08 மே, 2012

பாபர் மதவெறியரா?

பாபர்
பாபர்
பாபர் மன்னனின் தளபதியான மீர் பக்கி என்பவர் ராமனின் கோயில் ஒன்றை உடைத்து அது இருந்த இடத்தில் மசூதியைக் கட்டியதாக ஒரு திட்டமிட்ட வதந்தியை தொடர்ந்து பரப்பி அதன் மூலம் வகுப்புவாத வெறியை மக்களிடையே தூண்டிவிட்டு 1992 டிசம்பர் 6- இல் கிட்டத்தட்ட 150,000 இந்துக்களால் இந்திய மேல்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி முற்றாக உடைத்து நொறுக்கப்பட்டது பாபர் மசூதி.(1)

ஆனால் மற்றவர்களின் கோயிலை இடித்து பள்ளிவாசல் எழுப்பும் அளவுக்கு மதவெறி உள்ளவரா பாபர் ? வரலாற்றை நடுநிலையோடு ஆராய்ந்தால் உண்மை புரியும். இதோ பாபரைப் பற்றி வரலாற்று நூல்கள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்:
''பாபர் கட்டுப்பாடு மிகுந்தவர்; மதவெறி இல்லாதவர்; இந்துக்களின் கோவில்களைப் பாழ்படுத்தவில்லை. கலைகள் இசை ஓவியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார்.  
பாபர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன் மகன் ஹுமாயூனுக்கு ரகசியமாக ஒரு உயில் எழுதினார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: 
''அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். சஹீருத்தீன் முஹம்மது பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய ரகசிய உயில். என் மகனே! இந்துஸ்தானப் பேரரசில் பல்வேறு மதங்கள் உள்ளன. உள்ளத்தில் இருந்து மதவெறிகளைத் துடைத்து எறிய வேண்டும் என்ற கடமை உமக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சமயத்திற்கும் அவற்றின் கோட்பாடுகளின்படி நியாயம் வழங்கப்பட வேண்டும் குறிப்பாக பசுக்களை கொல்லவேண்டாம். இதன்மூலம் இந்துஸ்தான் மக்களின் உள்ளங்களை வென்று விடலாம். நாட்டுமக்கள் அரசரிடம் பற்றுகொள்வார்கள். அரச ஆதிக்கத்தில் உள்ள கோவில்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் தூய்மையை பாதுகாக்கவேண்டும் குடிமக்களின் மீது அரசனும் அரசன் மீது குடிமக்களும் அன்பு கொள்ளும் வகையில் நீதி வழங்கப் படவேண்டும். மக்களை வாள்முனையில் வழிக்கு கொண்டு வருவதைவிட கடமை உணர்ச்சியை ஆயுதமாகக் கொண்டு இஸ்லாத்தை மேன்படுத்துவது சாலச் சிறந்ததாகும் இவ்வாறு பாபர் தன் உயிலில் கூறியுள்ளார். 
ஆதாரம்: ''உலக வரலாறு'' (ஐ.சண்முகநாதன், மாலதிபாலன், ஸ்வர்ணலதா வேல்முருகன் உள்ளிட்டோர் எழுதிய வரலாற்று நூல்) பக்கம் 147,148.

அதுமட்டுமல்ல..  இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?



இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும்ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.  
-----------------------------------------------------------------------------------------

(1)மேலும் தகவலுக்கு பார்க்க:
 பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று
 பிபிசி செய்தி
 பாப்ரி மசூதி இடிப்பு 10 மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது

    சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

    7 கருத்துகள்:

    1. masha allah!

      nLl oru pathippu-
      kaalathin kattaayam-
      ithu!
      varalaaru mukkiyam!
      indliyil parinthuraithen!

      பதிலளிநீக்கு
    2. அன்புள்ள சீனி.. உங்கள் வரவுக்கும் பரிந்துரைக்கும் மிக்க நன்றி. வரலாறு தெரியாத சமுதாயம் வரலாறு படைக்க முடியாதுன்னு நீங்கதானே அடிக்கடி சொல்வீங்க. அதான் வரலாற்றை கொஞ்சம் அலசுவோம்னு இறங்கிட்டேன்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அன்புள்ள இஸ்மாயீல் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. ஆனால் நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளமுடியவில்லையே தெரிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

        நீக்கு
    3. "இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம். "
      அருமை ...ஒன்றிணைவோம்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நன்றி நாராயணன். உங்கள் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி. உண்மையை யார் சொன்னாலும் அதை ஜாதி மதம் பாராமல் ஏற்றுக் கொள்ளும் உங்கள் நேர்மைக்கு என் பாராட்டுக்கள்.

        நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      பதிலளிநீக்கு

    படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
    பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
    அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

    முக்கியப் பதிவுகள்

    சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

    உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...