11 ஜூலை, 2012

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இக்லாஸ்
 (وَمَنْ أَحْسَنُ دِينًا مِمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ) (النساء/ 125
(قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ) (الزمر/ 11).
(إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ * ألا لله الدِّينُ الخَالِصُ) (الزمر/ 2-3).
னத்தூய்மைக்கு மார்க்கம் தருகிற மதிப்பை விளங்கிக்கொள்ள ஒரு உதாரணம். பொதுவாக நறுமணத்தை மார்க்கம் விரும்புகிறது. அதை சம்பிரதாயமாக இல்லாமல் ஒரு சுன்னத்தாக ஆக்கிய மார்க்கம் நம் மார்க்கம். அதே சமயம் இதே நறுமணம் செத்த பிணத்தை விட துர்நாற்றமுள்ளதாக மாறிவிடும் எப்பொழுது தெரியுமா?
அதில் இக்லாஸ் இல்லாவிட்டால். 
ஒருவர் நறுமணம் பூசுகிறபொழுது அல்லாஹ்வின் திருப்தியை நினைக்காமல் அண்ணல் நபியின் சுன்னத்தைக் கருதாமல் மற்றவர் என்னை நோக்கவேண்டும் பாராட்டவேண்டும் என்று நினைத்தால் هو انتن من الجيفة மறுமையில் செத்த பிணத்தை விட துர்நாற்றமுள்ளதாக நாறும் என்றார்கள் நபி (சல்).


ன்னை ராபியத்துல் பசரிய்யா (ரஹ்-அலைஹா) அவர்கள் கூறுவார்கள்:
யா அல்லாஹ் சுவனத்திற்கு ஆசைப்பட்டு நான் உன்னை வணங்கவில்லை; நரகிற்கு பயந்தும் உன்னை வணங்கவில்லை; உன்னை வணங்குகிறேன் உனக்காகத்தான். உன் இணக்கத்தைப் பெறவே என் வணக்கம்.''
ருநாள் ராபியா (ரஹ்-அலைஹா) ஒரு கையில் நெருப்பையும் மற்றொரு கையில் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு விரைவாகச் சென்றுகொண்டிருந்தார். ''ஓ அந்த உலகத்தின் நாயகியே! எங்கே இப்படி சென்றுகொண்டிருக்கிறீர்கள்?'' என்று சில சூஃபிகள் கேட்டனர். 
''இந்த நெருப்பால் சொர்க்கத்தை எரிக்கப் போகிறேன்; இந்த தண்ணீரால் நரகத்தை அணைக்கப் போகிறேன் இரண்டுமே இல்லாமல் போகும். அதன்பின் இறைவனை நேசிப்பதற்கு சொர்க்கத்தைப் பற்றிய ஆசையோ நரகத்தைப் பற்றிய அச்சமோ தேவையிருக்காது'' என்றார்.

''நீங்கள் இறைவனை விரும்புகிறீர்களா ராபியா?''
''ஆமாம்.''
''ஷைத்தானை வெறுக்கிறீர்களா?''
இல்லை''
''அதெப்படி''
''உள்ளத்தில் இறைக்காதல் நிறைந்திருப்பதால் ஷைத்தானை வெறுப்பதற்கெல்லாம் இடமில்லை''
ஸன் பஸரீ ரஹ் அவர்கள் கூறுவார்கள்: என்னிடம் சொர்க்கம் செல்கிறாயா? அல்லது 2 ரக்அத் தொழுகிறாயா? என்று கேட்கப்பட்டால் நான் தொழுவதைத்தான் தேர்ந்தெடுப்பேன். என் திருப்தியை விட என் ரப்பின் திருப்தியே முக்கியம்.
   معروف الكرخيகூறுவார்கள்: நன்மையை எதிர்பார்த்து அமல் செய்பவன் வியாபாரி. தண்டனையைப் பயந்து அமல் செய்பவன் அடிமை. அல்லாஹ்வுக்காக அமல் செய்பவனே உன்மையில் நல்லவன்.

ஃது பின் அபீ வக்காஸ் (ரலி) மக்காவை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். மக்கள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றனர். ஒவ்வொருவரும் தத்தம் தேவையைக் குறிப்பிட்டு இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். சஃது ரலி அவ்வாறே செய்தார்கள். அவர்களின் துஆ ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. அவர்களது கண்ணில் கோளாறு இருந்தது.
''மற்றவர்களுக்காக நீங்கள் பிரார்த்திக்கிறீர்கள். ஆனால் உங்கள் கண்ணில் உள்ள கோளாறை நீக்குவதற்காக நீங்கள் துஆ செய்யவில்லையே? உங்கள் துஆதான் அங்கீகரிக்கப்படுகிறதே.. ?என்று கேட்டார் அப்துல்லாஹ் என்பவர்.
சஃது ரலி விடையளித்தார்கள்: ''எல்லாம் நன்மைக்குத்தான் அனைத்தும் இறைவனின் தீர்ப்புப்படியே நடைபெறுகின்றன. இறை தீர்ப்பை நான் பெரிதும் விரும்புகிறேன் என் நேத்திரக் கோளாறு நீங்குவதைவிட என் இறைவனின் தீர்ப்பு அமுலாவதே நல்லது!''

மாம் கஸ்ஸாலி (ரஹ்) இஹ்யாவில் ஒரு வரலாற்றைக் குறிப்பிடுவார்கள்:
ஒரு ஊர் மக்கள் மரத்தை வணங்குவதாக கேள்விப்பட்டார் ஒரு ஆபித். உடனே சினந்தெழுந்து கோடாரியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். வழியில் ஷைத்தான் ஒரு பெரியவரின்ஒரு பெரியவர் உருவில் வந்து வழிமறித்தான். எங்கே செல்கிறீர்?
மரத்தை வெட்ட செல்கிறேன்''
கூடாது''
வெட்டுவேன்''
இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆபித் ஷைத்தானை கீழே தள்ளி மேலே ஏறி அமர்ந்தார்
ஷைத்தான் சமாதானத்திற்கு வந்தான். ஆபிதே நீர் ஒரு ஏழை. உமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? பேசாமல் போய் உம் வணக்கத்தைத் தொடரும்; தினமும் உனக்கு 2 தீனார் உன் தலையணைக்கு கீழே நான் கொண்டு வந்து வைக்கிறேன். அல்லாஹ் அதை வெட்ட நாடியிருந்தால் அதற்கு ஒரு தூதரை அனுப்பி இருக்கமாட்டானா?
ஆபித் அமைதியானார். திரும்பிச் சென்றார்.
அதன்பிறகு மறுநாள் காலையில் 2 தீனாரைக் கண்டார். அடுத்த நாளும் அவ்வாறே கண்டு எடுத்துக்கொண்டார். மூன்றாம் நாள் காலையில் ஒன்றும் காணவில்லை. உடனே கோபத்துடன் புறப்பட்டார்.. மரத்தை வெட்ட.
இந்த முறையும் ஷைத்தான் வழிமறித்தான். மோதினான். தள்ளுமுள்ளு நடந்தது. ஆனால் இந்த முறை ஷைத்தான் வென்றான். ஆபித் ஆச்சரியத்துடன் வினவினார்: இப்போது எப்படி என்னை வெல்ல முடிந்தது?''
அவன் சொன்னான்: ''அப்போது உம் கோபம் அல்லாஹ்விற்காக இருந்தது. இப்போது உம் கோபம் 2 தீனாருக்காக இருந்தது.

ஹயாத்துல் ஹயவானில் ஒரு வரலாற்றுத் துணுக்கு உண்டு:
ஆதம் அலை அவர்கள் பூமிக்கு இறங்கியபொழுது வனவிலங்குகள் எல்லாம் அவர்களைக் காண வந்தன. நலம் விசாரித்தன; நபியவர்களும் அவைகளுக்கு துஆ செய்து அனுப்பிவைத்தனர். ஒரு மான் கூட்டம் வந்தது. நலம் விசாரித்தது. நபி அவற்றின் முதுகில் தடவி துஆ செய்தனர். அல்லாஹ்வின் அருளால் உடனே அந்த மான்களுக்கு கஸ்தூரி உண்டாக ஆரம்பித்தது. அதன் வாடை செல்லுமிடமெல்லாம் கமழத் துவங்கியது. இதைக் கண்ட வேறொரு மான் கூட்டம் அந்த மணத்திற்கான காரணம் கேட்டது. அவை நடந்ததைக் கூறின. உடனே இந்த மான்களும் நபியைச் சந்திக்க கிளம்பின. நபி தடவினார்கள். ஆனால் கஸ்தூரி உண்டாகவுமில்லை; வாசமும் வரவில்லை. இந்த மான்கள் அந்த மான்களிடம் சென்று காரணம் கேட்டன. அவை அழகாகக் கூறிற்று: நாங்கள் நபியைச் சந்தித்தோம்.. அல்லாஹ்விற்காக. (அல்லாஹ்வின் நபி என்பதற்காக.!) நீங்கள் சந்தித்தீர்கள்..கஸ்தூரிக்காக!!

அலி ரலி ஒரு போர்க்களத்தில் எதிரியை கீழே சாய்த்து அவனை வெட்ட வாளை ஓங்கும் தருணம் திடீரென அவன் என்ன நினைத்தானோ சட்டென காறி உமிழ்ந்தான். அது அவர்கள் முகத்தில் பட்டதும் கோபம் அதிகமாகி இருக்கவேண்டுமல்லவா? அதுதான் இல்லை. ஓங்கிய வாளை பட்டென கீழே தாழ்த்தி எழுந்தார்கள். அவன் ஆச்சரியத்தோடு பார்த்தான். அறிவின் தலைவாசல் அழகான விளக்கம் தந்தார்கள்: இத்தனை நேரம் நான் உன்னுடன் போராடியது அல்லாஹ்விற்காக. இப்பொழுது நான் உன்னை வெட்டினால் அது நீ என் முகத்தில் காரி உமிழ்ந்ததற்காக என எழுதப்பட்டுவிடுமோ என்று அஞ்சினேன். ''


ஒரு இறைநேசரின் கூற்று நம்மை வியப்பின் விளிம்பிற்கே கொண்டு செல்கிறது:
நான் முப்பது வருடங்களாக ஜமாஅத்துடன் முதல் வரிசையில் தொழுத தொழுகையை மீண்டும் 'களா' செய்தேன். என்ன காரணம்? ஒருநாள் சற்று தாமதமாகி இரண்டாவது வரிசையில்தான் இடம் கிடைத்தது. மக்கள் என்னைப் பார்த்தபொழுது எனக்கு கூச்சமாக இருந்தது. சே..பிந்திவிட்டேனே இப்பொழுது என்னைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்? இந்த எண்ணம் தோன்றியதும் அப்போதுதான் நான் உணர்ந்தேன் அவ்வாறானால் இந்த முப்பது ஆண்டுகளும் நான் மக்களுக்காக தொழுதேனா அல்லது அல்லாஹ்விற்காக தொழுதேனா? என் வணக்கம் தூய்மையற்றதா? இந்த குற்ற உணர்வு என்னைக் குத்தியது. அதனால் நான் அவை அத்தனையையும் களா செய்கிறேன்
சுப்ஹானல்லாஹ் இப்படியும் சிந்திக்கமுடியுமா?
நாம் எப்போதாவது இப்படி சிந்தித்ததுண்டா? அது இருக்கட்டும். முதல் வரிசையில் இடம் பிடிக்க போட்டி போட்டதுண்டா?
ஒரு கிராமவாசி பள்ளியில் வந்து தொழுதார். அவசரமாக தொழுதார். அலி ரலி சாட்டையை கையில் ஏந்தி அதட்டினார்கள் நிதானமாக தொழு!''
அவர் நிதானமாக தொழுது முடித்தார். அலி (ரலி) கேட்டார்கள் இந்த தொழுகை சிறந்ததா? அல்லது முன்னர் தொழுத தொழுகை சிறந்ததா?
அவர் கூறினார்: அது அல்லாஹ்விற்காக தொழுத தொழுகை. இது உங்களின் சாட்டைக்குப் பயந்து தொழுத தொழுகை.
எனவே அதுதான் சிறந்தது.''.

2 கருத்துகள்:

  1. maasha allah!

    sinthikka vaithathu!

    allah nammai porunthi kolvaanaaka!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சீனி..
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி..
      இடுகை இட்டதும்
      முதல் நபராக கருத்து சொல்வதில்
      உங்களுக்கு நிகர் நீங்களேதான்.

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...