27 மார்ச், 2012

திருத்தப்பட வேண்டிய திருமணச் சடங்குகள்- நாடகம்2

 நாடகம் பகுதி-1 ஐ படிக்க இங்கே அழுத்தவும்                                      

    காட்சி-3             


(கரீம், சலீம், ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகி)


கரீம்:
''அஸ் ஸலாமு அலைக்கும் தலைவரே

அலைக்குமுஸ் ஸலாம்; வாங்க கரீம் பாய். இது யாரு புதுசா இருக்கு?

நம்ம சரவனன்தான் கலிமா சொல்லிட்டாரு.

யாரு.... நம்ம சரவணனா? சுப்ஹானல்லாஹ்! முகத்துல என்ன ஒரு தெளிவு.. என்ன ஒரு பொழிவுசரி என்ன விஷயமா வந்தீக?

ஒன்னுமில்ல.. இவருக்கு ஹிதாயத் கிடைச்சிருச்சு. அதுபோல ஒரு வேலையும் கிடைச்சிருச்சுன்னா சந்தோஷமா இருப்பாரு; பாவம் கஷ்டப் படுராரு.
 தலைவர்:
கரீம் பாய்.. கஷ்டப்படுறவங்களுக்கும் கடன்படுறவங்களுக்கும் உதவி செய்யத்தானே நம்ம பைத்துல்மால் வச்சிருக்கோம் நம் ஊரில் இருக்கும் செல்வந்தர்களெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை அவர்களுடைய ஜகாத் பணத்தையெல்லாம் கணக்கிட்டு நம்ம பைத்துல்மாலில் கொண்டுவந்து கொடுத்துடுவாங்க. நாம அதை என்ன செய்கிறோம்? இந்த மாதிரி புதுசா முஸ்லிமானவங்க, கஷ்டப்படுறவங்க, கடன் தொல்லையால் அவதிப்படுறவங்க, பெண்குமர்களை வச்சிக்கிட்டு பேந்த பேந்த முழிக்கிறவங்க, பிள்ளைகளைப் படிக்க வைக்க பணம் இல்லாதவங்க இவங்களைத் தேடிப்போயி உதவி செய்கிறோம். அதனால கண்டிப்பா உங்களுக்கு உதவி செய்வோம்.
 நிர்வாகி:
ஆமாம். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
 சலீம்:
2 பரக்கத்து 2 ஹரக்கத்து.

''அப்படின்னா?''

''2 பொம்பளப் புள்ள 2 ஆம்பளப் புள்ள.''

''ஆஹா..  பொம்பளப் புள்ளயை பரக்கத்துன்னு சொன்னீங்க பார்த்தீங்களா? வெரிகுட். அல்லாஹ் உங்கள கைவிடமாட்டான். உங்க 2 பொம்பளப் புள்ளகளையும் நம்ம நிஸ்வான் மதரசாவுல சேர்த்துடுங்க; ஹிதாயத்துன்- நிஸ்வான்.. நிச்சயமா ஹிதாயத் கிடைக்கும். 2 ஆம்பளப் புள்ளைகளுக்கும் சுன்னத் வைக்கனுமில்லையா? கவலைப் படாதீங்க. நம்ம ஊருல வாலிபர்கள் சிலர் ஏழைகளுக்கு இலவசமாக சுன்னத் வைக்கிறாங்க. அது மட்டுமில்ல.. நம்ம வாலிபர் சங்கம் பெரு நாள் அன்னக்கி அரிசிகளையும் ஆடைகளையும் உங்க வீட்டுக்கு வந்தே கொடுத்திடுவாங்க. உங்களை ஆதரிக்க இத்தனை கைகள் இருக்கும்போது நீங்க ஏன் கவலைப் படவேண்டும்? உங்க நிரந்தர வேலைக்காக ஒரு ஏற்பாடு செய்கிறோம். இன்ஷா அல்லாஹ் இன்னையிலிருந்து நீங்கதான் நம்ம பள்ளியில முஅத்தின். சம்பளம் 5000. சம்மதமா?
 சலீம்:
ரொம்ப நன்றி தலைவரே.. ஜஸாக்கல்லாஹ்.

                   (திரை மூடித் திறக்கிறது)
                                                        காட்சி- 4           
                                       
(சில வருடங்களுக்கு பிறகுரீமும்  சலீமும் சந்தித்துக் கொள்கின்றனர்

வாங்க சலீம் பாய். என்ன இந்த பக்கம்?

ஒன்னுமில்ல.. எம் மூத்த மக ஆயிஷா ஆலிமா பட்டம் வாங்கிருச்சு; ஆளாகி 5 வருஷமாச்சு; அதை ஒரு நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கணுமில்லையா?

ஆமா கண்டிப்பா செய்யணும். வாங்க உட்கார்ந்து பேசுவோம். அம்மா பாத்திமா.. நம்ம சலீம் பாய் வந்திருக்காக. சூடா ரெண்டு காப்பி கொண்டு வாம்மா. ம்.. நீங்க சொல்லுங்க

அதான் கரீம் பாய்.. நான் என்ன சொல்றேன்னா.. நம்ம ஆயிஷா அழகுலயும் கொறச்சலில்ல; அறிவுலயும் கொறச்சலில்ல; ஒழுக்கம்னா ஒழுக்கம் அப்படி ஒரு ஒழுக்கம். அதனால?

அதனால?!

அதனால உங்க மகனுக்கே ஆயிஷாவை நிச்சயம் பண்ணிரலாம்னு இருக்கேன். நீங்க சரின்னு சொன்னா..

என்னது.. எம் மகனுக்கு உம் மகளா? என் வீட்டுல நீ சம்பந்தம் பண்ணுறதா? முதல்ல எடத்த காலி பண்ணு

நான் என்ன சொல்றேன்னா...

நீ ஒன்னும் சொல்லவேணாம்; இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்குதா? கெட் அவுட்.

என்ன கரீம் பாய் இப்படி ஆத்திரப் படுறீங்க? கலிமா சொல்லிட்டா எல்லாருமே சமம்னு நீங்க சொல்லலையா?
பாகுபாடு பார்க்கக்கூடாதுன்னு பல தடவை உங்க வாயாலேயே சொல்லலையா?

சொன்னேன்; அதுக்காக சம்பந்தம் பண்ணமுடியுமா? எம் பொண்டாட்டி செருப்பாலேயே அடிப்பா.

அப்படியா பாகுபாடு பார்த்தா அல்லாஹ் நெருப்பாலேயே அடிப்பானே. அப்ப என்ன செய்வீங்க?

''யோவ் ரொம்ப பேசாதே. முதல்ல எடத்த காலி பண்ணுய்யா.. சம்பந்தமாம் சம்பந்தம்.. யாருக்கிட்ட யாரு சம்பந்தம் பண்ணுறது.''

(வெளியேறுகிறார். கவலையுடன் நடக்கிறார்.)

'ச்சே.. கரீம் பாய் இப்படி பேசிட்டாரே. என்ன பண்ணுறது? ம்.. வேற ஏதாவது விசாரிச்சுப் பார்ப்போம். ஒரு நல்ல இடம் கிடைக்காமலா போயிடும்?'
பாடல் ஒலிக்கிறது:
'' ஒரு கதவை மூடிவிட்டால் பல வழியைத் திறந்து வைப்பான்; உண்மை பேசும் மானிடர்க்கே உறுதுணையாய் அவன் இருப்பான்''
  பாடல் மனதுக்கு ஆறுதலாய் இருந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...