அமெரிக்காவில் வெளியான Innocence of Muslim திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் குலாம் அகமது பிலோர்ஸ், இஸ்லாமை அவமதித்து வரும் எந்த செய்தியையும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி, திரைப்படத்தை தயாரித்தரின் தலைக்கு 1 லட்சம் அமெரிக்க டொலர் பரிசு அறிவித்தார்.
இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அந்நாட்டு வெளிவிவகாரத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், தலைவர்கள் பொறுப்புடன் இருந்து வன்முறைக்கு எதிராக பேசுவது, நடந்து கொள்ளவது மிக முக்கியம்.
வன்முறையை தூண்டும் விதத்தில் பொறுப்பற்ற முறையில் அவர் பேசியிருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
வன்முறையைத் தூண்டும் விதத்தில் திரைப்படம் எடுக்கலாமாம்; அவனைத் தண்டிக்க துப்பில்லாத அமெரிக்காவிற்கு நியாயம் பேச என்ன தகுதி இருக்கிறது?
அமெரிக்காவைச் சேர்ந்த அந்த அயோக்கியன் சாம் பாசைல் தயாரித்த திரைப்படத்தால் முஸ்லிம் உலகமே கொந்தளிப் போய் இருக்கிறது. உலகம் முழுதும் ஆர்ப்பாட்டங்களும் அறவழிப் போராட்டங்களும் நடைபெற்றுவருகிறது. இத்தனைக்குப் பிறகும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் நான் இதைவிட இன்னும் பெரிய படம் எடுத்து வெளியிடுவேன் என கொக்கரிக்கும் திமிர் பிடித்த அந்த அயோக்கியனை கண்டிக்கவோ தண்டிக்கவோ செய்யாத அமெரிக்கா நியாயமான முறையில் தன் உணர்வுகளைப் பதிவு செய்யும் முஸ்லிம்களை கண்டிக்கிறது என்றால் என்ன பொருள்? அமெரிக்கா தரும் ஊட்டத்தால்தான் இதுபோன்ற அயோக்கியத் தனங்கள் நடைபெறுகிறது என்று தெளிவாக புரியவில்லையா?
ஆனால் அமெரிக்கா சில தினங்களுக்கு முன் பாக்கிஸ்தான் டிவிகளில் என்ன கூறியது? ''அந்த திரைப்படத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை''
அப்படியானால் அந்த திரைப்படம் எடுத்த அயோக்கியனின் தலைக்கு விலை நிர்ணயிக்கப்படும்போது அமெரிக்காவுக்கு ஏன் தாங்கமுடியவில்லை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்