13 டிசம்பர், 2011

சொர்க்க நரகின் சாவி : நாவு


  • அல்லாஹ் மனிதனுக்கு அளித்திருக்கிற அருட்கொடைகளில் மிக முக்கியமானது பேசும் நாவு.
  • நாவு ஒரு கூரான கத்திக்கு ஒப்பானது. கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்துஅவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம். இதே போன்றது தான் நாவு.
  •  நாவைக் கொண்டு வெல்லவும் செய்யலாம் கொல்லவும்
  •  செய்யலாம்.
  •    பல்லக்கு ஏறுவதும் நாவாலே பல் உடைவதும் நாவாலே.
  • அறிஞர் லுக்மான் (அலை) அவர்களிடம் ஆசிரியர் ஒருஆட்டைக் கொடுத்து இதை அறுத்து இதில் சிறந்த உறுப்புகளை எடுத்து வாரும்’’ என்றார். இதயத்தையும் நாவையும் கொண்டுவந்து கொடுத்தார்கள் இன்னொரு ஆட்டைக் கொடுத்து இதில் கெட்ட உறுப்புகளை எடுத்து வாரும்’’ என்றார். அப்போதும் இதயத்தையும் நாவையும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.விளக்கம் கேட்டதற்கு ‘முறையாகப் பயன்படுத்தினால் ஆகச் சிறந்ததும் இதுவேதவறாகப்  பயன்படுத்தினால் ஆகக் கெட்டதும் இதுவே.
  • குரு ஒருவருக்கு அழகான மகள் ஒருத்தி இருந்தாள்.அவளை மணமுடிக்க பலர் போட்டி போட்டனர்.

    குருவுக்கு ஒரு யோசனை தோன்றியது.தன் மகளை மணமுடிக்க போட்டி போடுபவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு யார் சரியாக பதில் அளிக்கிறார்களோ அவர்களுக்கே எனது மகளை மணமுடித்து கொடுப்பேன்" என்றார்.

    மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடினார்கள்.

    குரு அவர்களை பார்த்து " உலகிலேயே மிக இனிமையான பொருள் ஒன்று கொண்டு வாருங்கள்" என்றார்.

    ஒருவன் தேனை கொண்டு வந்தான். இன்னொருவன் கரும்பை கொண்டு வந்தான். இப்படி எல்லோரும் கிடைத்த இனிமையான பொருட்களை கொண்டு வந்தார்கள்.
    வரிசையின் கடைசியில் குருவின் ஏழை சீடனும் நின்றிருந்தான்.
    குரு அவனை பார்த்து நீயுமா என்று கேட்டார்.
    சீடன் " நான் உங்கள் மகளை விரும்புகிறேன்" என்றான்.
    குரு " நீ என்ன கொண்டு வந்தாய்" என்று கேட்டார்.
    சீடன் தான் கொண்டு வந்த பெட்டியை திறந்து காட்டினான்.
    அதை பார்த்ததும் குரு அதிர்ச்சி அடைந்தார்.
    அது ஒரு மாட்டின் நாக்கு.
    குரு "என்ன இது? எதற்காக இதை கொண்டு வந்தாய்?" என்று கேட்டார்.
    "குருவே நீங்கள் உலகத்திலேயே இனிமையான பொருளை கொண்டு வரச் சொன்னீர்கள். நாக்கை விட உலகில் இனிமையான பொருள் வேறு ஏது? மனிதனுடைய நாக்கை கொண்டு வரமுடியவில்லை. அதன் குறியீடாக மாட்டின் நாக்கை கொண்டு வந்தேன். நாவிலிருந்து இனிமையான சொற்கள் வருகின்றன. அதை நோயாளி கேட்டால் குணமடைகிறான். சோகத்தில் இருப்பவன் கேட்டால் மகிழ்ச்சி அடைகிறான்."
    "இதில் நீ வெற்றி அடைந்தாய். பாராட்டுகள்"

    சீடன் ‘’இரண்டாம் கேள்வி என்ன’’ என்று கேட்டான்.
    குரு "உலகிலேயே கசப்பான ஒரு பொருள் ஒன்று கொண்டு வர வேண்டும்" என்றார்.
    மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருட்களுடன் வந்தார்கள்.
    ஒருவன் எட்டிக்காயை கொன்டு வந்திருந்தான். இன்னொருவன் வேப்பங்காயை கொண்டுவந்திருந்தான்.
    கடைசியாக சீடன் வந்தான்.
    அவன் கையில் அதே பெட்டி.
    அவன் அதை திறந்து குருவிடம் காட்டினான்.
    அதே மாட்டின் நாக்கு.
    குரு " நீ என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன், நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டேன், அதே நாவை கொண்டு வந்திருக்கிறாய். இதற்கு என்ன அர்த்தம்?" என்று கோபத்துடன் கேட்டார்.
    "தீய சொற்களை பேசும் நாவை விட உலகத்தில் கசப்பான பொருள் வேறு உண்டா? அதிலிருந்து வரும் கசப்பான சொற்களை கேட்டால் மகிழ்ச்சியாக இருப்பவனும் வருத்தப்படுவான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறிவிடுவான். எனவே நாக்கு தான் உலகிலேயே மிகவும் கசப்பான பொருள்"

    சீடனின் அறிவை கண்டு வியர்ந்து குரு தன் மகளை அவனுக்கே திருமணம் செய்து கொடுத்தார்.


  • உலகில் நிகழும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் இந்த நாவு தான் என்றால் அது மிகையாகாது. இந்த நாவின் மூலம் பல சமூகங்களுக்கிடையே பெரும் போர்களும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதே போல் மிகப் பெரும் சமுதாய எழுச்சிகளும்புரட்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே நாம் இந்த நாவைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் வினைவு ஆக்கப் பூர்வமானதாகவோ அல்லது அழிவைத் தரக்கூடியதாகவோ அது அமைகிறது.
  • நபி (ஸல்) கூறினார்கள்: மனிதன் காலைப் பொழுதை அடைந்தால் அவனது அனைத்து உறுப்புகளும் நாவிடம் முறையிடுகின்றன:
    நாவே! நீ அல்லாஹ்வை பயந்துகொள் !( அடக்கி வாசி!) உன்னைக் கொண்டுதான் எங்கள் நிலைமை.! நீ சரியாக இருந்தால் நாங்களும் சரியாக இருப்போம். நீ கோணலாகிவிட்டால் நாங்களும் கோணலாகி விடுவோம்’’
    நாவு ஒரு நெருப்பு.
    நெருப்பைக் கொண்டு வீடுகளுக்கு விளக்கேற்றவும் செய்யலாம்;
    வீடுகளைக் கொளுத்தவும் செய்யலாம்
    அதுபோல நாவைக் கொண்டு பலரின் வாழ்க்கையில் விளக்கேற்றவும் செய்யலாம்; பலரின் வாழ்க்கையை நாசப்படுத்தவும் செய்யலாம்;
    நெருப்புக்கு நாக்கு உண்டு. அது சுடும்.
    நாக்கும் நெருப்பை போல‌வே சிவ‌ப்பாக‌ இருக்கிற‌து. அதும் சுடும்.
    நெருப்பினால் சுட்ட‌ புண் ஆறிவிடும். நாவினால் சுட்ட‌ புண் ஆறாது.
    பாஸ்ப‌ர‌ஸ் எரிக்க கூடிய‌து. அத‌னால் அதை திர‌வ‌த்தில் போட்டு வைத்திருப்பார்க‌ள். நாவும் எரிக்க‌ கூடிய‌து. அத‌னால் தான் அதை இறைவ‌ன் ஈர‌த்தில் வைத்திருக்கிறான்.
    நாவை அடக்கி வாசிக்கவேண்டும் என்பதற்காகத்தான் 32 பற்களுக்குள் முடக்கி வ‌த்திருக்கிறான்,
    அப்ப‌டியும் அது வரம்பு மீறிவிடுகிற‌து
  • நாவைக் கொண்டு சொர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம். 
நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கு உரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) அல்லாஹ்அதற்காக அவன் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)
ஓர் அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதாகெட்டதாஎன்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும்மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரிமுஸ்லிம்)

‘(
நாளை மறுமையில்) மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( திர்மிதி)
  • புத்தர் தன் சீடரிடம் கூறினார்:
''ராகுலா! மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரை நன்மை அடைவர். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரைதான் யானைக்குப் பாதுகாப்பு. நாவைக் கட்டுப்படுத்திப் பொய் பேசுவதைத் தவிர்த்தால்தான் தீமையில் இருந்து மனிதருக்குப் பாதுகாப்பு''

  • அடக்கி ஆளவேண்டியது ஐம்புலன்களும் என்றாலும்,அதில் முதன்மையானது நம் நாவே. எதைப்பாதுகாக்காவிட்டாலும் நாவைப் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் துன்பம் நேரலாம்.
 ‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’- இது திருக்குறள்.
கொஞ்சம் ஆராய்ந்தால் இதன் ஆழம் விளங்கும்.
கெட்டதைப் பார்த்தாலும்தீயதைக் கேட்டாலும்
கெடுவது அவரவர் மனங்கள் மட்டுமே! மேலும்,
முகர்வதுஉண்ணுவதுதீண்டுவது தீதானால்,
தகர்வது அவரவர் உடல் நலம் மட்டுமே! ஆனால்.
அடக்கம் இன்றிச் சொற்குற்றம் வந்துவிட்டால்,
இடக்கும் வந்து சேரும்பிறர் புண்படுவதால்!


சொல்லிவிட்ட வார்த்தைக்கு நாம் அடிமைசொல்லாத வார்த்தை நமக்கு அடிமை! -- பழமொழி

"
தவளை தன் வாயால் கெட்டது" என்ற பழமொழியை கூட நம்மை எச்சரிக்கத்தான் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள்..
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்--திருக்குறள்
(குடம் நிறைய உள்ள இனிக்கும் பால் ஒரு துளி விஷம் கலந்தால். முழுவதும் உடனே விஷமாகும் எத்தனை நற்சொல் பேசினாலும்ஒரு தீய சொல் அதோடு இணைந்தால்அத்தனையும் வீணாக்கும்)
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு’—( குறள்)
நெருப்புப் பட்டு ஏற்பட்ட புண்ணும் ஆறும்ஆனால்
வெறுப்பு நிறைந்து வரும் சொல்வடுவாக மாறும்!


நாவினால் நிகழும் சில தவறுகள்.
 பாவத்தின் பக்கங்களாய்பொய்  பேச வைப்பதின் மூலம் நாவு தன் முகவுரையை தொடங்குகிறது. பிறரை பற்றி புறம் பேசுதல்  மூலம் நடுவுரையை தருகிறது. அடுத்தவரின் விஷயத்தில் கோள் சொல்வதின் மூலம் தனது முடிவுரையை எழுதுகிறது.


 புறம் பேசுதலை விட்டு விலக வேண்டும்.
  • ‘(முஃமின்கள்) வீணானதை செவியுற்றால் அதைப் புறக்கணித்துஎங்களுக்கு எங்கள் அமல்கள்உங்களுக்கு உங்கள் அமல்கள்! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள்’. (அல்குர்ஆன் 25:55)

  • ‘(ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்திற்குரியவர்கள்) வீணானவற்றை விட்டு விலகி இருப்பார்கள்’ (அல்குர்ஆன் 23:3)

  • ''மின் ஹுஸ்னி இஸ்லாமில் மர்இ தர்க்கு மாலா யஃனீஹி''  தேவையற்ற விஷயங்களை விட்டும் விலகியிருப்பதுதான் நல்ல முஸ்லிமுக்கு அடையாளம் - நபி (ஸல்)
  •  முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும்கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புஹாரிமுஸ்லிம்)
  •  எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரிமுஸ்லிம்)
  • நான் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது  என்னஎன்று கேட்டேன். அப்போது தனது நாவை பிடித்துக் காட்டி இது தான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: திர்மிதி)

  • அபூபக்கர்(ரலி) தன் நாவைப் பிடித்திழுத்து ''நாவே ! உன் தீமையால்தான் நாங்கள் அழிவுக்குள்ளாகிறோம்'' என எச்சரிப்பார்களாம்


 
கோள்

ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை’ சிலர் தொழிலாகவே கொண்டுள்ளனர். இதனால்  எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட  செய்யப்பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்வார்களே தவிரசுவர்க்கம் செல்லவே முடியாது.
  • குறை சொல்லி புறம் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)

  • கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புஹாரி)

  • நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்லும் போது இந்தப் கப்ருகளில் உள்ள இருவரும் வேதனை செய்யப்படுகின்றார்கள்அவர்கள் இருவரும் (அவர்களின் எண்ணத்தில்) பெரும் பாவத்தினால் வேதனை செய்யப்படவில்லை. என்றாலும் அது பெரும் பாவம் தான். அவ்விருவரில் ஒருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார். மற்றவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார் எனக் கூறினார்கள் ( புஹாரிமுஸ்லிம்)
 சபித்தல்

ஒரு முஃமின் திட்டுபவனாகவோசபிப்பவனாகவோகெட்ட செயல்  புரிபவனாகவோகெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான் என நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( திர்மிதிஅபூதாவூது)

ஒருவர் இன்னொருவரை ‘பாவி’ என்றோ ‘காஃபிர்’ என்றோ கடுஞ்சொல் கூற வேண்டாம். (ஏனெனில்) குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் (சொன்னவர்) பக்கமே திரும்பி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)

நாமும் சபிக்கக் கூடாது ; மற்றவர் சபித்தலையும் பொருட்படுத்தக்கூடாது.

ஒரு யூதன் நபியின்(ஸல்) சபைக்கு வந்தான். அங்கிருந்த அபூபக்கரை (ரலி) திட்டினான்; பொறுமையாக இருந்தார்கள். நபியவர்கள் புன்சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர். மீண்டும் திட்டினான் காராசாரமாக ! இப்போது அபூபக்கர் (ரலி) அவனுக்கு பதில் பேச ஆரம்பித்தனர். உடனே நபியவர்கள் புன்சிரிப்பை நிறுத்திவிட்டு எழுந்து செல்ல ஆரம்பித்தனர்.
அபூபக்கர் (ரலி) பதறிக் கொண்டு விளக்கம் கேட்டபோது நபி கூறினார்கள்:
‘’ நீர் பொறுமையாக இருந்த பொழுது  உம் சார்பாக ஒரு வானவரை இறைவன் ஏற்பாடு செய்திருந்தான். அவர் யூதனுக்கு சூடாக பதில் தந்து கொண்டிருந்தார். அதைக் கண்டு நான் சிரித்துக் கொண்டிருந்தேன். நீர் பேச ஆரம்பித்தவுடன் அந்த வானவர்  எழுந்து சென்றுவிட்டார்.’’  (முஸ்னத் அஹ்மத்)
       
 இறந்தவர்களை ஏசக்கூடாது

இறந்தவர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் செய்ததின் பலனை அவர்கள்பெற்றுக் கொண்டார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புஹாரி

சொர்க்கத்தின் சாவியும் நாவுதான்
எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும்(நாவு) இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் (அந்தரங்க உறுப்பு)சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரிமுஸ்லிம்)
எப்படி பயன்படுத்தலாம்?
தஸ்பீஹ் செய்யலாம்குர்ஆன் ஓதலாம்நன்மையை

 ஏவி தீமையைத்  தடுக்கலாம். இன்னும் பல...

1. 
குர்ஆன் ஓதுதல்


நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத்

 நாளில் தன்  தோழர்களுக்கு (அதை ஓதியவர்களுக்கு)
 பரிந்துரை செய்யக்கூடியதாக வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: முஸ்லிம்)

குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். ‘அலிஃப்லாம்மீம் என்பது ஓர் எழுத்து’ என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஓர் எழுத்துலாம் என்பது ஓர் எழுத்துமீம் என்பது ஓர் எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( திர்மிதி


2. 
தஸ்பீஹ் செய்தல்

இரு வார்த்தைகள் (சொல்வதற்கு) நாவுக்கு மிக

 இலகுவானவைஇறைவனின் தராசில் மிக கனமானவை இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை  (அவ்விரு வார்த்தை) ‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹிசுப்ஹானல்லாஹில் அளீம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( புஹாரிமுஸ்லிம்)

3. நன்மையை ஏவி தீமையை தடுத்தல்

(
விசுவாசங் கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களில் எல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயம் நீங்கள்தான். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள்தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள்….(அல்குர்ஆன் 3:110)
முஸ்லிம்களில் சிறந்தவர்: -
முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும்கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!” . ( புகாரி.)
நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!
எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச்  சொல்லட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( புகாரி).
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்என்ற இரு வரிகளில்,
நம் முகம் மலர்ந்து நோக்கிஇனிய சொற்களை
நம் அகம் மலரக் கூறுவதே அறம்என்கிறார் வள்ளுவர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் சகோதரனைப் பார்த்து புன்சிரிப்பதும்  தர்மமே!
நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!
நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும்அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம்  முற்றாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும்.  இவர் சொன்னார்அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே  தவிர்க்க வேண்டும்.

‘’பெஹ்லே தோலோ பிர் போலோ ‘’முதலில் நிதானியுங்கள்; பிறகு பேசுங்கள்
நாம் பேசும் போது அளந்து பேச வேண்டும். நாம் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதாஅல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதாஎன்று  கவனமுடன் பார்க்க வேண்டும். நாம் பேசக் கூடிய அனைத்து  விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன           (அல்-குர்ஆன் 50:18) என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.
நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது   நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத்  தக்கவாறு  தகுந்த கூலி கொடுக்கப்படும்.
எலும்பில்லாத நாக்கு
எதையும் சொல்லும்
எப்படியும் சொல்லும்
நாவு நீளக் கூடாதென்பற்காகவே 32 பற்களை வேலியாக்கி
 
உள்ளடக்கமாய் இறைவன் வைத்திருக்கிறான்

நாவு அடக்கம் பெற்றால்
நல்லொழுக்கம் உயர்வு பெரும்
 .


ரகசியத்தை உளரவேண்டாம்:

முல்லாவின் புகழ் நாளுக்கு நாள் பெருகி வந்த காலகட்டம் அது.
இதன் காரணமாக அவருக்குப் பல சீடர்கள் சேர்ந்தனர்முல்லாவின் புகழ் மக்களிடையே அதிகரித்ததும் மன்னர் செவியிலும் முல்லாவின் புகழ் பற்றிய செய்தி விழுந்தது. உடனே மன்னர் முல்லாவை அழைத்து அவருக்கு உரிய பதவியைக் கொடுத்தார்.
ஒரு நாள் முல்லாவின் நண்பர் ஒருவர், ''முல்லா! தங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்,” என்றார்.
''அப்படியா! அது என்ன விஷயம்?” என்று கேட்டார் முல்லா.
ஒன்றுமில்லை முல்லா! உங்களை எல்லாரும் அறிஞர்  என்றும்தத்துவஞானி  என்றும் புகழ்கின்றனர்.
அரசர் உம்மை மதித்து உங்களுக்கு உயரிய பதவி அளித்துள்ளார். எப்படி இந்த அளவுக்கு தாங்கள் உயர்வு பெற்றீர்கள்?  இதன் ரகசியத்தை என்னிடம் கூறுவீர்களா?” என்று கேட்டார்.
உம்மிடம் சொல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால்இந்த ரகசியத்தைக் கூறினால்
நீங்கள் ஊர் முழுவதும் தண்டோரா போட்டு விடுவீர்கள்!” என்றார் முல்லா.
“”அப்படியெல்லாம் செய்யமாட்டேன்,” என்றார் முல்லாவின் நண்பர்.
“”கண்டிப்பாக ஒருவரிடமும் இதைக் கூறமாட்டீர்களே?” 
“”சத்தியமாகக் கூறமாட்டேன். இதனால் எவ்வளவு லாபம் கிடைப்பதாக இருந்தாலும்,நீங்கள் சொல்லும் ரகசியத்தை ஒருவரிடமும் கூறமாட்டேன்’’ “”எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் யாரிடமாவதுநான் சொன்னதைக் கூறிவிட்டால்…?”
திரும்பவும் கேட்டார் முல்லா.
 ”கண்டிப்பாக ஒருவரிடமும் நீங்கள் சொன்ன ரகசியத்தைக் கூறமாட்டேன்.
கோடி பொன் கொட்டிக் கொடுத்தாலும் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தமாட்டேன்,”
என்றார் முல்லாவின் நண்பர்.
“”நண்பரே! நானும் உங்களைப் போலத்தான்.
ஒரு ரகசியத்தைக் காப்பாற்றுவதில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்களோஅப்படித்தான் நானும்.
கோடி கோடியாகப் பொருள் கொடுத்தாலும் என்னிடம் உள்ள ரகசியத்தை வேறு ஒருவருக்கு எந்த சந்தர்ப்பத்திலும் கண்டிப்பாக கூறமாட்டேன்,” என்றார் முல்லா
.


நாவு ஒன்றுதான்.. ஏன்?
கைகள் இரண்டு . ஏன்? நிறைய செயலாற்றுவதற்காக.
கண்கள் இரண்டு ஏன் நிறைய பார்ப்பதற்காக
கால்கள் இரண்டு ஏன் நிறைய நடப்பதற்காக
காதுகள் இரண்டு ஏன் நிறைய கேட்பதற்காக
ஆனால் நாவு ஒன்றுதான். ஏனெனில் குறைய பேசுவதற்காக !




 நாவை முறையாகப் பயனபடுத்தி பரிசு வென்றவர்:



رأى احد الملوك بالمنام ( أن كل أسنانه تكسرت)
فأتي باحد مفسرين الأحلام، فقال له الحلم ..
فقال المفسر : أم تاكد انت؟
فقال الملك: نعم.
فقال له : لاحول ولا قوة الا بالله ، هذا معناه أن كل اهلك يموتون أمامك. !!
فتغير وجه الملك وغضب على الفور وسجن الرجل .
واتى بمفسر آخر فقال له نفس الكلام وأيضا سجنه!

فجاء مفسر ثالث،
وقال الملك له الحلم ،
فقال المفسر: أم تأكد أنك حلمت هذا الحلم يا أيها الملك؟ مبروك يا أيها الملك مبروك.
قال الملك: لماذا ..؟!
فقال المفسر مسرورا: تأويل الحلم أنك ماشاء الله ستكون أطول أهلك عمرا،
فقال الملك مستغربا: أم تأكد؟
فقال: نعم.

ففرح الملك وأعطاه هدية!

سبحان الله لو كان أطول أهله عمرا،
أليس من الطبيعي أن أهله سيموتون قبله؟

لكن أنظرو الى مخرجات الكلام كيف تتكلم؟
اذا دعونا ننتقي بدقة ماذا نقول







1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...