இந்த இரவில் விஷமாக வணங்குவது மக்ரிபுக்குப் பின் யாசீன் ஓதி துஆ செய்வது பற்றி தீர்ப்பும் சான்றுகளும் இந்த தளத்தில் சென்று காணலாம்.
கேளுங்கள்
தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் :
أن النبي صلى الله عليه وسلم قال: "إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلتها وصوموا يومها، فإن الله تبارك وتعالى ينـزل فيها لغروب الشمس إلى سماء الدنيا، فيقول : ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر"
பராஅத்
இரவிலே முதல் வானம்
வரைக்கும் இறங்கி மூன்று
அறிக்கைகளை வெளியிடுகிறான்
1.என்னிடம்
மன்னிப்பு தேடுபவர் உண்டா? கேளுங்கள்
மன்னிக்கிறேன்
2.என்னிடன்
இரணம் வேண்டுபவர் உண்டா
வேண்டுங்கள் வழங்குகிறேன்
3.நோயில்
சிக்கியவர் உண்டா? நிவாரணம்
அளிக்கிறேன் இப்னு
மாஜா
மன்னிப்பு
கேளுங்கள் மன்னிக்கிறேன்:
ألا من مستغفر فأغفر له:
தவறு
செய்வது மனித இயல்புதான்
ஆனால் அதை உணர்ந்து
மன்னிப்புக் கேட்பதுதான் சிறந்த
பண்பு.
كل بني آدم خطاء وخير الخطائين التوابون
இறைவன்
கருணையாளன். அவனிடம் மன்னிப்புக்
கேட்பதையே அவன் விரும்புகிறான்.
சில மதங்களில் மதகுருவிடம்
மன்னிப்புக் கேட்டால் போதுமானது
என்று வைத்துள்ளார்கள்.அப்படி
சொல்லி உங்களை நான்
ஏமாற்ற விரும்பவில்லை.
ஒரு
ஆலயம். மதகுரு மக்களுக்கு
முன்பு நின்று மன்னிப்பு
சீட்டு வழங்கிக் கொண்டிருந்தார். ''இதோ பாருங்கள் ஒரு
சீட்டு 50 ரூபாய்தான். ஒன்று
வாங்கினால் போதும். இங்கள்
அத்தனை பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடும்'' என்றார்.
''அட
50 ரூபாய் செலவில் அத்தனை
பாவங்களும் மன்னிக்கப்படுமா? பரவாயில்லையே..''
மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வாங்கினர்.
செம வசூல்.
ஒருத்தன்
மட்டும் 100 ரூபாய் கொடுத்து
2 சீட்டு வாங்கினான். பாதிரியாருக்கு ஆச்சரியம். இவன்
மட்டும் ஏன் 2 வாங்குகிறான்?
சரி.
நமக்கு தேவை காசு.
யார் எத்தனை வாங்கினால்
என்ன?
பாதிரியார்
வசூலை அள்ளி முடிந்துகொண்டு அடுத்த ஊருக்கு
கிளம்பினார் வசூலுக்கு.
வழியிலே
தன்னந்தனியாக சென்றுகொண்டிருந்தார். ஒருவன் வழிமறித்தான். கையிலே கத்தி.
''யோவ்..
மரியாதையா இந்த பணமூட்டையை
கொடுத்திடு.''
''டேய்.
இது அநியாயம். ஒரு
மதகுருவிடமே 'ஆட்டையைப்' போடுவது
பெரிய பாவம். இந்த
பாவம் உன்னை சும்மா
விடாது.''
''அதுலாம்
எங்களுக்குத் தெரியும். அதுக்காகத்தான்
100 ரூபாய் கொடுத்து இரண்டு
சீட்டு வாங்கி வச்சிருக்கோம்.
ஒன்று நான் ஏற்கனவே
செய்த பாவத்திற்கு. மற்றொன்று
இப்ப செய்யப்போற இந்த
பாவத்துக்கு'' அப்படின்னான்.
மதகுரு
மக்களை ஏமாற்றினார். அவரை
ஏமாற்றுவதற்கும் ஒரு
ஆள் இருந்திருக்கிறான். பாவம்
அவருக்குத் தெரியவில்லை. அந்த
மதகுரு மாதிரி நான்
சீட்டு விற்க விரும்பவில்லை.
உங்கள் அனைவரையும் இறைவனிடம்
மன்னிப்புக் கேட்கவே அழைக்கிறேன்
வாருங்கள் மக்களே இந்த
புனித இரவில் நாம்
அனைவரும் சேர்ந்து அவனிடம்
மன்னிப்புக் கேட்போம்.
.-------------------
இரணம்
கேளுங்கள்; இரணம் தருகிறேன்: ألا من مسترزق فأرزقه
இந்த
இரவு அடியார்களின் ஆயுள்.
இரணம் நன்மை தீமை
முடிவு செய்யப்பட்டு யாருக்கு
எவ்வளவு என்று பட்ஜெட்
போடப்பட்டு அந்தந்த துறை
அதிகாரிகளிடம் (வானவர்களிடம்) பொறுப்புகள்
ஒப்படைக்கப்படுகின்றன. எனவே இந்த
பட்ஜெட் இரவில் துஆ
செய்து இரணத்தை அள்ளிப் போடலாம் மரணத்தை தள்ளிப் போடலாம்
துஆ
விதியை மாற்றும் என்பது
நபிமொழி.
இரணத்தை
இறைவனிடம் கேட்பதோடு கடமை
முடிந்து விடாது; அதற்காக
முயற்சி உழைப்பு அவசியம்.
''பறவைகளைப்
போன்று நீங்களும் தவக்குல்
வைத்தால் அவைகளுக்கு இரணம்
அளிப்பதைப் போன்று உங்களுக்கு
தருவான். அவைகள்
காலையில் பசித்த வயிறுடன்
பறந்து செல்கின்றன; மாலையில்
வயிறு நிரம்பி வந்து
சேருகின்றன.''
இந்த
நபிமொழியில் பறவைகளின் தவக்குலைப்
போன்று நமது தவக்குல்
இருக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பறவைகள் அல்லாஹ் தருவான்
என்று கூட்டுக்குள்ளேயே முடங்கிக்
கிடப்பதில்லை. நம்பிக்கையோடு பறந்து
சென்று பாடுபடுகின்றன முழங்காலைக்
கட்டிக்கொண்டு வீட்டிலேயே முடங்கிக்
கிடந்தால் அல்லாஹ் தருவானா?
இன்று
அநேகர் அப்படித்தான் நினைக்கிறார்கள்.
ஒருமுறை
முல்லா சந்தையிலே ஒரு
மேடையேறி நின்றார். படபடவென்று
கைகளைத் தட்டி மக்களை
அழைத்தார். ''மக்களே! முயற்சி
இல்லாமல் முன்னேறவேண்டுமா? பாடுபடாமலேயே
பணம் குவியவேண்டுமா? உழைக்காமலேயே
ஊதியம் பெறவேண்டுமா? வாருங்கள்''
மக்கள்
முண்டியடித்துக்கொண்டு ஒன்று
கூடினார்கள். நோகாமலேயே நொங்கு
திங்க யாருக்குத்தான் ஆசை
இல்லை?
முல்லா
சொன்னார்; ரொம்ப நல்லா
சொன்னார்: ''அப்படி ஒருவழி
எனக்குத் தெரியவரும்போது அவசியம்
உங்களுக்கு சொல்கிறேன்'' என்று
சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடையைக்
கட்டினார். மக்களின் மனநிலையை
முல்லா படம் பிடித்துக்
காட்டிவிட்டார்.
இன்று
நிறைய பேர் இப்படித்தான்
உழைக்காமல் திரிகிறார்கள்.
ஒரு
சகோதரி கண்ணீரோடு கவிதை
எழுதினாள்:
''நான் பீடி சுற்றுகிறேன்
என் அம்மா முறுக்கு சுற்றுகிறாள்
என் அண்ணன் பொறுப்பில்லாமல்
ஊர் சுற்றுவதால்.''
ஒரு
வாலிபன் இப்படித்தான் சும்மா
சுற்றிக் கொண்டிருந்தான்.
அந்த
ஊர் அஜரத் அவனை
அழைத்தார்.
''தம்பி
உழைத்தால் உயரலாம்''
''அஜரத்
நான் என்ன செய்வேன்?
இந்த ஊரில் ஒரு
வேலையும் அமையலையே?''
''தம்பி
இந்த உலகம் விசாலமானது.
பரந்து விரிந்தது. கிளம்பிப்
போ.
தேடிப்பார். வேலை கிடைக்கும்.''
அவன்
உடனே புறப்பட்டான் வேலை
தேடி.
இரண்டே
நாட்களில் ஊருக்கு வந்து
விட்டான்
அஜரத்
கேட்டார்: ''ஏம்பா திரும்பி
வந்துட்டே?
அவன்
சொன்னான்: ''நான் போன
வழியிலே இளைப்பாறுவதற்காக ஒரு
மரத்தடியில் அமர்ந்து இருக்கும்போது
ஒரு காட்சியை கண்டேன்.
திரும்பி வந்துட்டேன்''
''என்ன
காட்சி?''
''அந்த
மரத்தின் கிளையிலே ஒரு
நொண்டிக் குருவி பறந்து
செல்ல முடியாமல் பசியுடன்
அலறிக்கொண்டிருந்தது. அந்த
நேரம் அழகான குருவி
ஒன்று வாயில் இரையுடன்
வந்து நொண்டிக் குருவிக்கு
ஊட்டிவிட்டது. இதைப் பார்த்து
ஒரு முடிவுக்கு வந்தேன்
இந்த குருவிக்கு எங்கிருந்தோ
கொண்டு வந்து ரிஸ்கை
கொடுக்கிற நாயன் நமக்கும்
கூரையைப் பொத்துக்கிட்டு கொடுக்கமாட்டானா?
அதான் வந்துவிட்டேன்''
''தம்பி
அந்த இரண்டு குருவிகளில்
நீ எந்த குருவி?''
''அஜரத்.
என்ன சொல்றீங்க?
''ஆமாப்பா.
யாராவது வந்து தரமாட்டாங்களா
என்று யாசகம் கேட்கும்
நொண்டிக் குருவியா? அல்லது
உழைத்து தானும் உண்டு
பிறருக்கும் உதவிய அந்த
நல்ல குருவியா?
வாலிபன்
மனம் மாறினான் உடனே
ஒரு லட்சியத்தோடு உழைக்க
புறப்பட்டான்.
நோயில்
சிக்கியவரா? ஆரோக்கியம் தருகிறேன்: ألا من مبتل فأعافيه
நோயற்ற
நீண்ட ஆயுளை இந்த
இரவில் கேட்கிறோம். ஆயுளை
முடிவு செய்பவன் அல்லாஹ்.
அவனிடமே கேட்டுப் பெறவேண்டும்
சில ஏமாற்றுப் பேர்வழிகள்
உங்களுக்கு நீண்ட ஆயுளைத்
தருகிறோம் வாருங்கள் என்பார்கள்.
ஏமாந்துவிடவேண்டாம்.
முதலாம்
உலகப் போருக்குப் பின்
மத்திய ஐரோப்பாவில் 'இல்யுக்டேட்'
எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு விஷேசமான
மருந்தை சப்ளை செய்தது.
எல்லா மருந்துக் கடைகளிலும்
விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது.
''மனிதர்களை
விட யானைகள் நீண்ட
காலம் உயிர் வாழ்கின்றன
என்பது அனைவரும் அறிந்த
விஷயம். 150 வருடத்திற்கு மேல்
வாழ்கின்றனவாம். இந்த நீண்ட
ஆயுளுக்கு என்ன காரணம்
என்ற இரகசியம் இதுவரை
யாருக்கும் தெரியாமல் இருந்தது.
இப்போது ஆய்வு செய்து
நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஒருவித
காட்டு மூலிகையை யானைகள்
சாப்பிடுகின்றன. அந்த மூலிகையைக்
கண்டுபிடித்து அதிலிருந்து இந்த
'இல்யூக்டேட்' தயாரித்துள்ளோம். இதை
சாப்பிட்டால் நீண்ட காலம்
வாழலாம்''
இந்த
விளம்பரத்தில் மயங்கி மக்கள்
போட்டி போட்டு வாங்கினர்.
செம வசூல். காப்பித்தூள்,
தேயிலைக்குப் பதிலாக மக்கள்
இந்த 'இல்யூக்டேட்' ஐ பயன்படுத்த தொடங்கினர். அறிவியலார் அந்த மருந்தை ஆய்வுக்குட்படுத்திய பொழுது அதிர்ச்சிக்குள்ளானார்கள். அந்த பாக்கெட்டுகளில் இருந்தது என்ன தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். யானைச் சாணம். நாகரீகம் வாய்ந்த 20-ம் நூற்றாண்டில் மக்கள் யானைச் சாணத்திலிருந்து கசாயம் இறக்கிக் குடித்தது பெரிய வேடிக்கைதான். எனவே நீண்ட ஆயுள் என்பது இறைவனின் கையில். அதை அவனிடம் கேட்டுப் பெறுவதோடு உணவிலும் உணர்விலும் சில வழிமுறைகளைக் கையாண்டால் நீண்ட ஆயுள் பெறலாம்.
உணவில் என்ன வழிமுறை?
சமச்சீர் உணவு۔ அதை இங்கே சென்று வாசிக்கவும்۔
உணர்வில் விதிமுறைகள்:
கோபம், காழ்ப்புணர்ச்சி கவலை போனற உணர்ச்சிகளுக்கு அதிகம் ஆட்படக்கூடாது. அது ஆயுளைக் குறைக்கும்.
பிரஞ்சுப் பெண்மணி ஜென்னி கால்மண்ட். 122 வயது. இந்த நூற்றாண்டின் மூத்த வயதுப் பெண்மணி. அவரிடம் பேட்டி கண்டதற்கு அவர் சொன்ன பதில்: நான் எந்த கவலையையும் மனசுல போட்டுக்க மாட்டேன். ரிலாக்ஸ் பண்ணிக்குவேன்' என்றார்.
நொறுங்கத் தின்றால் நூறு வயது
- ஷஃபான் மாதத்தின் மாண்பு அதில் நோன்பு நோற்பதின் சிறப்பு இந்த தளத்தில் சென்று காணலாம்.
أن النبي صلى الله عليه وسلم قال: "إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلتها وصوموا يومها، فإن الله تبارك وتعالى ينـزل فيها لغروب الشمس إلى سماء الدنيا، فيقول : ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر"
பராஅத்
இரவிலே முதல் வானம்
வரைக்கும் இறங்கி மூன்று
அறிக்கைகளை வெளியிடுகிறான்
ألا من مستغفر فأغفر له:
தவறு
செய்வது மனித இயல்புதான்
ஆனால் அதை உணர்ந்து
மன்னிப்புக் கேட்பதுதான் சிறந்த
பண்பு.كل بني آدم خطاء وخير الخطائين التوابون
மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வாங்கினர். செம வசூல்.
ஒருத்தன் மட்டும் 100 ரூபாய் கொடுத்து 2 சீட்டு வாங்கினான். பாதிரியாருக்கு ஆச்சரியம். இவன் மட்டும் ஏன் 2 வாங்குகிறான்? சரி. நமக்கு தேவை காசு. யார் எத்தனை வாங்கினால் என்ன?
வழியிலே தன்னந்தனியாக சென்றுகொண்டிருந்தார். ஒருவன் வழிமறித்தான். கையிலே கத்தி.
இரணம்
கேளுங்கள்; இரணம் தருகிறேன்: ألا من مسترزق فأرزقه
''பறவைகளைப் போன்று நீங்களும் தவக்குல் வைத்தால் அவைகளுக்கு இரணம் அளிப்பதைப் போன்று உங்களுக்கு தருவான். அவைகள் காலையில் பசித்த வயிறுடன் பறந்து செல்கின்றன; மாலையில் வயிறு நிரம்பி வந்து சேருகின்றன.''
''நான் பீடி சுற்றுகிறேன்
என் அம்மா முறுக்கு சுற்றுகிறாள்
என் அண்ணன் பொறுப்பில்லாமல்
ஊர் சுற்றுவதால்.''
முதலாம் உலகப் போருக்குப் பின் மத்திய ஐரோப்பாவில் 'இல்யுக்டேட்' எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு விஷேசமான மருந்தை சப்ளை செய்தது. எல்லா மருந்துக் கடைகளிலும் விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது.
''மனிதர்களை விட யானைகள் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றன என்பது அனைவரும் அறிந்த விஷயம். 150 வருடத்திற்கு மேல் வாழ்கின்றனவாம். இந்த நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம் என்ற இரகசியம் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது ஆய்வு செய்து நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஒருவித காட்டு மூலிகையை யானைகள் சாப்பிடுகின்றன. அந்த மூலிகையைக் கண்டுபிடித்து அதிலிருந்து இந்த 'இல்யூக்டேட்' தயாரித்துள்ளோம். இதை சாப்பிட்டால் நீண்ட காலம் வாழலாம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்