09 டிசம்பர், 2011

ஹாஜிகள் நலமுடன் நாடு திரும்பினர்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் ஒப்பிலானிலிருந்து(oppilan) இந்த ஆண்டு அல்லாஹ்வின் அருளால் எட்டு 8 தனவந்தர்கள் ஹஜ்ஜுக்கு சென்றனர். அவர்கள் தங்கள் ஹஜ்ஜை நிறைவு செய்து தற்பொழுது டிசம்பர் 2011 இரண்டாம் வாரத்தில் அனைவரும் தாயகம் திரும்பினர். அல்ஹம்து லில்லாஹ்!
  • அவர்களுக்கு ஒப்பிலான் ஜமாத் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒப்பிலான் பேருந்து நிலையத்திலிருந்து தல்பியா ஊர்வலம் புறப்பட்டு ஜும்ஆ பள்ளியை வந்தடைந்தது.
  • அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் ஒப்பிலான் ஜும்ஆ பள்ளியின் துணைஇமாம் அல்ஹாஃபிழ் புரோஸ்கான் அவர்கள் இனிய கிராஅத் (இறைமறை) ஓதி துவங்கி வைக்க,
  • ஒப்பிலான் ஜமாத் தலைவர் ஜனாப் A.அப்துர் ரஹ்மான் அவர்கள் ஹாஜிகளை வரவேற்று உரை நிகழ்த்தி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்
  • அதன் பிறகு ஒப்பிலான் ஜும்ஆ பள்ளியின் தலைமை இமாம் அல்ஹாஃபிழ் மவ்லவி A.சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஸில் தேவ்பந்தீ அவர்கள் வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
  • அல்ஹாஜ் M. இப்றாஹிம்ஸா அவர்கள் அனைத்து ஹாஜிகள் சார்பாக ஏற்புரை நிகழ்த்தினார்.

அவரது ஐந்து நிமிட இரத்தினச் சுருக்கமான ஏற்புரையில் எல்லோரையும் நெஞ்சம் நெகிழச் செய்தார். தன் பயண அனுபவத்தை சுவைபட சொல்லி முடித்தபொழுது அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன.
''இனி வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாக ஒப்பிலான் மக்கள் ஹஜ்ஜுக்கு செல்லவேண்டும் என்றும் இளமையிலேயே செல்வதுதான் ஏற்றம்'' என்றும் இனிமையான பல தகவல்களைத் தந்தார்.
அதன்பிறகு மக்கள் ஹாஜிகளுக்கு கை கொடுத்து ஆரத்தழுவி பாசத்தை பகிர்ந்துகொண்டனர்; பின்பு பள்ளியிலிருந்து ஹாஜிகளின் இல்லம் வரை அழைத்துச் சென்று விடைபெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
ஜமாத்தின் உதவித் தலைவர் ஜனாப் M.S.ஷாகுல் ஹமீது
பொருளாளர் ஜனாப் முஹம்மது ஃபாரூக்
செயலாளர் ஜனாப் ஃபக்ருதீன் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இந்த வருடம் எட்டு பேர் ஹஜ்ஜுக்கு சென்றது ஒப்பிலான் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். அல்ஹம்துலில்லாஹ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...