05 பிப்ரவரி, 2012

பெண்கள் சமுதாயத்தின் கண்கள்



அன்று எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சிறந்து விளங்கினார்கள் என்று வரலாறு கூறுகிறது.

 ஹதீதுக் கலை:
 ஹதீதுக் கலைகளில் சிறப்புற்ற இஸ்லாமியப் பெண்மணிகள் உண்டு.  நபி (ஸல்) அவர்களது துணைவியார் அன்னை ஆயிஷா (ரலி) சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறார்கள்.  அன்னை ஆயிஷா(ரலி-அன்ஹா) ஓர் அறிவுச் சுரங்கம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. பெண்களில் அதிகமான நபிமொழிகளை அறிவித்தவர் அவர்கள்தான். அவர்கள் அறிவித்த நபிமொழிகள் 2210.  விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கொப்ப அன்னையவர்கள் சின்னஞ்சிறுமியாக இருக்கும்போதே அறிவுத் திறமையில் சிறந்து விளங்கினார்கள்.
சின்னஞ்சிறுமியாக ஆயிஷா நாயகி பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். நபி(சல்) வருகைபுரிந்தனர். விளையாட்டுப் பொம்மைகளில் ஒரு குதிரை பொம்மையும் இருந்தது. அதற்கு இரண்டு சிறகுகளும் இருந்தன. 
''என்ன ஆயிஷா! குதிரைக்கு சிறகுகளுமா இருக்கும்?''
''ஏன் இருக்காதா..சுலைமான் நபி குதிரைக்கு சிறகுகள் இருந்தனவே!'' என்று சட்டென்று பதில் தந்தார்கள். பார்த்தீர்களா! சின்னஞ்சிறு வயதிலேயே வரலாறு தெரிந்து வைத்திருந்தார்கள்.


குடும்பவியல், சுத்தம் போன்ற எத்தனையோ சட்டங்களுக்கான நபிமொழிகளை நபியிடமிருந்து பெற்றுத் தந்தவர்கள் அன்னைதான். அவர்கள் அறிவித்த ஹதீஸ்களில் இதோ ஒரு சில...

عَنْ  عَائِشَةَ ، قَالَتْ: " كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ  مِنْ إِنَاءٍ وَاحِدٍ كِلَانَا جُنُبٌ، وَكَانَ يَأْمُرُنِي فَأَتَّزِرُ فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ، وَكَانَ يُخْرِجُ رَأْسَهُ إِلَيَّ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ "
 كَانَتْ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا فَأَرَادَ رَسُولُ اللَّهِ أَنْ يُبَاشِرَهَا أَمَرَهَا أَنْ تَتَّزِرَ فِي فَوْرِ حَيْضَتِهَا، ثُمَّ يُبَاشِرُهَا، قَالَتْ: وَأَيُّكُمْ يَمْلِكُ إِرْبَهُ كَمَا كَانَ النَّبِيُّ يَمْلِكُ إِرْبَهُ "، تَابَعَهُ خَالِدٌ، وَجَرِيرٌ، عَنْ الشَّيْبَانِيِّ
 أَنَّهَا قَالَتْ: قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ لِرَسُولِ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلَاةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ: " إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلَاةَ فَإِذَا ذَهَبَ قَدْرُهَا فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي "
، أَنَّ امْرَأَةً سَأَلَتِ النَّبِيَّ عَنْ غُسْلِهَا مِنَ الْمَحِيضِ؟ فَأَمَرَهَا كَيْفَ تَغْتَسِلُ، قَالَ: " خُذِي فِرْصَةً مِنْ مَسْكٍ فَتَطَهَّرِي بِهَا، قَالَتْ: كَيْفَ أَتَطَهَّرُ؟ قَالَ: تَطَهَّرِي بِهَا، قَالَتْ: كَيْفَ؟ قَالَ: سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي، فَاجْتَبَذْتُهَا إِلَيَّ، فَقُلْتُ: تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ "
" كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ وَأَنَا حَائِضٌ "
 كَانَ النَّبِيُّ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ غَسَلَ فَرْجَهُ وَتَوَضَّأَ لِلصَّلَاةِ "
 إِذَا تَصَدَّقَتِ الْمَرْأَةُ مِنْ طَعَامِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا، وَلِزَوْجِهَا بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِك "
" جَاءَتْ امْرَأَةُ رِفاعَةَ الْقُرَظِيِّ النَّبِيَّ فَقَالَتْ: كُنْتُ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَنِي، فَأَبَتَّ طَلَاقِي، فَتَزَوَّجْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ إِنَّمَا مَعَهُ مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ، فَقَالَ: أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ لَا حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ، وَأَبُو بَكْرٍ جَالِسٌ عِنْدَهُ، وَخَالِدُ بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ بِالْبَابِ يَنْتَظِرُ أَنْ يُؤْذَنَ لَهُ، فَقَالَ يَا أَبَا بَكْرٍ: أَلَا تَسْمَعُ إِلَى هَذِهِ مَا تَجْهَرُ بِهِ عِنْدَ النَّبِيِّ "

  • முஹத்திஸ் ஜமாலுத்தீனின் புதல்வி பாத்திமா. இவர் நூறு ஹதீதுக் கலை நிபுணர்களிடம் பாடம் கேட்டறிந்தவர்.
  •   ­ரிபின் புதல்வி மலிக்கா மார்க்கக் கலையிலும், ஹதீது கலையிலும் சிறப்புற்றுத் திகழ்ந்தார். 
  •  அப்துல்லாஹ் அஸ்கலானி (ரஹ்) மகளார் ரிஸ்வான், பக்தாதைச் சேர்ந்த கதீஜா, எகிப்தைச் சேர்ந்த ஜைனப் போன்றோர் இக்கலையில் மேலோங்கி நிற்கின்றனர். 
  • ராபியத்துல் பசரிய்யா (ரஹ்-அலைஹா) அவர்கள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவர்கள். எந்த கேள்வி கேட்டாலும் குர் ஆனின் வசனத்தைக்கொண்டே பதில் கூறுவார்ர்கள். அன்னையவர்களுக்கும் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடல் பிரபல்யமானதும் வியப்பானதும் ஆகும். அந்த உரையாடலில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்)  கேட்ட எல்லா கேள்விகளுக்கும் குர்ஆன் வசனத்தையே ஓதிக்காட்டினார்கள். அதுவே தக்க பதிலாக அமைந்தது.

 ஆத்மஞானப் பாதை:
இஸ்லாமிய ஆத்மஞானப் பாதையில் ஆண்களைப் போல பெண்களும் ஈடுபட்டு இறைநேசர்களாகத் திகழ்ந்துள்ளனர்.  பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸஹாபிப் பெண்மணி உம்முஹராம், சிரியா நாட்டில் பிறந்த ராபியா பிந்த் இஸ்மாயில், பஸராவில் பிறந்த பெண்ஞானி ராபியத்துல் பஸரிய்யா, முஆதுல் அதவிய்யா, பாரசீக நாட்டைச் சேர்ந்த அவானா, இமாம் ஹுஸைன் அவர்களின் கொள்ளுப்பேத்தி நபிஸா, பாரசீகத்தில் தீன்வர் என்ற ஊரில் பிறந்த ஷிஹ்தா, நைஷாப்பூரில் பிறந்த ஸூபிப் பெரியார் அபுல்காசிம் அப்துர் ரஹ்மான் அஷ்அரீயின் புதல்வி ஜைனப் போன்றவர்களை இஸ்லாமிய வரலாற்று ஏடுகள் காட்டுகின்றன.



வீரம்:


 இஸ்லாம் வீரத் தாய்மார் களையும் பெற்றுச் சிறப்புற்றது.

  • நபி (ஸல்) அவர்களின் சிறியதந்தை ஹம்ஜா (ரலி) அவர்களின் பச்சை ஈரலை எடுத்துக் கடித்தவர் ஹிந்தா. பின்னர் மனம்மாறி இஸ்லாத்தை ஏற்றுப் பின்னர் அவர் தலைமையில் திரண்ட பெண்படை, யர்மூக் போர்களத்தில் கலந்து முஸ்லிம் வீரர்களுக்கு உற்சாக மூட்டியது.
  • அபூஜஹ்லின் மகன் இக்ரிமாவை மணந்த உம்மு ஹக்கீம். ரோம் ராஜ்யப் படையை எதிர்த்து நின்ற முஸ்லிம் படையில் மார்க்கம் தழைக்கப் போரிட்டார்.  
  • காதிசிய்யா போரில் தன் நான்கு புதல்வர்களுக்கு வீர உணர்வை ஊட்டி போருக்கு அனுப்பிவைத்த வீரத்தாய் கன்ஸா, கெளலா உம்மு அபான், 
  • ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களுடைய திருப்புதல்வி அஸ்மா (ரலி), 
  •  கொடுங்கோலன் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபுக்குப் பாடம் கற்பித்த உம்முல்பளீள்.
  •  தார்த்தாரிய மன்னன் தைமூரை அடக்கிய ஹமிதா பானு, 
  • புலி வேட்டையிலும் ஆட்சி நிர்வாகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய நூர்ஜஹான் போன்ற வீராங்கனைகளை இஸ்லாம் பெற்றிருக்கிறது.

ஆளும் திறமை:
நாட்டை ஆளும் திறமையுடன் ஆட்சி நடத்திய அரிவையரும் உண்டு.  எமன்நாட்டில் அஸ்மா ஸையிதா.  டில்லி மாநகரில் சுல்தானா ரஸியா, சாந்த் பீவி, எகிப்தில் ஜருத்துர்ரு, ஆப்கானில் சாஹிப்ஜீ போன்றோர் ஆவர்.  இஸ்லாம் பெண்களின் தலைமையை ஏற்காதிருந்தாலும் சூழ்நிலை காரணமாக ஆட்சி நடத்தினர்.


 புலமை:
இலக்கிய உலகில் எழிலுற இசைத்த கவிக்குயில்களும் இஸ்லாமியப் பெண் குலத்தில் இருந்தனர். 

  • நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த கன்ஸா.  அவர் தமது நான்கு புதல்வர்களுக்கும் வீர உணர்வேற்றி மார்க்கம் காக்கப் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த பெருமை உண்டு. அவர் மிகச் சிறந்த அரபிக்கவிஞர்.
  • ஆரம்பத்திலேயே இஸ்லாத்தைத் தழுவி, இன்னல்கள் பல ஏற்று பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா சென்றபொழுது அவர்களோடு மதீனம் கண்ட மாதரசி ஆத்திக்கா, கையறுநிலை ​என்னும் கைசேதப்பாடல் இயற்றுவதில் கைதேர்ந்தவர்.
  • அரபு நாட்டில் பெரும் புலமைப் பெற்ற புலவர் லைல் அக்லியா, 
  • பாரசீகத்தில் பா பாடி கவிஞர்கள் நெஞ்சிலும் சேர்ந்த ரஷ்ஷா,
  • ராஜில் வாழ்ந்த சூபிக்கவி சுபைதா,
  • ஷைகு சஅதியின் மகளார் சிதாராபானு,
  • டில்லி மாநகரில் சைபுன் நிஸா ஆகியோர் கவிகளின் வழியாக இஸ்லாத்திற்குத் தொண்டு புரிந்தவர்கள்.



பொதுசேவை:
பொதுப்பணியாற்றிய பூவையரும் இஸ்லாத்தில் உண்டு.  சதக்கத்துன் ஜாரிய்யா என்ற சிறந்த தருமங்களைப் புரிந்தார்கள்.  மஸ்ஜிதுகள், பள்ளிக் கூடங்கள், தர்மச் சத்திரங்கள், பாலங்கள், கால்வாய்கள் கட்டிய பெண்கள் ஏராளம்.  அப்பாஸியக் கலீபாக்கள் குடும்பத்திலும், துருக்கி சுல்தான்கள் குடும்பத்திலும் பிறந்த பெண்கள் இப்பணியில் மணியாய் விளங்கும் பெண்மணிகள்.

  • பக்தாத் பேரரசர் கலீபா ஹாருன் ரஷீதின் மனைவி ஜுபைதா இதில் தலைசிறந்து ​விளங்குகிறார். மக்காவில் ஏற்பட்ட தண்ணீர்க் கஷ்டத்தைப் போக்கக் கால்வாய் ஒன்றை பத்துமைல் நீளத்திற்கு உருவாக்கினார்.  நஹ்ர் ஜுபைதா என்ற பெயரில் இன்றும் பயன்பட்டு வருகிறது.  ஈரானில் மருத்துவமனையில் கல்லூரியும் கட்டித்தந்தார்.
  • அரசர் அஸத் தெளலாவின் மனைவி, தமாஸ்கஸில் நோபிலில் பல பள்ளிவாயில்களையும் மருத்துவ மனைகளையும் கட்டித் தந்தவர் ஜம்ரூத் காத்தூன்.
                  (இன்னும் வளரும்...)

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க சீனிஷா! வருகைக்கு நன்றி. //nalla karuththu porunthiya-
      thokuppu!//
      ஆனால் உங்கள் கருத்துரையால்தான் எங்கள் ப்ளாக்கருக்கே மதிப்பு!

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...