17 ஆகஸ்ட், 2013

முஹம்மது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா 2



26. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்கள்?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாயின் கர்ப்பத்தில் இருந்த போது தந்தை இறந்தார்கள்.

27. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாயார் இறந்தபோது முஹம்மது நபி (ஸல); அவர்களுக்கு வயது என்ன?
6 வயது ஆகும்.

28. முஹம்மது நபி (ஸல்) அவர்களின்; தாயார் இறந்த பிறகு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யாருடைய பொறுப்பில் வளர்ந்தார்கள்?
பாட்டனார் அப்துல் முத்தலிபின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

29. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் இறந்தபோது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வயது என்ன?
9 வயது ஆகும்.

30. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் இறந்த பிறகு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யாருடைய பொறுப்பில் வளர்ந்தார்கள்?
சிறிய தந்தை அபூதாலிபின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

31. முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் இறைவழிபாட்டிற்காக தங்கியிருந்த குகையின் பெயர் என்ன?
ஹிரா குகை ஆகும்.

32. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் நபிப்பட்டம் கிடைத்தது?
40வது வயதில்

33. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கொண்டு வந்த வானவர் யார்?
ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள்.

34. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் இறங்கிய குர்ஆன் வாசகம் எது?
இக்றஃ பிஸ்மிரப்பிக்க என்பதாகும்.

35. முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் நபிப்பட்டம் கிடைத்த பிறகு எத்தனை ஆண்டுகள் மக்காவில் தங்கியிருந்தார்கள்?
13 ஆண்டுகள்

36. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினா சென்ற நிகழ்ச்சிக்கு பெயர் என்ன?
ஹிஜ்ரத் ஆகும்.

37. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது உடன் சென்ற ஸஹாபி யார்?
ஹழ்ரத் அபூக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள்

38. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்ற பிறகு முதன் முதலில் கட்டிய பள்ளிவாசல் எது?
மஸ்ஜிதுன்னபவீ ஆகும்.
39. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் மதீனாவில் தங்கியிருந்தார்கள்?
10 ஆண்டுகள்.

40. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எத்தனை வயதில் இவ்வுலகை விட்டும் மறைந்தார்கள்?
63ம் வயதில்

41. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சியின் முதலாவது கலீஃபா யார்?
ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்



42. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாவது கலீஃபா யார்?
ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள்.

43. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சியின் மூன்றாவது கலீஃபா யார்?
ஹழ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள்

44. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சியின் நான்காவது கலீஃபா யார்?
ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள்

45. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிள்ளை செல்வங்கள் எத்தனை?
7 ஆகும்.


46. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆண் மக்கள் யார்? யார்?
1. ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி)
2. ஹழ்ரத் இப்ராஹீம் (ரலி)
3. ஹழ்ரத் காசிம் (ரலி)

47. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெண் மக்கள் யார்? யார்?
1. ஹழ்ரத் ஸைனப் (ரலி) அன்ஹா
2. ஹழ்ரத் ருகைய்யா (ரலி) அன்ஹா
3. ஹழ்ரத் உம்மு குல்ஸும் (ரலி) அன்ஹா
4. ஹழ்ரத் பாத்திமா (ரலி) அன்ஹா

48. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வம்சம் எது?
குரைஷி வம்சமாகும்.

49. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தலையிலும் தாடியிலும் எத்தனை நரைமுடிகள் இருந்தது?
14 நரைமுடிகள் இருந்தது.

50. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைமுடி எவ்வாறு இருந்தது?
நபிகளாரின் தலைமுடி இரு காதுகளின் பாதிவரை இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...