15 அக்டோபர், 2020

சித்தீக் நாயகம் சிறப்பினையே.. | Islamic Tamil Lyrics

 பாடல்:A.முஹம்மது மஃரூஃப்

ராகம்: சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து


சித்தீக் நாயகம் சிறப்பினையே

சிந்தனை செய்திடுவோம்

செல்லமகள் ஆய்ஷாவின்  தந்தையைப் புகழ்ந்திடுவோம்

(2 முறை)

அண்ணல் நபியின் அருந்தோழர் அவர் புகழைப் பாடிடுவோம்

அல்லாஹ்வுமே அருள் மறையில் உரைப்பதைக் கூறிடுவோம்

சித்தீக் நாயகம் சிறப்பினையே

சிந்தனை செய்திடுவோம்

செல்லமகள் ஆய்ஷாவின்  தந்தையைப் 

புகழ்ந்திடுவோம்


ஆ....ஆ (ஹம்மிங்)

படைத்தவனே இணைத்து வைத்தான் தோழரை நபியுடனே

பயகம்பரும் மணமுடித்தார்

அவர்கள் மகளுடனே

(2 முறை)

பகைவர்களை பயந்திருந்தார் 

குகையில் அவருடனே

பயம் வேண்டாம் நபியுரைத்தார் 

இறைவன் நம்முடனே....ஹோ

(சித்தீக் நாயகம்)


ஆ....ஆ(ஹம்மிங்)

அடிமைகளின் விடுதலையில் அனைத்தையும் வழங்கி நின்றார்

அதன் விளைவால் இறையவனின் 

பொருத்தமும் அடைந்து கொண்டார்

நாற்பதுவாம் வயதினலே வேண்டியதை இறைவன்

நாமும் நிதம் ஓதிவர வேத்தித்தில் பதிவு செய்தான்.....ஹோ

(சித்தீக் நாயகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்