தேவையில்லாமல் சிரிப்பதும் தேவையான போது தேவையற்ற அளவு சிரிப்பதும் பிறர் மனம் வருந்தும் படி சிரிப்பதும் மனிதனை மதிப்பிழக்கச் செய்துவிடும் சிரிப்புகள் பலவிதம் உண்டு. எதற்காகச் சிரிக்கலாம் எதற்கெல்லாம் சிரிக்கக்கூடாது என்பதையும் தெரிய வேண்டும்.
- ஏளனச் சிரிப்பு
- ஏமாற்றுச் சிரிப்பு
- அட்டகாசச் சிரிப்பு
- அணியாயச் சிரிப்பு
- பரிகாரச் சிரிப்பு
- பயங்கரச் சிரிப்பு
- வெற்றிச் சிரிப்பு
- விரக்திச் சிரிப்பு
இது போன்ற சிரிப்புகள் எதுவும் கூடாது
- சந்தோஷச் சிரிப்பு
- சமாதானச் சிரிப்பு
- அமைதிச் சிரிப்பு
இது போன்றவை அளவுடன் கூடும்.
'ஓயாமல் சிரிப்பவன் கிறுக்கன்
ஓட விட்டுச் சிரிப்பவன் வஞ்சகன்
இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இருப்பதை தவறவிட்டுச் சிரிப்பவன் ஏமாளி
தெரியாதென்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியுமென்று சிரிப்பவன் நடிப்பாளி
தோல்வியிலே சிரிப்பவன் வீரன்
துன்பத்திலே சிரிப்பவன் மனிதன்'
'அதிகமாகச் சிரிக்காதே ஏனெனில்
அதிகமாகச் சிரிப்பது இதயத்தை
மரணிக்கச் செய்து விடும்' என
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.
அல்ஹதீஸ்.
'இவ்வுலகில் அதிகம் சிரிப்பவர்கள்
மறுமையில் அதிகமாக அழ நேரிடும்.
-அல்ஹதீஸ்
கம்மியாக சிரியுங்கள்
அதிகமாக அழுது கொள்ளுங்கள்
இது இறை வாக்காகும் மனித இனத்திற்க்கு மட்டும் பிரத்தியோக மாக வழங்கப்பட்ட அருட் கொடையாகும். அளவோடு சிரிப்போம்
வளமோடு வாழ்வோம் வாய்ப்பளித்தமைக்கு நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்