28 ஆகஸ்ட், 2012

தொடர் நிலநடுக்கங்கள்,சோதனைகள்


நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:
உலக அழிவுக்கு நெருக்கமாக தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படும். சோதனைகள் பெருகும்.


 لا تـقـوم السـاعـة حـتـى يـقـيـض العـلم و تـكـثـر الزلزال و تكثر الفتن و يظهر الهرج و المرج و تكثر فيكم الاهـواء و يـخـرب العـامـر و يـعـمـر الخـراب و يـكـون خـسـف بـالمـشرق و خسف بالمغرب و خسف بجزيرة العرب و تطلع الشـمـس مـن مـغـربـهـا و تـخـرج الدابـة و يـظـهـر الدجـال و يـنـتـشـر يـاءجـوج و مـاءجـوج و ينزل عيسى بن مريم فهناك تاءتى ريح من جهة اليمن الين من الحرير فلا تدع احدا فيه مثقال ذرة من الاءيمان الا قبضته و انـه لا يـقـوم السـاعـة الا عـلى الاشـرار ثـم تـاتى نار من قبل عدن تسوق ساير من علا الارض ‍ تحشرهم .
கலிபோர்னியாவில் 100 சிறு நிலநடுக்கங்கள்: அதிர்ச்சியில் மக்கள்
 அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 100 சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கலிபோர்னியாவின் தென் கிழக்கு பகுதியில் எல் சென்ட்ரோ என்ற இடத்தின் வடக்கு பகுதியில், உள்ளூர் நேரப்படி கடந்த 26ஆம் திகதி காலை 10.02 மணிக்கு முதல் நில நடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவில் 3.9 என பதிவானது. 
இதன்பின் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட சிறு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் 30 நில அதிர்வுகள் ரிக்டர் அளவில் குறைந்தபட்சம் 3.5 என்ற அளவில் பதிவாகின.
மிக அதிகபட்சமாக பராவெலி நகரின் வடமேற்கு பகுதியில் மையம் கொண்டிருந்த நிலநிலக்கம் ரிக்டர் அளவில் 5.5 என பதிவானது.
இந்த தொடர் நில அதிர்வுகளால் மக்கள் பெரிதும் பீதியடைந்தனர். நடமாடும் வீடுகளில் வசித்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உணவகங்கள், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழுந்து சேதம் அடைந்தன.

ஜப்பானில் பயங்கர சூறாவளி
( திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2012, )
ஜப்பானில் பயங்கர சூறாவளி புயல் வீசுவதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் சூறாவளி புயல் மையம் கொண்டுள்ளது.
  • மணிக்கு 252 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
  • ஒகினாவா தலைநகர் நாகாவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • மேம்பாலத்தில் ரயில் மற்றும் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
  • மின்கம்பங்கள் சாய்ந்து ஒயர்கள் துண்டிக்கப்பட்டதால், இந்த நகரம் இருளில் மூழ்கியுள்ளது.
  • சூறாவளி காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் முதியவர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் நாகா நகரில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கடலில் 13 மீற்றர் உயரத்துக்கு அலைகள் எழும்பி ஆர்ப்பரிக்கின்றன. இதனால் கப்பல்கள் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download