15 டிசம்பர், 2011

வரதட்சணை ஒரு வன்கொடுமை


வரதட்சணை ஒரு  வன்கொடுமை - அதை
வாங்காமல் இருப்பதே வாலிபருக்கு பெருமை.

வனிதை மலர்களை வரதட்சணை முட்களால்
வதைக்கும் வாலிப இளைஞனே
புனித குர்ஆன் பூவையருக்கு
பொற்குவியல் கொடுக்கச் சொல்ல
மனிதப் பழக்கம் இன்று
மனதிற்கு சமாதானம் சொல்லி
பொன்னையும் பொருளையும்
எடைபோட்டு வாங்குதல்
மார்க்கத்தில் தடையல்லவா?- இது
மாற்ற வேண்டிய முறையல்லவா?
 
குருதியைப் பாலாக்கி உன் குழந்தைக்கு
உறுதி தரப்போகிறவள் பெண்;
இறுதி வரை வாழ்க்கையில்
இனிமையில் இணைக்கிறவள் பெண்;
பகுதி நேரப் பொழுதையெல்லாம்
உன் குடும்பத்திற்கு கொடுக்கிறவள் பெண்;
தகுதியின்றி அவளிடமே
தட்சணைகள் கேட்பது
மாபெரும் அனாச்சாரம் – இது
மாற்றவேண்டிய கலாச்சாரம்!

மெழுகாய் உருக மென்மையாய் தவழ
அமுதாய் பழக ஆவலாய் இருப்பவளிடம்
கழுகாய் அவள் பொருளை
கவ்விச் செல்ல நினைப்பது
கண்மூடிப் பழக்கமல்லவா? –இதை
மண்மூடிப் புதைக்கனும் அல்லவா?


இறைவனுக்குப் பயப்படுவோம்
இறைத்தூதர் வழி நடப்போம்
குறையின்றிப் பெண்ணுக்கு
கொடையாக ‘’மஹர்’’ கொடுப்போம்

 இது தொடர்பான பிற பதிவுகள்:



1 கருத்து:

  1. மாற்ற வேண்டிய
    கலாச்சாரம் தான்!
    கவிதை!
    மாற மறுப்பவர்கள்-
    மனிதர்கள்தான்!
    நல்ல கருத்துக்கள்!

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download