15 செப்டம்பர், 2012

நீங்கள் 18 வயது பூர்த்தியானவரா?

நீங்கள் 18 வயது பூர்த்தியானவரா? வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம்


சென்னை: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று சென்னை யில் நிருபர்களிடம் கூறியதாவது:2013ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் (சிறப்பு சுருக்க முறை திருத்தம்) தயாரிக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இவர்கள் தவிர, இதுவரை வாக் காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் நீக்கம், திருத்தம் செய்ய விரும்புபவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அக்டோபர் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகம், நகராட்சி அலுவலகம், வாக்குச்சாவடி மையங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அலுவலக நாட்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். வாக்குச்சாவடி மையங்களில், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம் பெறலாம்.
வரும் அக்டோபர் மாதம் 7, 14, 21 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இதுதவிர அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் கிராமசபை, உள்ளாட்சி மன்றங்கள், குடியிருப்போர் நலச் சங்கம் மூலம் சிறப்பு கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு சரி பார்க்கப்படும். இதன்முலம் அப்பகுதியில் இருந்து வீடு மாறி இருப்பதும், புதிதாக வந்திருப்பவர்களை சேர்க்க, நீக்க முடியும்.4,089 வங்கிகள், 7,343 தபால் நிலையங்களில் தங்கள் பகுதிக்கான பூத் அதிகாரி பெயர், தொலைபேசி எண்கள் போஸ்டர் மூலம் அடித்து ஒட்டப்படும். அதன்மூலம், அந்த அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம். கல்லூரிகளில் விண்ணப்பத்துடன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்ப படிவமும் வழங்கப்பட்டுள்ளது.2013ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும்.

100% புகைப்படத்துடன்
வாக்காளர் அட்டை
சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புபடி 67.5 சதவீதம் பேர் தமிழகத்தில் வாக்களிக்கும் தகுதி உள்ளது. ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பைவிட 68.8 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. வீடு மாறிச் சென்ற சிலர் தங்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்காததே இதற்கு காரணம். தமிழகத்தில் 100 சதவீதம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்களே உள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையை தவற விட்டவர்கள், ரூ. 25 கட்டணம் செலுத்தி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று பிரவீன்குமார் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download