15 மே, 2012

தொப்பி இன்றி தொழுகை சேராதோ?


(பாசித் நின்றுகொண்டு சாப்பிடுகிறார்)


அல்ஹாரிஸ் : ''தம்பி இப்படியெல்லாம் நின்றுகொண்டு சாப்பிடக்கூடாது. உட்கார்ந்து நிதானமாக சாப்பிடலாமே..''

பாசித் :  ''ஏன்..நின்றுகொண்டு சாப்பிட்டா உணவு செமிக்காதோ?''


''செமிக்கும்.. ஆனால் உட்கார்ந்து முறைப்படி சாப்பிடுவதுதான் சுன்னத்; அதுதான் ஒழுக்கம். ''
''அட போப்பா.. எனக்கு சாப்பாடே வேண்டாம். ''


(பாசித் உணவுத் தட்டை தூக்கி வீசிவிட்டார். நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கிறார்.)
''தம்பி சொல்றேன்னு கோவிச்சிக்கிறாதீங்க. நின்றுகொண்டு குடிக்கக் கூடாது.'' 
''ஏன் நின்றுகொண்டு குடிச்சா உள்ளே எறங்காதோ?''
''எறங்கும்.. ஆனால் ஒழுக்கம்னு ஒன்னு இருக்குதில்லையா?''
''அட போப்பா ஒழுக்கமாவது புழுக்கமாவது. நான் தண்ணீரே குடிக்கலப்பா.''


(பாசித் தண்ணீரைக் கொட்டிவிட்டு தம்ளரை வீசுகிறார். தோளில் பேக்கைப் போட்டுக்கொண்டு யூனிஃபார்ம் இல்லாமல் கிளம்புகிறார்) 
''தம்பி எங்கே கிளம்பிட்டீங்க?''
''பள்ளிக்கூடத்திற்கு படிக்க போகிறேன்''
''அப்படியா ரொம்ப நல்லது. பள்ளிக்கூடம் போறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. ஒரு யூனிஃபார்ம் போட்டுக்கிட்டா நல்லா இருக்குமே''
''ஏன் யூனிஃபார்ம் போடாட்டா படிப்பு மண்டையிலே ஏறாதோ?''
''ஏறும்.. ஆனால் டிஸிப்ளின்னு ஒன்னு இருக்குதில்லையா?''
''அட போப்பா டிஸிப்ளினாவது குஸுப்ளினாவது. நான் பள்ளிக்கூடமே போகலப்பா.''
(பையை தூக்கி வீசிவிட்டு வேறு பக்கமாக போகிறார்)


''சரி பள்ளிக்கூடம் போகலைன்னா வேற எங்கே போறீங்க?''
''பள்ளிவாசலுக்கு தொழப் போறேன்'' 
''மாஷாஅல்லாஹ் எத்தனையோ பேர் பள்ளியின் திசையே தெரியாமல் இருக்கும்போது நீங்க தொழக் கிளம்பிட்டீங்க பாராட்டலாம் ஆனால்.... ?''
''என்ன ஆனால்? ''
''அல்லாஹ்வுக்கு முன்னாடி நிக்கனும்னு முடிவு பன்னிட்டீங்க. தலையை மறைச்சு தொழுதால் நன்றாக இருக்குமே..''


''ஏன். தொப்பி போடாட்டால் தொழுகை சேராதோ? வானத்துல ஏறாதோ?''
''ஏறும்.. ஆனால் ஒழுக்கம்னு ஒன்னு இருக்குதில்லையா?''
''அட போப்பா ஒழுக்கமாவது புழுக்கமாவது.. நான் தொழுகவே போகல.'' 
''தம்பி கொஞ்சம் நில்லுங்க. இது என்ன முடிவு? வச்சா குடுமி செறைச்சா மொட்டைங்கிற கதையாவுல இருக்கு? நான் என்ன சொல்லிட்டேன்னு கோவிச்சுக்கிறீங்க?


 தம்பி நல்லா யோசிச்சுப் பாருங்க:
  • உட்கார்ந்து சாப்பிட சொன்னேன் சாப்பாடே வேணாம்னு போயிட்டீங்க யாருக்கு நஷ்டம்? உங்களுக்குத்தான் நஷ்டம். சரி.. 
  • உட்கார்ந்து தண்ணீர் குடிக்க சொன்னேன் தண்ணீரே வேணாம்னு போயிட்டீங்க யாருக்கு நஷ்டம் உங்களுக்குத்தான் நஷ்டம். சரி..
  • யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு பள்ளிக்கூடத்திற்கு போகச் சொன்னேன் படிப்பே வேணாம்னு போயிட்டீங்க யாருக்கு நஷ்டம் உங்களுக்குத்தான் நஷ்டம். சரி..
  • தலையை மறைச்சு ஒழுங்கா தொழுக சொன்னேன் தொழுகையே வேணாம்னு போயிட்டீங்க யாருக்கு நஷ்டம் உங்களுக்குத்தான் நஷ்டம் 
தம்பி நல்லா கேட்டுக்கோங்க. நம்ம நபி (சல்) அவர்களோ அருமைத் தோழர்களோ தலையைத் திறந்துகொண்டு தொழுததாக ஒரு குறிப்பு கூட இல்லை. அதற்கு மாறாக நபியவர்கள் தொப்பி அணிந்தார்கள் என்றும் பல நேரங்களில் வெண்மையான தொப்பியை விரும்பி அணிவார்கள் என்றும் பல நபிமொழிகள் வந்துள்ளன. எனவே தொப்பி என்பது முஸ்லிமின் கலாச்சார சின்னம் அதை நாம் அனைவரும் அணியவேண்டும் என்பதே எண்ணம். 


''சரி அப்படியா? இனிமேல் உட்கார்ந்து சாப்பிடுவேன் உட்கார்ந்து பானம் அருந்துவேன்; யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு பள்ளிக்கூடம் போவேன்; தொப்பி அணிந்து தொழுவேன் முடிந்தால் தலைப்பாகையும் அணிந்து தொழுகிறேன் சரியா?''


''அல்ஹம்து லில்லாஹ். உண்மையான விளக்கத்தை உணர்ந்துகொண்டதற்கு உன்னைப் பாராட்டுகிறேன்.  

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

7 கருத்துகள்:

  1. maasha allah!

    mandaiyila erura maathiri sollideenga!

    ilakuvaana muraiyila!
    alhamthuliilaah!

    பதிலளிநீக்கு
  2. நன்றி சீனி.. மண்டையில போடுற விஷயத்தை (தொப்பியை) மண்டையில ஏறுற மாதிரி சொல்றதுதானே நல்லது.

    பதிலளிநீக்கு
  3. தொப்பியை ஒரு வைரஸ் கிருமியைப் போல
    கருதும் ஒரு கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில்
    இந்த உரையாடல் மண்டையில உறைக்கிற மாதிரி
    இருக்கு.. சூப்பர்மா.

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...