26 செப்டம்பர், 2012

ஆர்பாட்டத்தால் அதிர்ந்தது முகவை!

ramanathapuram
முஸ்லிம்களின் ஒற்றுமை தொடர்கிறது! முகவை அனைத்து ஜமாஅத் ஆர்பாட்டதால் அதிர்ந்தது !

2012 செப். 25 அன்று இராமநாதபுரம் நகரில் தமுமுக, எஸ்.டி.பி.ஐ, ஐ.என்.டி.ஜே , சுன்னத் ஜமாத்தார்கள் , அனைத்து உலமா பெருமக்கள், அனைத்து ஊர் ஜமாத்தினர்கள். இதர இஸ்லாமிய இயக்கங்கள், சங்கங்கள் ஆகியோர் இனைந்த இராமநாதபுரம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக
இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான உன்னத நபி முகம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும்
அதை கண்டிக்க மறுக்கும் அமெரிக்கர்களையும்
அந்த திரப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து வலைத்தளங்களையும்
தடை செயய மறுக்கம் மத்திய அரசை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

  • இராமநாதபுரம் நகர் கொல்லம்பட்டரை தெருவில் உள்ள இராமநாதபுரத்தின் மிக பழமையானதும் , முதல் பள்ளியுமான கொல்லம் பட்டறை பள்ளியில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு 
  • ஆலிம் கிராஅத் ஓத 
  • அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளரும் கொல்லம்பட்டறை தெரு ஜமாத் நிர்வாகியுமான ஜனாப் முத்தலிப் அவர்கள் துவக்கி வைத்தார்கள். 
  • பேரணியை வழி நடத்தும் விதமாக அனைத்து இயக்கத்தவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் , மாவட்டத்தின் அனைத்து ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து இயக்க நிர்வாகிகள் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒங்கி ஒலித்து வந்தார்கள். 

 மாவட்டமெங்கிலும் இருந்து இசுலாமிய வீர இளைஞர்கள் ஆர்ப்பரித்து வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கில் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி சின்க்கடை வீதியெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து அன்னல் நபியை இழிவு படுத்தியதை கண்டித்தும் மாநபியின் வீர வேங்கைகள் கோசம் எழுப்பி பேரணியாக தெருவெங்கும் நடந்து வந்தது இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் காணத சரித்திர சம்பவம்.

  • இன்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் இராமநாதபுரத்தில் உள்ள அனைத்து இசுலாமிய வியாபார நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. 
  • பொங்கி எழுந்த வீர இசுலாமியர்களின் ஆர்பரிப்பில் இராமநாதபுரம் தினறியது. 
  • தப்புக்கணக்கு போட்டு வாகனங்களில் வந்து முஸ்லிம்களை பீதியடைய செய்யலாம் என்று திறலாக குவிக்கப்பட்டிருந்த காவல்துறை எம் மாவட்ட இசுலாமிய வீரவேங்கைகளின் ஆக்ரோசத்தில் பின்வாங்கியது. 

முகவை மாநகர சரித்திரத்தில் திரன்டிராத கூட்டமிது. காவல்துறையும் உளவுத்துறை உட்பட ஏனைய அனைத்து மக்களும் திரன்டிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் ஓழுக்கமான கூடலை பார்த்து ஆச்சர்யத்தில் வியந்தனர்.
நமது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப் படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து நடந்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்த்தில் பங்கெடுத்து அன்னல் நபிகளுக்கெதிரான அநீதிக்கு கண்டன் தெறிவித்தவர்களாக சரித்திரத்தில் தங்களை இம்மக்கள் பதிவு செய்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...