلُّ يومٍ شَهْرٍ.


عَنْ أَنَسٍ, عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

((فِي رَجَبٍ ليلةٌ يُكْتَبُ لِلْعَامِلِ فِيهَا حَسَنَاتُ مِائَةِ سَنَةٍ, وَذَلِكَ لِثَلاثٍ بَقِينَ مِنْ رَجَبٍ, فَمَنْ صَلَّى فيها اثنتي عشرة ركعةً فقرأ فِي كُلِّ رَكْعَةٍ فَاتِحَةَ الْكِتَابِ وَسُورَةً مِنَ الْقُرْآنِ, يَتَشَهَّدُ فِي كُلِّ رَكْعَتَيْنِ وَيُسَلِّمُ فِي آخِرِهِنَّ, ثُمَّ يَقُولُ: سُبْحَانَ اللَّهِ, وَالْحَمْدُ لِلَّهِ, وَلا إِلَهَ إِلا اللَّهُ, وَاللَّهُ أَكْبَرُ مِائَةَ مَرَّةٍ, وَيَسْتَغْفِرُ اللَّهَ مِائَةَ مَرَّةٍ, وَيُصَلِّي عَلَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِائَةَ مَرَّةٍ, وَيَدْعُو لِنَفْسِهِ مَا شَاءَ مِنْ أَمْرِ دُنْيَاهُ وَآخِرَتِهِ, وَيُصْبِحُ صَائِمًا, فَإِنَّ اللَّهُ يَسْتَجِيبُ دُعَاءَهُ كُلَّهُ إِلا أَنْ يَدْعُوَ فِي مَعْصِيَةٍ)) .


(خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قبل [رجب] بجمعة فَقَالَ: أَيُّهَا النَّاسُ، إِنَّهُ قَدْ أَظَلَّكُمْ شهرٌ عظيمٌ، شَهْرُ رَجَبٍ شهر الله [الأصم] ، تضاعف فِيهِ الْحَسَنَاتُ، وَتُسْتَجَابُ فِيهِ الدَّعَوَاتُ، ويفرج فيه عن الكربات، لا يرد لِلْمُؤْمِنِ فِيهِ دعوةٌ، فَمَنِ اكْتَسَبَ فِيهِ خَيْرًا ضُوعِفَ لَهُ فِيهِ أَضْعَافًا مُضَاعَفَةً، [ص:318] وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ؛ فَعَلَيْكُمْ بِقِيَامِ لَيْلِهِ، وَصِيَامِ نَهَارِهِ، فَمَنْ صَلَّى فِي يَوْمٍ فِيهِ خَمْسِينَ صَلاةً يَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ، أَعْطَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنَ الْحَسَنَاتِ بِعَدَدِ الشَّفْعِ وَالْوَتْرِ، وَبِعَدَدِ الشَّعَرِ وَالْوَبَرِ، وَمَنْ صَامَ يوماً كتب الله له به صِيَامَ سَنَةٍ، وَمَنْ خَزَنَ فِيهِ لِسَانَهُ لَقَّنَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ حُجَّتَهُ عِنْدَ مُسَائَلَةِ مُنْكَرٍ وَنَكِيرٍ، وَمَنْ تَصَدَّقَ فِيهِ بِصَدَقَةٍ كَانَ بِهَا فِكَاكُ رَقَبَتِهِ مِنَ النَّارِ، وَمَنْ وَصَلَ فِيهِ رَحِمَهُ وَصَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، وَنَصَرَهُ عَلَى أَعْدَائِهِ أَيَّامَ حَيَاتِهِ، وَمَنْ عَادَ فِيهِ مَرِيضًا أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ كِرَامَ مَلائِكَتِهِ بِزِيَارَتِهِ وَالتَّسْلِيمِ عَلَيْهِ، وَمَنْ صَلَّى فِيهِ عَلَى جِنَازَةٍ فَكَأَنَّمَا أحيا موءودةً، [ومن أطعم مؤمناً طَعَامًا] أَجْلَسَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ عَلَى مَائِدَةٍ عَلَيْهَا إِبْرَاهِيمُ ومحمدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِمَا، وَمَنْ سَقَى شَرْبَةً مِنْ مَاءٍ سَقَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ الرَّحِيقِ الْمَخْتُومِ، وَمَنْ كَسَا مُؤْمِنًا كَسَاهُ اللَّهُ أَلْفَ حُلَّةٍ مِنْ حُلَلِ الْجَنَّةِ، وَمَنْ أَكْرَمَ يَتِيمًا وَمَسَحَ يَدَهُ عَلَى رَأْسِهِ غَفَرَ اللَّهُ لَهُ بِعَدَدِ كُلِّ شَعْرَةٍ مَسَّتْ يَدَهُ، وَمَنِ اسْتَغْفَرَ اللَّهَ عَزَّ وَجَلَّ فِيهِ مَرَّةً وَاحِدَةً غَفَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ، وَمَنْ سَبَّحَ اللَّهَ عَزَّ وَجَلَّ تَسْبِيحَةً، أَوْ هَلَّلَهُ تَهْلِيلَةً، كُتِبَ عِنْدَ اللَّهِ مِنَ الذَّاكِرِينَ اللَّهَ كثيراً والذاكرات، ومن ختم فيه الْقُرْآنَ مَرَّةً وَاحِدَةً أُلْبِسَ هُوَ ووالده يَوْمَ الْقِيَامَةِ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ تَاجًا مُكَلَّلا بِاللُّؤْلُؤِ وَالْمَرْجَانِ، وَأَمِنَ مِنْ فَزَعِ يَوْمِ الْقِيَامَةِ)) .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...