24 நவம்பர், 2020

'நிவர்' காற்றும் நபியவர்கள் கூற்றும்


 சமீப காலங்களில் வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பெரும் புயல்கள் :

2016 டிசம்பர் வர்தா புயல்

2018 நவம்பர் கஜா புயல்


2020 நவம்பர் நிவர் புயல்

 

  • 1. தேவைக்கதிகமாக பீதி கூடாது ؛
  • 2. சனியன் ஏன் இந்தப் புயல் வருது என்று சபிக்கவும் கூடாது.  
  • 3. அதேநேரம் அசட்டு தைரியமும் ஆகாது
  • ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனை போல பொறுப்பில்லாமல் இருக்கக்கூடாது.
  •  4. திக்ரு துஆவின் மூலம் அல்லாஹ்விடம் காற்றின் நன்மையை வேண்டி, தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும்.


1. தேவைக்கதிகமாக பீதி கூடாது ؛
2. சனியன் ஏன் இந்தப் புயல் வருது என்று சபிக்கவும் கூடாது.  

          
- «الرِّيحُ مِن رَوْحِ اللهِ، تَأتِي بِالرَّحْمةِ، وتَأْتِي بِالعَذابِ؛ فلا تَسُبُّوها، وسَلُوا اللهَ خَيْرَها، واسْتَعِيذُوا مِن شَرِّها (أبو داود , وابن ماجه)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் காற்று என்பது அது அல்லாஹ்வின் நாட்டத்திலும் அருளிலும்  உள்ளது.  சில நேரத்தில் அருளாக வருகிறது இன்னும் சில நேரத்தில் வேதனையாகவும் வருகிறது.  எனவே அதை நீங்கள் சபிக்க வேண்டாம். மாறாக அல்லாஹ்விடத்தில் அதனுடைய நன்மையை கேளுங்கள் அதனுடைய தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுங்கள். ( அபூதாவுத், இப்னுமாஜா )


எப்படி பாதுகாப்புத் தேடுவது? 


 روى الإمام مسلم من حديث عائشة رضي الله عنها -: كان النَّبيُّ -صلَّى اللهُ عليه وسلَّم- إذا عَصَفتِ الرِّيحُ قالَ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ؛ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ».


அன்னை ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்: பலமாக காற்று வீசினால் நபியவர்கள் இப்படி பிரார்த்திப்பார்கள் அல்லாஹ்வே இந்தக் காற்றின் நலவையும் இது எதற்காக அனுப்பப்பட்டதோ அதன் நன்மைகளையும் கேட்கிறேன் இதன் தீங்கை விட்டும் இது எதற்காக அனுப்பப்பட்டதோ அதனுடைய தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (நூல்: முஸ்லிம்)


3. அதேநேரம் அசட்டு தைரியமும் ஆகாது:

 قالتْ: وإذا تَخيَّلتِ السَّماءُ؛ تَغيَّرَ لَونُه، وخَرَجَ ودَخَلَ، وأَقْبَلَ وأَدْبَرَ، فإِذَا مَطَرَتْ سُرِّيَ عَنْهُ، فَعَرَفْتُ ذَلِكَ فِي وَجْهِهِ. قالتْ عائشةُ: فسَأَلْتُه، فقالَ: «لَعَلَّهُ يا عَائِشةُ كَمَا قَالَ قَوْمُ عَادٍ: {فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا .

அதே ஆயிஷா நாயகி ரலி கூறுகிறார்கள்: மேகம் காரணமாக காற்றின் காரணமாக ஏதேனும் வானத்தில் மாறுதல் தென்பட்டால் உடனே நபியவர்களுடைய முகம் நிறம் மாறிவிடும் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக ஒரு கவலையில் காணப்படுவார்கள். மழை வந்துவிட்டால் உடனே ஆனந்தம் அடைவார்கள் அந்த சந்தோஷத்தின் அறிகுறி முகத்தில் தென்படும் இது குறித்து நான் கேட்டேன் நாயகம் அவர்களே மேகமூட்டம் அல்லது காற்று வீசினால் மக்களெல்லாம் மழை வரப்போகிறது என்று தானே ஆனந்தம் அடைவார்கள்?  தாங்கள் மாத்திரம் ஏன் கவலையோடு காணப்படுகிறீர்கள் ஒரு பதட்டம் தென்படுகிறது ஏன் என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் சொன்னார்கள் ஆயிஷா ஒருவேளை இந்தக் காற்று என் உம்மத்தின் மீது வேதனையாக அமைந்து விடக் கூடாதே என்றுதான் கவலைப்படுகிறேன்

ஆது கூட்டம் காற்றை பார்த்து இது நமக்கு மழை பொழிய வந்த மேக காற்று என்றுதானே ஆனந்தப் பட்டார்கள் ஆனால் நடந்தது என்ன அதே புயல் காற்றால் ஆதுக்  கூட்டம் அடியோடு அழிக்கப்பட வில்லையா.. என்ன ஒரு கரிசனம் இந்த உம்மத்தின் மீது காருண்ய நபிக்கு?   

عن ابن عباس رضي الله عنه، أن رجلًا لعن الريح عند النبي صلى الله عليه وسلم، فقال: ((لا تلعنوا الريح؛ فإنها مأمورة، وإنه من لعن شيئًا ليس له بأهل رجَعت اللعنة عليه))؛ (رواه الترمذي،

ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முன்னால் காற்றை திட்டினார் நபியவர்கள் சொன்னார்கள் காற்றை திட்ட வேண்டாம் ஏனெனில் அது அல்லாஹ்வால் ஏவப்பட்டு இருக்கிறது அது எதற்காக ஏவப்பட்டதோ அதை செய்கிறது

யார் தேவையில்லாமல் ஒரு விஷயத்தை திட்டுகின்றனரோ அந்த சாபம் அவருக்கே திரும்பும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...