07 மே, 2012

பதறாத காரியம் சிதறாது’’

 உணவு


அவசர கோலத்தில் சாப்பிடுவது அஜீரணத்திற்கு காரணமாகிறது. உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிடும்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. உணவானது உமிழ் நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது வேக வேகமாக சாப்பிடுவதால் எளிதில் அஜீரணம் தொற்றிக் கொள்கிறது.
அதுமட்டுமல்ல.. பதட்டம் மன இறுக்கம் அடங்காத ஆத்திரம் நிறைந்தவராக சாப்பிட்டால் செரிமான சுரப்பிகள் தடைபடுகிறது பைலோரஸ் எனும் தசை இறுகி மூடிக்கொள்கிறது. இரைப்பையிலுள்ள உணவு சரியாக வெளியேறாமல் தங்கிவிடுகிறது. மேலும் சரியாக மென்றுவிழுங்காமல் உள்ளே தள்ளப் படுகிற உணவு இரைப்பைக்கு அதிக வேலையைக் கொடுத்து அதைப் புண்ணாக்குகின்றன. இத்தகைய சங்கடங்கள் இறைவனை தியானித்து நிதானமாக சாப்பிடுவோருக்கு ஏற்படுவதில்லை. காரணம் இறைவனை தியானிப்பதால் உள்ளத்தில் பதட்டம் இறுக்கம் குறைந்து இதயம் அமைதியடைகிறது. இரைப்பை நன்கு இயங்கி ஜீரண சுரப்பிகளும் நன்கு வேலை செய்கிறது. சூஃபிகளும் ஞானிகளும் ஆன்மீகப் பற்றுடையவர்களும் ஒரு காரியத்தைத் தொடங்கும் முன் இறைவனை நினைத்து அவனது திருநாமத்தை உச்சரித்துவிட்டுத்தான் தொடங்குகின்றனர்.
அதேபோல சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சாப்பிடுகிறோம் என்ற எண்ணத்துடன் அதை அனுபவித்து சுவைத்து சாப்பிடவேண்டும். ஒரு ஜென் துறவி மரணப் படுக்கையில் இருந்தார். சீடர்கள் எங்களுக்கு ஏதாவது இறுதி உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அவர் கூறினார் முதலில் எனக்கு சிறிது பால் கொண்டுவாருங்கள்
பால் கொண்டு வரப்பட்டது. அதை வாங்கி அமைதியாக நிதானத்துடன் ருசித்து ருசித்து அருந்தினார். கண்ணை மூடினார். உயிர் பிரிந்தது. இதுதான் அவர் கூறாமல் கூறிய உபதேசம்: ஒரு கப் பால் அருந்தினாலும் அதை நிதானத்துடன் அனுபவித்து அருந்தவேண்டும்.
    
இதைத்தான் தமிழில் அழகாக சொல்வார்கள்: ''செய்வன திருந்தச் செய்''  ‘’ பதறாத காரியம் சிதறாது’’
அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அருமையாக கூறினார்கள்: நிதானம் அல்லாஹ்விடமிருந்து உள்ளது. அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ளது.


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

2 கருத்துகள்:

  1. அசரத்!

    பல் சுவையுனு-
    பேர் வைத்து கொண்டு-
    பல சுவை தகவல்களை-
    தாறீங்களே..!

    நன்று!

    பதிலளிநீக்கு
  2. சீனி.. உங்க கவிதைகளில் பல சுவையும் இருக்கு; பழா சுவையும் இருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...