21 நவம்பர், 2011

ரிஹானா : செல்வமே !


நடுவர் அவர்களே ! இன்று செல்வத்தின் அவசியத்தை அனைவருமே புரிந்து வைத்திருக்கிறோம். காசில்லாமல் காரியம் நடக்காது. அதனால்தான் அருமையாக பாடினான் ஒரு கவிஞன்:
காசேதான் கடவுளடா.. அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா.
காசைக் கடவுளென்று நான் சொல்லவில்லை. ஆனால் காசுதான் காரியங்களை சாதித்துக்கொண்டிருக்கிறது.

  • பணம் பாதாளம் வரைக்கும் பாயும்
  •  பணம் எதையும் சாதிக்கும்
  • பணம் என்றால் பொணம் கூட வாய பொளக்கும்.
நான் ஒரு பெரியவரிடம் கேட்டேன் :
உங்களுக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள் என்று?
அதற்குஅவர் சொன்னார்:'' எனக்கு மொத்தம் 3 son.''
''அப்படியா... அதுல உங்களுக்கு சோறு போடுறது எந்த  son ?
அவர் சொன்னார் :' பென்சன்'. ஆக பெற்ற பிள்ளைகள் மூன்று  பேரும் அவருக்கு உதவல. அவர் வாங்குற பென்சன் தான் உதவுது.


அதனால்தான் ஒரு கவிஞன் பாடினான்:
''பானையில சோறு இருந்தா
பூனைகளும் சொந்தமடா..
பெட்டியில பணமில்ல
பெத்தபுள்ள சொந்தமில்ல''
''மணி இஸ் குட் சர்வெண்ட்''  -ஆங்கிலப் பழமொழி. பணம் என்பது மனிதனுக்கு சேவை செய்யும் சிறந்த பணியாளன்'' 

படிப்பு மட்டும் போதுமென்றால் நான் கேட்கிறேன்: இன்று எத்தனையோ பட்டதாரிகள் வேலையில்லாமல் வெட்டியாக அலைந்து கொண்டிருக்கிறார்களே என்ன காரணம்? அனால் பலபேர் பணத்தை வாரி இறைத்து பதவிகளில்கூட அமர்ந்துவிடுகிறார்கள். 
பணக்காரனைப் பார்த்து உலகமே அஞ்சுகிறது; கவுரவிக்கிறது. எந்த வாசலாக இருந்தாலும் பணக்காரனைக் கண்டால் படாரென திறந்துவிடுகிறது. அவனுடைய புன்சிரிப்பைக் காண எத்தனையோ முகங்கள் ஏங்கி நிற்கின்றன. அவனுடைய கனப்பு சப்தம் கேட்டவுடன் எத்தனையோ இதயங்கள் நடுங்குகின்றன. எத்தனையோ கால்கள் தானாகவே எழுந்துவிடுகின்றன.எத்தனையோ கைகள் தானாகவே வணக்கம் போடுகின்றன. வந்தனம் செலுத்துகின்றன.



நம் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் பணம் தேவைப் படுகிறது.
  • மனைவி மக்களைப் பட்டினி போடாமல் காப்பாற்றுவதற்கு.
  • உற்றார் உறவினருக்கு உதவுவதற்கு .
  • மஸ்ஜிதுகள் மதரஸாக்கள் கட்டுவதற்கு.
  • மராமத்துகள் பார்ப்பதற்கு.
  • வறுமையில் வாடுவோருக்கு வட்டியில்லா கடன் வழங்கி வளமாக வாழ வைப்பதற்கு.
        இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்... செல்வத்தின் அவசியத்தை !


இன்னும் சில..........
வீடியோவைக் காண்க !



இது தொடர்பான மற்ற பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...