11 ஆகஸ்ட், 2013

மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?-1



இன்றைய உலகில் மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?
வீழ்கிறதே..!

கண்ணியத்திற்குரிய நடுவர் அவர்களே! மனித நேயம் வீழ்கிறது என்ற தங்களின் தீர்ப்புக்கே வலுசேர்க்க வந்துள்ளேன்.

வீழ்ந்து கொண்டிருக்கிற மனித நேயத்தை போய் வாழ்கிறது வாழ்கிறது என்றுச்  சொன்னால் அது எப்படி வாழும். இது வராத படிப்பை  வா வான்னு சொல்கிற மாதிரில்ல இருக்கு.
ஒரு கவிஞன் இப்படி  பாடுவான் வானத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன் மனுஷன் இன்னும் பார்க்கலையே?

மனுஷனே இல்லையே நடுவர் அவர்களே மனிதனே இல்லையே,  மனித நேயம் எங்கிருக்கும்? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். மனிதன் இருந்தால் தானே மனித நேயம் இருக்க முடியும்.


நடுவர் அவர்களே! என் அணி சகோதிரி அம்ரீன் சொன்ன மாதிரி செத்துவிட்டவணை  எழுப்பி மனித நேயம்  வாழ்கிறதா? வீழ்கிறதா? என்று கேட்டால் அவன் சொல்வான் மனித நேயம் வாழ்ந்திருந்தால் நான் ஏன் வீழ்ந்துருப்பேன்?  அது செத்துவிட்டதால் தானே நான் செத்து விட்டேன் நான் ஒருவனால் கொல்லப்பட்டவன் என்பான்.

மனிதன் என்பது நேயம் என்பது தனியாக பிரிச்சு பாருங்க. முதலில் நேயம் என்பதற்கும் மனிதன் என்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
என் தகப்பனார் எனக்கு ஒரு சொத்தை தருகிறார் என்றால் அது அவருடைய நேயம். என் அண்ணன் என்னை கூப்பிட்டு சாப்பாடு தருகிறான் யென்றால் அது அவருடைய நேயம் வுhளைய பிலட் இது ரத்தத்திலே உள்ள நேயம் ஆனால் நாம சொல்ல வருவது அதுவல்ல.
இன்னொரு விஷயம் மனிதம் இந்த உலகிலே இருக்கிறதா?
நான் கேட்பது என்னவென்றால் நடுவர் அவர்களே! நான் உங்க ஊர் மேலப்பாளையம் வந்தேன் நீங்க நல்ல சாப்பாடு செய்து போட்டீர்கள் என்றால் அது உங்க நேயம். ஆனால் மனிதம் இருக்கிறதா? இன்னொரு செய்தி நல்ல கவனிக்கனுங்க!  இந்த உலகத்திலே மனித நேயம் வாழ வேண்டும் என்பதற்க்காகத் தான் இஸ்லாம் வந்தது. 

இஸ்லாம் தீவிரவாதம் என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று சொல்வது போல இருட்டான சூரியன் என்று சொல்வது போல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  சொன்னார்கள் அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மாத்திரம் புஸிப்பவன் உண்மை முஸ்லீம் கிடையாது என்று சொல்கிற மார்க்கம் இஸ்லாம்....
வழியினில் கிடக்கிற கல்லையும,; முள்ளையும் அகற்றி விடு அது தருமம் என்றார்கள்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த மார்க்கமா தீவிரவாதம்.

கீழே விழுந்தவன் முஸ்லீமா, ஹிந்துவா, கிறிஸ்த்தவனா, யூதானா என்றெல்லாம் பார்க்காதே முதலில் அவனுக்கு கை கொடு என்கிறது. இஸ்லாம் இதுவா தீவிரவாதத்தை போதிக்க போகிறது. 
இப்படி பட்ட புனித மார்க்கத்தை தீவரவாதம் மார்க்கம் என்று சொல்கிறதே இந்த உலகம் மனித நேயம் எங்கே போனது?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நீ வீட்ல சால்னா காய்ச்சினால் அதில் கொஞ்ச தண்ணீரை அதிக படுத்து உன் அண்டை வீட்டானையும் கவனி என்றார்களே இதுவாமா தீவிரவாத மார்க்கம்.

இன்று பழி ஒரு பக்கம் பாவம் இன்னொரு பக்கம் சிறகடித்து சுதந்திரமாக பறக்க வேண்டிய எத்தனையோ பறவைகள் இன்று சிறைச்சாலையிலே இருந்து சிறையிலே இருக்க வேண்டிய எத்தனையோ பேர்கள் இன்று சிம்மாஸ்ஸனத்திலே இருக்கிறார்கள். தண்டிக்க படுகின்ற காலம் இது. பாவமே செய்யாத அப்பாவிகள் ஒரு கதை ஒன்று சொல்வார்கள்.

வயதானவர் மீது சுவர் விழுந்து ஒரு தாத்தா இறந்து விட்டார்.
சுவரைக் கட்டிய கொத்தன் மீது வழக்கு போடப்பட்டது. அவன் என் மீது தவறில்லை மண்ணெயும், சிமெண்டையும் குலைத்தவன் தான் எனக் கூற அவன் மீது வழக்கு போடப்பட்டது அவன் தான் தவறு பண்ணலே தண்ணீர் ஊற்றும் பானை வாய் அகலம் எனக் கூற, பானை வாய் அகலம் எனக் கூற பானைக்காரன் மீது வழக்கு போடப்பட்டது  நான் பானையை ஒழுங்காகத்தான் செய்தேன். அப்ப ஒரு நாட்டியகாரி போனா அதான்  இப்படி ஆகிவிட்டது எனக் கூற  நாட்டியகாரி மீது வழக்கு போடப்பட்டது. நான் வண்ணானிடம் துணி துவைக்க கொடுத்திருந்தேன்.

அதை வாங்க அந்த வழியாக போனேன் என நாட்டியகாரி கூற, வண்ணான் மீது வழக்கு போடப்பட்டது, அவர்  சொன்னார் நான் சலவை போடும் கல்லின் மீது ஒரு முனிவர் தவம் செய்தார். அவரிடம் கேட்க அவர் அமைதியாக இருந்தார் இந்த ஆளுதான் கொன்னுருப்பாருன்னு அவரை கொன்னுட்டானுங்க. 
நிதியைக் கொடுத்து நீதியை வாங்குற காலம் இது.



மனிதம் மலை இறங்கும்...
அதிகாலை நேரம் எனது சொந்த ஊருக்குப் பயணப்பட்டுப் போய்க் கொண்டிருந்தேன். பயணித்த பஸ் திடீரென பிரேக் அடித்து நின்றது காரணம் புரியாமல் பயணிகளோடு நானும் அரக்கபரக்க நோட்டமிட்டேன் நின்றது எங்களது பஸ் மாத்திரமல்ல அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமாக நிறைய வாகனங்கள நின்று கொண்டு இருந்தன. காரணத்தை தெரிந்து கொள்ள எல்லோரும் போல நானும் மத்திய பகுதிக்கு விரைகின்றேன். அங்கே ஒரு ஜீவன்  லாரியில் அடிபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாக துடிதுடித்துக் கொண்டிருந்தது. கொலையையும் இரத்தத்தையும் தொலைக்காட்சியில் தினம் தினம் பார்த்து பார்த்து பழகிப் போன நான் முதற்கொண்டு அங்கிருந்த எல்லோரும் ஏற்பட்டு விட்ட கொடூரத்தைப் பற்றித்தான் கதைத்துக் கொண்டிருந்தோமே தவிர எவரும் உதவி செய்ய முன்வரவில்லை
இப்படி அடிச்சுப் போட்டு போயிட்டானே என்று பரிதாபப்பட்டார் ஒருவர் லாரி நம்பர் என்னவென்று தெரியமா? ஒருவர் புலன் விசாரிக்க, டி.என் என்று என்னவோ போட்டிருந்துச்சு என ஒருவர் அப்பாவித்தனாக சொல்ல, அடஞான சூன்யமே டி.என் என்றால் தமிழ்நாடுன்னு அர்த்தம். அது எல்லா வண்டியிலயும் போட்டிருக்கும். அதுக்கு கீழே நம்பர் எதையும் பாத்தியா? என்று அந்த இறுக்கமான நேரத்திலும் தமாஷ் பண்ணியது என் மனதை என்னவோ பண்ணியது. 

ஒரு கிராமத்து பெரிசு, அங்க  அவன் உசுருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். நீங்க என்னடான்னா  தமாஷ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க முதல்ல அவனக் காப்பாத்தலாம் வாங்கய்யா என்று கூற, யோவ் பெருசு, இது போலீஸ் கேஸாயிடுச்சு ஆளத் தொட்டன்னு வய்யி அப்புறம் நீ மாட்டிக்குவ என விளக்கம் சொல்ல ஆஸ்பத்திரிக்கு அவனத் தூக்கிட்டுப் போவ வேண்டாம்யா அவன் மேல கெடக்குற ஸ்கூட்டரயாவது அப்புறப்படுத்தி சில முதலுதவியாவது செய்வோம்யா என்று மீண்டும் பெரிசு கூற, அதெல்லாம் எண்ணமும் பண்ணக் கூடாது. பெரிய அதிகாரிங்க வர்ற வரைக்கும் அப்படியே தான் கெடக்கனும.; 

ஆமா, இல்லேன்னா கோர்ட்டு கேஸூன்னு உன்னைய ஒரு வழி பண்ணிப் போடுவாங்க பாத்துக்க. அதனால் பேசாம கெட  என்று சொல்ல அதுக்குப் பின்னாடி பெரிசும் அமைதியாயிட்டாரு.
வாகன விபத்துல சிக்கி மண்டை உடைந்து உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் ஒரு மனித ஆத்மாவைக் கண்டும் கூட நமக்கேன் வம்பு என தூர விலகிப் போகும் இது போன்ற அனுபவ நிகழ்வுகள் எனக்கும் மட்டுமல்ல. எல்லோருக்குமான பொது அனுபவம் தான். இந்த நவீன யுகத்தில் மனிதம்செத்து விட்டதற்கான ஒரு சிறிய சான்று தான் இது. ஆழ்ந்த கவனத்தோடு உலகையும் அதன் போக்கையும்  நோக்கினால் மேம்போக்கான சில சம்பிரதாய சமாச்சாரங்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால் உள்ளார்ந்த மனிதன் உலகத்தைவிட்டு மலையேறி விட்டாதோ என எண்ணத் தோன்றுகிறது. நாக்குல தேனையும் போக்குல விஷத்தையும் வச்சிருக்கிற முகமூடி ஆசாமிகள் தான் உலகில் எக்கச்சக்கம்.

நிலாச்சோறு என்ற பேருல பக்கத்து வீட்டு வாண்டுகளோடு சேர்ந்து சிரித்துப் பேசி குதூகலமாக கூட்டாஞ்சோறு சாப்பிட்டதும் மழலைகளின் கூட்டு விளையாட்டுகளும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து போய்விட்டதின் காரணமென்னவென்று என்றைக்காவது நாம் யோசித்தோமா? வழி தெரியாது தவிக்கும் வெளியூர் வாசியை தவறான முகவரி சொல்லி சுத்தவச்சு கிறுக்கனாக்கி சுகம் காணும் இளசுகளை எண்ணி இதயம் கனக்கிறது.
இந்த நிதர்ஸனமான உண்மைகளையெல்லாம் விளங்கிய பின்புமா இந்த எதிரணியினர் தமக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நப்பாசை அடைகிறார்கள். 

பகல் கனவு பலிக்காது. மனித நேயம் இன்றைய உலகில் வீழ்கிறதே! வீழ்கிறதே! வீழ்கிறதே! 
அல்லாஹ் அதை வாழச் செய்வானாக ஆமீன். நாம் 
ஐம்பது ஆண்டுகளாக மதத்தின் பெயரால் சுதந்திரத்தைச் சூரையாடினோம்! நாம் சுதந்திர இந்தியாவில் காந்தியைச் காப்பாற்றினோமா? பாபர் மஸ்ஜிதைப் பாதுகாத்தோமா? காஷ்மீர் பண்டிதர்களின் கைதேசம் தவிர்த்தோமா?
நம் உதடுகளில் கிருஷ்ணனின் உபவாசம் உள்ளத்தில் நரகாசுரனுக்கு விருந்து  உள்ளே ஹாபிழ் பசாரம் வெளியே ஆபேல்.
புன்னகையோடு உனது சக மனிதனை சந்திப்பதும் ஒரு நற்செயலே என்பது நபிகள் வாக்கு. ஆனால் அந்த புன்னகை இன்று வசந்த நிலையில் இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகிறது. ஒரே பஸ்ஸில் அருகருகே சீட்டில் அமர்ந்து அரைநாள்  பயணம் மேற்கொள்ளும் இருவர் ஒருவரையொருவர் முழுமையாக பாராமல் புன்னகைக்காமல் நலம் விசாரித்துக் கொள்ளாமல் இறுக்கமான சூழலில் மரக்கட்டையையும் மண்ணாங்கட்டியையும் போல பயணிக்கும் தன்மை தேசத்தில் பரவலாகவே காணப்படுகிறது.

உணவருந்தும் வேளையில் தெரியாத்தனமாக ஒருவரைச் சந்திக்கச் சென்றவிட்டேன். உணவை முன்கொண்டு வந்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை உணவருந்தி விட்டீர்களா? ஒரு வாய் சாப்பிட்டுச் செல்லுங்களேன் என பொய்யாக கேட்டு வைக்கும் மனோ பாவம் கூட இன்று மறைந்து போனதை என்னால் மறைக்க இயலவில்லை. சகமனிதன் எவனாவது வழியில் வழக்கிவிழுந்து விட்டால் அச்சச்சோ விழுந்து விட்டானே என மனம் வாடும். வாட வேண்டும் தூக்கி விட கைகள் தானாக நீளும் நீள வேண்டும். இன்று வழுக்கி விழுந்தவனைக் கண்டு கைகொட்டி சிரிக்கும் சீர்கேடு பெருகியுள்ளதை எவரும் மறுக்கமுடியுமா?
  இதை விட வேறு என்ன சான்று வேண்டும். மனிதநேயம் வீழ்கிறது! வீழ்கிறது! வீழ்கிறது!
வீழ்கிற மனித நேயத்தை இறைவன் வாழ்வாங்கு வாழ வைப்பானாக! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...