11 ஆகஸ்ட், 2013

மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?-2

வாழ்கிறதே!

மனித நேயம் காக்க வந்த நாநபி (ஸல்) அவர்களின் வாரிசான நடுவர் அவர்களே. 
சத்தியம் பேச வந்த என் அணியினரான தின்குலத்தின் வீரர்களே வீரதிப்புவின்  பரம்பரைகளே வான்மறையின் நெஞ்சங்களே வீர வாழ்வு கண்ட சிங்கங்களே, நாலுந் தெரிஞ்ச தங்கங்களே மேலும் நாலு விஷயம் தெரிந்த தங்கங்களே.
என் எதிரணியில் பேச வந்திருக்கும் என்  சிநேகித சிநேகிதிகளே  மேலும் இன்றைய உலகில் மனித நேயம் வாழ்கிறதே! வாழ்கிறதே!வாழ்கிறதே! என்ற நடுவரின் நன்றான இறுதியான தீர்ப்பை காது குளிரை கேட்கவந்திருக்கும்.
கல்பில் நிறைந்த கண்மனி நாயகம்(ஸல்) அவர்களின் பாக்கியம் நிறைந்த உம்மத்துகளே,  உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஸலாமை தெரிவித்துக் கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பார்ந்து நடுவர் அவர்களே  மனிதநேயம் வாழ்கிறது என்பதற்கு ஆதாரம் தேடி வெளியே போக வேண்டிய அவசியம் இல்லை.
இதோ இந்த விழா நடக்கிறது என்று சொன்னால் நல் உள்ளங்களின் உதவி உள்ளே இருக்கிறது.
எத்தனை பேர் வரவில்லையென்றால் நான் மட்;டும் தான் பேசியிருக்கனும். அதை என் வீட்டிலேயே பேசியிருப்பேன்.

விஷயத்திற்கு வருகிறேன்.
மனிதநேயம் வாழ்கிறது என்பதற்கு அடுக்கு அடுக்காக ஆதாரம் சொல்வேன். 
சுனாமி அடித்த பொழுது நம் சமுதாயம் உதவியதே! அது மனித நேயமில்லையா? குஜராத்தில் கடினமான கஷ்டம்  ஏற்பட்ட போது நாம் ஆடைகளை கொடுத்து உதவினோமே அது மனிதநேயம் இல்லையா. ஊனமுற்றோருக்கென்று பஸ்ஸில் தனி இருக்கை இல்லையா இதுவெல்லாம் மனிதநேயம் வாழவில்லையென்கிறீர்கள்.
பேப்பர் படிக்காத எதிரணியே அது மட்டுமா நடுவர் அவர்களே.
கண்ணியத்திற்குரிய நடுவர் அவர்களே வாழுகின்ற மனித நேயத்திற்கு இன்னொரு பெரிய ஆதாரம் இதோ உங்களுக்கு முன்னால் அமர்ந்திருக்கின்ற பொது மக்களே  பெரிய ஆதாரம்.
பொது மக்களான உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன். நாம் இந்த அண்ணாநகரிலே குழந்தைகள் காணாமல் போகிவிட்டால் என்ன செய்வீர்கள் சொல்லுங்கள்? நமது பள்ளிவாசலில் வந்து அறிவிப்பு செய்வீர்கள்.
அது முஸ்லீம்களின் குழந்தையாக இருந்தாலும் சரி நமது இந்து சகோதரிகளின் இருந்தாலும் சரி நமது கிறிஸ்த்துவ சகோதர்களின்  குழந்தையாக இருந்தாலும் சரி அறிவிப்பு  செய்யப்படுகிறதா இல்லையா?
எனது மாற்று மத சகோதர்களின் நூற்றுக்கணக்கான பிள்ளைகளின் இந்த பள்ளிவாசல் கண்டுபிடித்துக் கொண்டுள்ளது. எத்தனையோ மாற்றுமத சகோதரர்களின் பிள்ளைகளை இந்த பள்ளிவாசல் கண்டுபிடித்துக் கொண்டுள்ளது, மனம் குளிர செய்தீர்கள் இங்கு வாழும் மனித நேயத்தின் ஆதாரம் அல்லவா இது எதிரணிகளாகள் கூட மறுக்க முடியாது.
மனித நேயத்திற்கு ஆதாரங்களை அடிக்கி கொண்டே போகலாம். நமது பள்ளிவாசலுக்கு எதிரில் கொஞ்சம் பாருங்கள் புனித மிக்கேல் என்ற பெயரில் எனது கிறிஸ்துவ சகோதர்களின் புனித ஆலயம் உள்ளது. நமது பள்ளிவாசலிற்க்கு பின்புறம் மாரியம்மன் என்ற பெயரில் இந்து சகோதரர்களின் தெரு கோயில் உள்ளது. இதில் நமது கவனிக்க வேண்டியவ விஷயம் என்னவென்றால் தம் ஆலயத்திற்கு எதிரில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைகள் இறை வணக்கங்கள் நடைபெற்றுக்  கொண்டு இருப்பதால் தங்களாயத்தில் மைக் சவ்ன்டை தங்களுக்கு மட்டும் கேட்க்கிற அளவிற்கு குறைத்து வைத்திருக்கிறார்களே இது உள்ளவா  மனித நேயம்.
நாமும் கூட அவர்களின் விழாகாளங்களின் போது சிறப்பு பிராத்தனை இடையுரு மைக்கையே இல்லாமல் ஆகுப  செய்து வருகிறோம் இது தானயா மனித நேயம்.
இறைவன் வந்து கொடுத்தாலும் கூட நம் சகோதரமார்கள் வேண்டாதது ஒரு வாரம் அதுவே களவரம் எங்கள் நகர மக்களுக்கு மதம் பிடிப்பதுண்டு ஆனால் மதபிடிப்பதில்லை.
எங்களது இந்து சகோதர்களின் சாதாரணமானவர்களை அவர்களின் நற்குணங்களை பாருங்கள்.
கோட்டை மாரியம்மனின் தீச்சட்டிகள் பவனி வரும் போது பள்ளிவாசலைக் கண்டதும் பயபக்தியுடன் மௌனத் தொழுகை நடத்துகின்றன.

வாசல் வரை வாசித்து வந்த நாதஸ்வரக் கலைஞன் -தன் கலையை தானே கட்டிப் போட்டுக் கொள்கிறான்.
அவன் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்குவதில்லை.
எனது இந்து சகோதரன் பள்ளிவாசலின் புனிதம் கருதி அல்லாஹ்வின் அருள் வேண்டி மேளத்தைக் கூட தட்டுவது இல்லை! தாளத்தைக் கூட தட்டுவது இல்லை! இவனா
முஸ்லிமை அடிக்கப் போகிறான்? எங்கள் நகரில் அன்னை மேரி மாதா  நகர் வளம் வருவாள் அப்போது மின் கம்பிகள் துண்டிக்கப்படும்.
சப்பரம் போன அப்புறம் தான் பள்ளியின் பாங்கொலியே ஒலிக்கும்!
முட்காடு சுமந்த ஏசுவின் மாதாவைக் காண முக்காடு அணிந்த எங்கள் மாதாக்கள் ஜன்னல்களில் முகங்களை முன்பதிவு செய்வார்கள்.
சப்பரம் எத்தனை போனதென்று எங்கள் பெண்களைக் கேளுங்கள்- சரியாக பதில் சொல்வார்கள்.
உலகம் அழிந்த பின்பு எல்லோரும் கூடும் இறுதித் தீர்ப்பு நாள் இறைவன் கேட்பான் இத்தனையாவது நோன்பை எந்த உணவால் திறந்தால் என்று நான் நாயகம் முன் நிற்க நபிமார்கள் கேட்டிற்கு அங்கு விலாஸ் அதிபர் காய்ச்சிய நோன்புக் கஞ்சியும் என்று.
எங்கள் நகரில் மாரியம்மன் திருவிழாவிற்கு மானா மூனா பாய்  அவர்களின் ஊர்தி உற்சாகமான வேலை செய்யும் மகத்தான தப்லிக் என்ற மாநாட்டிற்கு சூசை அவர்களின் லாரி தண்ணீர் சப்ளை செய்யும்.

மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?
ஒருவன் சொன்னானாம் மனித நேயம் வாழவும் இல்லை வீழவும் இல்லை. அது மேய்கிறது என்றானாம்.
மனித நேயம் என்பது கடைசி மனிதம் இருக்கும் வரை மனித நேயம் இருக்கும் காரணம் என்ன? மனிதனை நாம் உயர்தினை என தமிழிலே சொல்கிறோம். தினை என்றால் என்ன? ஒழுக்கம் உள்ளவன் தான் மனிதன் உயர்ந்த ஒழுக்கங்களுக்கு சொந்தக்காரன் மனிதன் ஒழுக்கம் கெட்டவரை பற்றி நாம் பேச வேண்டும்.
பெருமானார் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் விளக்கப்பட்ட விஷயங்களில் ஒருவன் நுழைந்து விட்டால் அவன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான்.
நடுவர் அவர்களே நல்லா யோசித்துப் பாருங்க: மனிதத்தையே இஸ்லாம் தானே அடையாளம் காட்டியது. சத்தியம் செத்து நாம் வாழ்வதை விட நாம் செத்து சத்தியம் வாழ்வது மேல் என்ற வீர பெருமக்களின் பரம்பரையில் வந்த நம்மிடத்தில் எப்படி மனித நேயம் இல்லாமல் போகப் போகிறது?  
என் எதிர் அணியினர்களே!
மனித நேயம் வீழ்கிறது என்பதை பற்றி அமெரிக்காவில் போய் பேசுங்க மனிதநேயத்தின் ஊற்றுக்கண் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வழியாகும் நபி (ஸல்) அவர்கள் வந்துதான் மனித நேயத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

நபிகளாரின் வாழ்விலே எல்லாவற்றிர்கும் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
கண்ணியத்திர்குரிய பொதுமக்களே நீங்கள் எந்த கோணத்தில் எடுத்துக் கொண்டாலும் கொண்டாலும் சரியே. எந்த பாதை எடுத்து கொண்டாலும் சரியே. 
குடும்பத் தலைவர் முஹம்மது நபி (ஸல்) என்று பார்த்தாலும் சரி, அரசியல் தலைவர் (ஸல்) என்று பார்த்தாலும் சரி, ஆன்மீக தலைவர் முஹம்மது (ஸல்) என்று பார்த்தாலும் சரி, போராளிகள்  தலைவர் முஹம்மது (ஸல்) என்று பார்த்தாலும் சரி, வணிகர்களின் தலைவர்  என்று எந்தத் துறையை எடுத்துப் பார்த்தாலும்; சரி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முன்மாதிரியாக இருப்பார்கள்.
ஒரு பிரச்சினையை பார்க்கும் பொழுது பார்ப்பவர் உடைய பார்வை தான் மங்கிப் போகும், பார்வையில் கோளாறு இருக்குமே தவிற பிரச்சினையில் கோளாறு இருக்காது.
எதிரணிகள் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு அந்த பூவுலகைக் கண்டால் கருப்பாகத் தான் தெரியும்.
சுனாமி சமயம் நாகூர் உடைய கலிபர் போட்ட உத்தரவு என்ன தெரியுமா? இறந்தவர்களின் உடலை ஒவ்வொரு கப்ருகளில் அல்ல ஒட்டுமொத்தமாக ஒரு அகல்வெட்டு ஒரு மூன்று அடியில் 25சடலங்கள் மறுபடி மூன்று அடி மண் கொட்டி 25 சடலங்கள் இப்படி ஒரு கப்ரிலே 75 பேர்களைஅடக்கியதாக நேரில் கண்டவர்கள் சொன்ன நிகழ்ச்சி.

அடக்குவது மட்டுமல்ல இந்த மலைப் பகுதியிலே எங்களுக்கு ஒரு சடலம் கிடைத்து உள்ளது என போலீஸ் தகவல் கொடுத்தது. இஸ்லாமிய சகோதரர்கள் சென்று தான் அங்கே நெலிந்து கொண்டிருந்த புழுக்களை எல்லாம் தள்ளி விட்டு விட்டு அந்தப் பெண்மனியை அரவணித்து தூக்கிக் கொண்டு அங்கே அடக்கினார்கள்.

நடுவர் அவர்களே உங்களைப் பார்த்து நர்க்குன்னு ஒரு கேள்வி கேட்பேன். நீங்கள் தூத்துக்குடியில் உள்ள மன்பஉஸ்ஸலாஹ் அரபிக் கல்லூhயில் பத்தாண்டு காலம் ஓதினார்கள். நான் உங்களை மட்டும் சொல்லவில்லை.
எல்லா ஹழ்ரத்மார்கள் எல்லா ஆலிம்கள் குறிப்பாக என்னுடைய ஹழ்ரத் சீத்தீக் ஹழ்ரத் உட்பட எல்லோருமே கிட்டதட்ட பத்தாண்டு காலம் மதரஸாவிலே ஓதினார்கள். எவ்வளவு பீஸ் கட்டினார்கள்?
இன்னும் பல இலட்சக்கணக்கானோர், மதரஸாவிலே ஓதுகிறார்களே. இவர்கள் மற்றும் நீங்கள் பத்தாண்டு காலம் எவ்வளவு சாப்பிட்டு இருப்பீர்கள்? ஒரு பைசா பீஸ் கட்டினீர்களா? எந்த ஆலிம்கள் பீஸ் கட்டி ஓதுகிறார்கள்.

நடுவர் அவர்களே நீங்களும் ஆலிம் உங்களுக்கு எல்லாம் நிற்பதற்கு கால் கொடுத்தது மனிதநேயமிக்க இந்த சமூகம் அல்லவா? சொல்லுங்கள் நன்றியுள்ள நடுவர் அவர்களே!

ஒரு கால் உங்கள் தீர்ப்பு தடுமாறுமே ஆனால் நீங்கள் பத்து வருடம் சாப்பிட்ட சாப்பாட்டிற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இம்மையிலும் சரி,  மறுமையிலும் சரி  அப்படி ஓர் தர்மச் சங்கடமான நிலையை ஏற்படுத்த மாட்டிர்கள் என நம்புகிறோம்.
எதிரிணியினர்களும் கூட ஆண்டாண்டு காலமாக ஓசியிலே ஓதி வருகிறார்கள். அவர்களைப் பற்றி நான் பேசவில்லை. அவர்கள் எல்லாம் நன்றி கெட்டவர்கள். ஆகவே இன்றைய உலகில் மனித நேயம் வாழ்கிறது... வாழ்கிறது...  வாழ்கிறது.
வாழ பிறந்த நாம் வாழ்கின்ற மனிதநேய த்தை வாழ வைப்போம் திருந்தாக எதிரணியினர் திருத்துவதற்கு துஆ செய்வோம் என்று கூறி பெறுகிறேன் விடை தருகிறேன் ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும (வரஹ்)
வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...