31 ஜூலை, 2013

நரக விடுதலை நமக்கு வேண்டும்!

நரகம் இருக்கிறதா? இருந்தால் அது எப்படி இருக்கும்? அங்கே என்னவெலாம் நடக்கும்?
இதை ஓரளவாவது தெரிந்து கொண்டால்தான் அதைப் பற்றிய ஒரு பயம் வரும் அதை விட்டு பாதுகாப்பு தேடவும் அதை விட்டு நம்மைத் தற்காத்துக் கொள்ளவும் சிந்தனை பிறக்கும்.
நரகம் இல்லை என்று கூறுவோரும் உண்டு. 
நரகம் உண்டு என்று கூறுவோரும் உண்டு அதில் சில பேர் வேடிக்கைக்காக இப்படி கதை எழுதிவைத்துள்ளனர் :
ஒரு இந்தியன் இறந்து நரகத்துக்குப் போனான்



ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் ­ நரகம் இருப்பதைப் பார்த்தான்.
முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் 'இங்கே என்ன பண்ணுவார்கள் ? ' என்று கேட்டான்.
அதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் ­ போட்டு படுக்கச்சொல்வார ­்கள் ஒரு மணி நேரம். பிறகு ஜெர்மானிய அரக்கன் வந்து உன்னை சவுக்கால் மீதி  நாள் முழுவதும் அடிப்பான். ' என்றான்.
கேட்கவே நன்றாக இல்லை. ஆகவே அவன் அடுத்த நரகத்துக்குப் போனான். அடுத்தது அமெரிக்க நரகம். அடுத்தது ருஷ்ய நரகம்.. ஆக இப்படி. ஆனால் அவை எல்லாமே ஜெர்மானிய நரகத்தைப் போலத்தான் என்றும் தெரிந்தது.
இறுதியில் இந்திய நரகம் இருந்தது. அதன் வாசலில் நீண்ட வரிசை வேறு. சரி நம் ஆட்கள் தான் ஏராளமாயிற்றே அவர்கள் தான் நிற்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால், இந்தியர்களோடு ஜெர்மானியர்கள் அமெரிக்கர்கள் இன்னும் எல்லோரும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.
வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவனிடம் கேட்டான். 'இங்கே என்ன பண்ணுவார்கள் '
அதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் ­ போட்டு படுக்கச்சொல்வாரகள் ஒரு மணி நேரம். பிறகு இந்திய அரக்கன் வந்து உன்னை சவுக்கால் மீதி நாள் முழுவதும் அடிப்பான். ' என்றான்.
'
இதுவும் மற்ற நரகங்களைப் போலத்தான். அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கிறது ? ' என்று கேட்டான்
'
ஏனெனில், இங்கு மின்சாரம் பெரும்பாலும் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலி ­ருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்திய அரக்கன் ஒரு அரசாங்க குமாஸ்தா. ஆகவே, அது வரும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி குடிக்கப் போய்விடும் ' என்றான்

இது ஒரு வேடிக்கைக் கதை. அவ்வளவுதான். உண்மையில் நரகம் எவாறு இருக்கும் 
அருள்மரைக் குர்ஆனும் அண்ணல் நபிகளாரும் அதை புட்டு புது வைத்துள்ளனர்.
 அவை என்னவென்று பார்ப்போமா? 



3 கருத்துகள்:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...