25 செப்டம்பர், 2012

நைஜீரியா இஸ்லாமியர் போராட்டம்

இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: நைஜீரியாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்


அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் நாடான நைஜீரியாவின் கடுனா நகரில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் வசிக்கும் நாடான நைஜீரியாவில் நடத்தப்பட்ட இப்போராட்டம் எவ்வித வன்முறைகளும் இல்லாமல் அமைதியாக நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அமெரிக்க கொடியை எரித்தும், தெருக்களில் இழுத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அமெரிக்க கொடியுடன் இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் கொடிகளையும் போராட்டத்தில் ஈடுபட்டோர் இழிவுபடுத்தினர். மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படங்களும் போராட்டத்தின்போது எரிக்கப்பட்டன. முன்னதாக, இதே காரணத்துக்காக நைஜீரியாவின் கனோ மற்றும் சரியா நகர்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட போராட்டங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
  நன்றி:  www.maalaimalar.com

சென்னை 25-09-2012 (செவ்வாய்க்கிழமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...