எவ்வளவுதான் நன்மை செய்தாலும் நாம் நரகை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும் .
நல்லறங்கள் செய்த ஒருவர் கூட நரகை விட்டு பாதுகாப்புத் தேடாததால் ....
நல்லறங்கள் செய்த ஒருவர் கூட நரகை விட்டு பாதுகாப்புத் தேடாததால் ....
عن عائشة رضي الله عنها قالت قلت يا رسول الله أخبرني عن ابن عمي ابن جدعان قال النبي صلى الله عليه وسلم: (و ما كان ؟) قالت قلت : كان ينخر الكَوماء، ويكرم الجار، ويقري الضيف، ويصدق الحديث، ويوفي بالذمة، ويصل الرحم، ويفك العاني، ويطعم الطعام، ويُؤَدي الأمانة قال: (هل قال يوما واحدا أللهم إني أعوذ بك من نار جهنم) قلت لا وما كان يدري ما جهنم قال: (فلا إذاً)- الأوائل السنبلية
''அண்டை வீட்டுக்காரர்களை அனுசரித்து நடப்பவர் விருந்தாளிகளை உபசரிப்பவர். உணமையையே உரைப்பவர்; பொறுப்புகளை நிறைவேற்றுபவர்; உறவுகளை ஒட்டி வாழ்பவர் ..... இப்படி எத்தனையோ நற்பண்புகளுக்கு சொந்தக்காரர் இப்னு ஜத்ஆன் . இவர் குறித்து நாயகமே உங்கள் கருத்து என்ன?''- அன்னை ஆயிஷா ரலி அவர்களின் கேள்வி !
''அவர் ஒருமுறையாவது அல்லாஹ்வே நரகிலிருந்து என்னைக் காப்பாற்று என்று கேட்டிருக்கிறாரா? ''
''இல்லை நாயகமே! அவருக்கு நரகம் என்றால் என்னவென்றே தெரியாது.''
''அவ்வாறெனில் மறுமையில் தப்பிக்க வழியில்லை''
وقد قيل للإمام أحمد: متى يجد العبد طعم الراحة؟ فقال: عند أول قدم في الجنة.
நிம்மதியின் சுவையை ஒரு அடியான் எப்போது சுகிக்கமுடியும் ? என்று இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ் அவர்களிடம் வினவப்பட்டபோது சொர்க்கத்தில் தன முதல் பாதச் சுவடைப் பதிக்கிறபோதுதான் (அதுவரைக்கும் நிம்மதிக் காற்றை சுவாசிக்க முடியாது )
மனப்பதட்டம் மறுமை வரை...
ويقول الشاعر:
أحزان قلبي لا تزول، حتى أبشر بالقبول، وأرى كتابي باليمين وتسر عيني بالرسول، صلى الله عليه وسلم.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அச்சம் :
قال عمر بن الخطّاب- رضي اللّه عنه- «لو نادى مناد من السّماء: أيّها النّاس إنّكم داخلون الجنّة كلّكم إلّا رجلا واحدا لخفت أن أكون أنا هو»)*( التخويف من النار لابن رجب (ص 17)
قال عمر بن الخطّاب- رضي اللّه عنه- لمّا طعن: «لو أنّ لي طلاع الأرض ذهبا لافتديت به من عذاب اللّه قبل أن أراه»)* شرح السنة للبغوي (14/ 373).
قال عبد اللّه بن عامر بن ربيعة: رأيت عمر بن الخطّاب أخذ تبنة من الأرض، فقال:
«يا ليتني هذه التّبنة، ليتني لم أكن شيئا ليت أمّي لم تلدني، ليتني كنت نسيا منسيّا»)* شرح السنة للبغوي (14/ 373)
قال ابن عمر- رضي اللّه عنهما- كان رأس عمر على فخذي في مرضه الّذي مات فيه فقال لي: ضع رأسي. قال: فوضعته على الأرض. فقال:
«ويلي وويل أمّي إن لم يرحمني ربّي» شرح السنة للبغوي (14/ 373)
- வானில்ருந்து ஒரு வானவர் , ‘’எல்லோரும் சொர்க்கம் நுழைந்து விடலாம்; ஒரே ஒருவரைத் தவிர’’ என்று கூறுவாரானால் அந்த ஒருவன் நான்தானோ என்று அஞ்சுவேன்
- தங்கச் சுரங்கம் ஒன்று எனக்கு இருந்தாலும் அல்லாஹ்வின் வேதனையில்ருந்து விலக அதை அப்படியே அர்ப்பணிப்பேன்
ஒரு மண் கட்டியை எடுத்துப் பிடித்து நான் இந்த மன்கட்டியாக இருந்திருக்கக் கூடாதா நான் ஒரு பொருளாகவே இல்லாமல் இருந்திருக்கக் கூடாதா? என் தாய் என்னைப் பெறாமலே இருந்திருக்கக் கூடாதா? நான் மறக்கடிக்கப்பட்டவனாக ஆகியிருக்கக் கூடாதா?
நரகமும் அதன் பயங்கரமும் :
قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرّاً لَوْ كَانُوا يَفْقَهُونَ سورة التوبة
நரக நெருப்பின் நூறு பகுதியில் ஒன்றுதான் இவ்வுலக நெருப்பு. இன்னொரு அறிவிப்பில் எழுபதில் ஒன்று என்று வந்துள்ளது
هَذِهِ النَّارُ جُزْءٌ مِنْ مِئَةِ جُزْءٍ مِنْ نَارِ جَهَنَّمَ. (أَحْمَدُ)
ناركم هذه التي يوقد بنو آدم جزء واحد من سبعين جزءا من نار جهنم قالوا : و الله إن كانت لكافية قال : إنها فضلت بتسعة و ستين جزءا كلهن مثل حرها ]
"ஆதமின் மகன் (மனிதன்) பற்றவைக்கும் (பூமியிலுள்ள) இந்த நெருப்பானது, நரக நெருப்பிலுள்ள
வெப்பத் தின் எழுபது பாகங்களில் ஒரு பாகமாகும்'' என்று சொன்னார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே!
அல்லாஹ்வின் மீதாணையாக! (நரகவாசி களைத் தண்டிக்க பூமியிலுள்ள) இந்த நெருப்பே
போதுமானதாய் இருக்கிறதே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர் கள், "அந்த நெருப்பு (பூமியிலுள்ள)
இந்த நெருப்பைவிட அறுபத்தொன்பது பாகம் கூடுதலாக வெப்பமேற்றப்பட்டுள்ளது. அதில்
ஒவ்வொரு பாகமும் (பூமியிலுள்ள) இந்த நெருப்பின் வெப்பம் கொண்டதாயிருக்கும்'' என்று சொன்னார்கள்
ضربت بالبحر مرتين و لولا ذلك ما جعل الله فيها منفعة لأحد (احمد)
நெருப்பை படைத்து எழுபது பங்குகளாக்கி அதில் ஒன்றைத்தான் உலகிற்கு அனுப்பினான் அந்த ஒன்றையும் கூட இரண்டு முறை கடல் நீர் கொண்டு அனைத்து உஷ்ணத்தைக் குறைத்தான் இல்லையெனில் அதை நாம் பயன்படுத்த முடியாத அளவிற்கு கடும் வெப்பமாக இருந்திருக்கும்
عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيه وسَلَّم قَالَ : لَوْ كَانَ فِي هَذَا الْمَسْجِدِ مِئَةُ أَلْفٍ ، أَوْ يَزِيدُونَ وَفِيهِ رَجُلٌ مِنْ أَهْلِ النَّارِ فَتَنَفَّسَ فَأَصَابَ نَفَسُهُ لاَحْتَرَقَ الْمَسْجِدُ بِمَنْ فِيهِ.
رَوَاهُ أَبُويَعْلَى
இந்தப் பள்ளியில் ஒரு லட்சம் அல்லது அதைவிட அதிகமானோர் இருந்து அதில் ஒரே ஒரு நரகவாசி இருந்து அவர் மூச்சு விட்டால் அந்த மூச்சு பட்டு இந்த பள்ளியும் அதில் உள்ள அனைவருமே கரிந்து போனாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம்.
அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள்.
(நாங்களும் கேட்டோம்.) அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது என்ன (சப்தம்) என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார் கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், "இது எழுபது ஆண்டுக ளுக்கு முன்னர் நரகத்திற்குள்
தூக்கியெறியப் பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை நரகத்திற்குள் சென்று
இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது'' என்று
சொன்னார்கள்.
இதே விஷயம் ஜிப்ரீல் அலைஹிஸ் சலாம் அவர்களிடமிருந்து அறிந்துகொண்டதாகவும் வந்துள்ளது:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ , قَالَ : سَمِعَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيه وسَلَّم دَوِيًّا ، فَقَالَ : يَا جِبْرِيلُ مَا هَذَا ؟ قَالَ : أُلْقِيَ حَجَرٌ مِنْ شَفِيرِ جَهَنَّمَ مُنْذُ سَبْعِينَ خَرِيفًا الآنَ اسْتَقَرَّ فِي قَعْرِهَا.
நரகம் ஆண்டுக்கு இருமுறை மூச்சு விடுவதுதான் கொடையும் குளிர்காலமும் :
وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيه وسَلَّم قَالَ : اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا ، فَقَالَتْ : رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا ، فَجَعَلَ لَهَا نَفَسَيْنِ : نَفَسٌ فِي الشِّتَاءِ ، وَنَفَسٌ فِي الصَّيْفِ ، فَشِدَّةُ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ مِنْ حَرِّهَا وَشِدَّةُ مَا تَجِدُونَ مِنَ الْبَرْدِ مِنْ زَمْهَرِيرِهَا.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகம், நரகவாசிகளில் சிலரை அவர் களின் கணுக்கால்கள்வரை
தீண்டும். வேறு சிலரை அவர்களது இடுப்புவரை தீண்டும். இன்னும் சிலரை அவர்களது
கழுத்துவரை தீண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், "அக்கிரமக்காரர் களும் ஆணவம் கொண்டவர்களுமே எனக் குள்
நுழைவார்கள்'' என்று சொன்னது. சொர்க் கம், "பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்'' என்று சொன்னது.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க
அல்லாஹ் நரகத்திடம், "நீ எனது வேதனை. உன் மூலம்
நான் நாடியவர்களுக்கு வேதனை கொடுக்கிறேன்'' என்றும், சொர்க்கத்திடம், "நீ எனது பேரருள். உன் மூலம் நான் நாடியவர் களுக்கு
அருள் புரிகிறேன்'' என்றும் கூறி னான். பிறகு
(இரண்டையும் நோக்கி), "உங்க ளில் ஒவ்வொன்றையும்
நிரப்புபவர்கள் (மக்க ளிடையே) உள்ளனர்'' என்று சொன்னான். (முஸ்லிம்)
(நரகவாசிகள்) நரகத்தில்
போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். நரகம் (வயிறு நிரம்பா மல்) "இன்னும்
அதிகம் இருக்கிறதா?'' என்று கேட்கும்; இறுதியில் கண்ணியத்தின் அதிபதி (யான இறைவன்), நரகத்தில் தனது பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு
பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக்கொள்ளும். பிறகு, "போதும்; போதும். உன் கண்ணியத்தின்
மீதும், உன் கொடையின் மீதும் சத்தியமாக!'' என்று நரகம் கூறும். சொர்க்கத்தில் இடம் மீதி இருந்து
கொண்டேயிருக்கும். இறுதியில், சொர்க்கத்திற்கென அல்லாஹ் புதியவர்களைப் படைத்து, சொர்க்கத் தில் மீதியுள்ள இடத்தில் அவர்களைக்
குடியமர்த்துவான். இதை, "நாம் நரகத்திடம்
"உனக்கு (வயிறு) நிரம்பிவிட்டதா?' என்று கேட்கும் நாளில் "இன்னும் அதிகம் இருக்கிறதா?' என்று அது கேட்கும்'' (50:30)
நரகம் குறித்து நாம் இன்னும் பார்க்கலாம்.....
இதற்கு முன்னுள்ள கட்டுரையை வாசிக்கலாமா?
மேலும் அதிக தகவலுக்கு இப்னு ரஜப் ரஹ் அவர்கள் எழுதிய
naraka viduthalai bayan alagoalagu kithab muthaalas saivathl annmay irukkadu ..........tambaramsiraji alhamdulilah
பதிலளிநீக்குமவ்லானா சிராஜி,
நீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி