இன்று நேபாளத்தில் அதிரடியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் திடீர் புரட்சியால் கிளர்ச்சி ஏற்பட்டு ஜனாதிபதி தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் அமைச்சர்கள் பதவிகளை இழந்து இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த கிளர்ச்சியின் பின்னணியில் நிறைய காரணங்கள் இருக்கின்றன அதற்குள் நாம் செல்லவில்லை.
ஆனால் எல்லோரும் சொல்லுகிற பொதுவான ஒரு காரணம் அதுவும் இருக்கிறது. அது என்ன ?
ஆட்சியாளர்களும் அவர்களது குடும்பங்களும் ஆடம்பரமாக வாழ்ந்த நிகழ்வு.
மக்களில் நிறைய பேர் வேலையின்மை, பசி பட்டினி, பொருளாதார சீரழிவு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது ஆட்சியாளர்களும் அவரது குடும்பத்தினர்களும் ஆடம்பரமாக வாழுகிற காட்சிகள் இணையத்தில் நிறைய பரப்பப்பட்டன.
அதனால் மக்கள் வெகுண்டு எழுந்து இப்படி ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி இருக்கிரார்கள் என்று பொதுவான காரணம் சொல்லப்படுகிறது.
(இந்த போராட்டத்தை வேறு சில தீய சக்திகள் தவறாகவும் பயன்படுத்தின என்பது வேறு விஷயம்.)
ஆனால் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஜனாதிபதிகள் குறிப்பாக கலீபாக்கள் குடிமக்களின் உரிமைகளையும் கடமைகளையும் எவ்வளவு தூரம் மதித்து நடந்தார்கள் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.
ஏழைகளின் குடிசைகளுக்கே சென்று தினசரி பணிவிடை செய்தார்கள் என்று பார்க்கிறோம்.
இதோ உதாரணத்திற்கு சில நிகழ்வுகள்:
«ومن كان في حاجة أخيه كان الله في حاجته»
١- أبو بكر الصديق رضي الله عنه
: كان عند أطراف المدينة عجوز عمياء ليس لها أحد، فكان أبو بكر يذهب كل صباح قبل أن ينشغل بالخلافة،
فيكنس بيتها housekeeping،
ويعجن عجينها،
ويهيئ طعامها cooking .
فلما رآه عمر رضي الله عنه قال:
"لقد أتعبتَ مَن بعدك يا أبا بكر."
١- அபூபக்கர் சித்தீக் (ரலி):
மதீனாவின் எல்லையில், யாருமற்ற ஒரு பார்வையற்ற வயதான பெண்மணி இருந்தார். அபூபக்கர் (ரலி) அவர்கள் கலீஃபாவின் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்பு, ஒவ்வொரு காலையிலும் அவரிடம் செல்வார்கள்.
* அவரது வீட்டை சுத்தம் செய்வார்கள் (housekeeping),
* அவருக்காக மாவு பிசைந்து கொடுப்பார்கள்,
* அவருக்காக உணவு தயாரித்துக் கொடுப்பார்கள் (cooking).
இதனை உமர் (ரலி) அவர்கள் பார்த்தபோது, "அபூபக்கரே! உங்களுக்குப் பின் வருபவர்களுக்கு (இந்த நற்செயல்களில்) நீங்கள் பெரும் சுமையை ஏற்படுத்திவிட்டீர்கள்" என்று கூறினார்கள்.
அதாவது ஜனாதிபதி என்பவர் இந்த அளவுக்கு இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்கிற ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியதன் மூலம் உங்களுக்கு பின்னால் வரும் ஜனாதிபதிகளுக்கு ஒரு சிரமத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். இது பெரிய தியாகம் தான்" என்ற கருத்துப்பட சொன்னார்கள்.
٤- عمر بن الخطاب رضي الله عنه
كان يتفقد الناس ليلًا. فدخل على بيتٍ فيه امرأة وأولادها يبكون من الجوع، والقدر على النار فيها ماء فقط!
فبكى عمر، وذهب مسرعًا إلى بيت المال، وحمل كيس الدقيق على ظهره، فقال له خادمه: "دعني أحمله عنك."
فقال عمر: "أتحمل عني وزري يوم القيامة؟!"
ثم جلس يطبخ لهم حتى شبعوا.
- உமர் இப்னுல் கத்தாப் (ரலி):
அவர்கள் ஜனாதிபதியாக இருந்த பொழுது இரவில் மக்களைப் பார்வையிடச் செல்வார். ஒரு வீட்டிற்குள் நுழைந்தபோது, அங்கே ஒரு பெண்ணும் அவளுடைய பிள்ளைகளும் பசியால் அழுதுகொண்டிருந்தனர். அடுப்பில் இருந்த பாத்திரத்தில் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை!
இதைக் கண்டு உமர் (ரலி) அழுதார்கள். விரைவாக பைத்துல்மாலுக்கு (அரச கருவூலம்) சென்று, மாவு மூட்டையைத் தன் முதுகில் சுமந்து வந்தார்கள். அவருடைய வேலையாள், "நான் உங்களிடமிருந்து இதைச் சுமந்து கொள்கிறேன்" என்றார்.
அதற்கு உமர் (ரலி), "மறுமை நாளில் என் சுமையை நீர் சுமப்பீரா?!" என்று கேட்டார்கள்.
பிறகு, அவர்கள் வயிறு நிரம்பும் வரை அவர்களுக்காக அமர்ந்து சமைத்துக் கொடுத்தார்கள்.
«ومن كان في حاجة أخيه كان الله في حاجته»
«யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ, அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றுவான்»
عبد الله بن عمر رضي الله عنهما
كان ابن عمر إذا أحبَّ شيئًا من طعامه أو شرابه قال:
"اذهبوا به إلى فلان؛ فإنه يحب هذا."
وكان يقول: "إني لأسمع حاجتي عند أخي فأبادره قبل أن يسألني."
فكان يقضي حاجة الناس حتى من غير أن يطلبوا
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
இப்னு உமர் (ரலி) அவர்களுக்குத் தங்களின் உணவு அல்லது பானத்தில் ஏதேனும் ஒன்று மிகவும் பிடித்திருந்தால், "இதை இன்னாரிடம் கொண்டு செல்லுங்கள்; ஏனெனில் அவர் இதை விரும்புகிறார்" என்று கூறுவார்கள்.
மேலும், "என் சகோதரரிடம் ஒரு தேவை இருப்பதை நான் அறிந்தால், அவர் என்னிடம் கேட்பதற்கு முன்பே நான் அதை நிறைவேற்ற விரைந்து செல்வேன்" என்றும் கூறுவார்கள்.
இவ்வாறு, மக்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை அவர் நிறைவேற்றி வந்தார்.
عثمان بن عفان رضي الله عنه
في عام الرمادة حين اشتد القحط في المدينة، جاءت قافلة كبيرة لعثمان رضي الله عنه، فقال له التجار: نشتري منك وتعطينا أرباحًا كثيرة.
فقال: "كم تربحونني؟"
قالوا: عشرة في المئة.
قال: "قد زادني."
قالوا: نعطيك مئتين في المئة.
قال: "قد زادني."
قالوا: لا نعلم أحدًا يزيدك!
قال: "الله أعطاني بكل درهم عشرة. أشهد أن هذه القافلة صدقة على فقراء المسلمين."
فكان يقضي حاجة آلاف من المسلمين
உஸ்மான் (ரலி):
மதீனாவில் கடும் பஞ்சம் நிலவியது. அப்போது உஸ்மான் (ரலி) அவர்களுக்கு ஒரு பெரிய வணிகக் கூட்டம் (قافلة) வந்தது.
வியாபாரிகள் அவரிடம், "நாங்கள் உங்களிடமிருந்து இதை வாங்கிக்கொள்கிறோம், எங்களுக்கு அதிக லாபம் தாருங்கள்" என்றனர்.
அதற்கு அவர், "எனக்கு எவ்வளவு லாபம் தருவீர்கள்?" என்று கேட்டார்.
அவர்கள், "பத்து சதவீதம்" என்றனர்.
அவர், "எனக்கு இதைவிட அதிகமாகக் கிடைத்துள்ளது" என்றார்.
அவர்கள், "நாங்கள் உங்களுக்கு இருநூறு சதவீதம் தருகிறோம்" என்றனர்.
அவர், "எனக்கு இதைவிட அதிகமாகக் கிடைத்துள்ளது" என்றார்.
அவர்கள், "உங்களுக்கு இதைவிட அதிகமாகத் தருபவர் எவரும் இருப்பதாக நாங்கள் அறியவில்லை!" என்றனர்.
அதற்கு அவர், "அல்லாஹ் ஒவ்வொரு திர்ஹத்திற்கும் எனக்குப் பத்து மடங்கு தருவதாக வாக்களித்துள்ளான். இந்த வணிகக் கூட்டம் முஸ்லிம்களில் உள்ள ஏழைகளுக்கு தர்மம் (ஸதகா) என நான் சாட்சி கூறுகிறேன்" என்றார்.
இவ்வாறு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் தேவையை அவர் நிறைவேற்றினார்.
📌 இவை நபித்தோழர்களின் வாழ்வில் நடந்த மாபெரும் நிகழ்வுகள். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எவ்வாறு விரைந்து செயல்பட்டார்கள் என்பதை இது காட்டுகிறது.
அதனால்தான் அண்ணல் காந்தியடிகள் சொன்னார்
"இந்தியாவில் ஜனாதிபதி உமர் அவர்களின் ஆட்சியைப் போல வந்தால் இந்தியா சுபிட்சம் அடையும்."
இந்தியா நேபாளம் மாத்திரமல்ல உலகத்தின் நாடுகளில் எல்லாம் இஸ்லாமிய கலீபாக்களின் நேர்மையான ஆட்சியைப் போல வந்தால் எளிமையான ஆட்சியாளர்கள்; செழிப்பான குடிமக்கள் நிம்மதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை
சிறந்த பதிவு நல்ல பல தகவல்களை உள்ளடக்கி உள்ளது
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
நீக்கு