17 ஆகஸ்ட், 2013

இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது மனைவியே!- பட்டிமன்றம்



கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரித்தான  நடுவரவர்களே! இங்கு இருக்கிற மக்களிடம் கேட்டாலே எல்லோரும் சொல்லி விடுவார்கள்..

இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது யாரென்று கேட்டு பாருங்க எல்லேரும் சொல்கிற பதில் 
மனைவியே!
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். மனைவி மாறு செய்வாள் என்று சொல்கிறார்கள். நரகத்திலே அதிகமான பெண்களை கண்டேன். எதற்காக  என்று கேட்கிற போது பெருமானார் சொன்னார்கள்.
தக்ஸூர்னல் லஃன வதக்ஃபுரினல் அஷீர
கணவனுக்கு மாறு செய்கிற காரணத்தினாலும், அதிகம் சாபமிடுவதினாலும் நரகத்திலே கண்டேன். இந்த நிலை எல்லா குடும்பத்திலேயும் இருக்கிறது என்ற முதல் குற்றச்சாட்டை இம்மன்றத்திலே நான் பதிவு செய்கிறேன்.
எதைச் சொன்னாலும் மாற்றிப் பேசுவது, மாறாக  நடப்பது, நான் இப்படித்தான் செய்வேன் என்று சொல்வது 
வரலாற்றிலே கூட ஒரு கதை சொல்வார்களே!

கணவனுக்கு மாறுபட்டே நடக்கக் கூடியவள்.
ஆற்றிலே வெள்ளம் போகிறது. அதை கடப்பதற்காக  மாட்டு வாலை பிடித்து செல்கிறாள். 
வெள்ளத்தில் அடித்து சென்றுவிட கூடாதே என்று மனதால்  சஞ்சலப்பட்ட கணவன் சொல்வான். மாட்டு வாலை பிடித்து செல்கிறாளே  மாறு செய்யக் கூடிய மனைவியாச்சே. ஒன்றுமே  சொல்ல வேண்டாம் பேசாம போகட்டும். மாட்டு வாலை விட்டு விடாதே பிடின்னா பிடிக்க மாட்டாள். 
பிடிக்காதேன்னா பிடிப்பாள் மாறு செய்வதே பழக்கம். அவசரப்பட்டு சொன்னான். மாட்டு வாலை விட்டு விடாதே என்று நடு ஆற்றிலே போயிட்டு இருக்கிற போது நீ சொல்லி நான் என்னய்யா கேட்கிறது. மாட்டு வாலை பிடிக்க மாட்டேன்! விட்டாள். அழிந்து போனாள். இப்படி இன்று குடும்பத்திலே எத்தiனையோ பேர் நடக்கிறார்கள்.
இது தான் என் முதல் குற்றச்சாட்டு, கண்ணியத்திற்குரிய நடுவர் அவர்களே! 
2-வது குற்றச்சாட்டாக இந்த மன்றத்திலே நான் சமர்ப்பிப்பது இனிய இல்லறத்திற்கு இடையூறாக  இருக்கிற இந்த மனைவி கணவன் துன்பப்படுவதைக் கண்டு இவள் ரசிக்கிறாள். கணவன்,மனைவி இருவருக்கும் மத்தியிலே சில ஊடல்கள் ஏற்படும். ஏற்பட்ட பிறகு கணவன் சிலநேரம் யோசிப்பான் 'நாம இப்படி பேசிட்டோமே என்று' என்றைக்காவது இந்த மனைவி யோசித்து இருக்கிறாளா? இப்படி பேசி விட்டோமே என்று நான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று தான் கேட்பாள். நான் சரியாகத் தானய்யா பேசினேன் என்பாள்.
துன்பத்திலே இன்பம் காணுகிற சுவை அவளுக்கு சொந்தமானது என்று நான் சொல்வேன்.
முல்லாவினுடைய வரலாறுகளை படித்து இருக்கிறோம். முல்லாவினுடைய மனைவி கணவனை கொடுமை படுத்தனும், 
அதைப் பார்த்து ரசிக்கனும்னு முல்லாவுக்கு பிடித்தமான சூப்புஅதில் நிறைய மிளகாய் பொடி, அதுபோல மிளகு தூள் எல்லாம் கலந்து முல்லா எடுத்து வாயிலே வைக்கனும் உடனே மூளைக்கு ஏறனும். கண்ணிலே கண்ணீர் சிந்த வேண்டும் அதைக் கண்டு நாம் ரசிக்க வேண்டும் என்று ஒரு ஆசை
மனைவி வைச்சுட்டு போயிட்டா சிறிது நேரத்துக்கு பிறகு தானே அறியாமலே அதை எடுத்து குடிக்கிறாள். மனைவி ஆரம்பத்துல குடிச்சிட்டா மூளைக்கு ஏறுகிறது. கண்கள் கண்ணீரை சிந்துகிறது. முல்லா கேட்கிறார். ஏனம்மா அழுகிறே என கணவன்மார்; இப்படிதான் ரொம்ப நல்ல ஆள். ஏமா அழகிறே என்று கேட்கிற போது இவள் மாற்றுகிறாள். என் செத்துபோன அம்மா நினைப்பு வந்துடுச்சு. என் அம்மாவுக்கு சூப்புன்னா ரொம்ப பிடிக்கும். இப்ப இல்லையே! அதை நினைத்து அழுகிறேன். என்றாள். முல்லா எடுத்து நம்பிக் கொண்டு வாயிலே வைக்கிறார். மூளைக்கு ஏறுகிறது. கண்ணிலே கண்ணீர் சிந்துகிறார். இப்பொழுது சிரித்துக் கொண்டே கேட்கிறாள் மனைவி. 
துன்பத்திலே இன்பம் காணும் மனைவி நீங்கள் ஏன் அழுகிறீர்கள். அவர்; அழகாக செல்வார் உங்கம்மாவை நினைத்துதான் நானும் அழுகிறேன் என்றார் நீ ஏய்யா? எங்கம்மா நினைத்து அழனும்? முல்லா சொன்னார் போகும் போதே உன்னையும் கூட்டிட்டுப் போனான நன்றாக  இருக்குமே என்று
துன்பத்திலே இன்பம் காணுகின்ற சுவை அவளுக்கு மட்டும் சொந்தமானது 
3-வதாக நான் இந்த மன்றத்திலே சமர்ப்பணம் செய்கிறேன். கணவனை தீமையின் பக்கம் அழைப்பவள் மனைவி என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
நிறைய இடங்களில் கணவனை தீமையின் பக்கம் அழைப்பது யாரு? வரதட்சனையின் பக்கம் அழைப்பது யாரு? வீட்ல தொடர் நாடகம் பார்த்தே ஆகனும் வீட்ல டிவியை வாங்கி வைத்தே  ஆகனும் என அழைப்பது யார்? தாடி அழகாக வைத்திருக்க கூடிய இந்த பையனிடத்தில் இந்த மணமகனிடம் தாடியை எடுத்து விடு உன் முகத்துக்கு இது அழகை சேர்க்கவில்லை என சொல்பவள் யார்?
ஒரு வீட்ல கணவன் சொல்றாரு மனைவியிடம் நம்ம வீட்ல பையனுக்கு பொண்ணு பார்க்கிறோம். பொண்ணு நல்ல லட்சனமாகத் தானே இருக்கு மூக்கும் முழியுமா இருக்கு . நாம எதிர்ப்பார்ப்பதை விட அவர்கள் அதிகம் சீர்வரிசை செய்கிறேன் என்கிறார்கள். பிறகு ஏண்டி வேணாம் என்கிறாய் என கேட்கிறார் கணவர்.
அதற்கு அவள் என்ன பதில் சொன்னாள் தெரியுமா....
மருமகள் பிளாக்பெல்ட் வாங்கி இருக்காளாம் கராத்தேலே- அதனால  வேணாம். வந்தால்..... அவளிடம் யார் உதை தின்பது? தீமையின் பக்கம் பார்ப்பவள் அவள். இவளால் தான் சமுதாயத்திலே தீமை அதிகமானது.
அபூஹூரைரா (ரலி) ஒரு ஹதீஸை அறிவிப்பார்கள்.
ஷைத்தான்  இப்லீஸ் அல்லாஹ்விடம் கேட்கிறான். யாஅல்லாஹ் எனக்கென ஒரு இடம் வேண்டும் என்று உன் இடம் தான் பாத்ரூம் அ ங்கு இருந்தா எல்லா சிந்தனையும் கொடுத்து விடுவான்.
எனக்கென்று ஒரு சபை வேண்டும் முற்சந்தி தான் உன் சபை எனக்கென்று ஒரு பேச்சி வேண்டும் பொய் தான் உன் பேச்சு என வரிசையாக  வருகிற  போது
எனக்கென்று ஒரு உதவியாளர் வேண்டுமென்று இப்லீஸ் கேட்கிற பொழுது உன் உதவியாளராக பெண்ணை நான் ஆக்குகிறேன் என்கிறான். தீமையின் பிறப்பிடம் அவள். கணவனை தீமையின் பக்கம் அழைப்பவள் மனைவி என்று எனது 3வது குற்றச்சாட்டை இவ்வiயிலே வைக்கிறேன்.
கண்ணியத்திற்குரிய நடுவர் அவர்களே! கணவனின் ரகசியத்தை யார் வெளிப்படுத்துகிறார்கள். மனைவியுடைய ரசகியத்தை கணவன்மார்கள் வெளிப்படுத்துகிறார்களா?
நீங்களெல்லாம் படித்திருக்கலாம்
11 மனைவிகளின் வரலாறு
அபூஸர் ஆவின் வரலாறு நீண்ட வரலாறு அதில் ஒன்றை மட்டும் மன்றத்திலே சமர்ப்பணம் செய்கிறேன்.
புருஷனைப் பற்றி அந்த அம்மா சொல்கிறது. 'இதா கரஜ ஃபகித இதா தகல அஸித' பெண்களெல்லாம் 10 பேர் உட்கார்ந்தால் புருஷன்மாரை தான் கழுவுவாங்க. அது இன்றைக்கு நடக்கிறது 11 பேர் அமர்ந்து பேசுறது உன் புருஷன் எப்படி? என் புருஷன் இப்படி? அவள் சொன்னாள்
வீட்டிற்குள்ளே வந்தால் பொட்டி பாம்பாக இருப்பார். வெளியே வந்தால் சிங்கம்.
வீட்டிலே பூனை! வெளியிலே புலி!
இது தானே நடப்பு இப்படி மனைவிகளே தம் கணவரை சுட்டிக் காட்டினார்கள் என்று ஹதீஸ்கள் சொல்லும். அது இன்றைக்கும் நடக்கிறது என்று இம்மன்றத்தில் நான் சொல்வேன்.
எனது 5-வது குற்றச்சாட்டாக கணவன் உழைப்பை பொருந்தி கொள்ளாதவள் இந்த மனைவி என்று இம்மன்றத்திலே பதிவு செய்வேன்.
எந்த மனைவியாவது கணவனுடைய உழைப்பை பொருந்தியுள்ளார்களா? என்னத்தான் கொண்டு போய் கொடுங்க நீ என்னய்யா சம்பாதிக்கிறே. பக்கத்து வீட்டு அப்துல்காதர் எப்படி சம்பாதிக்கிறார். எடுத்த வீட்டு உபைபதுல்லாஹ் லட்சம் லட்சமாக கொண்டு போய் கொட்டுகிறான். எப்படி கொட்டுகிறான் என்பது  அவளுக்கு தேவையில்லை. உழைப்பை குறை சொல்பவள் என்று இம்மன்றத்திலே என் கருத்தை பதிவு செய்கிறேன்.
உழைப்பே இல்லாத அலிக்கல்லவா ஃபாத்திமாவை அண்ணல் பெருமான் மணமுடித்து வைத்தார்கள். மார்க்கத்தை பார்த்தார்கள், நபிகளார் இன்றைக்கு இவள்  பணத்தை தான் பார்க்கிறாள். 
அதனால் ஒருவன் தம் மனைவி பற்றி அழகாக  சொன்னான். என் மனைவிக்கு  மூளை எக்ஸ்ரே மாதிரி மூளை எங்கே பணம் வைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறாள் எக்ஸ்ரே மூளை. ஒளித்து வைக்கவே முடியலே என்கிறான்.
6வதாக இந்த நீதிமன்றத்திலே நான் பதிவு செய்ய விரும்புவது கணவனின் பொருளாதாரத்தை வீண் விரயம் செய்து அழிப்பவள் என்று குற்றம் சாட்டுகிறேன்.
கணவன் கஷ்டப்பட்டு சம்பாதிப்பான். அதை ஊதாரியாக  செலவழிப்பவள் யார்? மனைவி தானே!
வீட்ல பார்த்தா பீரோ நிறைய அவ புடவைகள் இருக்கும். ஒரு புடவை இருந்தா போதும் அந்த புடவைகளை எல்லாம் சுமப்பது எது தெரியுமா? கீழே அழுக்கு படாமலிருக்க இவன் வேட்டியை விரித்து வைத்திருப்பாள். 
குடும்பத்தையும் தாங்கி இவளது சேலையையும் தாங்குபவன் இவன் ஆனா அவ எப்படி நடக்கிறாள். 
வண்ணாங்கூட பார்த்தாள் அய்ன் பண்ணி கொண்டு வருகிற போது சேலை மடித்து கொண்டு வருவது கிடையாது. அங்கேயும் வேட்டியை போட்டு பொட்டணம் கட்டி தான் கொண்டு வருகிறான்.
என்ன நிலை பாருங்க..! வீண் விரயம் செய்கிறாள் கணவன் கரண்டி மாதிரி சம்பாதிச்சா, மனைவி மம்மட்டியாள் செலவு செய்கிறாள்.
எத்தனை குடும்பங்களிலே கணவன் கரண்டி மாதிரி சம்பாதிச்சா, மனைவி மம்மட்டியாள் செலவு செய்கிறாள்.
எத்தனை குடும்பங்களிலே கணவன் வெளிநாடு சென்றுள்ளார்கள். அவன் அனுப்புகிற பணம் முழுக்க வீணாக  செலவழிப்பவள். மனைவி தான் என்று இந்த அரங்கத்திலே  குற்றம்  சாட்டுகிறேன்.
ஒற்றுமையாக  இருந்த குடும்பத்தை பிரித்த பாவி அவள் என்று சொல்வேன்.
திருமணத்துக்கு முன்னதாக அண்ணன். தம்பி எல்லாம் சேர்ந்து  ஒன்றாக  இருப்பார்கள். திருமணத்துக்கு பிறகு நடப்பது என்ன?
 ஒவ்வொருத்தருக்கும் ஒரு பெயர் வைத்துள்ளாள் இந்த மனைவி. நாத்தனாவுக்கு பெயர் சுனாமி புருஷனைப் பார்த்து சொல்கிறாள் ஏங்க இந்த சுனாமி வருதாம். என்னடி சுனாமின்னு சொல்றே!
ஆம உங்க அக்கா எப்ப வருவான்னு தெரியாது. வந்தா எல்லாதையும் சொல்லிக்காம சுருட்டிட்டு செல்வாள் பெயர் வைக்கிறாள்.
மாமியாரை மதித்துள்ளாளா? புருஷனிடம் சொல்லி தனிக்குடித்தனம் வந்துடுங்க! என்றாள். ஒருவர்  நீதியை  கேட்பதற்காக  நடுவர் போன்று ஒருவர்  கேட்கிறார். 
ஏங்க அம்மாவை  பிரிஞ்சு வந்துட்டீங்க! என்னாச்சு நடுநிலையாக  நடப்பவங்க தானே நீங்க என அவ கேட்டாள். ஆமாம் அதிலென்ன  சந்தேகம் 
அம்மாகூட 30வருஷம் இருந்துட்டாக அதனால் என்கூட30 வருஷம் இருக்கணும். அது தானே சரிசமமான நியதி இந்த அறிவெல்லாம் எங்கிருந்து  வந்தது.
அம்மாகாரம்மா வலிக்கி விழுது ஆஸ்பத்தரிக்கு தூக்குகிறான் புருஷன்
ஏங்க கண்டாக்டரிடம் முதலில் கூட்டிட்டு போங்க. காலுக்கு அப்புறம் பார்க்கலாம். என்னடி சொல்றே!
கால் போகியுள்ளது. கண் தெரியாததினால் தானே கால் போச்சு. கண்ண என்ன உங்கம்மா பிடறியிலேயா வைத்தது. முதலில் கண்ணை பாருங்க என இடர் பேசுகிறாளே!
குடும்பத்தை பிரித்தவள் அவள் என்பதை குற்றமாக  நான் சாட்டுகிறேன்.
 கணவன்மார்கள் மீது தேவை இல்லாத சந்தேகங்களை ஏற்படுத்தி சண்டை கோழியாக இல்லை சண்டைக்காரியாக  திகழ்பவள் இம்மனைவி தானே!
வெளியே போயிட்டு வந்தால் சண்டை.
அதனால் தான் ஒருவன் அழகாக  சொன்னான். நானும் என்னுடைய மனைவியும் சதாமும் ஒன்று என்றான். என்னடா சொல்றே! ஆம் அவர்களுக்கு  பேச்சு வார்த்தைகளிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நேரடி அட்டாக்கு தான்.
நிறைய வீடுகளிலே பார்க்கலாம். புருஷன் பொண்டாட்டிக்கு சண்டைனா உப்பள்ளி அப்படியே போடுவது. அன்றைக்கு சாப்பாடு அவ்வளவு தான். உப்பள்ளி போடுவாள், பாத்திரங்களை உடைப்பாள் நடக்கிறதா இல்லையா!
9-வதாக கணவனுக்கு பணி செய்யாதவள் என்ற குற்றச்சாட்டை இம்மன்றத்திலே சமர்ப்பணம் செய்கிறேன்.
ஒரு காலத்துல பணி செய்தாங்க! ஆனால் இன்று மனைவி  கணவனுக்கு பணி செய்வதில்லை. கணவன் தான் மனைவிக்கு பணி செய்கிறான். நம்முடைய நண்பர் வீட்ல துணி துவைத்து கொண்டு இருக்கிறார். 
அவருடைய துணியைத் தான் துவைக்கிறார். என்று போய் பார்த்தால் வீட்டுக்காரம்மா சேலையை  துவைத்து கொண்டு இருக்கிறார். பார்த்தவுடன் கையும் காலும் ஓடலே. அவராகவே பேசிக் கொண்டார். எல்லோருடைய வீட்லயும் நடப்பது தானங்க!
சோப்பு கம்பெனியிலிருந்து  ஒருவர்வந்து ஒரு வீட்ல, 'மேடம்  உங்க துணியை துவைக்க எதை  பயன்படுத்துறீங்க' என கேட்க, அதற்கு அவள், 'எம்புருஷனைத் தான் என்றாளாம்.
ஒருவன் கேட்டானாம் 'டேய் உன் பொண்டாட்டி தான் இல்லேல்ல பிறகு ஏய்யா சமையலறையிலே போய் நீ சமையல் செய்து கொண்டிருக்கிறே ஹோட்டலில் சாப்பிட வேண்டியது தானே' என கேட்க அதற்கு அவன் 'இல்லே டச்சு விட்டுப் போய்ச்சுனா கஷ்டம் அதனால் தான் நான் செய்து  கொண்டிருக்கிறேன். என்றானாம்.
இன்று நிறைய இடங்களில் பார்க்கிறோம். வேலை செய்யாமல் அப்படியே உட்கார்ந்து  உட்கார்ந்து  உடலை பெருக்கியவர்கள் எத்தனை பேர் உண்டு. பணி செய்யாதவள் என்ற குற்றச்சாட்டை இங்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
கண்மணி நாயகம் (ஸல்) அன்னவர்கள் சொன்னார்களே! ஒரு பெண் மணி தன் கணவனுக்கு எப்படி பணி செய்ய வேண்டும் தெரியுமா? லவ் கானத் பிஹுதிர்ஹா
அந்த கணவனுக்கு உடலிலே நோய் ஏற்பட்டு ஃபலஹஸத்ஹா அவளது  நாக்கால் அவன் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்தாலும் கூட மாஅத்தத் ஹக்கஹூ கணவருடைய உரிமைகளையும், கணவருடைய கடமைகளையும் நிறைவேற்றியவளாக ஆக மாட்டாள் என்று சொன்னார்களே! இன்று எங்கே நடக்கிறது. கணவன் கொஞ்சம் கஷ்டப்பட்டாலே பாவம் இன்று வரக்கூடிய காய்ச்சல் இருக்கிறதே இந்த காய்ச்சலில் அவன் லேசா நொண்டினால் நொண்டின்னு கூப்பிடுகிறாள். நல்லாத்தானங்க இத்தன நாள் இருந்தீங்க! என்கிறாள்.
10-ம் குற்றச்சாட்டாக  நான் அந்த மனைவியின் மீது சுமத்துவது  கணவனுக்கு காட்ட வேண்டிய அந்தரங்கங்களை அடுத்த ஆண்களுக்கு காட்டுகிறாள் என்பது தான் எனது 10ம் குற்றச்சாட்டு
மனைவி தன் அலங்காரத்தை யாருக்கு காட்டமார்க்கம்  சொல்கிறது? தன் கணவனுக்கு காட்ட சொல்கிறது. வீட்ல இருக்கிற போது ஆக பழைய சேலையைத் தான் உடுத்துவாள். கல்யாணம்னா பாருங்க! அடுத்தவர்களுக்கு காட்டுவதற்க்காக  நகைகளை அணிந்து கொண்டும், ஆடம்பர ஆடைகளை அணிந்து கொண்டும், பட்டு ஆடைகளை அணிந்து கொண்டும் செல்கிறாளே! இதுவா மார்க்கம்? இதையும்  குற்றமாக  நான் சுமத்துகிறேன். மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாக நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள். 
பெண்கள் ஆடை அணிந்திருப்பார்கள். ஆனால் நிர்வாணமாக  இருப்பார்கள். நடக்கிறதா? இல்லையா? லேசான  ஆடைகள் முடி அலங்காரம் செய்து கொண்டிருப்பார்கள். இவர்களெல்லாம், சுவனத்திலல்ல, சுவனத்தின் வாடையை  கூட நுகர  முடியாது  என்றார்களே! நபிகள் கோமான் அது இன்று நடக்கிறதா இல்லையா?
11வது குற்றச்சாட்டாக  இந்த மனைவி  கணவனைத் திட்டுகிறாள். என்ற குற்றச்சாட்டை சமர்ப்பணம் செய்கிறேன்.
இன்று கணவன்மார்கள் திட்டிய காலமெல்லாம் போயிடுச்சு. மனைவி தான் அதுவும் நாகரீக காலத்து மனைவி  எப்படித் திட்டுகிறாள் தெரியுமா?
நிறைய வீட்ல நடக்கிறது. அடுத்த வீட்டுக்கு கேட்கக் கூடாது என்பதற்காக மிக்ஸியை போட்டு திட்டுகிறாள். ஏதாவது கிரைண்டரை போட்டுட்டு சப்தம் வர வர திட்டுகிறாள்.
இன்னும் சில  இடங்களில் கணவன் அடிப்பதும் கூட நடக்கிறது.அல்லாஹ் தன் காப்பாற்ற வேண்டும்.
அல்லாமா ஸஅதி (ரஹி) அவர்கள் சொல்வார்கள். ஒருவன் தன் மனைவி திட்டுவது  தாங்க முடியாமல் தலாக் விட்டு;ட்டான். தாடி வளர்த்து கொண்டு செல்கிறான்.
போலீஸ்காரர்கள் பிடித்து  சென்றனர். ஏதோ திருடன் மாதிரி தெரிகிறதென்று ஒரு நண்பர்  காப்பாற்றி சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து தன் சகோதரியை  மணம் முடித்து வைத்தார்.
சில நாட்களுக்கு பிறகு வந்து  'குடும்ப வாழ்க்கை எப்படி  இருக்கிறது' என்று கேட்கிற போது 'ஆட்டை சிங்கத்திடமிருந்து  காப்பாற்றி கசாப் கடைக்கு கொண்டு சென்றது போல் இருக்கிறது' என் வாழ்க்கை
அவள் தான் திட்டினாள் என நினைத்தேன். இவள் திட்டோடு சேர்த்து அடிக்கவும் செய்கிறாள் என்ன செய்வது?
இது தான் எனது குற்றச்சாட்டு
12-வதாக தேவை இல்லாத குழப்பங்களை இந்த சமுதாயத்திலே அரங்கேற்றுபவள் மனைவியே என்று நான் குற்றம் சாட்டுவேன். தேவை இல்லாத  குழப்பங்களை ஏற்படுத்துகிறாள்.
அல்லாம ஹக்கானி கூட ஒரு  வரலாற்றை  எழுதுவார்கள்.
ஒரு ஹஜ்ரத் வீட்ல ஒரு அம்மா  நேர்ச்சை பண்ணியது. என்ன நேர்ச்சை? தன் மகனுக்கு  காய்ச்சல் குணமானால் ஜூம்ஆவிலே தன் கணவரான ஹஜ்ரத் தஃப்  அடிப்பாருன்னு நேர்ச்சை செய்தது. காய்ச்சல் குணமானது. சொல்லுது ஏங்க, நீங்க ஜூம்ஆவிலே தஃப் அடிக்கனும்னு நேர்ச்சை  பண்ணிட்டேன். எப்படியோ  செஞ்சிடுங்க. என்ன செய்வது  அடிப்பாவி நிர்வாகிகளெல்லாம் சேர்ந்து  விலக்கிப் போடுவாங்களே கடைசியிலே  அவர் ஒரு தந்திரம் செய்தார். 
மிம்பருக்கடியில் தப்ஃபை வைத்தார். அன்று பயானுக்கு  தலைப்பு மியூஸிக் சாதனங்கள். அதைப் பற்றி பேசிட்டு வரும் போது அது பற்றி வரும் போது உள்ளே இருந்து  எடுத்து இரண்டு அடி அடித்து விட்டு இதே போல் அடிப்பது கூடாது என்றே அடித்தார். இந்த நிலைக்கு தள்ளியது யார் மனைவி தானே!இதை தான் எனது 12வது குற்றச்சாட்டாக சமர்ப்பணம் செய்கிறேன்.
13வதாக  வெட்கம் குறைந்தவள் என்ற குற்றச்சாட்டை சமர்ப்பணம் செய்கிறேன்.
அந்த காலத்திலே பாத்திமா(ரலி)வுக்கு இருந்த வெட்கம் இன்று யாருக்கு இருக்கிறது. தொப்பியை பார்;த்தால் வெட்கப்படுகிறாள். பால்காரனுக்கும், வண்டிக்காரனுக்கும், மார்க்கட்லயும் முகத்தை காட்டுகிறாளே 
இதுவா வெட்கம், வெட்கக் குறைவால்; தான் இன்று இனிய இல்லறத்திலே இடையூறு ஏற்பட்டு இருக்கிறது என்ற 13-வது குற்றச்சாட்டை இம்மன்றத்திலே வைக்கிறேன்.
கணவருடைய அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே  புறப்படுகிறாள், என்ற 14-வது குற்றச்சாட்டை இங்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
எத்தனை பேர்கள் கணவருடைய அனுமதி கேட்டு வெளியே  செல்கிறார்கள். பக்கத்து வீட்டுக்கு செல்வதாக இருந்தாலும் கூட நீங்கள் அனுமதி கேட்டு செல்ல  வேண்டும் என்பது மார்க்கம் சொல்கிற கடமை. எத்தனை பேர்கள் சென்றிருக்கிறார்கள்.
இதை விட மேலாக 15வது குற்றச்சாட்டாக  நான் சொல்வேன். அவள் ஒரு வேடக்காரி. இப்படி ஒன்ன பேசுவாள். அப்படி ஒன்ன பேசுவாள்.
தான் மருமகளாக இருக்கிற பொழுது, என் மாமியா என்னை மக மாதிரி நடத்தனும்னு நினைப்பாள். இவளே மாமியாராகி விட்டால் மாறிடுவாள்.
தன் மகனுக்கு திருமணம் முடிக்கிற பொழுது ஊரிலேயே பெரிய வரதட்சணை நாம தான் வாங்கனும்னு நினைக்கிறாள். தம் மகளுக்கு திருமணம் முடிக்கிற பொழுது  வரதட்ச்சணையே வாங்காத யாராவது  கிடைப்பார்களா என்று பார்க்கிறாளே இந்த வேடக்காரி இதைத்தான் அவள் பச்சோந்தியாக  இருக்கிறாள் என்ற குற்றச்சாட்டை வைக்கிறேன்.
நடுவரவர்களே! 16வது குற்றச்சாட்டாக  அவள் குத்திக் காட்டுபவள் கணவனை பேசவிடமாட்டா! எதை எடுத்தாலும் குத்திப் பேசுகிற பழக்கம் அவளிடம் இருக்கிறது.
மார்க்கத்திற்கு புறம்பான  பழக்கம் அதுவும் இருக்கிறது. இதன் காரணமாக
 இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருக்கிறாள் என்ற குற்றச்சாட்டை இந்த மன்றத்திலே வைக்கிறேன்.
எப்படி குத்திப் பேசுகிறாள் புருஷன் பாவம் காப்பி குடிப்பதற்காக  உட்கார்ந்தாரு. காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். காப்பியை குடிக்கிற பொழுது அவள் வளர்க்கிற நாய் பக்கத்தில் வந்து நின்றது. அதற்கு கொஞ்சம் இவண் ஊற்றினான். உடனே அங்கிருந்து  கத்தினாலே!!! அது நேத்து  பாலிலே போட்ட காப்பி நாயுக்கு ஆகாது.
நேத்து பாலிலே போட்ட காப்பி நாய்க்கு ஆகாது ஆனா அந்த பாயுக்கு ஆகுமா? எந்த அளவுக்கு வைத்திருக்கிறார்கள்.
சென்செக்ஸ் கணக்குக்கு  ஒருவன் வருகிறான். வரும் பொழுது அத்தாவுக்கும் மகனுக்கும் சண்டை அப்பனிடம் கேட்கிறான். உம்மகன் பேரு என்ன? சண்டையிலே அவன் சொன்னான் சனியன்னு. உள்ளே இருந்து அவள் எடுத்து கொடுக்கிறாள். ஏங்க அவங்க உங்க பெயரை கேட்கலே! உங்க மகன் பெயரை  கேட்கிறாரு
அப்ப இவ கணவனுக்கு வைத்த பெயர் சனியனா! ஆக குத்திக் காட்டுபவள் மனைவி நிறைய இடங்களில் பார்க்கிறோம்.
என்னுடைய 17ஆம் குற்றச்சாட்டாக தேவை இல்லாமல் அவசரப்பட்டு விவாகரத்து  கேட்பவள் என்ற குற்றச்சாட்டை இங்கே  முன் வைக்கிறேன்.


ஒன்றுமே இல்லாத காரணத்திற்காக வேண்டி விவாகரத்து கேட்கிறாள். சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் என் தாய் வீடு செல்கிறேன் என்கிறாளே! குடும்பத்தின் நங்கூரத்தையே! கலைக்கிற அவிழ்க்கிற கொடுங்கோலி என்ற குற்றச்சாட்டை இங்கே சமர்ப்பிக்கிறேன்.
என்னுடைய 18-வது குற்றச்சாட்டாக குடும்பத்தையாவது ஒழுங்காக வளர்த்துள்ளார்களா? குழந்தைகளையாவது ஒழுங்காக வளர்த்திருக்கிறார்களா? குழந்தை வளர்ப்பிலும்  இவளது பங்கு குறைவாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை கூறுகிறேன்.
இப்படி  ஏராளமான  குற்றச்சாட்டுகளை என்னால் சமர்ப்பணம் செய்ய முடியும் காலத்தின் சூழலை கருத்தில் கொண்டு நிறைவுக்கு வருகிறேன்.
ஆக! நடுவர் அவர்களே! எல்லா குடும்பங்களிலும் இனிய இல்லறத்திற்கு இடையூறாக  இருப்பவர்கள் மனைவியே! மனைவியே! மனைவியே! என்று வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.
வஆகிரு தஃவானா அனில்ஹம்து
லில்லாஹி ரப்பில் ஆலமீன்.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...