17 ஆகஸ்ட், 2013

முஹம்மது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா 1



1. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருப்பெயரின் அர்த்தம் என்ன?
புகழுக்குறியவர் என்பதாகும்.

2. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் திருக்குர் ஆனில் எத்தனை முறை வருகிறது?
நான்கு தடவை வருகிறது.

3. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; கடைசியாக செய்த செயல் எது?
மிஸ்வாக் (குச்சியால் பல் துலக்கினார்கள்)

4. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த ஆடையை விரும்பினார்கள்?
நபி (ஸல்) வெண்ணிற ஆடையை அதிகம் விரும்பியுள்ளார்கள் பச்சைநிற ஆடையையும் விரும்பியுள்ளார்கள்.

5. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பண்பு  எப்படி இருந்தது?
மிக உயர்ந்த பண்புடனும், குர்ஆனுக்கு முன்மாதிரியாகவும்  இருந்தது.


6. முஹம்மது நபி (ஸல்)அவர்களின் பெரிய அற்புதம் எது?
 அல்குர்ஆன் அகும்.


7. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; எந்த பொருளை மறுக்க கூடாது என்றார்கள்?
தலையணை, எண்ணை, நறுமணப் பொருள், பால்

8. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன் அவர்களுக்கு இறைவன் வைத்த பெயர் என்ன?
அஹ்மது என்ற பெயராகும்.

9. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறந்த பின் இறைவன் வைத்த பெயர் என்ன?
முஹம்மது  என்ற பெயராகும்.

10. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைந்த பின் மறுமையில் இறைவன் வைக்கும் பெயர் என்ன?
மஹ்மூது  என்ற பெயராகும்.


11. முஹம்மது நபி (ஸல்) அதிகம் விரும்பிய காய் எது?
சுரைக்காய் ஆகும்.

12. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விரும்பிய எண்ணை எது?
ஜைத்தூண் எண்ணையாகும்.

13. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; விரும்பிய நிறம் எது?
பச்சை நிறம் ஆகும்.

14. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; பயன்படுத்திய சுர்மா என்ன?
இஸ்மித் என்ற சுர்மாவாகும்.

15. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; அதிகம் விரும்பிய நறுமணம் எது?
கஸ்தூரி மற்றும் ஊது ஆகும்.

16. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிடித்த மாமிசம் எது?
ஆட்டின் முன்சப்பைக் கறி ஆகும்.

17. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சுத்தம் எப்படிப்பட்டது?
தூய்மையான ஆடை அணிவார்கள் தினசரி மிஸ்வாக் செய்வார்கள், நறுமணம் பூசுவார்கள். சுர்மா இடுவார்கள், தலைமுடி மற்றும் தாடியை சீப்பினால்; வாறுவார்கள்.

18. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கப்ரை கட்டியது யார்?
ஹழரத் ஆபூதல்ஹா  அன்ஸாரி (ரலி) அவர்களாகும்.

19. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாருக்கு ஸலாம் சொல்லி அனுப்பிய நபி யார்?
மிஃராஜ் பயணத்தின் போது நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஸலாம் சொல்லி அனுப்பினார்கள்.

20. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போருக்கு என்ன சொல்லப்படும்?
ஙஸ்வா என சொல்லப்படும்.

21. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கலந்து கொல்லாத போருக்கு என்ன சொல்லப்படும்?
ஸரிய்யா என்று சொல்லப்படும்

22. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த ஆண்டு எது?
கி.பி 571 ஆகும்.

23. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் பெயர் என்ன?
தந்தை பெயர் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்
தாயார் பெயர் ஆமினா உம்மா (ரலி) அவர்கள்

24. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டானார் பெயர் என்ன?
அப்துல் முத்தலிபு ஆகும்.

25. முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய தாயார் யார்?
ஹ்ழரத் ஹலீமத்துஸ்ஸஃதிய்யா (ரலி) அவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...