23 பிப்ரவரி, 2019

ரஹ்மத்- இறையருள்

அல்லாஹ்வுடைய கருணை ஒரு வினாடி இல்லையென்றால் இந்த உலகம் சுக்கு நூறாகிவிடும் இந்த உலகமும் சின்னாபின்னமாகிவிடும் .
அல்லாஹ்வுடைய ரஹ்மத் இந்த உலகத்தில் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் சூழ்ந்திருக்க வேண்டும் பொழிந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் இந்த உலகம் நிலைத்திருக்கும்
நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் ரமளானுடைய முதல் பத்தை ரஹ்மத்துடைய பகுதியாக வர்ணித்தார்கள்.
ரஹ்மத் என்றால் என்ன?

ரஹ்மத் என்பது அன்பு அரவணைப்பு.
ஆனால் அல்லாஹ் ரஹ்மத்  என்ற வார்த்தையை குர்ஆனில் பல்வேறு அர்த்தங்களில்  சொல்லுகிறான்.
ஓர் இடத்தில் மழையை ரஹ்மத் என்கிறான்.
நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும்   மழையை ரஹ்மத் என்கிறார்கள் என்கிறார்கள்.
முல்லா நசுருதீன் மழையில் நனைகிறார் ஏன் நனைகிறீர்கள்  என்று கேட்டதற்கு மழை என்பது அல்லாஹ்வின் அருள். அதை விட்டு ஓடி வரலாமா
மறுநாள் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார் அப்போது மழை பெய்தது உடனே அவசர அவசரமாக தன் இரண்டு காலணிகளையும்  தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு மிக வேகமாக ஓடி வந்தார்  இப்போது மட்டும் ஓடி வருகிறீர்கள்.  இப்போது அல்லாஹ்வின்  அருள் இல்லையா மழை  என்றதற்கு  அவர் சொன்னார்
ஆமாம் அல்லாஹ்வுடைய அருள் தான். அதைக் காலால் மிதிக்கலாமா? அது அவமரியாதை அல்லவா  எனவேதான் ஓடி வருகிறேன்  என்றார்.
ஆரோக்கியம் ஒரு ரஹ்மத்
குழந்தை பாக்கியம் ஒரு ரஹ்மத்
நபியின் குழந்தை இப்ராஹீம் சிறு வயதில் வஃபாத்
அழுதார்கள்
யாரஸூலல்லாஹ் அழக்கூடாது என்று சொன்னீர்களே...
இந்தக் கண்னீர் மூமின்களின் உள்ளத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு ரஹ்மத்.  இரக்கம் அருளால் வந்த கண்நீர்.  நான் தடுத்தது எல்லாம் ஒப்பாரி வைப்பதும் சட்டையை கிழித்துக்கொண்டு மாரடித்து அழுவதைத்தான் என்றார்கள்.
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் அல்லாஹ் ரஹ்மத் என்ற அன்பை 100 பங்குகள் ஆக்கினான் அதில் 99 ஐ தான்  வைத்துக்கொண்டான். மீதி ஒன்றைத்தான் உலகத்தில் பரவச்செய்தான் அந்த ஒன்றில் தான் ஒரு தாய் தன் பிள்ளைகள் மீது ஒரு பறவை தன் குஞ்சுகள் மீது ஒரு விலங்கு தன் குட்டிகள் மீது ஒருவர் மற்றவர் மீது வைக்கிற எல்லா அன்பும் சேர்ந்து அந்த ஒரு பகுதியில் உள்ளது தான் என்றார்கள்
அல்லாஹ்வின் கருணை விசாலமானது அதனால்தான் அடியார்கள் செய்கிற தவறுகள் எல்லாம் உடனுக்குடன் தண்டனை வழங்குவதில்லை அவனை வழங்குகிறான் திருந்துவதற்கு வாய்ப்பு தருகிறான்.
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் அல்லாஹ் படைப்புகளை படைப்பதற்கு முன்பே தனது வேதத்தில் எழுதி வைத்தான் என்னுடைய கோபத்தை விட என்னுடைய ரஹ்மத் அருள் முந்தி விட்டது
இதுபோலவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இந்த உலகத்திற்கு ரஹ்மத்தாக அருட்கொடையாக வந்தார்கள்
வமா அர்சல்னாக்க....
வத வாசவ் பில் மர்ஹமா..
இரக்கத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்
ரப்பிர்ஹமுஹுமா கமா ரப்பயானீ
பெற்றோருக்கு ரஹ்மத்தை கேட்க வேண்டும்
நல்ல இறைநம்பிக்கையாளர்களுக்கு நபித்தோழர்களுக்கும் அல்லாஹ் அடையாளமாய் சொல்வது தங்களுக்குள் அவர்கள் ரஹ்மத்தாய் இருப்பார்கள்
ருஹமாவு பய்னஹும்
(நன்றி... இஸ்லாமிய அறிவகம் யூடியூப் சேனல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...