02 மே, 2012

மலையளவு நன்மை வேண்டுமா?



குறுகிய நேரத்தில் குவியல் குவியலாக சம்பாதிக்க முடியுமா? இதுதான் இன்றைய மக்களின் தீராத ஆசை.
அந்த ஆசைக்கு தீனி போடும் வகையில் இஸ்லாம் பல  எளிய வழிகளை கற்றுத் தருகிறது.

பி(ஸல்)  தோழர்களுக்கு தொழவைத்துக்கொண்டிருந்தார்கள். தொழுதுகொண்டிருந்த ஒருவர் யதார்த்தமாக தும்மல் போட்டார்.
தும்மல் போட்டால் என்ன செய்யவேண்டும்? அல்லாஹ்வைப் புகழவேண்டும். அதற்கு பல காரணங்கள் உண்டு.  அந்த அடிப்படையில் அல்லாஹ்வைப் புகழ்ந்தார். தொழுகை முடிந்தது. நபியவர்கள் மக்களை நோக்கி இப்பொழுது யார் தும்மல் போட்டது? என்றார்கள். தோழர் தயங்கினார். தொழுகையில் தும்மல் போட்டது தவறோ? அப்படியே போட்டிருந்தாலும் அல்லாஹ்வைப் புகழ்ந்திருக்கக் கூடாதோ? நாம் குற்றம் செய்துவிட்டோமோ என்று பயந்து அமைதியாக இருந்தார். நபியவர்கள் மீண்டும் கேட்டார்கள். பதிலில்லை. மூன்றாவது முறையாக கேட்டபோது அந்த தோழர் எழுந்து நின்றார். ''யாரசூலல்லாஹ்.. நான்தான்.'
''அப்படியா தோழரே! நீர் என்ன வார்த்தை கூறினீர்? அதன் நன்மைகளை சுமந்து செல்ல இத்தனை வானவர்கள் போட்டி போடுகிறார்களே?'' ''அல்லாஹ்வின் தூதரே.. நான் கூறிய வார்த்தை இதுதான்:

                          يارب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك


சுலைமான் அலைஹிஸ்ஸலாம் உலகத்தின் ஆட்சி வழங்கப்பட்டிருந்த நான்கு அரசர்களிலொருவர். அவர்கள் உலகை வலம் வரப் புறப்பட்டார்கள். ஒரு பிரமாண்டமான விரிப்பில் நபியும் படை பட்டாளங்களும் அமர்ந்துகொண்டு காற்றுக்கு கட்டளையிட, காற்று  அவர்களைத் தூக்கிக் கடத்தியது. ஆகாயத்தில் அவர்கள் பறந்து செல்லும் அற்புதமான காட்சியைக் கண்ட ஒரு ஏழை ஆச்சரியத்தில் ஒரு வார்த்தை சொன்னார்: சுப்ஹானல்லாஹ்.. அல்லாஹ் தாவூதின் மகனுக்குத்தான் எவ்வளவு பாக்கியத்தை வழங்கியுள்ளான்.!'
இந்த வார்த்தையை காற்று சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காதுகளில் போட்டது. உடனே அவர்கள் கீழே இறங்கி அந்த ஏழையிடம் கூறினார்கள். எனக்கு வழங்கப்பட்ட உலகத்தின் ஒட்டுமொத்த ஆட்சியும் இந்த சிறப்பும் நீ சொன்ன அந்த ஒரு சுப்ஹானல்லாஹ்வுக்கு ஈடாகாது.

பி அவர்கள் கூறினார்கள்:
                الكيس من دان نفسه وعمل لما بعدالموت
அதி புத்திசாலி யாரென்றால் தன் மனதைக் கட்டுப்படுத்தி மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்கு தேவையான அமல் செய்கிறவன்தான்.

ரு போர்க்களத்தில் கிடைத்த கனீமத் (வெற்றிப்) பொருளை தோழர்கள் தங்களுக்குள் விற்கவும் வாங்கவுமாக இருந்ததனர். அதில் ஒரு தோழர், ''அல்லாஹ்வின் தூதரே! இன்றைய வியாபாரத்தில் எனக்குத்தான் அதிக லாபம். எனக்கு இன்று மட்டும் 300 ஊக்கியா லாபம் கிடைத்துள்ளது. (இன்றைய மதிப்புக்கு பல லட்சம் ரூபாய்). நபி (சல்) சொன்னார்கள்: ''தோழரே! இதைவிட அதிக லாபம் தரும் ஒன்றை நான் சொல்லித் தரட்டுமா?'' ''அவசியம் சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே! ''
ஃபஜ்ரு (அதிகாலைத்) தொழுகையின் இரண்டு ரக்அத்தின் நன்மை இதைவிட பன் மடங்கு லாபகாரமானது.

இந்த உலக செல்வத்தின்மீது மக்களுக்கு அதிக கவனம் செல்லும்பொழுதெல்லாம் நபியவர்கள் அந்த கவனத்தை மறுமையின் பக்கம் திருப்பி நேர்வழிப் படுத்தினார்கள்.
அதனால் அந்த தோழர்கள் எங்கெல்லாம் நன்மை குவியல் குவியலாக கிடைக்குமோ அங்கெல்லாம் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்
ரு தோழர் ஒரு காரணமும் இன்றி அடிக்கடி பஜார் செல்வார். காரணம் கேட்டால் அங்குதான் மக்கள் அதிகம் கூடுவர். நிறைய பேருக்கு சலாம் சொல்லலாம். நிறைய நன்மை கிடைக்கும் என்பார்.
 மீபத்திலே வடநாட்டிலே வாழ்ந்த ஒரு பெரியவர் மவ்லானா ரஃபீவுத்தீன் அவர்கள். அவரது மறுமை ஆசைக்கு அளவே இல்லை எனலாம். அவரது வாழ்வில் ஒரு அபூர்வ நிகழ்வு. அவருக்கு ஒரு வினோதமான ஆர்வம். பத்ரு தியாகிகளின் நன்மையை அடைந்துவிடவேண்டும். ஏனெனில் பத்ரு தியாகிகளுக்கு அல்லாஹ் கொடுத்த அங்கீகாரமும் சிறப்பும் மன்னிப்பும் கொஞ்ச நஞ்சமல்ல. அதைப் படித்த அவர் நாமும் அதை அடைந்துவிடவேண்டும் என நினைத்தார். அதற்கு என்ன வழி
1. பத்ரு காலத்தில் இவர் வாழ்ந்திருக்கவேண்டும். வாழ்ந்தால் மட்டும் போதாது. அந்த போரில் கலந்து போரிட்டிருக்கவேண்டும். இனிமேல் அதற்கு வாய்ப்பில்லை. வேறு ஏதாவது வழி இருக்கிறதா? ஓ இருக்கிறதே.. கடைசிக் காலத்தில் மஹ்தி (அலை) நடத்தும் போரில் கலந்துகொண்டாலும் அந்த நன்மை கிடைக்கும் என்று நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ளவேண்டுமானால் அதுவரைக்கும் உலகில் வாழவேண்டும். அது முடியுமா ஊர்ஜிதமில்லை. என்ன செய்யலாம்? யோசித்தார். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு கடிதம் எழுதினார். யாருக்கு தெரியுமா? இமாம் மஹ்தி அவர்களுக்கு. அதனுடன் ஒரு வாளையும் குர்ஆனையும் இணைத்தார். அதை எடுத்துக்கொண்டு மக்காவில் ஒரு குடும்பத்தை தேடிச் சென்று அவர்களிடம் ஒப்படைத்தார். யார் அந்த குடும்பம்? அதுதான் உதுமான் ஷைபீ (ரலி) அவர்களின் குடும்பம். அங்கு சென்று கடிதத்தை அவர்களிடம் ஒப்படைத்துக் கூறினார்கள்:
''உங்கள் பரம்பரை இறுதிநாள்வரை வாழும் என்று நபியவர்களால் உத்தரவாதம் வழங்கப்பட்ட பரம்பரை. நபியவர்கள் மக்கா வெற்றியின்போது கஃபாவின் சாவியை உங்கள் பாட்டனார் உதுமான் ஷைபீ அவர்களிடம் கொடுத்து இது அழிவுநாள் வரை உமது சந்ததிகளிடம்தான் இருக்கும். அதை யார் உம்மிடமிருந்து அபகரிக்கிறாரோ அவர் அநியாயக்காரர் என்றார்கள். அதனால்தான் அந்த சாவி வழிவழியாக உங்கள் குடும்பத்திடம்தான் இருக்கிறது. மறுமை வரை இருக்கும்.
உலகம் உள்ளளவும் கஃபா இருக்கும்; கஃபா உள்ளளவும் சாவி இருக்கும்; அந்த சாவி உள்ளளவும் உங்கள் பரம்பரை இருக்கும். அவ்வாறெனில் இமாம் மஹ்தி அலைஹிஸ் சலாம் வரும்போதும் உங்கள் குடும்பம் இருக்கும்.
 உலகில் அநியாயம் அட்டூழியம் பெருகி முஸ்லிம்கள் ஒற்றுமையின்றி பிளவுபட்டு பெரும்பான்மையான ஆட்சி யூத கிருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நேரம். குடிகும்மாளம் ஆடல்பாடல் அனாச்சாரம் பட்டவர்த்தனமாக நடக்கும் காலம். இருக்கிற ஒரு சில நல்ல அடியார்களும் உலமாக்களும் உதாசீனப் படுத்தப்பட்டு தங்கள் ஈமானைப் பாதுகாக்க மலைப் பொதும்புகளில் ஒதுங்கி வாழும் காலம். அந்த நேரத்தில் ஒருநாள் இமாம் மஹ்தி அலை தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள். கஃபாவின் ஒரு சுவற்றில் சாய்ந்துகொண்டு மக்களை அழைப்பார்கள்.
அப்பொழுது ஒரு அசரீரி ஒலிக்கும் ஹாதா கலீஃபத்துல்லாஹி அல்மஹ்தீ. ஃபஸ்மவூ லஹூ வ அத்தீவூ. இதோ இமாம் அல்லாஹ்வின் பிரதிநிதி மஹ்தி வந்துவிட்டார். இவருக்கு கட்டுப்படுங்கள்'' என்று. இந்த அசரீரி கேட்டு சிரியாவின் அப்தால்கள், ஈராக்கின் நுஜபாக்கள், இந்தியாவின் குத்புகள் இன்னும் எல்லா இறைநேசர்களும் அவர்கள் எங்கிருந்தாலும் எல்லோரும் ஒன்று திரண்டு வருவார்கள். முஸ்லிம்கள் இமாம் மஹ்தியின் கைகளில் பைஅத் செய்வார்கள் அனைத்து முஸ்லிம்களின் சக்தியும் சிரியாவில் ஒன்று திரண்டுவிடும். முஸ்லிம்களின் சக்தி முழுமையாக சிரியாவில் ஒன்று திரளும்பொழுது அந்த பக்கம் தஜ்ஜாலும் மேற்கு நாடுகளும் யூதர்களும் ஒன்று திரண்டு முஸ்லிம்கள்மீது போர் தொடுப்பார்கள். மிகப்பெரிய ஜிஹாதுகள் நடக்கும். அவைகளில் லட்சக் கணக்கானோர் இறப்பார்கள். ஒரு காகம் பறக்கும். அது நாள் முழுதும் சற்றும் களைக்காமல் பறந்துகொண்டே இருக்கும் பறவை. காலை முதல் மாலைவரை அது பறந்து செல்லும் இடமெல்லாம் பிணங்களாகவே இருக்கும். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கூட கணக்கு எடுக்க முடியாது. அந்த யுத்தத்தில் கலந்துகொள்ளும் முஸ்லிம்களுக்கு பத்ரு தியாகிகளுக்கு கிடைத்த நன்மை போன்று கிடைக்கும். அந்த போரின் மூலம் மேற்கு நாடுகளின் கிருஸ்துவ சக்திகள் அனைத்தும் உடைத்து எறியப்படும். முழு உலகிலும் மார்க்கம் பரவி விடும் இஸ்லாமைத் தவிர வேறு மதமோ முஸ்லிம்களைத் தவிர வேறு கூட்டத்தினரோ எவரும் இருக்கமாட்டார்கள். ஆக, இமாம் மஹ்தி அலை மக்காவில் வெளிப்படும் நேரம் தங்களின் குடும்பம் உறுதியாக இங்கு இருக்கும். அப்படி இருந்தால் அவர்களிடம் இந்த வாளையும் கடிதத்தையும்  குர்ஆனையும் கொடுத்துவிடுங்கள். இந்த கடிதத்தில் விபரம் எழுதியுள்ளேன். அதன் பிரகாரம் குர்ஆன் இமாம் அவர்களுக்கு அன்பளிப்பாகவும் இந்த வாள் என் சார்பாக இமாம் அவர்களின் சேனையில் இருக்கும் ஒரு வீரருக்கு அன்பளிப்பாகவும் தரப்படும். அந்த வீரருக்கும் நன்மை கிடைக்கும் எனக்கும் இன்ஷாஅல்லாஹ் அந்த நன்மை கிடைக்கும்''
இப்படி சொல்லிக்  அந்த பொருட்களை ஒப்படைத்துவிட்டு மக்காவிலேயே தங்கி வஃபாத்தானர்கள். (இன்னாலில்லாஹி...) தான் வாழும் காலத்தில் அடைய வாய்ப்பில்லாத நன்மையைக் கூட அடைந்தே தீரவேண்டும் என்று ஆசைப்பட்ட அவர்கள் எங்கே? மிக சுலபமாக அடையமுடியும் நனமைகளைக்கூட செய்வதில் அசட்டையாக இருக்கும் நாம் எங்கே?

லையளவு நன்மை செய்தவனும்கூட மறுமையில் ஒன்றுமில்லாத ஓட்டாண்டியாகும் வாய்ப்புள்ளபோது நாம் சிறிதளவு நன்மை கூட செய்யாமலிருந்தால் எப்படி?
قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه :
أتدرون من المفلس؟ . قالوا : المفلس فينا يا رسول الله من لا درهم له ولا متاع . قال رسول الله صلى الله عليه وسلم : المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ، ويأتي قد شتم هذا ، وقذف هذا ، وأكل مال هذا ،وسفك دم هذا ، وضرب هذا ، فيقعد فيقتص هذا من حسناته ، وهذا من حسناته ، فإن فنيت حسناته قبل أن يقتص ما عليه ؛ أخذ من الخطايا أخذ من خطاياهم فطرح عليه ، ثم طرح في النار . صحيح الترمذي- 
நபி அவர்கள் கூறினார்கள்: ஒன்றுமில்லாத ஏழை யார் தெரியுமா? அல்லாஹ்வின் தூதரே! திர்ஹமும் பொருளும் இல்லாதவன் தான் ஒன்றுமில்லாத ஏழை. ''என் சமுதாயத்தில் ஏழை என்பவன் மறுமையில் ஒருவன் தொழுகை நோன்பு அமல் (செய்து நிறைய நன்மை)களைக் கொண்டுவருவான். அவன் சுவனம் நுழைந்துவிடலாம் என நினைத்துக்கொண்டிருக்கும்போது திடீரென ஒருவன் வந்து யா அல்லாஹ் இவன் என்னைத் திட்டினான் என்பான். இன்னொருவன் வந்து இவன் என்மீது இட்டுக் கட்டினான் என்பான். மற்றொருவன் வந்து இவன் என் பொருளை உண்டான் என்பான் என்னை அடித்தான் என்னை இரத்தத்தை ஓடவைத்தான் இப்படி பல குற்றச்சாட்டுகள் வரும் அதனால் அவர்களுக்கெல்லாம் இவனது நன்மையிலிருந்து எடுத்து கொடுக்கப்படும். நன்மை காலியாகிவிட்டாலும் அவர்களது பாவத்திலிருந்து எடுத்து இவனுக்கு கொடுக்கப்படும் இறுதியில் இவன் நரகத்தில் தள்ளப்படுவான்.''
 எனவே மலையளவு நன்மை செய்வோம்; செய்த நன்மையை அழித்து விடாமல் பாதுகாத்து அல்லாஹ்வின் அருளால் சுவனம் செல்வோம்.
காரணம், எவ்வளவுதான் மலையளவு நன்மை நம்மிடம் குவிந்து கிடந்தாலும் அல்லாஹ்வின் அருளின்றி ஒருபோதும் சுவனம் நுழையமுடியாது. எப்படி? இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் பார்க்கலாம். ..


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

10 கருத்துகள்:

  1. asarath!

    ungalin moolam nalla kaariyangal-
    therinthu konden!

    kadaisi paththi kalanga seythu vittathu!

    thodarungal ungal paniyai-
    allaah pothumaanavan!

    பதிலளிநீக்கு
  2. சீனி தங்களின் வருகைக்கும் தருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. oru talaipin keel arumayana korvai.thuvanduvidamal thodaravum

    பதிலளிநீக்கு
  4. //தான் வாழும் காலத்தில் அடைய வாய்ப்பில்லாத நன்மையைக் கூட அடைந்தே தீரவேண்டும் என்று ஆசைப்பட்ட அவர்கள் எங்கே? மிக சுலபமாக அடையமுடியும் நனமைகளைக்கூட செய்வதில் அசட்டையாக இருக்கும் நாம் எங்கே?//

    ம்..ம்.. உண்மைதான்! நெகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. படித்து பரவசம் அடைந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா.. மாஷா அல்லாஹ்.
      நீர் ஒரு ஆள் திருந்தினாலே
      இந்த கட்டுரை நான் எழுதின நோக்கம்
      நிறைவேறிடுச்சு நண்பா.

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...