அன்புள்ள வலைப் பதிவர்களே!
உங்கள் வலைப் பதிவுகள் சிறந்த கருத்துக்களையுடையவையாக இருக்கும் பட்சத்தில் வாசகர்கள் அதை 'பிரிண்ட்' எடுத்து வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.
உங்கள் வலைப் பதிவை திறந்து வைத்துக்கொண்டு ப்ரிண்ட் கொடுத்தால் அதில் உள்ள எல்லாமே பிரிண்டாகலாம்
அவர்களுக்கு அவசியமில்லாத விளம்பரங்கள், பக்க உறுப்படிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எல்லாமே பிரிண்டாகி அதிக பக்கங்களாகி வீண் சிரமத்தைக் கொடுக்கலாம்.
குறிப்பிட்ட வரிகளை மட்டும் செலெக்ட் செய்து பிரிண்ட் கொடுத்தாலும் சில நேரங்களில் பிரிண்ட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
இதைத் தவிர்க்க சுலபமான வழி உங்கள் ஒவ்வொரு பதிவுக்கு கீழேயும் 'பிரிண்ட் பட்டன்' சேர்ப்பதுதான். அப்படி செய்துவிட்டால் வாசகர்கள் தேவையான பதிவை மட்டும் பிரிண்ட் எடுத்துக் கொள்ள சுலபமாகும். அதுமட்டுமல்ல. அந்த பிரிண்ட் பட்டனை க்ளிக் செய்தவுடன் மூன்று வகையான வசதிகள் கிடைக்கும்
- எழுத்தின் அளவை சுருக்கி அல்லது பெருக்கிக் கொள்ளலாம்.
- PDF ஃபைலாக மாற்றி சேமித்துக் கொள்ளலாம்
- பதிவிலுள்ள அவசியமில்லாத image-ஐ அகற்றிக் கொள்ளலாம்.
சரி வலைப் பதிவில் 'பிரிண்ட் பட்டன்' சேர்ப்பது எப்படி? இங்கே சென்று அறிந்துகொள்ளலாம்.
ennanga asarath!
பதிலளிநீக்குneenga eppudithaan thedureengalo...!
athuvaa? athu appadiththaan, seeni
நீக்கு